தமிழ் என்றால் இனிமை..! தமிழ் மொழியின் உயிர் எழுத்துகள் யாவை..? பார்ப்போமா..?

Tamil Uyir Eluthukkal
X

Tamil Uyir Eluthukkal

Tamil Uyir Eluthukkal-மொழி என்பது மனித எண்ணங்களை வெளிப்படுத்தும் ஒரு ஊடகம். ஒரு இணைப்புக் கருவி என்று கூட சொல்லலாம். ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதற்கான சாதனம்.

Tamil Uyir Eluthukkal-ஆதி காலத்தில் மனிதர்கள் மொழிவடிவம் இல்லாததால் தங்களது உணர்வுகளை சைகைகள் மூலமாக வெளிப்படுத்தி வந்தனர். வலி என்றால் ஆ..ஊ..என்றும் சிரிப்பு என்றால் இ..ஈ என்றும்..மகிழ்ச்சி எனில் உ..ஊ என்றும் இப்படி பல வழிகளில் வெளிப்படுத்தினர். நாகரிகம் வளர வளர ஒலி வடிவத்தில் பேச்சுக்கான சொல் உருவாகியது. அம்மா,அப்பா என தொடங்கி மொழிக்கான ஒரு முழு வடிவம் கிடைக்கத்தொடங்கியது.

எழுத்து என்றால் என்ன?

மொழியின் ஒரு வடிவமே சொல். அந்த சொல்லின் ஆக்கமே எழுத்து.

மொழியின் மறுவடிவமே எழுத்து. பழங்காலத்தில் இருந்தே எழுத்துக்கள் இருந்துள்ளன என்பதற்கு சான்றுகள் பல உள்ளன. எழுத்து என்பது ஓவியம் என்று பொருள். எழுத்துக்களின் தோற்றத்திற்கு முதல் அடிப்படை ஓவியங்களேயாகும். அந்த கிறுக்கல் ஓவியங்களே, பிற்காலத்தில் எழுத்து உருவாகுவதற்கான அடிப்படியாக அமைந்தன.


உடலுக்கு எப்படி உயிர் முக்கியமோ அதேபோல தமிழ் எழுத்துகளில் உயிர் எழுத்துகள் உள்ளன. அவையே சொற்கள் உருவாக்குவதற்கான உயிராக உள்ளன. அதே போல உயிர் மட்டும் இருந்தால் வெறும் காற்றாக மட்டுமே இருக்க முடியும். அதற்கு ஒரு உடல் இருக்க வேண்டும். அந்த உடலில் உள்ள உயிரே ஒரு உயிரினத்தை வாழ வைக்கும்.

ஆக உயிர்,மெய் என்பது பொருத்தமாகும். அதனால் தமிழில் மெய் எழுத்துகளும், இரண்டும் சேர்ந்து உயிர்மெய் எழுத்துகளும் உருவாக்கப்பட்டுள்ளன.அதுவே தமிழ் மொழிக்கான அழகு.

மொத்த எழுத்துகள்

உயிர் எழுத்துகள் 12, மெய் எழுத்துகள் 18, உயிர்மெய் எழுத்துகள் 216, ஆயுத எழுத்து 1 என மொத்தம் தமிழில் 217 எழுத்துகள் உள்ளன.


தமிழின் அடிப்படை எழுத்துகளான அ முதல் ஒள வரை உள்ள எழுத்துகள் உயிர் எழுத்துகளாகும். இதில் மொத்தம் 12 எழுத்துகள் உள்ளன. இந்த எழுத்துகள் உச்சரிப்பதற்கு எளிமையாகவும், இனிமையாகவும் இருக்கும். தமிழ் என்றாலே இனிமை என்பது பொருளாகும்.

உயிர் எழுத்துகள் இரண்டு வகைப்படும்.

1. குறில் எழுத்துகள்

அதாவது குறைந்த அளவு நேரமே ஒலிக்கும் எழுத்துகள் குறில் எழுத்துகள் எனப்படும்.

அ, இ, உ, எ, ஒ ஆகிய ஐந்தும் குறுகி ஒலிப்பதால் இது குறில் எழுத்து அல்லது குற்றெழுத்து என்று அழைக்கப்படுகிறது.


2. நெடில் எழுத்துகள்

நீண்டு ஒலிக்கும் எழுத்துகள் நெடில் எழுத்துகள் எனப்படும்.

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள ஆகிய ஏழு எழுத்துகளும் நெடில் எழுத்துகள் அல்லது நெட்டெழுத்துகள் என்று அழைக்கப்படுகிறது.

இப்படி இந்த உயிர் எழுத்துகளை சார்ந்தே சொற்கள் பிறக்கின்றன. உயிர் எழுத்துகள் இல்லாமல் தனித்து மெய் எழுத்துகளால் புதிய சொற்களை உருவாக்கவோ அல்லது எழுதவோ இயலாது.


உதாரணத்திற்கு

அன்பு - அ + ன் + ப் +உ -இதில் அ உயிரெழுத்து, ன் மெய்யெழுத்து, பு உயிர்மெய்யெழுத்து

இப்படி உயிர் எழுத்துடன் மெய் எழுத்து சேர்ந்து உயிர் மெய்யாகி ஒரு முழுமையான சொல் உருவாகிறது. உயிர் எழுத்துகள் தனித்து நின்றும் பொருள் விளக்கும். உதாரணங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

தனித்து பொருள் தரும் உயிர் எழுத்துகள் மற்றும் உயிர்மெய் எழுத்துகள். (எ.கா.) ஆ, ஈ, ஊ,ஏ, ஐ, ஓ, கோ, போ, பூ, நை, தை, நா,சே, சோ, தே, பா, மா போன்றவைகள் ஆகும்.

அ- 8ன் எண் குறியீடு, சிவன், திருமால், சுட்டு, எதிர்மறை, அசை, திப்பிலி.

ஆ- பசுப்பொது, ஆச்சாமரம், ஆன்மா, வரை, அற்பம், மறுப்பு, நினைவு, உடன்பாடு, நிந்தை, துன்பம், இரக்கம்.

இ- அண்மைச்சுட்டு,அன்பு, ஆச்சரியம், இகழ்ச்சி, உண்டி, கேட்டி, குறத்தி, வில்லி, ஊருணி, செவியிலி, எண்ணி.

ஈ-அம்பு, அழிவு, இந்திரவில், ஈ, குகை, கொசுகு ,தாமரையிதழ், திருமகள், நாமகள், தேன்வண்டு, தேனி, நரி, பாம்பு, பார்வதி, வண்டு

உ- 2க்கான எண் குறியீடு, சிவபிரான், நான்முகன், உமையவள், சுட்டெழுத்து

ஊ- உணவு ,திங்கள், சிவன், ஊன், தசை, சதை

எ- 7க்கான எண் குறியீடு

ஏ-இசை நிறைந்து நிற்கும் ஓர் இடச்சொல், எய்யுந்தொழில், குறிப்பு மொழி, சிவன், செலுத்துதல், மேல் நோக்குதல், திருமால், இறுமாப்பு, அம்பு, விளிக்குறிப்பு

ஐ-அசைநிலை, அரசன், அழகு, கடவுள், கடுகு, குரு, கோழை, சிலேட்டுமம், சர்க்கரை, சவ்வீரம், கன்னி, சிவன், தண்ணீர் முட்டான் கிழங்கு, தலைவன், தும்பை, துர்க்கை, நுண்மை, பருந்து, தந்தை, பெருநோய், யானைப்பாகன் அதட்டும் ஓசை, வியப்பு ,ஐந்து, ஐயம், கணவன், பாசாணம்

ஒ-ஒழிவு

ஓ-மதகு நீர் தாங்கும் பலகை, உயர்வு, இழிவு, கழிவு, இரக்கம், மகிழ்ச்சி, வியப்பு, நினைவு, அழைத்தல், வினா, எதிர்மறை, தெரிநிலை, பிரிநிலை, ஐயம், கொன்றை, நான்முகன், மகிழ்சிக்குறிப்பு

ஔ- நிலம், விழித்தல், அழைத்தல், வியப்பு, தடை, கடிதல், ஔவென்னேவல்

க- 1ஆன குறியீடு, அரசன், தீ, நான்முகன், ஒன்று என்னும் எண்ணின் குறி, ஆன்மா, உடல், கந்தர்வ சாதி, காமன், காறு, கதிரவன், செல்வன், திருமால், தொனி, நமன், மயில், மனம், ஆனைமுகக் கடவுள், காந்தாரமாகிய கைக்கிளை இசையின் எழுத்து, அடிக்கும் மணி, எமன், திங்கள், உடல், நலம், சூனியச்சொல்,தலை, திரவியம், நனைதல், நீர், பறவை, ஒளி, பொருத்து,முகில், வல்லவன்.

கா- காத்தல்,காவடி, காவெனேவல், சோலை, துலை, தோட்சுமை, தோட்டம், வர்த்தம், வலி, பாதுகாப்பு, பூஙாவனம், காவடித் தண்டு, துலாக்கோல், ஒரு நிறையளவு, பூ முதலியன இடும் பெட்டி, கலைமகள், நிறை , காப்பாற்று, விழிப்பாயிரு, காவல்செய்

கீ- கிளிக்குரல்

கு- குற்றம், சாரியை, சிறுமை, தடை, தொனி, நிந்தை, பாவம், பூமி, இகழ்ச்சி, நீக்குதல், இன்மை,நீக்கம், நிறம்

கூ-கூவென்னேவல், நிலம், பூமி

கோ- அரசன், அம்பு, வானம், ஆண்மகன், இடியேறு, இரக்கக்குறிப்பு, இலந்தை, உரோமம், எருது, கண்,கிரணம், கோவென்னேவல், சந்திரன், சூரியன், திசை, கோமேதகயாகம், தேவருலகம், நீர், பசு, பூமி, பொறிமலை, தாய், மேன்மை, வச்சிராயுதம், வாணி, வெளிச்சம், சக்கரவர்த்தி, பெருமையிற் சிறந்தோன், தகப்பன், தலைமை, மலை, குசவன், சொல், இரசம், சாறு, இரங்கற் குறிப்பு, சுவர்க்கம், அரசியல், இரங்கல், தொடு, வெந்நீர், ஒழுங்காக்கு

கௌ- கிருத்தியம், கொள்ளு, தீங்கு, வாயாற் பற்று

ங- குறுணிக் குறி

ஙா - குழந்தையின் அழுகை ஒலியினைக் குறித்த சொல்……… இங்கா→இங்ஙா→ஙா

ஙே - ஆட்டின் ஒலிக்குறிப்பு

சா- சாவென்னேவல், இறத்தல், சோர்தல், சாதல்

சீ- அடக்கம், அலட்சியம், காந்தி, இகழ்ச்சிக் குறிப்பு, இலக்குமீகரம், சம்பத்து, கலைமகள், சீயென்னேவல், உறக்கம், பார்வதி, பெண், ஒளி, சிறி,விடம், விந்து, புண்ணின் சீழ், சளி, சிறப்புக் குறிக்கும் ஓர் அடைமொழி

சூ- விலங்குகளையோட்டும் குறிப்பு, வியப்புச்சொல், வாணவகை, சுளுந்து, நாயை ஓட்டும் ஒலிக்குறிப்பு

சே- அழிஞ்சில் மரம், இடபராசி,உயர்வு, எதிர்மறை, எருது, ஒலிக்குறிப்பு, சிவப்பு, சேரான் மரம், விலங்கேற்றின் பொது, வெறுப்புக்குறி, காளை, செங்கோட்டை, சேவென்னேவல்

சை- இகழ்சிக்குறிப்பு

சோ- அரண், உமை, வியப்புச்சொல்

ஞா- கட்டு ,பொருந்து

த-குபேரன், நான்முகன்

தா- அழிவு, குற்றம், கேடு, கொடியவன், தாண்டுதல், தாவென்னேவல், பாய்தல், பகை, நான்முகன், வலி, வருத்தம், வியாழம், வலிமை, குறை, பரப்பு, நாசம், தண்டுகை, கொடு, பெறு, பகை

தீ- அறிவு, இனிமை, உபாயவழி, கொடுமை, தீமை, தீயென்னேவல், நரகம், நெருப்பு, சினம், நஞ்சு, ஞானம்

து-அசைத்தல், அனுபவம், எரித்தல், கெடுத்தல், சேர்மானம், துவ்வென்னேவல், நடத்தல், நிறைதல், பிரிவு, பிறவினை, வருத்தல், வளர்தல்

தூ- சீ, சுத்தம், தசை, பகை, தூவென்னேவல்,பற்றுக்கோடு, புள்ளிரகு, வெண்மை, தூய்மை, இகழ்சிக்குறிப்பு, வலிமை

தே- கடவுள், அருள், கொள்ளுகை, நாயகன், மாடு துரத்தும் ஒலிக்குறிப்பு

தை- தாளக்குறிப்பின் ஒன்று, ஒரு திங்கள், தைக்கத்தக்கவை, தையென்னேவல், பூசநாள், மகரராசி,அலங்காரம், மரக்கன்று

தோ- நாயை கூப்பிடும் ஒலிக்குறிப்பு

ந-இன்மைப் பொருள், எதிர்மறைப் பொருள்

நா- அயலார், அயல், சுவாலை, திறப்பு, மணி முதலியவற்றின் நாக்கு, நடு நாக்கு, பொலிவு, துலைநா, பூட்டின் தாள், நாதசுரத்தின் ஊதுவாய்

நி- இன்மை, அன்மை, அதிகம், சமீபம், நிறைவு, உறுதி, ஐயம், வன்மை,

நீ- நின்னை,உன்னை

நு- ஐயம், சங்கை, வினா, தியானம், தோணி,நிந்தை, நேரம், புகழ்

நூ- எள், யானை, ஆபரணம், நூவென்னேவல்

நே- அன்பு, அருள், நேயம்

நை- இகழ்சிக்குறிப்பு, நையென்னேவல், நைத்தல்

நொ- துன்பம், நொவ்வென்னேவல், நோய், வருத்தம்,நொண்டி

நௌ- மரக்கலம், கோணி

ப- 1/20க்கான குறியீடு ,காற்று ,சாபம், பெருங்காற்று

பா-அழகு, கடிகாரவூசி, கிழங்குப்பா, நிழல், நெசவுப்பா, பஞ்சுநூல்,பரப்பு, பரவுதல்,பாட்டு, பாவென்னேவல், பிரபை, தூய்மை, காப்பு, தேர்தட்டு, கைமரம், பூனைக்காலி, பாம்பு

பி-அழகு -இப்படி தனித்து நின்று பொருள்தரும் தமிழ் சொற்கள் இன்னும் உள்ளன. இங்கு தரப்பட்டுள்ளவைகள் உங்களுக்கான உதாரணங்கள்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
Weight Loss Tips In Tamil