ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)

ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)
X

tamil love story-காதல் கதை (கோப்பு படம்)

இதுவல்லவா..காதல் என்று நாம் பொறாமைப்படும் செயலை ஒரு கோடீஸ்வர இளம்பெண் செய்திருக்கிறாள் என்பதை நம்பித்தான் ஆகவேண்டும்.

Tamil Love Story

(ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் எழுதிய சிறுகதை.)

மஹேந்திரசிங் லால் பெரிய தொழில் அதிபர். மனைவி சாயாசிங், வீட்டு நிர்வாகி. அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள். மகன் தந்தையுடன் அவரது தொழிலை கவனித்து வந்தான்.

Tamil Love Story

மகள் மாலாஸ்ரீ கல்லூரியில் படித்துவந்தாள். கல்லூரியில் படித்த காலத்தில் கணேஷ்நாத் என்ற மாணவனோடு காதல் ஏற்பட்டது. கணேஷ்நாத் ஒரு சாதாரண கிராமத்து இளைஞன். ஒரு சிறிய வீடு, கொஞ்சம் நிலம் மட்டுமே இருந்தது. அதாவது அவன் மாலாஸ்ரீ குடும்பத்துக்கு சிறிதும் பொருத்தம் இல்லாதான்.ஆமாம் அவன் ஏழை. அவ்வளவுதான்.

ஆனால், அவனது அறிவுத்தெளிவு, பண்பு மற்றும் பணிவான குணம் இவைகளே மாலாஸ்ரீயின் காதலுக்கு காரணங்கள்.

Tamil Love Story

அவள் கோடீஸ்வரி என்பதால் தொடக்கத்தில் கணேஷ்நாத் அவளது காதலை ஏற்க மறுத்துவிட்டான். ஆனால் அவளது உறுதியான மனம் மற்றும் உண்மையான அன்பால் ஈர்க்கப்பட்டான். இந்த ஏழை, பணக்கார காதல் ஈடு ஏறுமா என்ற அச்சம் கணேஷ்நாத் மனதில் எழாமல் இல்லை.

'அதெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். வாழப்போவது நான். நீ கவலைப்படவேண்டாம்.' என்று அவனை பேசவிடாமல் தடுத்துவிட்டாள், மாலாஸ்ரீ. மாலாஸ்ரீயின் தந்தைக்கு இவர்களின் காதல் விவகாரம் தெரியவந்தது. உடனே ஒரு கோடீஸ்வர மாப்பிள்ளையை பேசிமுடித்தார்.

Tamil Love Story

மாலாஸ்ரீ நேராக தந்தை பார்த்த மாப்பிள்ளையிடம் தனது காதல் குறித்துக்கூறி திருமணத்தை நிறுத்தினாள். தனது காதலன் கணேஷ்நாத்தை மாணவர்கள் ஆசியுடன் ஒரு சிறிய கோவிலில் வைத்து திருமணம் செய்தாள்.


கணவன் கணேஷ்நாத்தை அழைத்துக்கொண்டு நேராக அவளது வீட்டிற்கு வந்தாள்.

தனது தாய்,தந்தையை அழைத்து,

'நான் எனக்கான வாழ்க்கையை தேர்ந்தெடுத்துவிட்டேன். உங்கள் பணமோ, நகையோ, இந்த கார்,பங்களா எதுவும் என்னை மகிழ்ச்சியாக வாழவைக்காது.

எது அவனிடம் இருக்கிறதோ அதைத்தான் நான் விரும்பினேன். அதுதான் எனக்கு மகிழ்ச்சியும். ஆடம்பரமான மாளிகையில் அன்பைத் தொலைத்துவிட்டு, மனைவி என்கிற அடிமையாக வாழ எனக்கு முடியாது.

Tamil Love Story

என் கணவன் வீடு சிறியதுதான். ஆனால் அங்கு அன்பு கொட்டிக்கிடக்கிறது. அந்த வீட்டின் எஜமானி, மகாராணி எல்லாமே நான்தான். ரெண்டுபேரும் என் வீட்டுக்கு வாங்க. நாங்கள் வாழும் வாழ்க்கையைப் பார்த்து ரசித்துவிட்டு செல்லுங்கள். இப்போது எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க'. என்று தரையில் விழுந்தார்கள். அதிர்ச்சியில் இருந்து மீளாது நின்றனர் பெற்றோர்.

Tamil Love Story

'எதுக்குப்பா இந்த அதிர்ச்சி? அம்மா உன்மகள் சாகப்போகலை. வாழப்போறா..மகாராணிப்போல..எங்களை வாழ்த்தி அனுப்புங்க..போய்ட்டு வாரேன் அம்மா..போய் வருகிறேன் அப்பா'கணேஷ்நாத் கைப் பிடித்து அழைத்துச்சென்றாள் மாலாஸ்ரீ.

Tags

Next Story
தகவல் தொழில்நுட்பம் அதாவது ஐடி வேலை எப்படி வாங்கலாம்னு பாக்கலாம்