Tamil kavithai marriage invitation wordings in tamil language-ஆதலால் காதல் செய்வீர்..!
Tamil kavithai marriage invitation wordings in tamil language
திருமணம் என்பது இருமனம் சேர்வதில் உன்னத நாள். பொண்ணு- மாப்பிள்ளை என்றழைக்கப்படும் திருவிழா. அது ஒருமுறை நடக்கும் பெருவிழா. சொந்தங்கள் சூழவே, நட்புகள் கும்மாளமிடவே சேரும் குதூகல நன்னாள். வீராப்பாய் நடைபோடும் சிங்கப் பெண் என்றாலும் திருமணம் என்ற அந்த நாளில் நாணிக்கோணி நின்றிருப்பாள். தலைகுனிந்து மெய்மறந்திருப்பாள்.
அப்படி நடக்கும் திருமணத்தில் பத்திரிக்கை அச்சடித்து, ஊருக்கெல்லாம் கொடுத்து வரவேற்புச் செய்திடுவார். அப்படி பத்திரிக்கை அடிக்கும்போது கவிதையாக வார்த்தைக்கோர்க்க இதோ வாசகங்கள் தந்துள்ளோம். நீங்களும் படித்து மகிழுங்கள்.
தங்கத்தில் தாலி செய்து, சொந்தம் ஒன்று புதுப்பிக்கப்படுகிறது. மலர்மாலை சூடி, மாங்கல்யம் கட்டி இல்லறத்தை நல்லறமாக கொள்வதற்கு சுற்றமே சூழ வந்து வாழ்த்துங்கள் எங்கள் இருவரையும்.
இனிய நல்வரவாகுக
மொட்டு ஒன்றில் பூ மலரும், அன்பு எனும் மொட்டினிலே இதயத்தில் காதல மலரும். பெற்றோர் சம்மதம் சொல்ல, உற்றோர் பூரிப்பு எய்த, கற்றோர் சபையில் கூடி கைதட்ட வாருங்கள். உங்கள் வருகை ஒன்றே ஆசீர்வாதம்.
வருக..! வருக..! வாழ்த்திடவே வருக..!
Tamil kavithai marriage invitation wordings in tamil language
ஜாதகம் பார்த்தாச்சு, மனசுக்கும் பிடிச்சாச்சு. தாய்மாமன் சம்மதமும் கிடைச்சாச்சு. பத்திரிகை அடிச்சாச்சு. ஊருக்கெல்லாம் கொடுத்தாச்சு, கல்யாண மண்டபத்தில் காதல் மொழி பேச மணமக்களும் தயாராக இருக்காங்க. கணவன்- மனைவி ஆவதற்கு காத்திருக்கும் இளமனசுகளை வாழ்த்துவோம் வாருங்களே..!
இனிய வணக்கம் வருக..வருக..!
வான் நிலா பார்த்திருக்கு, வண்ணமாக பூத்திருக்கு. மண்ணில் ஒரு நட்சத்திரம் பூவாக பூத்திருக்கு. பூவாக பூத்திட்ட மங்கைக்கு மணாளன் வந்தான் பாருங்களேன். நாணம் வந்து தலைகுனிந்தாள், தமிழ்ப்பெண்ணாள் தமிழ்மொழி. திருமணத்திற்கு வருகை தந்து மனதார வாழ்த்திவிட்டு வயிறார விருந்தோம்பி, மகிழ்ச்சி சேர்ப்போம் வாருங்கள்.
மங்கள நாதங்கள் முழங்கவே, மணவறைக் கதவுகள் திறக்கவே, கொடியிடை நடையினில் பூப்பாதங்கள் அடியெடுத்து வைக்க, பட்டுடை தேவதை பாங்காக பரிதவித்து வரவே, ஓரத்து பார்வையால் நோக்கினான் மணவாளன். எத்தனை நாட்களாக தவம் கிடந்தேன் இந்த ஒரு பார்வைக்காக என்ற அவன் மனக்கடிதம் வாசித்தான்.
Tamil kavithai marriage invitation wordings in tamil language
மனக்கதவு திறந்து மணக்கதவில் தாழ்போட ஒன்றிணைத்து வைப்போம் வாருங்கள் உற்றாரே, உறவினரே..!
புதிய புத்தகம் ஒன்றை எழுத இருமன எழுத்தாளர் ஒன்றிணைந்தார். இதயம் சார்ந்த எழுத்துகள் என்பதால் இதழால் எழுதிட துணிந்தார் பாரீர். வாழ்க்கையின் புத்தகத்தின் முதல் அத்தியாயம் தொடங்கும் வேளையில் ஆசிர்வதிப்போம் வாரீர் வாரீர்..!
Tamil kavithai marriage invitation wordings in tamil language
இதயம் ஒரு தங்கக் கலசம். அதில் நிரம்பி உள்ளதோ அன்பின் அமுதம். அந்த அமுதம் பருகும் நன்னாளில் புன்னகை மலரவே வாழ்த்துவோம் வாருங்கள்.
உங்கள் ஆத்மா ஒரு அழகான பூ. அதில் நிறைந்துள்ளதோ மகிழ்ச்சியின் மணம். நாங்கள் அந்த மணத்தை சுவாசிக்க விரும்புகிறோம். எங்கள் வாழ்க்கையை சுகமாக மாற்றுவோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
வந்து வாழ்த்துங்கள்.
உங்கள் முகம் ஒரு அழகான நிலவு. அதில் நிறைந்துள்ளது நம்பிக்கையின் ஒளி. நாங்கள் அந்த ஒளியை எங்கள் வாழ்க்கையில் கொண்டு வருவோம். எங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நிரப்புவோம். வாருங்கள் வாழ்த்துங்கள்.
உங்கள் கனவுகள் ஒரு அழகான பறவை. அது எங்கள் வாழ்க்கையின் வழியே பறந்து செல்கிறது. நாங்கள் அந்த பறவையுடன் சேர்ந்து பறப்போம். எங்கள் வாழ்க்கையை ஒரு புதிய உயரத்திற்கு கொண்டு செல்வோம். வாழ்த்துங்கள், மகிழ்கிறோம்.
Tamil kavithai marriage invitation wordings in tamil language
உங்கள் வார்த்தைகள் ஒரு இனிமையான மொழி. அது எங்கள் இதயங்களை மகிழ்விக்கிறது. நாங்கள் அந்த மொழியில் பேசுவோம். எங்கள் வாழ்க்கையை ஒரு இனிமையான சூழலாக மாற்றுவோம். வரவேற்பதில் மகிழ்கிறோம். வாழ்த்துங்கள்
உங்கள் வாழ்க்கை ஒரு அழகான பூங்கா. அதில் நிறைந்துள்ளவை மகிழ்ச்சியின் பூக்கள். நாங்கள் அந்த பூக்களை ரசிப்போம். எங்கள் வாழ்க்கையை ஒரு பூங்கா போல மாற்றுவோம். பூங்காவுக்கு வாருங்கள். பூக்களை வாழ்த்துங்கள்.
உங்கள் உலகம் ஒரு அழகான இடம். அங்கு நிறைந்துள்ளது அன்பின் ஒளி. நாங்கள் அந்த ஒளியில் கைகோர்த்து நடப்போம். எங்கள் வாழ்க்கையை ஒரு புதிய உலகமாக மாற்றுவோம். வரவேற்கிறோம் இருகரம் கூப்பியே..! வாழ்த்துங்கள் அகமது மகிழவே..!
Tamil kavithai marriage invitation wordings in tamil language
மண்ணோடு விதை சேர்ந்து
மணத்தோடு மலர் பூத்தது போல்
மனதோடு மனம் சேர்ந்து
மணம் வீசும் இம்மங்கல திருமணநாளில்
மகத்தான வாழ்வில் மாலையிட்டு
மனதை பரிமாறும் வேளையில்
அன்பினால் உரமிட்டு
இவ்விதைக்கு வளம் சேர்க்க
உங்கள் அனைவரையும் எங்கள் திருமண நன்நாளில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu