மனைவி என்பவள் முதுமையில் கணவனின் மூன்றாம் கால்..!

X
Tamil Kavithai for Wife
By - K.Madhavan, Chief Editor |26 Oct 2022 6:00 PM IST
Tamil Kavithai for Wife-மனைவியின் நேசம் வறுமையில் தெரியும். முதுமையில் தோள்கொடுத்து மூன்றாம் காலாய் இருப்பவள் மனைவி. துன்பத்தில் தோழி.
Tamil Kavithai for Wife
உயிரில் கலந்து புது உறவுகள் உருவாக்கும் காதலின் புதுக்கவிதை, கணவன்-மனைவி. வானும் கடலும் சங்கமிக்கும் காட்சிகள் நம் கண்களுக்குத் தெரிவதில்லை. அதுபோலவே கணவன்-மனைவி உறவென்பது அந்த இருவருக்கான புது உலகம். வேறு ஜீவராசிகள் புகுந்துவிடமுடியாத தனி உலகம். அதில் மகிழ்ச்சி காண்பதும்..கோபம் கொள்வதும்..பின் ஒன்று சேர்வதும் அவர்களுக்கேயான தனி ராஜ்ஜியம்.
- கோபப்படுவது நீயாக இருக்கும் போது, உன்னிடம் தோற்றுப்போவதில் கூட நான் மகிழ்ச்சியடைகிறேன்..! ஏனெனில் நான் உன்னை நேசிப்பது உண்மை..!
- ஓங்குகிறேன் உன்னை அடிப்பதற்கு செல்லமாக கன்னத்தில் தட்ட..அதுகூட உனக்கு வழித்துவிடக் கூடாதே என்று என் கையை இறக்கிவிடுகிறேன்..!
- சண்டையை தொடங்குவது நீயாக இருந்தாலும் சண்டையை முடிக்க ஒவ்வொரு முறையும் உன்னை சமாதானம் செய்வதில் நான் வெற்றிகொள்கிறேன்..
- அன்பின் மொழியில், கோபமும் காதல் தான் கண்ணே..நான் கொள்ளும் பொய் கோபமெல்லாம் உன்மீதான அதீத அன்பின் வெளிப்பாடுதான்..!

Tamil Kavithai for Wife
- கோபத்திலும் எட்டி நிற்காமல், கிட்டவந்து கட்டியணைத்துத் திட்டும் அவன், ஓர் விந்தை உறவு..அது உண்மை அன்பின் வெளிப்பாடு..!
- உன்னுடனான எனது சண்டைகளில், நீ மட்டுமே வெற்றிபெற வேண்டும் என்று வேண்டிக்கொள்வதே எந்தன் ஒட்டு மொத்த வேண்டுதல் நீ மட்டும் தானே..!
- கோபமாய் நான் முகம் தூக்கி ஓரமாக நான் நிற்கும் போது,உன் செல்லக் கொஞ்சல் போதும் பெண்ணே, என் கோபத்துக்குக் கூட வெட்கம் வந்து சிவந்துபோகிறது உன்முன்னே..!
- சின்னச்சின்ன ஊடல்கள், நம்மை பிரிப்பதற்கல்ல கூடுதலாக நம் காதலை வளர்ப்பதற்கு..!
- தனியறையில் தணலாக தகிக்கும் என்காதல் தீயை, முத்த மழையில் குளிர்காயச் செய்கிறான்...உயிர் மூச்சு சத்த நாடியை பிடித்து இழுக்கிறது..இதுதான் காதலின் மகிமையோ என்று மின்னல் ஒன்று தாக்குகிறது..!
Tamil Kavithai for Wife
- அவன் இட்ட ஒற்றை முத்தம் ஒட்டுமொத்த வாழ்க்கையின் அர்த்தங்களை கற்பித்துவிட்டது..எந்த பல்கலைக்கு போகாமலேயே..! என் மனதுக்குள் சில்லென ஒரு மழைத்துளி..!
- வறுமையில் கணவனை நேசிக்கும் பெண்ணும், முதுமையில் மனைவியை நேசிக்கும் ஆணும் தான் உலகின் ஆகச் சிறந்த காதலர்கள்..!
- சிரிப்பை விட கண்ணீருக்கே மதிப்பு அதிகம். யாருக்காக வேண்டுமானாலும் சிரிக்கலாம். ஆனால் உன்மையான அன்பு இல்லாமல் யாருக்காகவும் கண்ணீர் சிந்த முடியாது..!
- அக்கறை காட்டும் உறவு எப்போழுதும் தூரமாகத் தான் இருக்கும். உண்மை அன்புக்கு தூரம் என்பதெல்லாம் ஒரு பொருட்டல்ல..! முகம் பார்த்து வருவதல்ல காதல். அது உள்ளத்துக்குள் இருப்பது..!

Tamil Kavithai for Wife
- சுகங்களை மட்டும் பகிர்ந்து கொள்வது காதல் அல்ல..சோகங்கள் சொல்லும்போது தோளுக்கு தோள்கொடுத்து துணையாய் நிற்பது தான் உண்மைக் காதல்…!
- இதயம் எத்தனை முறை காயப்பட்டாலும் மனதிற்கு பிடித்தவரை மறக்காது. காரணம் இதயத்திற்கு நடிக்கத் தெரியாது.. அவனை எண்ணி துடிக்க மட்டுமே தெரியும்…!
- உன்னுடன் பேசிய நிமிடங்களை விட எப்பொழுது பேசுவாய் என்று ஏங்கி தவித்த நிமிடங்களே அதிகம்..! அதுவே சுகமானதாகவும் இருக்கிறது..ஆதலால் நீ பேசாமலேயே கடத்து..என் ஆவல் அன்பாக மிளிரட்டும்..!
- உன்னையே தேடும் என் கண்களுக்கு உன் புகைப்படம் மட்டுமே ஆறுதல்..! நீ என் மனதுக்குள் குடியிருக்கிறாய்..வேறு எங்கு உன்னை நான் தேடப்போகிறேன்..?
Tamil Kavithai for Wife
- உனக்காக காத்திருக்கும் ஒவ்வொரு நிமிடமும் உணர்த்துகிறது நீ இல்லாத வாழ்க்கை வெறுமை என்று..! ஆனாலும் என்னவோ அது கூட இன்பமாகத்தான் இருக்கிறது..! காணாத காதலுக்கே வலிமை அதிகம்..!
- உடலுக்கு துணையாக மட்டுமல்ல மனதுக்கும் துணையாகவும் வாழ்பவர்கள் தான் கணவன் மனைவி..! அது மரணப்பரியந்தம் தொடரும் உறவு..!
- வாழ்க்கையை சந்தோசமாக வாழ்வதற்கு ஆயிரம் உறவுகள் இங்கு தேவை இல்லை..நம்மை உண்மையாக நேசிக்கும் ஒற்றை உறவு போதும்..! ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததுபோல இன்பம் காணலாம்..!
- விழுதுகள் மரத்தை தாங்கலாம். வேர் மட்டுமே அதை வாழ வைக்க முடியும். எத்தனை சொந்தங்கள் இருந்தாலும் ஒரு ஆணுக்கு மனைவி தான் ஆணிவேர். அதேபோல ஒரு பெண்ணுக்கும் கணவன் தான் ஆணிவேர்..! அதற்கு இணை வேறு எதுவும் இல்லை.

Tamil Kavithai for Wife
- ஒரு அப்பாவி பெண் கூட புத்திசாலி கணவனை ஆள முடியும். ஆனால் புத்திசாலித்தனம் உள்ள மனைவியால் மட்டுமே முட்டாள் கணவனை ஆள முடியும்.
- நான் கேட்காமல் கிடைத்த வரம் நீ..இப்போது வரமாக கேட்கிறேன். உன்னைப் பிரியாத வாழ்வு வேண்டும் என்று..அதற்கு ஆண்டவன் கூட சொல்லிவிட்டான்..ஆனாலும் உன் பதிலே எனக்கு கடவுள் பதில் என்பதால் உன் பதிலுக்கு காத்திருக்கிறேன் கண்ணே..பதில் சொல்வாயா..?
- எல்லா பெண்களுக்கும் கிடைப்பதில்லை.. எந்த சூழ்நிலையிலும் உன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன் விட்டுச் செல்லவும் மாட்டேன் என்று இருக்கும் ஒரு ஆண்.
- நானும் நீயும் கணவன் மனைவியாக வாழ இந்த காதல் கொடுத்து வைத்து இருக்க வேண்டும். எனக்கு நீ; உனக்கு நான் என்று வாழும் வாழ்க்கையைப்பார்க்க காதல் கொடுத்துதான் வைத்திருக்கவேண்டும்..!
Tamil Kavithai for Wife
- கணவன் பணக்காரனாக இல்லை என்றாலும் பரவாயில்லை. கடன்காரனாக இருக்கக் கூடாது என்று நினைப்பவளே உண்மையான மனைவி..!
- கணவன் மனைவி காதல் என்பது கட்டி பிடித்தலிலும் முத்தம் இடுதலிலும் இல்லை..! தன்னோடு வாழ்பவரின் வலியையும் உணர்வையும் புரிந்து கொள்வதில்தான் இருக்கிறது...!
- உந்தன் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்..நீ என் மணாளனாக அமைவதற்கு மட்டுமல்ல, என் தந்தையின் மறு உருவமாக அமைவதற்கும் தான்..! வாடா என்னைக்கொண்டாடு..!
- அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சாம்..ஏனோ, எனக்கு அமிழ்தமாகவே தெரிகிறது அவன் தரும் முத்தம்..! நான் அமிழ்தம் உண்டதில்லை என்பதால் அமிழ்தினும் மேல் என்கிறேன் அவனது முத்தம்..!

Tamil Kavithai for Wife
- எனது பேச்சும் நீயே..! எனது மூச்சும் நீயே..! நீ காற்றை சுவாசிக்கிறாய்..ஆனால் நானோ உன்னைத்தான் சுவாசிக்கிறேன்..நீயே என் சுவாசம்..!
- எனக்கே எனக்கு சொந்தமான உயிர் ஓவியம் நீயே..! உன் தாயும் தந்தையும் எழுதிய கவிதைக்காவியம் நீ..! எனக்காகவே வரையப்பட்ட காதல் ஓவியம்..!
- உன் முகம் பார்த்த பின்னர்தான் இறைவன் நிலவைப் படைத்திருப்பான் போலிருக்கிறது..! நிலவினைக்காட்டிலும் உன் முகம் அழகு..!
- என் உயிர் பிரிந்தால் உன் கண்களில் கண்ணீர் வருவதை நானறியேன்..! ஆனால், உன் கண்களில் நீர் வந்தால் அந்த நொடி மரணம் என்னைத் தழுவும்..! உன் கண்களில் கண்ணீர் வந்தால் என் உயிரே போகும்..!
- அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu