Skin Whitening Tips In Tamil-இயற்கை அழகுபெற இதுதான் வழி..!

Skin Whitening Tips In Tamil-இயற்கை அழகுபெற இதுதான் வழி..!
X

Skin Whitening Tips In Tamil-இயற்கைமுறை முக அழகு பெற (கோப்பு படம்)

என்னதான் ஆயிரக்கணக்கில் அழகு க்ரீம்கள் வந்தாலும் முகம் பொலிவுபெற இயற்கையான வழிமுறைகள்தான் நிரந்தர தீர்வு அளிக்கும்.

Skin Whitening Tips In Tamil

முகத்தை வெள்ளையாக்குவதற்கு தொலைக்காட்சிகளில் எத்தனையோ விளம்பரங்கள் வந்துவிட்டன. இளம்பெண்களும் எத்தனையோ கிரீம்களை வாங்கி பயன்படுத்தி இருப்பார்கள். வெள்ளை ஆகும். ஆனால் அதில் ஒரு நேர்த்தியான ஒரு இயற்கையான வெளுமை இருக்காது.

ஆனால் இயற்கையான முறையில் சிகப்பழகைப் பெற என்ன வழிகள் உள்ளன என்பதாகி கொஞ்சம் யோசிக்கலாம். நடுத்தர நிறம் கொண்டவர்கள் கூட சில இயற்கையான முறைகளை பின்பற்றினால் நிரந்தரமான நிறத்தை பெறமுடியும்.

Skin Whitening Tips In Tamil

ஏழு நாட்களில் தொடர்ந்து இந்த பேக்கை பயன்படுத்தி வந்தால் நிச்சயமாக நல்ல வித்தியாசத்தை காண முடியும். இயற்கையான சில பொருட்களை வைத்து தான் இந்த பேக்கை தயார் செய்யப் போகிறோம். வாங்க பார்க்கலாம்.


இயற்கை பேக்கிங்

ஒரு சிறிய பவுலில் கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன், வெந்தய பொடி – 1 டேபிள் ஸ்பூன், அதிமதுரம் – 1 டேபிள் ஸ்பூன், இந்த மூன்று பொடியையும் போட்டு முதலில் ஒன்றாக கலந்து விடுங்கள். அதன் பின்பு இதை முகத்துக்கு பூசுவதற்கு ஏற்ப பேக்காக மாற்றுவதற்கு தயிர் பயன்படுத்த வேண்டும்.

தேவையான அளவு தயிர் சேர்த்து கலந்து இந்த பேக்கை பயன்படுத்தும் போது ரிசல்ட் உடனடியாக நமக்கு கிடைக்கும். தயிர் சிலருக்கு பிடிக்காது. அவ்வாறு தயிர் பிடிக்காதவர்கள் பால் சேர்த்துக்கொள்ளலாம். அப்படியும் இல்லையென்றால் ரோஸ் வாட்டர் சேர்த்துக் கொள்ளலாம்.

Skin Whitening Tips In Tamil

ஆனால், சூரிய ஒளிபட்டு ஏற்பட்ட அந்த கருமை தயிர் போட்டால் தான் சீக்கிரம் சரியாகும் என்பது இங்கு நாம் கவனிக்கத்தக்க விஷயம். இந்த பேக்கை முகம் கழுத்து போன்ற இடங்களில் நன்றாக பூசி 20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட வேண்டும். அதன் பின்பு முகத்தை நனைத்து லேசாக மசாஜ் செய்து, கழுவி விட வேண்டும். இந்த பேக்கை முகத்தில் பூசுவதற்கு முன்னர் முகத்தை சுத்தமாக கழுவிவிட வேண்டும். முகத்தில் மேக்கப் இருக்கக் கூடாது.

இதேபோல வாரத்தில் தொடர்ந்து 7 நாட்கள் இந்த பேக்கை பயன்படுத்தி வந்தால், ஏழாவது நாள் உங்களுடைய சருமத்தில் நல்ல வித்தியாசம் தெரியும். ஒரு பளபளப்பு வந்து இருக்கும். உங்களுக்கே மகிழ்ச்சி பொங்கும் அந்த மகிழ்ச்சியால் மலர்ந்து இன்னும் வெள்ளை கூடும்.

அதன் பின்பு வாரத்தில் இரண்டு நாள், அல்லது மூன்று நாள் இப்படி இந்த பேக்கை நீங்கள் தொடர்ந்து போட்டு வரலாம். உங்களுடைய முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள், கருந்திட்டுகள், முகப்பருக்கள் தழும்புகள் எல்லாம் படிப்படியாக குறையத் தொடங்கும்.


Skin Whitening Tips In Tamil

சிலருக்கு மென்மையான முகச் சருமம் இருக்கும். அப்படி சென்சிடிவ் ஆன ஸ்கின் இருந்தால் இதை ஒரு முறை முகத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பூசி பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள். உங்களுக்கு அரிப்பு அல்லது சிவத்தல் போன்ற எந்த தொந்தரவும் ஏற்படவில்லை என்றால் பிஞ்சானர் அந்த பேக்கை முகத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.

கேரளப் பெண்களின் அழகுக்கும் நிறத்துக்கும் இந்த அதிமதுரம் முக்கிய பொருளாக இருக்கும். கேரள பெண்கள் அழகு குறிப்பில் இந்த அதிமதுர பொடி கட்டாயமாக இருக்கும். அதிமதுரப் பொடி, வெந்தயப் பொடி போன்றவை பொடியாக நமக்கு நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். அப்படி இல்லை என்றால் ஆன்லைனில் ஆர்டர் செய்து கூட வாங்கலாம்.

நம்முடைய சருமம் நிரந்தரமாக பளபளப்பாக ஜொலிக்க வேண்டும். சுருக்கம் சீக்கிரத்தில் விழக்கூடாது என்றால் நாம் சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்களிலும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். காய்கறிகள் பழ வகைகள் இவைகளை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். குறிப்பாக மனு அழுத்தம் இருக்கக் கூடாது. நம்முடைய சரும ஜொலி ஜொலிப்பு மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே செல்லும்.

Skin Whitening Tips In Tamil


கற்றாழை

கற்றாழையானது முக அழகிற்கு பயன்படுத்தக்கூடிய மிகவும் அருமையான இயற்கை வழிமுறையாகவும், சருமத்தின் அனைத்து பிரச்னைகளுக்குமான அருமருந்தாகவும் பயனாகிறது.

கற்றாழையில் இருந்து ஜெல்லை எடுத்து அதில் சிறிதளவு பாதாம் எண்ணெய் சேர்த்து முகம் மற்றும், கழுத்து பகுதியில் மசாஜ் செய்து இருபது முதல் 30 நிமிடங்கள் வரை நன்றாக ஊறவையுங்கள். பின் முகத்தை கழுவிக் கொண்டால் முகம் பளபளப்பாகுவதுடன் வெள்ளையாகும்.

Skin Whitening Tips In Tamil


எலுமிச்சை

எலுமிச்சை சிறந்த அழகு சாதனப் பொருளாக இருக்கிறது. இது சருமத்தில் உள்ள அழுக்கைப் போக்கி முகத்தை வெண்மையாக வைத்துக் கொள்ள உதவுகின்றது. எலுமிச்சை பழத்தை பாதியாக நறுக்கி அதன் சாற்றைப் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.

அதனுடன் சிறிது காப்பி தூள் மற்றும், சர்க்கரை ஆகிய இரண்டையும் கலந்து பிழிந்த எலுமிச்சை கோதினைக் கொண்டு அந்த கலவையில் தொட்டுத் தொட்டு முகத்தில் வட்ட வடிவில் ஐந்து நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்யுங்கள். பின்னர் 10 நிமிடங்க உளரவிடுங்கள். பின்னர் குளிர்ந்த நீரினால் கழுவி வந்தால் முகம் வெள்ளையாகும். இதனைத் தொடர்ந்து ஏழு நாட்கள் செய்து வர வேண்டும்.

Skin Whitening Tips In Tamil


கோதுமை மாவு

ஒரு டீஸ்பூன் கோதுமை மாவு மற்றும், ஒரு டீஸ்பூன் அரிசிமாவு இரண்டையும் ஒன்றாக கலந்து பின் ஒரு தக்காளியை பாதியாக நறுக்கி அதனுடன் சேர்த்து நல்ல ஒரு பேஸ்ட்டாக கலக்கி எடுக்கவேண்டும். அந்தக் கலவையை 15 நிமிடம் முகத்தில் நன்றாக மசாஜ் செய்து கொள்ள வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் சருமத்தை கழுவ வேண்டும்.

இவ்வாறு ஏழு நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், 'என்னடி உன் முகம் வர வர கலராகுது ?' ன்னு உங்க பிரென்ட் கேட்பார். அந்த அளவுக்கு முகம் வெள்ளையாகவும், பொலிவுடன் தோற்றமளிக்கும்.


உருளைக்கிழங்கு

சிறிய அளவிலான உருளைக்கிழங்கினை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் ஒரு தக்காளியையும் சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சிறிதளவு நீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அந்த கலவையுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு, சிறிதளவு அரிசிமாவு இரண்டையும் சேர்த்து கலந்து கொண்டு முகத்தில் மசாஜ் செய்து 15 நிமிடங்கள் நன்றாக ஊற வைக்கவேண்டும். பின்னர் குளிர்ந்த நீரினால் கழுவி விடவேண்டும். சருமம் மென்மையாக இருப்பதுடன் முகம் வெள்ளையாகும்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!