சொந்த வீட்டில் சந்தோஷம் இல்லையா? - இந்த எளிய பரிகாரத்தை பண்ணுங்க!

சொந்த வீட்டில் சந்தோஷம் இல்லையா? - இந்த எளிய பரிகாரத்தை பண்ணுங்க!
X

சந்தோஷமான வாழ்க்கைக்கு எளிய பரிகாரம் ( கோப்பு படம்)

சொந்த வீட்டில் சந்தோஷமாக இருக்க எளிய பரிகாரம் உள்ளது. அதை செய்து பாருங்கள்.

"இல்லாதவர்களுக்கு ஒரு கஷ்டம், என்றால், இருப்பவர்களுக்கு பல கஷ்டம்.” "வாடகை வீட்டில் இருந்த சந்தோஷம் கூட புதிதாக கட்டிய சொந்த வீட்டில் இல்லையே!” என்ற வருத்தம் உங்களிடம் உள்ளதா.

வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு, சொந்தமாக வீடு இல்லை என்பதுதான் ஒரு கஷ்டமாக இருக்கும். எப்படியோ! கடனை வாங்கி, சில பேர் சொந்த வீடு கட்டி, குடி சென்றிருப்பார்கள். வீடு கட்டி விட்டோம் என்று ஒரு நிம்மதியை தவிர, அவர்களுக்கு இருந்த மற்ற எல்லா நிம்மதியும், அவர்களை விட்டு சென்றிருக்கும். அட என்னடா இது. வாடகை வீட்டில் இருந்த நிம்மதி கூட, இந்த சொந்த வீட்டில் வந்து, நமக்குக் கிடைக்கவில்லையே என்று கஷ்டப்படுபவர்கள், எத்தனையோ பேர் உள்ளார்கள். வாடகை வீட்டில் இருந்த நிம்மதி கூட, இந்த சொந்த வீட்டில் வந்து, நமக்குக் கிடைக்கவில்லையே என்று கஷ்டப்படுபவர்களுக்கு ஒரு சுலபமான பரிகாரம் உள்ளது. அது என்ன பரிகாரம் என்பதைப் பற்றி, இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா. வாஸ்து நாள் என்று சொல்லப்படும் சித்திரை 10, வைகாசி 21, ஆடி 13, ஆவணி 6, ஐப்பசி 11, கார்த்திகை 8, தை 12, மாசி 22., இந்த எட்டு நாட்களும் வருடத்தில் மாறவே மாறாது.

தமிழ் மாதத்தில் வரக்கூடிய இந்த நாட்கள் அனைத்தும் வாஸ்து நாள் ஆகும். இந்த நாளில் உங்கள் வீட்டில் வாஸ்து பகவானை மனதார நினைத்து ஒரு சிறிய பூஜை செய்ய வேண்டும்.

பூஜையை எப்படி செய்வது?

ஒரு சிறிய கிண்ணத்தில் கல் உப்பை முழுமையாக எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டு மனையில், உங்களுக்கு சொந்தமான மண் ஒரு கைப்பிடி அளவு, வீட்டு வெளிப்பகுதியில் இருக்கும் அல்லவா? (முடிந்தால் ஈசான மூலையில் இருந்து இந்த மண்ணை எடுப்பது இன்னும் உத்தமம்) அந்த மண்ணை, கிண்ணத்தில் இருக்கும் கல் உப்பில் கலந்து விடுங்கள்.

உங்கள் வீட்டு பூஜையறையில், காலை சூரிய உதயத்திற்கு முன்பாகவே, ஒரு தீபத்தை ஏற்றி வைத்து விட்டு, நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் உப்பு கலந்த மண்ணை பூஜையறையில் வைத்து, மனமுருகி வாஸ்து பகவானை வேண்டிக் கொள்ள வேண்டும்.

உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய கஷ்டங்கள், சண்டை சச்சரவுகள், நோய் நொடிகள் அனைத்தும் தீர்ந்து உங்கள் வீடு சுபிட்சம் அடையவேண்டும் என்று, மனம் உருகிய வேண்டுதலை வையுங்கள்.

அதன் பின்பு, மாலை நேரம் வரை அந்த உப்புக் கலந்த மண்ணானது உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே இருக்கட்டும். மாலை 6 மணிக்கு மேல் மீண்டும் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து, பிரச்சனைகள் தீர வேண்டும் என்று வாஸ்து பகவானை நினைத்து சொல்லி விட்டு, அந்த உப்பு பாத்திரத்தை எடுத்து, அதிலிருந்து ஒரு கைப்பிடி அளவு உப்பை எடுத்து, வீட்டு வாசலுக்கு வெளியே சென்று, உங்கள் வீட்டை முழுவதுமாக ஐந்து முறை சுற்றி தண்ணீரில் போட்டு விடுங்கள். கிண்ணத்தில் மீதமிருக்கும் உப்பையும் தண்ணீரில் போட்டு கரைத்து விடுங்கள். அவ்வளவுதான்!

குறிப்பாக இந்த பூஜையை, மேல் குறிப்பிட்டுள்ள வாஸ்து நாட்களில் செய்து வருமேயானால், உங்கள் வீட்டில் இருக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். உங்கள் வீட்டிற்கு கண்ணுக்கு தெரியாத திருஷ்டி தோஷம் ஏதாவது இருந்தால் கூட, அந்த உப்பில் கரைந்து போய் விடும். ஏனென்றால், நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து உழைத்து கடனை உடனை வாங்கி, வீடு கட்டியது யாருக்குமே தெரிந்திருக்காது. ‘நீங்கள் புதிதாக வீடு கட்டி விட்டீர்கள்’ என்பது மட்டும் தான் அடுத்தவர்களுக்கு தெரியும். எத்தனை பேரின் கண் அடியும், கண் திருஷ்டியும், அதில் விழுந்திருக்கும். அவை அனைத்தும் நீங்க வேண்டும் என்றால், வாஸ்து பகவானை நினைத்து மேற்குறிப்பிட்டுள்ள முறைப்படி பூஜை செய்து, திருஷ்டி கழித்து பாருங்கள்.

வருடத்தில் வரக்கூடிய, இந்த எட்டு நாளிலும் வாஸ்து பகவானை மறக்காமல், மனதார நினைத்து பூஜை செய்பவர்களுக்கு, வீட்டில் நிம்மதி நிலைத்திருக்கும்.

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!