கொடுவா மீன் சாப்புடுறீங்களா..? டேஸ்ட் பார்ப்போமா..?

Bass Fish in Tamil

Bass Fish in Tamil

Bass Fish in Tamil-கொடுவா மீன் என்றதுமே ஒரு பயம் வருகிறதா..? அட பயப்பட வேண்டாங்க.. அது வெறும் பேருதான் அப்படி. சாப்பிட்டா சுவை அதிகம்.

Bass Fish in Tamil

பொதுவாகவே மீன் எந்த உடல் உபாதைகளும் ஏற்படுத்தாத உணவாகும். சிலவகை மீன்களை அளவோடு உண்ணவேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்கும் சில அறிவியல் காரணங்கள் உள்ளன. மீன் குழம்பு அல்லது மீன் வறுவல் என்றாலே பலருக்கும் வாயில் ஜாலம் ஊறுவது இயல்பு. அந்த அளவுக்கு மீனின் சுவை அலாதியானது.

மீன் உணவை குழந்தைகளுக்கு கூட மசித்து சிறிது கொடுக்கலாம். அந்த கெடுதலையும் ஏற்படுத்துவதில்லை. கேரள மாநிலத்தில் பெரும்பாலும் மீன் உணவு இல்லாத வீடுகளே இல்லை எனலாம். கேரளா பெண்கள் நல்ல நிறமாக இருப்பதற்கும்,உடல் மிருதுவாக இருப்பதற்கும் மீன் உணவும் ஒரு காரணம்.

கொடுவா மீன்கள் அதிக புரோட்டின் சத்து கொண்டதால், மக்கள் இதை அதிக அளவில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, இந்த வகை மீன்களுக்கு வெளிநாடுகளில் அதிக அளவில் வரவேற்புள்ளது.

கொடுவா மீன் உவர்நீர் மற்றும் கழிமுக நீர் வளங்களில் காணப்படும் சுவை மிகுந்த உப்புநீர் மீனாகும். இது அதிகபடியாக 1.5 மீ. நீளம் வரை வளரக்கூடியதாகும்.

உடல் வடிவமைப்பு

நீள் சதுர வடிவமான உடலின்மேல் பெரிய செதில்களைக் கொண்டது. தலையின் நுனிப்பகுதியில் வாய் உள்ளது. இது பெரியதாக அகன்றும், வெளிநீட்டக்கூடிய வகையிலும் காணப்படுகிறது. வால் உருண்டையாகக் காணப்படுகிறது. உடலின் மேற்பரப்பு சாம்பல் படர்ந்து வெள்ளி நிறமாகவும், அடிப்பரப்பு சற்று வெளிர் நிறமாகவும் காணப்படுகிறது. தாடைகள், கன்னம் ஆகிய பகுதிகளில் பற்கள் காணப்படுகின்றன. முதுகுப்புறதில் ஒரு முதுகுப்புறத் துடுப்புக் காணப்படுகிறது. இதில் 7 முதல் 10 வரையிலான துடுப்பு முட்கள் காணப்படுகின்றன. மலவாய்த் துடுப்பில் மூன்று முட்கள் உள்ளன. வால் துடுப்பு பல வடிவங்களில் காணப்படுகிறது.

உணவுப் பழக்கம்

இம்மீன் ஊன் உண்ணும் பழக்கத்தையும், இறால், நத்தை மற்றும் பிற மீன்களையும் வேட்டையாடும் பழக்கத்தையும் உடையது. இம்மீனின் கொன்றுண்ணும் பழக்கத்தால் இவற்றை மீன் பண்ணைகளில் வளர்ப்பதில்லை.

ஆசிய கடல் பாஸ் என்றும் அழைக்கப்படும் பாராமுண்டி என்பது லாடிடே குடும்பத்தில் உள்ள கேடட்ரோஸ் மீன் இனமாகும். பாராமுண்டி மீன் தமிழில் கொடுவா மீன் என்று அழைக்கப்படுகிறது. ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் பி -12 மற்றும் பல போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருப்பதால் அவை உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன.

மீன்களில் உயர்ரக புரதம், அயோடின், நல்ல கொழுப்பு என உடலை சீராக செயல்பட வைக்கும் வைட்டமின்-டி, ஒமேகா-3 மற்றும் பல்வேறு வைட்டமின்கள், மினரல்கள் போன்றவை நிறைந்துள்ளன. அதனால், மீன் உணவினை அதிகமாக உட்கொண்டு நல்ல உடல் ஆரோக்யம் பெறுவோம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Read MoreRead Less
Next Story