Sad quotes in tamil-கத்தியால் குத்திய வலியிலும் உன் வார்த்தைகளின் வலியால் துடிக்கிறேன்..!

Sad quotes in tamil-கத்தியால் குத்திய வலியிலும் உன் வார்த்தைகளின் வலியால் துடிக்கிறேன்..!
X

sad quotes in tamil-சோகத்தின் மேற்கோள்கள் (கோப்பு படம்)

கவலைகள் இல்லாத மனிதர் இங்கு யாருமில்லை. இதுவும் எனக்கான பாடம் என்று கடந்தால், சோகங்கள் சொல்லிக்கொள்ளாமல் விடைபெறும்.

Sad quotes in tamil

இந்த சமூகத்தில் சிரித்து வாழும் எல்லோருமே கவலைகள் அற்றவர்கள் அல்ல. பலர் சோகங்களை உள்ளுக்குள் மறைத்து வைத்து வெளியே சிரித்து வாழ்கிறார்கள் என்பதே உண்மை. காயம் பட்ட பல நெஞ்சங்களுக்கு மருந்து போட இங்கு யாருமில்லை. சோறு போட ஆளிருந்தும் சொல்லி அழ யாரும் இருக்கமாட்டார்கள்.

காதலின் வேதனை காதலித்து பிரிந்தவர்களுக்குத் தான் தெரியும். கண்ணீர் மட்டுமே அவர்களின் வாழ்க்கையாக இருக்கும். இப்படி வேதனையில் வாழும் நெஞ்சங்களுக்கு நாம் வார்த்தைகளால் மருந்து போடுவோம் வாங்க.

Sad quotes in tamil


இதோ வலிக்கு மருந்திடும் சொற்கோர்வைகள்:-


நாம் எந்த தவறும் செய்யாதபோதும்

சில புரிந்துகொள்ளாத உறவுகளால்

வாழ்வில்..

வலிகளோடு வாழவேண்டியுள்ளது,

வழி பிறக்கும் வரை..!

யாருக்கும்

பாரமாய் இருப்பதை விட.,

அவர்கள் தேடும் அளவுக்கு

தூரமாய் இருப்பது

ஓரமாய் தள்ளி வைத்த

உறவின் நெஞ்சத்தில்

ஈரமாய் அன்பின் துளிகள்

ஊற்றெடுக்கலாம்..!

Sad quotes in tamil

யாரிடம் அன்பையும் பாசத்தையும்

எதிர்பார்த்தோமோ

அவர்களிடமிருந்து

வருவதெல்லாம்

ஏமாற்றங்கள் தான்,

மாற்றங்கள் அங்கு காணோம்..!


அன்று எதை எதையோ

விரும்பிய மனம்..

இன்று எதையும் விரும்பாமல்

இருக்கவே விரும்புகிறது,

ஒன்றும் ஒன்றும்

இரண்டு என்று அறியும்போது..!

Sad quotes in tamil

மனம் விட்டுப் பேச துணை

இல்லாத போது தான் தெரிகிறது

தனிமை எவ்வளவு

கொடுமையானது என்று

நம்மை புரிந்து கொள்ளாதவரிடம்

உண்மைக்கான

விளக்கங்கள் கூட

பயனற்றதாகத்தான் இருக்கும்..!

இது நிரந்தரம் இல்லா

சுயநலம் மிகுந்த உலகம்,

இங்கு யாரும் யாருக்காகவும்

இல்லை என்பது மட்டும் நிஜம்

நாம் இருந்தாலும் மறைந்தாலும்

உலகம் இயங்கும்..!

Sad quotes in tamil

சில காலகட்டங்களில்

சில சூழ்நிலைகளை

சிரித்துக்கொண்டே

நகர்ந்து விடுங்கள்

மன வலிகளாவது

இல்லாது போகட்டும்..!


உரிமை உண்டு

என்று நினைத்தபோதும்

உனக்கு மதிப்பு இல்லையென

தெரிந்தால் விலகி விடு,

உன்

தன்மானத்திற்கு

சேதாரம் இருக்காது..! .

Sad quotes in tamil

பார்ப்பவர்களுக்கு நான்

சிரிச்சிகிட்டே இருப்பதுபோல

தோன்றினாலும்

எனக்குள் இருக்கும்

கவலையும் கஷ்டமும்

எனக்கு மட்டுமே தெரியும்.

காயங்களை உருவாக்க

கத்திகள் தேவையில்லை,

புரிதலற்ற

கடுமையான

வார்த்தைகளே போதும்

காயங்களை ஏற்படுத்த..!

Sad quotes in tamil

உயிரோடு தான் இருக்கிறேன்

ஆனால் என்னவென்று

தெரியாத பல காரணங்களால்

உடைந்து போய் இருக்கிறேன்..


பிடித்தவர்களிடம் பேசுவதற்கு

கூட பயமாக இருக்கிறது.

தொல்லையாக நினைத்து

விலகி விடுவார்களோ என்று..!

நமக்கு உரிமை உண்டு

என்று பேசினாலும்

ஒரு சில நேரங்களில்

நாம் யாரோதான்..

Sad quotes in tamil

வாழ்க்கையில் எது

இன்பத்தை தருகிறதோ

அதுவே பல நேரங்களில்

துன்பத்தையும் தருகிறது

எதிர்பார்த்த போது கிடைக்காத

அன்பு அதன் பிறகு..

எத்தனை முறை கிடைத்தாலும்

பயன் அற்றது..

விலகி இருக்க கற்றுக்கொள்

நாம் தேவையில்லை என்று

சிலர் நினைக்கும் முன்

Sad quotes in tamil

தனிமையின் கொடுமையும்

அன்பின் அருமையும்

மனம் விட்டு பேச

துணை இல்லாதபோது

தான் தெரிகிறது.


சில உறவுகள்…

நம்மிடம் ஆரம்பத்தில் காட்டும்

அன்பை..

கடைசி வரை

காட்டுவது இல்லை

Sad quotes in tamil

ஆரம்பத்தில் நீ தான்

எல்லாம் என்றவர்கள்

இன்று நீ யார்?

என்கிறார்கள்

யாரிடமும் அன்பை

அதிகம் எதிர்பார்க்காதீர்கள்

அது ஒரு நாள்

மறுக்கக்படும்

மறைக்கப்படும்

மறக்கப்படும்..

பொய்யான உலகில்

யாரும் யாருக்காகவும்

இல்லை என்பது

தான் மெய்


Sad quotes in tamil

உன் நினைவு வருகிறது

மனம் தேடுகிறது

ஆனால் நீ

அருகில் இல்லை

மனசும் சரியில்லை

மனம் விட்டு பேசவும்

யாரும் இல்லை

இந்த மாய உலகில்

மாதம் தோறும் தவணை கட்டுகிறேன்

வாங்கிய கடனுக்கு,

ஆனால் தினந்தோறும் அழுதாலும்

தீர்வதில்லை நினைவுகளின் வட்டியும் அசலும்

Sad quotes in tamil

என்னை காயப்படுத்தியவர்களுக்கு

கூட என் நிலைமை

வந்து விடக்கூடாது என்று

வேண்டிக் கொள்கிறேன்.

வலிகளைக் கூட தாங்கி

கொள்ளமுடிகிறது, ஆனால்

வலிக்கவே இல்லை என்பதை

போல் சிரிக்க வேண்டும் என்ற

சூழ்நிலை தான் வலிக்கிறது...!


நாள்தோறும் மகிழ்ச்சியாய் இருக்க

ஆசைதான்....

ஆனால் கவலைகளை மறப்பது

எப்படி என்று தான்

இங்கு பலருக்கும் தெரிவதில்லை..!

Sad quotes in tamil

எவ்வளவு தான் அழுது தீர்த்தாலும்

ஆறுதல் அடைவதில்லை அகம்,

ஆறுதல் கிடைக்கவில்லை

என்று

காலம் கழிவதிலேயே சுகம்..!

மனதில் இருக்கும்

காயங்களை உதட்டில்

பூக்கும் புன்னகையால்

உதிர வைக்கிறது உள்ளம்..!

வலிகளை சுமப்பதோ அனுபவிப்பதோ கூட

இங்கு வலி இல்லை.

அதை மறைப்பது தான்

பெரிய வலி..!

Sad quotes in tamil

புன்னகையை நேசிக்கும்

எல்லோராலும்

மகிழ்ச்சியில்

புன்னகைக்க முடியவில்லை


சிலரது வார்த்தைகள் இங்கே

ஆறுதலாக இருந்தாலும்

அது பொய் என்று தெரியும் நொடியில்

உடைந்து அழுகிறது உள்ளம்.

நினைக்கும் பொழுது

இறக்கும் வரம்

எல்லோருக்கும் கிடைத்துவிட்டால்,

இங்கு யாரும்

உயிருடன் இருக்க மாட்டார்கள்..!

Sad quotes in tamil

கடினமான

சூழ்நிலைகளை சமாளிக்க

ஒரு

புன்னகை சிறந்த வழி.

அது போலியாக இருந்தாலும் சரி.

சரியாகப் பயன்படுத்தினால்,

எதையும் சமாளிக்கலாம்

ஒவ்வொரு நாளும்

ஏதோ ஒன்றை தேடித் தான்

வாழ்க்கை பயணிக்கிறது.

ஆனால் கிடைப்பது என்னவோ

எதிர்பார்க்காதது தான்.

Sad quotes in tamil

மகிழ்ச்சியைத் தேடி

அலைவதில் பயனில்லை என்று

இருந்த மகிழ்ச்சியை

தொலைத்த பிறகு தான் தெரிந்தது.


என்னதான் எதார்த்தமாய் பழகினாலும்

எதையோ எதிர்ப்பார்த்து

பழகும் சுற்றத்திடையே

மகிழ்ச்சி என்பது எட்டாக்கனியே..!

Sad quotes in tamil

நான் எப்போதும்

சிரித்துக் கொண்டே இருப்பதால்

எனக்கு கவலைகளே

இல்லை என்று அர்த்தம் இல்லை

சோகங்கள் சுமையாக

மூட்டைக்கட்டிக் கிடக்கிறது..!

வாழவேண்டும் என்ற ஆசையே

வரமறுக்கிறது...வரம்புகளற்ற

சில வார்த்தைகளால்...

Sad quotes in tamil

அழவே தோன்றுவதில்லை

அவஸ்தைகள் அதிகமானதால்.

அடிபட்டு அடிபட்டு

மரத்துப்போன உள்ளம்..!

இங்கு ஆறுதல் சொல்கிறேன்

என்ற பெயரில் நம்மை குத்திக்

காட்டுபவர்கள் தான் அதிகம்,

நமது

சோகங்களை சொல்லாமல்

ரசிக்கும் கூட்டமது..!


நமக்காக யாருமில்லை

என்று நினைத்து அழுதேன்

அழுது முடித்த பிறகு

நான் புரிந்தது...

ஏன் அழுகிறாய்

என்று கேட்க கூட இங்கு யாருக்கும்

மனமில்லை என்பது..!

Sad quotes in tamil

இங்கு பலரின் புன்னகை

பல காயங்களை மறைத்து

வைக்கும் முகமூடியாகவே

பயன்படுகிறது.

Tags

Next Story