Sad love quotes in tamil-காதல் ஒரு மாய சக்தி..! இருந்தால் மகிழும்..! பிரிந்தால் அழுகும்..!
sad love quotes in tamil-காதலின் வலி மேற்கோள்கள் (கோப்பு படம்)
Sad love quotes in tamil
அன்பு என்பது அனைத்து உயிரினங்களிலும் வரும் உன்னத உணர்வாகும். அது ஒரு சக்திவாய்ந்த உணர்வு. இது இரு உள்ளங்களை இணைக்கும் ஒரு மாய சக்திகொண்ட பிணைப்பாகும். மற்றவர்களிடம் ஆழமாக அக்கறை கொள்ளச் செய்ய இது தீர்க்கமான முடிவெடுக்கிறது. இந்த அன்பு என்பதை குடும்பம் முதல் நண்பர்கள் வரை, நாம் வெவ்வேறு வடிவங்களில் உணர்கிறோம்.
அன்பைப் புரிந்துகொள்வது தனிப்பட்ட ஒருவரின் மனதைபொறுத்தது. சிலருக்கு எளிதாக விளங்கிவிடும். பலருக்கு மர்மமான உணர்வாகவே இருக்கும். அன்பு என்பது காதலின் வடிவம். இந்த காதல் உலகளாவியது. காதலுக்கு கண் இல்லை என்று சொல்வார்கள். அது இனம், மொழி, மதம் என்று எதையும் பார்ப்பதில்லை. அது தானாக ஊற்றெடுக்கும் அமிழ்த ஊற்று. எங்கிருந்து வருகிறது என்பது யாருக்கும் தெரியாது. காதல் ஆழமான தனிப்பட்ட ஒரு அனுபவம். இது மனித இதயத்தின் ஆழத்தை ஆராயும். இரு ஆன்மாக்களின் உள் அறைகளுக்குள் நிகழும் ஒரு இனிய பயணம்.
அந்த இனிய பயணம் தோல்வியடையும் ஏற்படும் வேதனை வார்த்தைகளால் வடிக்கமுடியாத ரண வேதனை. கத்தி ஒன்றும் தேவையில்லை, வழியை உண்டாக. ஒற்றைச் சொல் போதும், ஆறாத வேதனை உருவாக்க.
இதோ காதலின் வலியால் பிழிந்து எடுத்த கவிதைகள் , உங்களுக்காக. நீங்களும் படித்து ஃபீலிங் ஆகுங்க.
நீ பாதி நான் பாதி என்று
என் வாழ்வினில் என்றென்றும் நீதான் பாதி என்று
சொல்லிக் கொண்டே இருப்பாய்.
அப்போது அதன் அர்த்தம் புரியவில்லை
இப்போதுதான் புரிகிறது,
பாதியிலேயே விட்டுச் செல்வது தான்
நீ சொன்ன அந்தப் பாதி என்று
பாவியாக நிற்கிறேனடி..!
உன் நினைவுகளோடு, நான் பிரிந்து
சென்ற பின்பும் உன்னோடு பேசுகின்றேன்..
மௌனம் என்னும் வார்த்தைகளால்,
அது கண்ணீர் மொழிகளை உதிர்க்கிறது..!
என் கண்கள் குளமாக நிறைந்து நிற்கிறது..!
நினைவுகள் என்னும் தீயை
நெஞ்சில் சுமந்து கொண்டு
அணையாத தீபமாக
ஆக்க நினைக்கிறேன்
ஆனால்
நிம்மதியாக நீ சென்றுவிட்டாய்
நித்தம் நித்தம் நினைத்து பற்றி எரிவது
என்னவோ என் உள்ளம் தானே, என்னுயிரே..!
Sad love quotes in tamil
காற்று கூட கலங்குகிறது
என் கவலை கண்டு.
வேற்று கிரகவாசி ஆகிப்போனேன்
உனக்கு.
ஏற்றுக்கொள்ளும் மனமிழந்த
உன்னை
வேறு யார்
ஏற்றுக்கொண்டாலும்
எந்தன் நிலையை
ஏற்படுத்திவிடாதே
என்பேதே
என் தாழ்மையான வேண்டுகோள் ..!
என்னை விட்டு
விலகிச் சென்றாய்.
விண்ணைமுட்டும்
சோகம் தந்தாய்.
தவிப்பது
என்னிதயம் அல்லாடி
உன்னிதயம்
ஆமாம்
எனக்குள் இருப்பது
நீயடி..!
உள்ளம் மகிழ்ந்து உன் மீது
நான் கொண்ட காதல்,
உருகி வழிகிறதே விழிநீராய்.
கருகி நிதம் காய்கிறது
கல்லறைக் காற்று என்னை
வரவேற்க காத்திருக்கு..!
Sad love quotes in tamil
எனக்கு நீ கிடைத்தது வரம் தான்
இன்றும் என்றும் என்றென்றும்.
வரம் ஒருபோதும் பாரமாகிவிடாது.
அதனால்தான்
நீ எனைவிட்டு
விலகிச் சென்ற போதும்
புன்னகை ஒன்றை
வரமாக உனக்களித்தேன்..!
உள்ளத்துக்குள்
ஓராயிரம் ஈட்டிகள்
குத்திய காயங்களுடன்..!
காதல் சொல்ல ஆயிரம்
காரணம் வேண்டும்
உன்னைப்பிடித்ததன்
விளக்கங்கள் சொல்ல
ஆனால், விலகிச் செல்ல
ஒற்றைச் சொல் போதுமடி
அப்படித்தானே
எனை வீசிச் சென்றாய்.
'பிடிக்கவில்லை'என்ற
ஒற்றைச் சொல்லால்
உன்னத காதலை
கொன்று சென்றாயடி
நீ தந்து சென்ற
நினைவுகள் போதுமடி
என் காதலைக் கொன்றாயடி ..!
Sad love quotes in tamil
காதலைச் சுமந்த படி
என்னைப்போல பல ஜீவன்கள்
நடமாடும் கல்லறைகளாக
வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன
வலிகளை மறைத்து.!
காலங்கள் கடந்தபோதும்
உனக்காக
கட்டிய என் இதய தாஜ்மஹாலில்
வேறு யாருக்கும்
இடமில்லை என்று
வெற்றிடமாகவே வைத்துள்ளேன்..
அது
மரணம் வரை தொடரும்..!
வெற்றிடத்தை
இட்டு நிரப்ப
ஆயிரம் பேர் காத்திருந்தும்
உன்
வரிசைக்கு காத்திருக்கும்
காதல் நாயகன்..!
Sad love quotes in tamil
நீ இல்லா என் நினைவுகள்
உயிரற்ற உடல்..
உச்சிவெயில் நேரத்தில்
பாலைவனத்து மணற்பரப்பில்
விழுந்த வலியால்
துடிக்கிறேன்
உன் பிரிவை எண்ணி.
பாலைவனத்தில்
நீர் தேடி அலையும்
பறவையின்
உயிர் பிரியும் தருணத்தில்
வந்தாவது
எனக்காக கண்ணீர் விடுவாயா..?
என்னுயிர் என்னிடமில்லை
என்றாயடி
என்னிடம் தந்துவிட்டதால்
உன்னிடம் இல்லை என்ற
என்
எண்ணத்தை பொய்யாக்கி
புதைத்தாயடி..!
என் காதலை
கோமாளியாக்கி விட்டாயடி..!
உனக்கொரு காதலன்
இருப்பதை
என்னிடம் ஏனடி
மறைத்தாய்..?
இன்னும் நீ குத்திய முள்ளின்
இதயத்தின் வலி தீரவில்லையடி..
அது
கல்லறை வரையிலும்
தொடரும் தீயடி..!
Sad love quotes in tamil
உனை
தேடித் தேடி அலைந்தே
௭ன் விழிகள் தேயுதடி.
தாவித் தாவி அலையுதடி
என் மனம் மயங்கி.
ஓடி ஓடிச் சென்றாயடி
ஒன்றும் அறியாதவளாய்
கூடி கூடிச் சிரிக்குதடி
உலகம்
நான் பைத்தியம் என்றே.
உன்னால் வந்த பட்டம்
என்பதால்
இன்பமாய் ஏற்றுக்கொண்டேனடி
உன் மீதான
காதலால்.
காதல் கண்ணுக்குத் தெரியாத
உணர்வு
அலைக்கற்றை போல
இரு உள்ளங்களுக்குள்
இணைப்பைக் கொடுக்கும்
இன்கமிங் மட்டுமே
இருக்கும் என்று
தொழில்நுட்ப அறியாத
பாவியானேன்.
ஆமாம்.
அவுட்கோயிங் இருப்பதால்
இலகுவாக
என்னைவிட்டு போய்விட்டாள்
டிஸ்கனெக்ட்
செய்துவிட்டாள்..!
சார்ஜ் இல்லா போனாக
சாகக்கிடக்கிறேன்..!
Sad love quotes in tamil
ஆழ் கடலில்
எனை தூக்கிப்போட்டாலும்
என்
மனதினுள் இருக்கும்
உன்னை
அழிக்கமுடியாதடி.
இன்பமோ துன்பமோ
எதுவாக இருப்பினும்
உன் நினைவுகளுடன்
என் வாழ்வை
முடிப்பேன்..! .
உன்னை மறப்பது
என்
மரணத்தில் மட்டுமே முடியும்.
உன்னை
இதயத்தில் சுமப்பது
ஒன்றும் சுமையல்ல
எனக்கு சுகமானதே.
என்னை
சாகச் சொல்கிறாயா
சுமக்கச் சொல்கிறாயா?
இரண்டையும் செய்வதற்கு
நான் தயார்.
உன் பதிலுக்கு
காத்திருக்கும் காதலன்..!
அளவில்லா உன் அன்பு
கடைசியில் கண்ணீர் தந்து
காணாமல் போனது ஏனோ.?
கலங்கியது என் கண்கள் மட்டும்
அல்ல என் இதயமும் தான்...!
Sad love quotes in tamil
என் காதலின்
கவி வரிகள் புரிந்த உனக்கு,
வலி வரிகள் புரியாமல் போனதேனோ..!
அன்பு கொண்டது என் தவறும் அல்ல.
பிரிந்து சென்றது உன் தவறும் அல்ல.
காதல் காயம் காலம் உள்ள வரை தொடரும்
இருவருக்குமே..!
காதலாகி கசிந்துருகி
கவிதை வடித்தேன்
மோதலாகி முறிந்து
விழுந்ததே சொற்கோர்வை.
சாதலாகி சாம்பல்
பொதியினை
கண்ணீரில் கரைக்கிறேன்.
செந்நீர் ஊற்றியே
செந்தீயில் வேகிறேன்.
கலைந்து போன
என் கனவுகளுக்கு
கற்பனையின் உயிரூட்டினேன்.
பிழைத்துப் போவென
கடவுள்
ஒரு வரம் தந்தார்.
காதல் செய்து
நீ
தோற்றுப்பாரடா என்று
தோளிலே சுமையை
ஏற்றினார்..!
இன்பமாகவே காதல்
கடந்தது
காலம் மாறவே
கசந்து போனது
தூக்கி வீசினாள்
தூரமாகவே
துவண்டு விழுந்தேன்
காதல் கவலையில்..!
காதல் வேதனை
வேண்டாம் கடவுளே
என்
சாதல் ஒன்றினை
சாத்தியப்படுத்திடு.
சத்தியமாகவே
காதல் கசக்குதே..!
Sad love quotes in tamil
வார்த்தைகள் கேட்பாரின்றி
மௌனம் பூண்டது
என் வாழ்க்கை.
என் கொந்தளிப்பை
பகிர்ந்துகொள்ள
எனக்குக் கிடைத்த
கடைசி வாய்ப்பு
என்
கண்ணீரும் கவிதையும் தான்..!
-கவிஞர் க.சு.பூங்குன்றன்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu