Sad Kavithai-ஏமாற்றத்தின் எதிர்வினைதான் சோகம்..!

sad kavithai-சோக கவிதைகள் (கோப்பு படம்)
Sad Kavithai
வாழ்க்கை எல்லாக்காலங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள், மகிழ்ச்சி, சோகம், மேடு, பள்ளம், இருள் மற்றும் ஒளி எல்லாமே கலந்து இருபிப்பதுதான், வாழ்க்கை. வாழ்க்கை ஒரே மாதிரியாக இருந்துவிட்டால் சுவாரஸ்யம் இருக்காது.
வாழ்க்கையை சவாலுடன் எதிர்கொள்ள ஏற்றத் தாழ்வுகள் அவசியம். நல்லவைகளே நடந்தால் வாழ்க்கையின் எதிர்ப்புறம் தெரியாமலேயே போய்விடும். அனுபவங்களே மனிதனை பக்குவப்படுத்தும் நூல்.
Sad Kavithai
வாழ்க்கையில் சோகமான விஷயங்களும் நடக்கும். ஆனால் அவை நீண்ட காலம் நீடிக்காது. சோகமான சம்பவத்தை நினைத்து மன அழுத்தத்தை அடையத் தேவை இல்லை. நேர்மறை சிந்தனையுடன் அணுகல் வாழ்க்கையைப்பற்றிய புரிதலை அதிகரிக்கும். நடக்கின்ற ஒவ்வொரு சம்பவத்துக்கும் ஒரு காரணமுண்டு. அது நல்ல காரணமாக இருக்கும் என்று நம்புவோம்.
இந்த கட்டுரை மூலமாக பலரது வலிகளை உணர்ந்து செயல்படும் உன்னத நிலையை அடைவோம். நமக்கும் அது ஒரு அனுபவமாக இருக்கட்டும். . இங்கே சோகங்கள் நிறைந்த கவிதை வரிகளை பாப்போம். காதல் தோல்வி, துரோகம், வெறுப்பு, போன்ற சோக உணர்ச்சிகளை இந்த வரிகள் பேசுகின்றன.
நிஜத்தில் பாதி கனவில் மீதி என்று வாழ்க்கை கடந்துக்கொண்டிருகின்றது.
உறக்கம் தொலைந்த இரவுகளில் உறங்கிய நினைவுகள் விழித்துக்கொ(ல்)ள்கிறது.
பசித்தவருக்கு தெரியும் உணவின் அருமை... இழந்தவருக்கு புரியும் உறவின் அருமை.
சிரித்த நிமிடங்களை விட, அழுத நிமிடங்களே... என்றும் மனதை விட்டு நீங்குவதில்லை.
சில காயங்கள் ஆறாதிருப்பதே நல்லது மீண்டும் காயங்களை ஏற்படுத்திக்கொள்ளாதிருக்க.
Sad Kavithai
பிறரிடம் பகிர முடியாத வேதனையைக் கூட ஆற்றிட விழிகள் உளற்றெடுக்கும் அருவி தான் கண்ணீர்
என் அதீத ஆசையெல்லாம், என் மனம் கஷ்டப்பட்டும் போது. என் வார்த்தையை கேட்க ஓர் துணை வேண்டும் என்பதே.
வெளியே சிரிப்பது தெரிந்தவர்களுக்கு. உள்ளே சிதைபட்டு சிறைபட்டு கிடப்பது தெரியவில்லை ஏனோ?
நினைக்கும் பொழுது இறககும் வரம் எல்லோருக்கும் கிடைத்தால் இங்கு யாரும் உயிருடன் இருக்க மாட்டார்கள்
என்னை புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு புரிந்து கொள்ள மறுபவர்களுக்கும் மத்தியில் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
Sad Kavithai
யாரும் எனக்காக இல்லை என்பதை விட யாருக்கும் நான் பாரமாக இல்லை என்பதே உண்மை.
தனிமை எனக்கு மிக பிடிக்கும் ஏனென்றால் அங்கு என்னை காயப்படுத்த யாரும் இல்லை என்பதால்.
என்னை பிரிய உன் மனம் உடன் பட்டதை எண்ணுகையில் விழிகள் கண்ணீரால் கரைகின்றன.
தனிமை கொஞ்சம் வித்தியாசமானது நாமே எடுத்து கொண்டால் இனிக்கும் மற்றவர்கள் நமக்கு கொடுத்தால் கசக்கும்.
நேசிக்க யாரும் கற்றுக் கொள்வதில்லை ஆனால் ஒருவரை நேசித்த பின்பு நிறைய கற்றுக் கொள்கிறார்கள்
ஒருவர் நம்மோடு பேசும் நேரம் குறைகிறது என்றால் அவர் நம் மீது வைத்துள்ள அன்பு குறைகிறது என்றே அர்த்தம்
Sad Kavithai
பேச விரும்பாத உன்னோடு தான் அடிக்கடி பேசத் துடிக்கிறது என் இதயம் 'பாவம் அதற்கு தெரியாது நான் உனக்கு சுமை என்று...!
தேவை இல்லாமல் பேசுவதை விட அமைதியாகவே இருந்து விடலாம் நம் மனது புரியாத யாருக்கும் நம் வார்த்தைகளும் புரியாது
நமக்கு பிடித்தவர்கள் நம்மை காயப்படுத்தும் போது தான்... இல்லாதவற்றையும், இழந்தவற்றையும் ஆழமாக யோசிக்க தோன்றும்.
நினைத்தது போல் எல்லாம் நடந்தது... ஆனால் கனவு போல், எல்லம் ஒரு நொடியில் நடந்து முடிந்து விட்டது.
எதிர் பார்க்கும் போது எதிர்பார்த்தவர்கள் பேசவில்லை என்றால் அதிகமாகவே வலிக்கிறது
தனித்து நிற்கும் போதுதான் தெரிகிறது...! தனிமை மட்டும் தான் நிஜம் என்று..
Sad Kavithai
எல்லாம் கொஞ்ச காலம் தான் உயிரானாலும் சரி உறவானாலும் சரி
வாழ்க்கையில் சோகங்கள் வரலாம் தான் ஆனால் சோகங்களே வாழ்க்கையாகி விட கூடாது
தேடி வரும் அன்பை தவற விட்டால் தேவைப்படும் போது தேடினாலும் கிடைப்பது இல்லை
புரிந்தும் புரியாமல் நடிப்பவர்களுக்கு எப்படி சொல்லியும் ஒன்றையும் புரிய வைக்க முடியாது
காயப்பட்டாலும் சரி, காயப்படுத்தினாலும் சரி, கலங்குவது என்னவோ கண்கள் தான்.
புரிந்து கொண்டதை விட, தவறாக புரிந்து கொண்டது தான் வேதனையில் மிக சிறந்த வேதனை.
Sad Kavithai
தனிமையைவிட, கொடிது உன்னோடு வாழ்ந்த அந்த நினைவுகளோடு, நீ இன்றி வாழ்வதுதான்.
புகைப்படத்திலும் புன்னகைப்பதில்லை புன்னகைப்பதே மறந்துவிடுகிறது சிலருக்கு.
காதலித்த நாங்கள் இருவரும் ஊர்வலத்தில் தான் இருக்கிறோம். அவளுக்கு கல்யாண ஊர்வலம்,
எனக்கு இறுதி ஊர்வலம்.
நான் இறந்த பின் தயவுசெய்து என் கண்களை மூடி விடாதீர்கள். எனக்கு அஞ்சலி செலுத்த வந்தாலும்
வருவாள். கடைசியாக ஒருமுறை பார்த்து விட்டு சென்று விடுகிறேன்
அவள் என் காதலை புரிந்து கொண்டு. என்னை தேடி வருகிறாள். கையில் மலர் வளையத்துடன்.
உறவுகள் மண்இட்டு மூடிவிட்டனர். இல்லை என்றால் எழுந்து வந்திருப்பேன்.
Sad Kavithaisa
என் வாழ்க்கை என்ன ஓரங்க நாடகமா? நாடகத்தில் என்னை மட்டும் நடிக்க விட்டு தனியே சென்று விட்டாய்.
பயப்பட வேண்டாம் நான் இறந்து விடுவேன் என்று. அவள் என்னை வேண்டாம் என்று. உதறிய போதே இறந்து விட்டேன். மீண்டும் இறப்பது சாத்தியம் இல்லை.
என் இதயம் என்ன மண் பானையா.? நான் அன்பு செய்த அனைவரும் உடைத்து விட்டே செல்கின்றனர்..!
நேற்று அவள் இன்று நீ..! ஆனாலும் ஒட்டி வைத்திருக்கிறேன் தயாராக மீண்டும் உடைபடுவதற்கு
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu