ரொமான்ஸ் பண்றது காதலின் இலக்கணம்ங்க..! காதல் ரசம் சொட்டும் மேற்கோள்கள்..!

Love Romantic Quotes in Tamil
X

Love Romantic Quotes in Tamil

Love Romantic Quotes in Tamil-காதல் என்பது இருவிழிகள் எழுதும் கவிதை..! அந்த காதலை உணர்வது ஒரு சங்கீதம்.

Love Romantic Quotes in Tamil-எத்தனை கோபம் வந்தாலும் கூட கோபத்தையும் ரசிக்கும் உள்ளமே காதல் மனசு. அந்த காதல் எல்லா உயிரினங்களிலும் உள்ளது. பறவைகள், விலங்குகளும் காதல் செய்கின்றன. காதல் இல்லாத மனசு கரும்பாறைக்கு ஒப்பானது. காதல் மனசுக்குள் கருணையும் அன்பும் மிகுந்திருக்கும். நமது வாசகர்களுக்காக காதல் மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன. படித்து ரசிங்க.

  • அவள் கோபம், அவள் விழியினில் நான் அடைக்கலம், அடையும் நொடி வரை மட்டுமே..!
  • ஈரக் கூந்தலோடு, உலர்த்துகிறாள், என்னை..!
  • துவட்டுவது உன் கரங்கள் என்றால், நீராடுவேன், மீண்டும் மீண்டும் என்னவனே..!
  • உன் வெட்கத்தினை கண்டிட வந்தனவா இப்பூக்கள் உதிர்ந்து..! நந்தவனத்தில் நீ..!
  • என் இடக்கை உன் இடை பற்றி கொள்ள, என் மறுக்கை உன் முகம் உரசி கொள்ள, கண்ணோடு கண் சேர்ந்து என்னை கொள்ளை கொள்ள, உன் இதழமுதை சுவை காண காத்திருக்கும் கள்வன் நான்.
  • வானும், மழையும், கடலும், வழியும் ஒன்றாய் பெருக்கெடுக்கிறது, உன்னைக் கண்டபின்..!
  • கண்களால் முத்தம் தர இயலுமென்றால், நொடி கூட ஈரம் குறையாமல் இருக்கும் உன் கன்னங்கள்..!
  • அந்த பூமித்தாயும் உன்னை பார்த்து பொறாமை படுவாள், நீ வெட்கப்பட்டு அவளை பார்த்து சிரிக்கும் போது...!
  • தாகம் தணிய தந்தாள் அவளும், தனது இதழினை, தணலினையும் மூட்டினாள் அவளே. அத்தணலினில் தணிந்தது மோகம், தீரவில்லை தாகம்..!
  • அழகில் உச்சம், அழகின் மிச்சம் என்றானது உன் உதட்டோர மச்சம்..!
  • ஒளி மங்கும் அந்தி பொழுதெல்லாம், உன் விழி பார்த்து, துயில் கொள்ள வேண்டும்..!
  • மாலையில் சூரியன் மறைய மறுப்பது, மாயக்காரி உன்னுடன் மாமாங்கம் வாழ்ந்திடவா..?
  • ஒளி மங்கும் அந்தி பொழுதெல்லாம், உன் விழி பார்த்து, துயில் கொள்ள வேண்டும்..!
  • நெடுநேர உரையாடலில் கவனிக்க மறந்த சில வார்த்தைகள், நேரம் கடக்க கடக்க இதற்கு அர்த்தம் எதுவென தேட தூண்டுகிறது..!
  • உயிரை கொடுத்து வாழ வைப்பதும், உயிரை எடுத்து சாக வைப்பதும்... காதலுக்கே உரித்தான ஒன்று..!
  • இவர்கள் காதல் செய்வதை உலகமறியா வண்ணம் இருக்க, தினந்தினம் வானம் நடத்தும் நாடகமே இந்த இரவு..!
  • நித்திரையிலும் நிம்மதியான உறக்கம்! உன்னோடு இருப்பதாக நினைத்து தலையணிையை அணைக்கும் போது..!
  • எத்தனை வேலைகள் இருந்தாலும், என் அலைபேசி அதிர்ந்ததும், நீயாக இருக்கும் என்று தானாக ஓடும் என் கால்கள்..!
  • இரு நெஞ்சம் இணைந்து பேசிட, உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை..! விழிகள் இரண்டே போதும்..!
  • ஆரம்பம் எதுவானாலும், முடிவில் பயணம் தொடர்கிறது... அது உன்னத இரகசியத்தை தேடியே..!
  • அனுதினமும் அலங்கரிக்கும் திலகமும் இன்று விடுப்பு எடுத்து கொண்டதும், முத்துக்களாய் முத்தங்களை நான் பதித்திடத்தானோ..?
  • என் முத்த சத்தங்களில், உன் வெட்க சிணுங்கல்கள் அழகோ அழகு..!
  • கொட்டும் மழையும் கொதிக்கின்றது, கொடியவளின் இடையின்மேல் கொட்டுகையில்..!
  • இடை இடையில் அவள் இடை செய்யும் வேலை, அப்பப்பா அவளின் அத்தனையும் ஆயுதம்..!
  • அவள் அவ்வளவு அழகு! அவள் அங்க அளவுகளும் அழகு..!
  • முத்தங்களின் முன் நீளும் சிரிப்பலைகளில், பொதிந்த வெட்கம் காதலின் அத்தியாவசியம்..!
  • அவள் மருண்ட விழி பார்வையில் சிக்குண்டு, அவள் கருவிழி அசைவில் கட்டுண்டு, அவளை களவாட துடிக்கும் கள்வனாய் நான்..!
  • முற்றுபெறாத பல காவியங்கள் முற்றுப் பெற்று, செவ்வானமாய் சிவந்த அவள் தேகத்தில் பல பாடல்கள் இசைத்து, தீயாய் சுடும் அவள் பெண்மையை களவாட துடிக்குது என் ஆண்மை..!
  • அவள் இடையினில் ததும்பி நிற்கும் நீர்த்துளி, வழியும் நொடி விழிக்கு கிடைத்த விருட்சம்..!
  • நித்தமும் உன் நினைப்பே என்னுள் தோன்றுதடி! என்னை இம்சையாய் வாட்டுதடி..! உன்னைக் காணபேராவல் தூண்டுதடி கண்ணம்மா..!
  • அவள் தேகம் என்ற கூடத்தில் ஆராய்ச்சிகள் பல நடத்தியே நகர்கிறது, எங்கள் இரவுகள்..!
  • அவளுடனான காலைகள் விடிவதுமில்லை, முடிவதுமில்ல..!
  • தவறுகளுக்கு நிச்சயம் தண்டனையுண்டு இதழ் கொண்டு முத்த அடிகளில், காதல் என்ற அரங்கத்தில்..!
  • வீணையாய் உன்னை மீட்டு நான் மெட்டு அமைக்க, அங்கே புதியதொரு ராகமாய் நம் காதல் ஸ்வரம் அரங்கேறியது..!
  • என்ன வரம் பெற்றதோ அந்நீர்த் துளிகள்..! மங்கையவள் மீது பட்டு அவள் தேகத்தில் முத்த ஊர்வலம் நடத்த..!
  • முன்னிரவில் உன் பேச்சுசத்தமும், பின்னிரவில் உன் மூச்சுசத்தமும் வேண்டும்..!
  • வீசும் காற்றோடு அவள் வீசும் மேலாடையோடு, வீழாது மனம் பறக்க, பாவை அவள் அழகில், பார்வை மட்டும் பள்ளத்தில் பதிகிறது..!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
இரவு உணவுக்குப் பின் உடல் எடை குறைக்க இந்த 5 செயல்களை தினமும் செய்யுங்கள்!