Romantic Kavithai in Tamil-காதலின் முதல் இலக்கணம், ரொமான்ஸ்..!

Romantic Kavithai in Tamil-காதலின் முதல் இலக்கணம், ரொமான்ஸ்..!
X

romantic kavithai in tamil-ரொமான்ஸ் கவிதைகள் (கோப்பு படம்)

காதல் வாழ்க்கையில் ரொமான்ஸ் என்பது முதல் இலக்கணம். ரொமான்ஸ் இல்லைன்னா காதலே இல்லை. அதனால், ரொமான்ஸ் பண்ணுங்க.

Romantic Kavithai in Tamil

வாழ்க்கையில் ரொமான்ஸ் ரொம்ப ரொம்ப முக்கியம். ரொமான்ஸ் இல்லாத வாழ்க்கை சுவையாக இருக்க முடியாது. கணவன்-மனைவி அல்லது காதலர்கள் ஒருவருக்கு ஒருவர் குறைத்துக்கொள்வது, ஊடல் கொள்வது, திட்டிக்கொள்வது பின்னர் அன்யோன்யமாக சேர்த்துக்கொள்வது இஅவைகள் எல்லாம் ரொமான்ஸ் பகுதியில் கிளுகிளுப்பு ஏற்படுத்தும் ஒரு உணர்வுப்பூர்வமான ஒன்றாகும்.

அதுவும் இளம் வயதில் இந்த ரசனைகள் இருந்தால் மட்டுமே பிற்காலத்தில் ஒருவருக்கு ஒருவர் கருத்தொருமிக்க தம்பதியராக வாழமுடியும். இந்த ரொமான்ஸ் தான் அவர்களுக்கான பாலபாடம்.


இதோ உங்களுக்காக ரொமான்ஸ் கவிதைகள். படித்து என்ஜாய் பண்ணுங்க. ரொமான்ஸ் பண்ணுங்க.

என் மேனியில்

உன்

விரல் இடும்

கோலம்

என் தனிமையில்

உளறிடும் காலம்..!

யார் வலிகள்

தந்தாலும்

அது எவ்வளவு பெரிய

வலியாக இருந்தாலும்

அனைத்துக்குமான

மருந்து

நீ மட்டுமே

எனக்கு

நீ

எத் தொலைவுக்கு

சென்றாலும்

என் நினைவின்றி

நீயில்லை

என்பதே

நம் காதலின்

வெற்றி

Romantic Kavithai in Tamil

என் கண்களின்

ஜீவன் உன்னில்

இருந்தே

தொடங்குகிறது


நீ தெளிவாகத்

தான் உரையாடி

கொண்டிருக்கிறாய்

நான் தான்

உளறிக் கொண்டிருக்கிறேன்

மனதுக்குள் உன்னோடு

காதலில் வீழ்ந்ததால்.

இருளுக்குள் அடைக்கலம்

கொண்ட ஒளியாய்

தேடுகிறேன்

நானும் உன்னில்

அடைக்கலம்

ஆனந்தமோ ஆதங்கமோ

என் கண்ணீரும்

செந்நீரும்

உனக்காக மட்டுமே

எப்போதுமே

சிந்தும்

Romantic Kavithai in Tamil

நீ முறைத்தாலும்

காதல் தான்

என்று எனை

வார்த்தைகளாலேயே

கவிழ்த்திடும்

கள்வன் நீ

கண்ணாடிக் குவளையாய்

பாதுகாக்கிறேன்

நம் காதலை

உடைந்தால்

இருவருக்குமே (ம)ரணம்

உடைத்து விடாதே

ஒரு மரத்தில்

பல இலை

கிளைகளாய்

நீ என்பதில்

எத்தனை எத்தனை

நினைவு

அழகாய் மனதில்

வாசிப்பது நீயென்றால்

யோசிக்காமல் எழுதுவேன்

கண்களிலும்

மை கொண்டு

பல கவிதைகள்

Romantic Kavithai in Tamil

உன் அழுத்தமான

முத்தம்

நீ எனக்கே

எனக்கென்று சொல்லாமல்

சொல்கிறது அன்பே

ஆள்தல் நீயென்றால்

வாழ்தலும் வரமே

காதல் ராஜ்ஜியத்தில்

நினைவோ நிஜமோ

உன்னுடனேயே தான்

என் பயணமும்

வாழ்க்கை முழுதும்

என்னாயுள் வரை

நெற்றி முத்தம்

உன் முதல் ஸ்பரிசம்

ஊடுருவுகிறது

மனமெங்கும்

நித்தம் விரல்

தொட்டிட பொட்டிட


நீ வா(சுவா)சிக்க

மட்டுமே

மலர்ந்தது இந்த

சிவப்பு ரோஜா

கொஞ்சம் வெளிச்சம்

கொஞ்சம் இரவு

கொஞ்சம் காற்று

கொஞ்சம் மழை

கொஞ்சம் பயணம்

கொஞ்சும் விரல்களில்

நிறைய காதல்

Romantic Kavithai in Tamil

நிர்மலமான

இந்த உலகில்

நிறைந்தேயிருப்போம் வா

நீயும் நானுமாய்

தேடலில் தொலைவதும்

ஒருவித சுகம்தான்

நீயும் உணர்ந்திருப்பாய்தானே

அலையே

கனவின் மிச்சத்தை

உயிர்ப்பிக்காமல்

உணர்வின்றியே

உதயமாகிக் கொண்டுதானிருக்கிறது

ஒவ்வொரு விடியலும்

தொடர்வண்டி என்னதான்

வேகமாகச் சென்றாலும்

அதைவிட வேகமாக

பின்நோக்கியே செல்கிறது

மனது

என்னவனைத் தேடி

உன் விரல்கள்

தீண்டவே

அடிக்கடி வியர்க்கிறது

என் விழிகள்

Romantic Kavithai in Tamil

என் நிழலை

தோற்கடிக்கும்

இருளாய் அல்ல

அந்த நிழலுக்கு

உயிர்கொடுக்கும்

ஒளியாய் நீயே


உணர்ந்த தனிமை

உணராத வெறுமை

நடுவே சிக்கித் தவிக்குது

உன் நினைவெனும் அருமை

நீ தூரத்தே என்ற

துக்கம் இல்லை

பக்கத்தில் இல்லை என்ற

ஏக்கம் மட்டுமே

மண்ணில்

மறைந்திருக்கும் வேராய்

என்னுள்

உறைந்திருக்கும் நீ

நிலவுக்கே

போய் பார்த்து

சொன்ன பிறகுதான்

புரிந்தது தூரமாய்

இருந்து பார்த்தால்தான்

எல்லாம் அழகு என்று

Romantic Kavithai in Tamil

சந்தோச தென்றல்

சன்னல் வழியே

சாமரம் வீசினாலும்

புலம் பெயர்தலின் வலி

பூக்கள் மட்டுமே அறியும்

உன்னுள் நான்

முழுநிலவுக்குள்

மூழ்கியிருக்கும்

மூன்றாம்பிறையாய்

இரும்பாக

இருந்த என்னையே

உருக வைத்து விட்டாயே

உன் உண்மை அன்பினால்

தொடுதிரையில்

உன் குறுஞ்செய்தி

இயல்பாகவே அரும்புகிறது

இதழில் குறுநகை

பகலில் வாழும்

நட்சத்திரங்களாய்

பரிணமிக்காமலேயே

போய்விடுகிறது

பக்குவப்பட்ட காதல்கள்


போகிற போக்கில்

அள்ளித்தெளித்தபடியே

செல்கிறது உனது சந்தம்

எனது சந்தோச தருணங்களை

Romantic Kavithai in Tamil

அலைபாய்கிறது மனம்

உன் நினைவுகளை மட்டும் தேடி

முகவரி தொலைத்த கடிதமாய்

வசந்தகால தென்றலில்

உனைத் தேடியே

அலைபாய்கிறது

மனம் நந்தவனத்து

வண்ணத்துப்பூச்சியாய்

உண்மை காதல்

என்ன செய்யும்

உணர்வுகளில் கரைந்தே

ஊமையாகி உறைந்து நிற்கும்

மண்ணைப்

திறந்துகொண்டுவரும்

துளிரைப்போலவே

உனது மனதை

திறந்து வைத்த

வரிகளும் அழகு

வந்தவுடன் மறைந்துவிடும்

வானவில்லாய் அல்ல

நமதன்பு வளர்பிறைக்குள்

ஒளிந்திருக்கும் பௌர்ணமிநிலவு

Romantic Kavithai in Tamil

திரும்பாத நாட்களின்

திரும்பிய பக்கமெல்லாம்

திரும்பத் திரும்ப

தீண்டிவிட்டுச் சென்றது

உனதன்பை மட்டுமே

சிக்கிமுக்கி

கற்களாய் விழிகள்

மோதிக் கொண்டதில்

சிதைந்து

போனதென்னவோ மொழிகள்

உன் பிரிவின் வெப்பத்தில்

ஆவியாகி விட்டது

கண்ணீர் குளம்

ஆகாயத்தை அண்ணாந்து

பார்த்து காத்திருக்கிறது

மீண்டும் உன் பிரிய

மழையில் நனைய

மழை முத்தமிட்டு எழுப்பும்

மண்வாசனையை போல

என் சுவாசக்காற்றை முத்தமிட்டு

என்னை எழுப்பிச் செல்கிறது

உன் யோசனை


உள்ளத்து உணர்வெல்லாம்

உனைக் கண்டதும்

ஊமையாகி

வெளிப்படுத்த முடியாமல்

வெட்க்கச்சாயம்

பூசிக் கொள்கிறது

என் முகம்

Romantic Kavithai in Tamil

உன் விழி மொழி

எனக்கு புரியும்

என்ற போதும்

ஒரு முறையாவது

வாய் மொழியின்

உருகுவோம்

ஒன்றாகவே

அன்பெனும்

அக்னியில்

சில அஸ்த்தமனங்கள்

ஏனோ

விரும்புவதேயில்ல

விடியலை

முற்றுப்பெறாத மாலைதான்

என் முதல் காதலால்

மட்டுமல்ல

உன் முழுமையான

காதலாலும்

உன் அழைப்பென்றாலே

ஆனந்தம்

தான் மனதுக்கு

தீண்டலில்

காற்றையும்

மிஞ்சி விடுகிறாய்

நீ இதமான

நினைவாகி தென்றலாய்

சற்று கண் அசந்தாலும்

ஆழ்ந்து விடுகிறாய்

கண்ணுக்குள்ளும்

கனவாகவும் நீயே

Romantic Kavithai in Tamil

என்னுலகம் பெரிதென்றாலும்

என்னுள்ளம்

வட்டமிட நினைப்பது

உன் மன வானில்

மட்டுமே

காணாமல் போன

என் புன்னகையும்

நொடியில் மலர்கிறது

உனை காணும்

போதுதான் மகிழ்வோடு


சிறு பொழுது

அருகிலிருந்தாலும்

முழு பொழுதையும்

உனதாக்கி விடுகிறாய்

அன்பில்

நிறைத்து மனதை

எப்படி யோசித்தாலும்

உனைத்தாண்டி

எதுவும் தோணுவதில்லை

என்பதே நிஜம்

என் சிந்தனையில்

பாதத்துக்கு பாலமாய்

வேண்டாம்

இதயத்துக்கு இதமாயிரு

போதும் அன்பே

ஆழ்நிலை தியானத்திலும்

ஜெபிக்கின்றது

உன் பெயரையே மனம்

காதல் வேதமாய்

உண்மை காதல்

உள்ளே நுழைந்தவுடன்

திரும்பவே

முடியாத சக்கரவியூகம்

கதிரவன்

கண் விழித்த

பின்னும்

உன் அணைப்பில்

கண் மூடி

கிடப்பதும்

சுகம் தான்

Romantic Kavithai in Tamil

வெயில் வெப்பத்தின்

தாக்கத்தை விட

உன் உடலுடன்

இணையும் பொழுது

உருவாகும் தாக்கத்தில்

இன்பமான வெப்ப மயக்கத்தை

உருவாக்கின்றது

எதிர்பாரா மழை

உன்னிடம் நெருக்கத்தை

உருவாக்கியது

அணைத்து கொள்ளும்

பொழுது

உன் நெஞ்சோரம்

மெல்லிய

மலைப்பாதையில்

என் தலையணைத்து கொண்டேன்

எனதென்று

எதுவுமில்லை

நாமென்றான

பின் அன்பே

எப்போதோ

நினைக்கவில்லை

எப்போதும்

நினைத்திருப்பது

உனையே


சிறு விரல்

அழுத்தத்தில்

கொட்டி விடுகிறாய்

உன் அத்தனை

நேசத்தையும்

என் அன்பனே

என் ரசனையை

மறந்து

உன் ரசனையின்

ரசிகையாக

மாறினேன் நான்

நேசித்துக் கொண்டேயிரு

நான் சுவாசித்துக்

கொண்டே இருக்கின்றேன்

உன் காதல் மொழிகளை

மறைக்கின்றேன்

கண்களை சந்தித்தால்

தொலைத்திடுவேன்

உன் பார்வையில்

எனை என்றே

Romantic Kavithai in Tamil

பூட்டிக் கொண்டேன்

உன்னில் என்னை

தொலைந்தாலும்

உன்னோடு

தான் என்றே

இந்த நேசம்

கூட புதுமை தான்

நித்தம் தொலைகிறதே

மனமும் உன்னில்

இளைப்பாறும் நொடியிலும்

துணையாக

வந்து விடுகிறாய்

நான் மனம் சாய

வெற்றிடம்

என்று ஏதுமின்றி

மனமெங்கும்

நிறைந்து விட்டாய்

என் சுவாசமாய்

அள்ளிக் கொள்கிறேன்

எனக்கான தாகமென

உன் நேசத்தை

பேசுகின்றது

உன் நினைவும்

கெஞ்சலும்

கொஞ்சலுமாய்

உனைப் போலவே

எனையும் மௌனமாக்கி

உன்னைத் தவிர

வேறெதுவுமேயில்லை

என் நினைவிடம்

Romantic Kavithai in Tamil

விழிகள்

படம் பிடித்த

பிம்பம் மனதிலும்

இடம் பிடித்து விட்டது

அழகிய ஓவியமாய்

நீயாக

என் தனிமையைவிட

உன் வெற்றிடமே

அதிகம் வதைக்கிறது

எனை

நீயற்ற நொடிகளில்



முற்பிறவியின் பந்தமே

இப்பிறப்பிலும்

நாம் இணைந்தது

என் கனவுக்கும்

உயிருண்டு

கண்ணுக்குள்

நீயிருப்பதால்

காதலாய்

என்றென்றும் உயிர்த்துடிப்புடன்

வாடாமலும் உதிராமலும்

அன்புநீர் ஊற்றியது

நீயென்பதால்

உன்னில் தொலைய

தயங்குவதேயில்லை

உள்ளம் என்னிலையிலும்


நினைவுகளில்

உனை தொடரவிட்டு

நெருங்குகிறாய்

என் உள்ளத்தில்

காதலாய் நீ

Romantic Kavithai in Tamil

தவித்திருப்பதும்

தனித்திருப்பதும்

உன் மொத்த

காதலையும்

அள்ளிக் கொள்ளவே

எனக்கே எனக்காக

என்று

தூரமிருந்து ரசிக்கிறேன்

பக்கமிருந்து தொலைத்த

உறவுகளை

என்னில்

தேங்கி கிடக்கும்

உன் நினைவில்

நீந்திக் கொண்டிருக்கு

என் காதலும்

கரை சேர்ப்பாய்

நீயென்றே

அருகிலில்லா

தருணங்களிலும்

இருப்பதாய்

மாயம் செய்கிறாய்

என்னில் ஆழ்ந்து

உன் காதலால்

உனை நினைவூட்டும்

அனைத்தும் எனக்கு

நம் காதல்

சின்னங்களே

துளிர்விடும்

அறிவேன்

உன் மனக்

கண்ணில்

என் உள்ளத்தை

உணர்வாய்

நீ என்று

என் மன நிறைவென்பது நீயன்றி வேறில்லை

தட்டி விட

விரும்ப வில்லை

ஒட்டிக் கொல்லும்

உன் நினைவுகளை

தொடரும் நிலவாய்

நீயும் தவழ்ந்து

கொண்டே இருக்கின்றாய்

என்னிதய

வானில் அழகாய்


எங்கும் நீ

எதிலும் நீ

என்று

ஏதோவொன்று

ஞாபகப்படுத்த

தவறியதில்லை

உன்னை

Romantic Kavithai in Tamil

நாற்றோடு

கதை பேசும்

காற்றாக

மனதை உரசுகிறாய்

நீ காதல்

மொழி பேசி

விரைந்தே மறைந்திடும்

மெல்லிய கோடு

தான் எப்போதும்

நம் ஊடல்கள்

மணலில் கிறுக்கிடும்

கை பிடிக்கவும்

அணைத்துக் கொள்ளவும்

நீயிருக்கும் போது

எவ்வளவு இருள் சூழ்ந்தாலும்

எனக்கென்ன அன்பே

மொத்த எதிர்பார்ப்பும்

நீயென்ற ஒன்றே

உன் வழி

நோக்கும்

இந்த விழிகளுக்கும்

மனமோ

உன்னில் லயித்திருக்க

நீயோ சற்றும்

சலனமின்றி

இருக்கின்றாயே

கண்ணாய்

என் கண்ணா

எப்போது படித்தாலும்

உயிரோட்டமாகவே

இருக்கின்றது

உன் வார்த்தைகள்

எனக்கான வரிகளாக

காற்றோடு

நான் கலக்கிறேன்

உன் சுவாசக்காற்று

என்னை தீண்டுவதற்கு

நான் உன்னை

நேசிப்பதனால் மட்டுமல்ல

உன்னையே மூச்சுக்காற்றாக

சுவாசிப்பதனால்

Romantic Kavithai in Tamil

தொலை தூரமெனினும்

தொலைந்தே போகிறேன்

அன்பே

உன் காதலில்

இந்த பிடிவாதமும்

பிடித்திருக்கு

எனை விட்டு

நகர மறுக்கும்

உன் நினைவின்

எச்சங்களுடன்.

Tags

Next Story
எப்டியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க!..டிங்கா டிங்கானு ஒரு நோயாமா..பேரு தாங்க அப்டி,ஆனா பயங்கரமான நோய்!..