/* */

திருமணத்தில் ரஜ்ஜு பொருத்தம் ஏன் அவசியமாக பார்க்கப்படுகிறது தெரியுமா?

தற்காலத்தில் திருமணம் செய்வதற்கு பத்து பொருத்தம் இல்லாவிட்டாலும் கூட ஐந்து பொருத்தம் இருந்தாலே திருமணம் செய்கிறார்கள். ஆனால் அதில் ரஜ்ஜு இல்லையென்றால், திருமணம் இல்லை.

HIGHLIGHTS

திருமணத்தில் ரஜ்ஜு பொருத்தம் ஏன் அவசியமாக பார்க்கப்படுகிறது தெரியுமா?
X

rajju porutham-ரஜ்ஜு பொருத்தம் (கோப்பு படம்)

Rajju Porutham

திருமணத்திற்கு பொருத்தம் பார்ப்பதாக இருந்தால் பலவிதமான பொருத்தங்களை பார்ப்பது வழக்கம். இருப்பினும் திருமணம் செய்வதற்கு கண்டிப்பாக பத்து பொருத்தம் பார்க்கப்படுகிறது. அவற்றில் ரஜ்ஜு பொருத்தம் அவசியமானதாக கருதப்படுகிறது.

ரஜ்ஜு பொருத்தம் இல்லையென்றால் அந்த ஜாதகக்காரர்களுக்கு திருமணம் செய்து வைக்கமாட்டார்கள். ரஜ்ஜு பொருத்தம் என்பது பத்து திருமண பொருத்தங்களில் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. ரஜ்ஜு ஐந்து பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. அந்த ஐந்து பிரிவுகளையும் விரிவாக இப்போது நாம் பார்க்கப்போகிறோம், வாங்க.

Rajju Porutham

ரஜ்ஜு பொருத்தம் வகைகள்:-

சிரசு ரஜ்ஜு (தலை)

கண்ட ரஜ்ஜு (கழுத்து)

உதர ரஜ்ஜு (வயிறு)

ஊரு ரஜ்ஜு (தொடை)

பாத ரஜ்ஜு (கால்)

சரி இந்த ஐந்து வகை ரஜ்ஜு பொருத்தங்கள் விளக்கங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

சிரசு ரஜ்ஜு என்றால் என்ன?

இந்த சிரசு ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்து கொள்ளும் ஆணிற்கு தீங்கு ஏற்படும். அதாவது திருமணம் செய்து கொள்ளும் ஆணிற்கு மரணம் ஏற்படும்.

Rajju Porutham

சிரசு ரஜ்ஜு உள்ள நட்சத்திரங்கள்:

மிருக சீரிஷம்

சித்திரை

அவிட்டம்

கண்ட ரஜ்ஜு என்றால் என்ன?

Rajju Porutham

கண்ட ரஜ்ஜு என்பது திருமணம் செய்து கொள்ளும் பெண்ணிற்கு தீங்கு ஏற்படும். அதாவது மாங்கல்யம் அணியக்கூடிய கழுத்து கொண்ட பெண்களுக்கு மரணம் ஏற்படும்.

கண்ட ரஜ்ஜு நட்சத்திரங்கள்:

ரோகிணி

அஸ்தம்

திருவோணம்

திருவாதிரை

சுவாதி

சதயம்

உதர ரஜ்ஜு என்றால் என்ன?

வயிறு ரஜ்ஜு இருப்பின் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும். இதனை புத்திர தோஷம் என்று சொல்வார்கள் குழந்தை பாக்கியம் கிடைக்காது.

Rajju Porutham

உதர ரஜ்ஜு உள்ள நட்சத்திரங்கள்:

கார்த்திகை

புனர்பூசம்

உத்திரம்

விசாகம்

உத்திராடம்

பூரட்டாதி

ஊரு ரஜ்ஜு என்றால் என்ன?

தொடை ரஜ்ஜு இல்லாவிட்டால் அவர்களது வீட்டில் பணம் நஷ்டம் ஏற்படும், செல்வங்கள் மட்டுமல்லாமல் சேமித்த சொத்துக்கள் அனைத்தையும் இழக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

Rajju Porutham

ஊரு ரஜ்ஜு உள்ள நட்சத்திரங்கள்:-

பரணி

பூசம்

பூரம்

அனுஷம்

பூராடம்

உத்திரட்டாதி

பாத ரஜ்ஜு என்றால் என்ன?

பாத ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் ஒருவர் இருக்கும் இடத்திற்கே ஆபத்து ஏற்படும். அதாவது பிரிவு ஏற்படும் அல்லது சன்னியாசம் செல்வார்கள்.

Rajju Porutham

பாத ரஜ்ஜு உள்ள நட்சத்திரங்கள்:

அசுவினி

ஆயில்யம்

மகம்

கேட்டை

மூலம்

ரேவதி

ரஜ்ஜு பொருத்தம் பார்ப்பது எப்படி?

Rajju Porutham

இந்த ரஜ்ஜு பொருத்தம் என்பது திருமணம் செய்வதற்கு மிகவும் அவசியமான பொருத்தமாகும். திருமணம் செய்ய இருக்கும் ஆண் மற்றும் பெண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவாக இல்லாமல் வெவ்வேறு ரஜ்ஜுவாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் திருமணம் செய்ய இருக்கும் மணமக்களுக்கு திருமணம் செய்து வைக்கலாம். இதை மிக எளிதாக சொல்ல வேண்டும் என்றால் ஆண் மற்றும் பெண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவாக இல்லாமல் பார்த்துச் செய்தால், பெண் தீர்க்க சுமங்கலியாக வாழ்வாள்.

Updated On: 3 April 2024 2:06 PM GMT

Related News

Latest News

 1. திருவண்ணாமலை
  ஜோலார்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில் அதிகபட்சமான வாக்குப்பதிவு
 2. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆர்வத்துடன் வாக்களித்த பெண்...
 3. திருவண்ணாமலை
  சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
 4. ஆரணி
  ஆரணி அறம் வளர் நாயகி கைலாசநாதர் கோயில் பிரமோற்சவம் தேர் திருவிழா
 5. இந்தியா
  சொந்தமாக ஒரு கார் கூட இல்லாத மத்திய அமைச்சர் அமித்ஷா
 6. லைஃப்ஸ்டைல்
  பூசணி விதைகளின் நன்மைகள் மற்றும் பயன்கள்
 7. லைஃப்ஸ்டைல்
  ஆமணக்கு எண்ணெய் தரும் நன்மைகள் பற்றித் தெரியுமா?
 8. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமிக்கு சிறப்பு பேருந்துகள்!
 9. ஈரோடு
  பவானிசாகர் அணையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே தெரிந்த கோயில்!
 10. இந்தியா
  அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் தேவையில்லை : திகார் சிறை அறிக்கை