pulichakeerai in tamil-என்னது..? புளிச்சக்கீரை சாப்பிட்டால் இவ்ளோ நன்மைகளா..? நீங்களும் தெரிஞ்சுக்கங்க..!.

pulichakeerai in tamil-புளிச்சக்கீரை ஆரோக்ய நன்மைகள்
புளிச்சக்கீரை என்று நாம் சாதாரணமாக நினைக்கும் அந்தக்கீரையில் இவ்வளவு நன்மைகள் இருப்பது நம்மை மலைக்கவைக்கிறது. மண்பானையில் வேகவைத்து நன்றாக கடைந்து சூடாக சோறுபோட்டு சாப்பிட்டால் அப்படி ஒரு சுவை...சொல்லும்போதே வாயில் எச்சில் ஊறுகிறது.
புளிச்சக்கீரை என்று பெயர் சொல்லும்போதே அதன் சுவை எல்லோருக்கும் தெரிந்துவிடும். ஆந்திர மக்கள் இதை விரும்பி உண்பார்கள். அங்கு புளிச்சக்கீரை பயன்பாடு மிகவும் அதிகம். அங்கு இந்த கீரையை ‘கோங்குரா’ என்கிறார்கள். புளிச்சகீரைக்கு புளிச்சிறுகீரை, காசினிக்கீரை, காயச்சுரை, கைச்சிரங்கு, காய்ச்சகீரை, சனம்பு என்றும் பல பெயர்கள் உள்ளன. ஆனால் பெரும்பாலும் அந்த பெயர்களை யாரும் பயன்படுத்துவதில்லை. அதன் சுவையைக்கொண்டே அது அடையாளப்படுத்தப்படுகிறது.
pulichakeerai in tamil
புளிச்சக்கீரையில் தாது உப்பு, இரும்புச் சத்து, வைட்டமின்கள் ஃபோலிக் அமிலம் மற்றும் ஆண்டி ஆக்சிடண்டுகள் என உடல் வலிமை மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து சத்துகளும் நிறைந்துள்ளன. அதனால் தான் நம் முன்னோர்கள் இந்தக் கீரையை வாரம் இருமுறையாவது கடைந்து உடல் வலிமை குன்றிய குழந்தைகளுக்கு சாப்பிடத்தருவார்கள்.
காசநோயை குணமாக்கும் புளிச்சக்கீரை ரத்தத்தை சுத்தப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் உஷ்ணத்தை எப்போதும் சீராக வைத்திருக்க உதவுகிறது. அதனால்தான் இந்த கீரையை உடலுக்கும், குடலுக்கும் வளமூட்டும் கீரை என்பார்கள்.
பித்த சம்பந்தமான நோய்கள் இருப்பவர்கள் புளிச்சக்கீரையை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது பித்தத்தை அதிகப்படுத்தும் குணமுடையது.
pulichakeerai in tamil
புளிச்சக்கீரையின் மருத்துவ பயன்கள்
1. புளிச்சக்கீரை உடல் சூட்டைக் தணித்து உடல் வெப்பத்தை சமநிலையில் வைக்கிறது.
2. தோல் தொடர்பான ஒவ்வாமை நோய்களுக்கு புளிச்ச கீரை சிறந்தது.
3. புளிச்சக்கீரையில் உள்ள காய்களில் உள்ள சாற்றை சர்க்கரை மற்றும் மிளகுடன் சேர்த்து சாப்பிட்டால் மலச்சிக்கல் மற்றும் வயிற்று நோய்கள் தீரும்.
4. புளிச்சக் கீரையின் விதைகள் பால் உணர்வுகளை தூண்டி இல்லற இன்பத்துக்கு உதவுகிறது.
5. புளிச்சக் கீரையினை உடல் வலிக்கு மேல் பூச்சாக பூசி ஒரு மணிநேரம் கழித்து குளித்தால் உடல் வலி பறந்துபோய்விடும்.
6. நீர் கோர்த்தல் பிரச்னை உள்ளவர்கள், இதய நோயாளிகள் மற்றும் ரத்தநாளங்களில் பிரச்னை இருப்பவர்களுக்கு, புளிச்சக்கீரையை மசியல் செய்து சாப்பிட்டால் சிறந்த பலன் கிடைக்கும்.
pulichakeerai in tamil
7. புளிச்சக்கீரையில் நீர்ச்சத்து மிகுதியாக இருப்பதால், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.
8. புளிச்சக்கீரையில் வைட்டமின் சி மற்றும் தாதுக்கள் நிறைந்திருப்பதால், சருமப் பாதுகாப்புக்கு நல்லது.
9. புளிச்சக்கீரை உடலில் ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்பட்டு, ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
10. புளிச்சக்கீரை உடலில் சேரும் கெட்ட கொழுப்பைக் கரைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
11. பித்தம் உடலில் அதிகமாகி, நாவில் சுவையின்மை ஏற்படுபவர்கள் , புளிச்சக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவர, சுவை தெரிய ஆரம்பிக்கும்.
12. மந்தம், இருமல், காய்ச்சல், வீக்கம் போன்ற உடல்நலக் கோளாறுகளுக்கும் புளிச்சக்கீரை ஒரு மிக சிறந்த தீர்வாகும்.
13. சொறி, சிரங்கு போன்ற சரும நோய் உள்ளவர்கள், புளிச்சக்கீரையை சட்னியாக செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்தம் சுத்தம் செய்யப்பட்டு சொறி,சிரங்கு குணமாகும்.
பார்த்தீங்களா..எவ்ளோ நன்மைகள் இருக்குன்னு. அதனால் இனிமேல் வாரம் ஒரு முறையாவது புளிச்சக்கீரை சாப்பிடுங்க...ஓகே..!
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu