இறால் சாப்பிட்டு இருக்கீங்களா..? அதன் நன்மைகள் என்ன? வாங்க பார்ப்போம்..!

Prawn Fish in Tamil
X

Prawn Fish in Tamil

Prawn Fish in Tamil-உணவு வகைகளில் கடல் உணவுக்கு தனி சுவை உண்டு. அதேபோல கடல் உணவுக்கென்று தனி பிரியர்களுக்கு உள்ளனர்.

Prawn Fish in Tamil

நாம் உண்ணும் ஒவ்வொரு உணவிலும் பல்வேறு விதமான நன்மைகள் இருக்கின்றன. உணவு உயிரினங்களின் அடிப்படைத்தேவை. எல்லா உயிரினமும் ஏதாவது ஒரு உணவை உட்கொண்டு உயிர்வாழ்கின்றன. நாம் உண்ணும் சில உணவுகளில் அதிக ஊட்டசத்துகள் இருக்கும். சிலவற்றில் குறைவான சத்துகளே இருக்கும். ஆனால், சில உணவுகளில் மட்டுமே மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கும். அவ்வாறான உணவுகளில் கடல்சார்ந்த உணவுகளும் ஒன்றாகும்.

கடல் உணவில் பிரதானமாக பார்க்கப்படுவது மீன்கள். சிறு மீன்கள் முதல் பெரிய மீன்கள் வரையிலும், சிறு கடற்பாசி வரை எல்லாவற்றிலும் நிறைய சத்துககள் அடங்கி இருக்கின்றன. நாம் இங்கு பார்க்கப்போபவது ஆங்கிலத்தில் prawn என்று அளிக்கப்படும் இறால் பற்றி. இறாலில் உள்ள நன்மைகள் என்னென்ன அதில் என்னென்ன ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன என்பது பற்றி பார்ப்போம்.

கடலில் பல வகையான உயிரினங்கள் உள்ளன. கடல் சார்ந்த உணவுகள் அனைத்தும் ருசியாகவும், நலன்கள் தரக் கூடியதாக இருக்கிறது.கடல் உணவுகளில் பல வகையான சத்துகளும், தாதுக்களும் நிறைந்துள்ளன.

இறாலின் நன்மைகள்

இறால் ஒரு முக்கிய கடல் உணவாகும். எல்லோரும் விரும்பி சாப்பிடும் உணவாக இறால் இருக்கிறது. இதில் பல வித ஊட்டச்சத்துகள் காணப்படுகின்றன. இறால் பிரியர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். கடல் உணவுகளில் மிகவும் அற்புதமான சுவையையும், உடல் ஆரோக்கியத்தையும் தருபவை இந்த இறால்.

ஊட்டச்சத்துகள்

இறால் எண்ணற்ற நன்மைகளைக் கொண்டுள்ளது.

- மிகவும் குறைந்த அளவிலான கொழுப்புகள்

- அதிகமான புரதம்

- கலோரிகள்

- கால்சியம்

- பொட்டாசியம்

- செலினியம்

- விட்டமின் ஏ , ஈ

- பாஸ்பரஸ்

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

தற்காலத்தில் பலருக்கு எதிர்ப்பு சக்திக் குறைபாடு அதிகம் ஆகி கொண்டே வருகிறது. அவர்களின் உடல் நலத்தை பாதுகாப்பதில் இந்த இறால்கள் பெரிதும் பயன்படுகிறது. இவற்றில் உள்ள அதிகப்படியான ஜின்க் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை தூண்டி வலுப்படுத்துகிறது. மேலும், வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இறால் உதவுகிறது.

கொடி இடை வேண்டுமா?

பல பெண்களுக்கு கொடி இடையாள் என்று பேர்வாங்க வேண்டும் என்பது கனவாக இருக்கும். கச்சிதமான இடையுடன் கூடிய உடல் அமைப்பு இருக்கவேண்டும் எனில் இறால் சாப்பிடலாம். இறாலில் குறைந்த அளவே கொழுப்பு உள்ளது. எனவே, இவை டயட் உள்ளவருக்கு சிறந்த உணவாக இருப்பதுடன் ஆரோக்யமான உடலை தருகிறது.

ஆண்மைக் குறை நீக்க

சீனர்களின் மருத்துவத்தில் இறால் ஆண்களின் பொதுவான பிரச்னைகளை குணப்படுத்த பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக ஆண்மைக் குறைவு ஏற்பட்டுள்ள ஆண்களுக்கு இறால் அற்புத மருந்தாக விளங்குகிறது. பிறப்புறுப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி இல்லற வாழ்வில் நலம் பெற இவை துணை புரிகின்றன.

புற்றுநோய்க்கு

பொதுவாக ஒரு சில உணவு வகைகள் புற்றுநோயை தடுக்க கூடியதாக இருக்கும். அதிலும் கடல் உணவுகள் பலவகை நோய்களை தடுக்க கூடிய ஆற்றல் பெற்றதாக கருதப்படுகிறது. இறாலில் உள்ள செலினியம் புற்றுநோய் செல்கள் உடலில் உருவாகாமல் தடுக்கிறது.அத்துடன் எந்த நோயும் தாக்காமலும் காக்கிறது.

ரத்த அழுத்தம் குறைய

அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இறால் சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. இறாலில் உயர் ரத்த அழுத்த கோளாறுகளை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டவை. இதில் சோடியம் அதிக அளவில் இருப்பதால் இதய நோய்களுக்கு சிறந்த முறையில் உதவுகிறது.

ஒமேகா 3 கொழுப்பு

இறாலில் அதிக அளவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. இந்த கொழுப்பு அமிலம் உடலின் சீரான செயல்பாட்டை உறுதிப்படுத்தி ஆரோக்யத்தை அதிகரிக்கிறது. குறிப்பாக மூளையின் செயல்திறனை இறால் மேம்படுத்துகிறது.

செலினியம் மிகுந்த இறால்

இறாலில் உள்ள சில முக்கிய சத்துகளில் செலினியமும் ஒன்று. ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உற்பத்தியை நிகழ்த்த செலினியம் பெரிதும் உதவுகிறது. எனவே, இவை உடலின் செல்களை சுறுசுறுப்பாக வைத்து இளமையான தோற்றத்தை தருகிறது.

கிட்னி ஆரோக்யம் பெற

கிட்னியின் ஆரோக்யத்தை மேம்படுத்த இறால்கள் பெரிதும் உதவுகின்றன. ரத்த நாளங்களை சீராக்கி கிட்னி பிரச்னைகளை தடுக்கக் கூடியது என்றும் கருதப்படுகிறது. அத்துடன் ரத்த ஓட்டத்தை சீராக்குவதிலும் இறால் பெரும் பங்கு வகிக்கின்றது.

சில முன்னெச்சரிக்கைகள்

என்னதான் இறாலில் குறைவான கொழுப்புகள் இருந்தாலும், இவற்றில் அதிகமான கொலஸ்ட்ரால் இருக்கிறது. எனவே, இதய நோயாளிகள் இறால் சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும்.

கடல் நீர் நாளுக்கு நாள் மாசு அடைந்து வருவதால் கடல்வாழ் உயிரினங்களின் நச்சுத் தன்மையும் அதிகமாகிறது.எனவே, நச்சுத்தன்மை கொண்ட இறால்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

இறால்களின் தோல் விரைவில் செரிமானம் ஆகாது. எனவே, இவை வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன. செரிமான பிரச்னை உள்ளவர்கள் இறால் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

சிலருக்கு இறால் சாப்பிட்டால் உடலில் ஒவ்வாமை ஏற்படக் கூடும். அவர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story