முயற்சி இல்லாத வாழ்க்கை..அச்சாணி இல்லாத வண்டி மாதிரி..! நேர்மறை சிந்தனை செழுமையாக்கும்..!

முயற்சி இல்லாத வாழ்க்கை..அச்சாணி இல்லாத வண்டி மாதிரி..! நேர்மறை சிந்தனை செழுமையாக்கும்..!
X
Positivity Motivational Quotes in Tamil -வெற்றி சும்மா கிடைக்காது. முயற்சியும் உழைப்பும் இல்லைன்னா எந்த சாதனைக்கும் தடம் கிடைக்காது.

Positivity Motivational Quotes in Tamil -நேர்மறை சிந்தனை உள்ளவர்களே வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களாக, சாதனைக்குரியரவர் களாக உருவாகிறார்கள். இலக்கு நிர்ணயித்தல், அதை நோக்கி பயணித்தல், அதை வெற்றியாக மாற்றுவது போன்ற செயல்பாடுகள் நேர்மறை சிந்தனை உடையவர்களுக்கே உரித்தானது.

  • இந்த இரண்டு விஷயங்கள் நம் வாழ்க்கையில் உதவாது: 1. தாழ்வு மனப்பான்மை 2. தலைக்கனம். மற்றவரோடு நாம் ஒப்பிடும் போது இவை நமக்கு வாழ்வில் பின்னடைவை ஏற்படுத்தும்..!
  • வாழ்க்கையாக இருந்தாலும் சரி, வாட்ஸ்அப் ஆக இருந்தாலும் சரி! எல்லாரும் பார்ப்பது, நம் ஸ்டேட்டஸ் தான்..!
  • மனதுக்குள் என்ன நினைக்கிறோமோ அதுதான் செயலில் வெளிப்படும். நல்ல எண்ணங்கள் நிச்சயம் நம்மை நல்வழிப்படுத்தும். ஆகவே நல்லதையே நினைப்போம் நல்லதையே செய்வோம்..!
  • உன்னை சுற்றி உள்ளவர்களை நீ மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்பினால், முதலில் நீ மகிழ்ச்சியாக இரு! உன்னிடம் இல்லாத ஒன்றை நீ யாருக்கும் கொடுக்க முடியாது..!
  • தோல்வியில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்றால், அதுதான் உண்மையான தோல்வி..!
  • மாற்றி யோசனை செய்யாமல் மாற்றங்கள் வருவதில்லை..!
  • நாம் எதை அதிகம் விரும்புகிறமோ அதற்கு நம்மை பிடிக்காமல் போகும்..! இல்லையெனில், போக போக நமக்கே நம்மை பிடிக்காமல் போய்விடும்..!
  • கஷ்டமோ நஷ்டமோ மனசுக்கு புடிச்சவுங்க கூட வாழ்ந்தது மட்டும் தான் வாழ்க்கையே சந்தோஷமா இருக்கும்..!

positivity motivational quotes in tamil

  • போலிக்கு தான் பரிசும் பாராட்டும்.. உண்மைக்கு ஆறுதல் பரிசு மட்டுமே..! - சார்லி சாப்லின்
  • உழைப்பு உடலை பலப்படுத்தும், கஷ்டங்கள் மனதை பலப்படுத்தும்..!
  • உழைத்து வாழ்வது தான் சுகம்.. வறுமை, நோய் போன்றவை உழைப்பைக் கண்டால் ஓடி விடும்...!
  • போதும் என்ற மனம் படைத்திருப்பதே பெருஞ்செல்வம்..!
  • நீ விழி மூடி இருந்தாலும், கதிரவன் கதிர் எழுப்பாது நில்லாது..! நீ ஓரம் நின்றாலும் உன் பிரச்சனை உன்னை விட்டு விலகாது..! எதுவானாலும் எதிர்த்து நில் துணிவிருந்தால் மட்டும்..!
  • அரைநொடி நிகழ்வை கூட ஆயுள் வரை, அசைபோடுவது தான் வாழ்க்கை..!
  • காயங்களை குருதட்சணையாக வாங்கிக்கொள்ளாமல், காலம் யாருக்கும் எதையும் சொல்லிக் கொடுப்பதில்லை..!
  • நிறம் மாறும் பச்சோந்திகளை விட, அடிக்கடி தன் நிலைப்பாட்டிலிருந்து மனம் மாறும் மனிதர்களிடமே அதிக கவனம் தேவை..!
  • தேவைகள் இருக்கும் வரை தேடப்படுவாய்..! தேவைகள் உன்னிடம் நடக்காது என்றால்! பல அடி உயரங்களில் இருந்து பாரபட்சமின்றி தூக்கி வீசப்படுவாய்..!
  • விதி வரைந்த பாதையில், விடை தெரியாத விண்மீன்களாக விரைந்து செல்லும் வாழ்க்கைப் பயணம்..!

positivity motivational quotes in tamil

  • மறைக்க நினைக்கும் மனிதர்களிடம் மறந்தும் மயங்கிவிடாதீர்கள்..!
  • முயற்சியே, இலட்சியத்தோடு இலக்கு தொடு! பயணத்தின் இறுதிவரை கூடு துறந்து விடாத நத்தையைப் போல..!
  • உன் தேடல்களின் வலியே, உன் பயணங்களின் விழி! தோல்வி அறிந்து, வாழ்வை அறிந்து, தொடர்ந்து பயணி! வலியில், தேடலை மட்டும் ஒருபோதும் விட்டு விடாதே..!
  • முடிவுகளை தயங்காமல் எடுக்கும் திறன் இருந்தால், முன்னேற்றத்துக்கான வாசல் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்..!

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story