தை மகளே வருக..! தரணி செழிக்க வருக..! பொங்கல் வாழ்த்துக்கள்..!

Pongal Wishes in Tamil
X

Pongal Wishes in Tamil

Pongal Wishes in Tamil-பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும்.

Pongal Wishes in Tamil-பொங்கல் என்பது தமிழர்களின் பழமையான பண்டிகையாகும். இத்திருவிழா சங்க காலத்திலிருந்து தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டு வரும் அறுவடைத் திருவிழாவாகும். இந்த நல்ல நாளில் மக்கள் அனைவரும் ஒன்று கூடி பொங்கல் வைத்து மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். தாவரங்களுக்கு உயிர் கொடுக்கும் சூரியனுக்கும், உழவுக்கு உதவும் கருவிகள்,மாடுகள் என அனைத்துக்கும் நன்றி கூறும் நாளாக இது,கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் இறைவனை வணங்குவது மட்டுமல்லாது விவசாயத்துக்கு உதவும் இயற்கையையும் உயிரினங்களையும் மக்கள் வணங்குகின்றனர்.

ஆடிப் பட்டம் தேடி விதை என்பது உழவர்களுக்கான பொன்மொழி. அவ்வாறு ஆடி மாதத்தில் விதைத்து அந்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்யும் பருவமே தை மாதம். அந்த அறுவடையில் கிடைக்கும் நெல்லில் இருந்து எடுக்கப்பட்ட முதல் அரிசியை சர்க்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையில் பொங்கலிட்டு சூரியனுக்கும், மாட்டுக்கும் படைத்து மகிழும் நன்றி கூறும் விழாவே பொங்கல் விழாவாகும். முதல் நாள் சூரியப்பொங்கல், இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல், மூன்றாம் நாள் காணும் பொங்கல் என்று தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வடமாநிலங்களில் சூரியபகவானுக்கு நன்றி கூறுகின்ற நாளை மகர சங்கராந்தி என்றும் சங்கராந்தி என்ற பெயருடன் கொண்டாடப்படுகிறது. மகரம் என்றால் சூரியன் என்பது பொருளாகும். பொங்கல் விழா இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா, மொரீசியஸ் உட்பட தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம் கொண்டாடப்பட்டு வருகிறது.

  • தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்..தையும் பிறந்தது, தமிழ்ப்புத்தாண்டும் பிறந்தது..இல்லங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும்..உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்..!
  • வளம் பெருகட்டும்..மனம் நிறையட்டும்..! குளம் தேங்கட்டும்..விவசாயம் செழிக்கட்டும்..! வரப்புயரட்டும்..வாழ்வது சிறக்கட்டும்..விவசாய மக்களுக்கு இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்..!
  • தித்திக்கும் பொங்கல் படைத்து, நாற்திக்கும் சோறுகொடுக்கும் விவசாயி மனம் குளிர மும்மாரி பொழியட்டும்..விவசாயி வாழ்வு சிறக்கட்டும்..நாடு வளர்ச்சி காணட்டும்..! அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்..!
  • பூமி விளைவதற்கு சாமியாய் நிற்கும் சூரிய பகவானுக்கு முதல் வணக்கம்..! சூரியப்பொங்கலிட்டு கதிரவன் மனங்குளிர படைத்திடுவோம் சர்க்கரைப் பொங்கல்..! அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்..!
  • உயிரினங்கள் உண்ண உணவளிக்கும் இயற்கை அன்னைக்கும், குடிமக்கள் உயிர்வாழ சோறு படைக்கும் உழவர்களுக்கும் நன்றியுடன் கூறிடுவோம்..நயமான பொங்கல் வாழ்த்துக்களை..!
  • பழையன கழியட்டும்..புதியன புகுந்திடட்டும்..தீயவை அழிந்திடட்டும்..நல்லவை குடியேறட்டும்.. போகிப் பண்டிகையுடன்.. பொங்கல் வாழ்த்துக்களை உரித்தாக்குவோம்..!
  • தரணியெங்கும் தழைக்கட்டும்..வளம்..! கழனியெல்லாம் நெல்மணிகள் நிறையட்டும்..! மனங்களெல்லாம்..மகிழ்ச்சியது நிறையட்டும்..! தைப்பொங்கல் திருநாளில் இன்பங்கள் பொங்கட்டும்..! பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்..!
  • மழைதர காட்டிற்கு..வளம்தர மண்ணிருக்கு..செடிவளர சூரிய ஒளியிருக்கு..அகாரம் தருவதற்கு நீரிருக்கு..உழைத்து சோறுபோட ஊருக்குள் உழவர்கள் உள்ளார்கள்..அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்..!
  • இல்லங்களில் பொங்கல் பொங்கி, உள்ளங்களில் மகிழ்ச்சி பொங்கி, தரணியெங்கும் ஆனந்தம் விரவி..குடிமக்கள் வாழ்வது சிறக்கட்டும்..அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்..!
  • அரசன் ஆண்ட காலம் முதல்..தொன்றுதொட்டு நன்றி சொல்லி பழகிய திருநாள்..சூரியனுக்கும்..உழவுக்குதவும் கருவிகள்..ஏர் உழும் மாடு என அத்தனைக்கும் நன்றி கூறும் நன்னாள்..! பொங்கல் படைக்கும் பொன்னாள்..! பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்..!
  • தை மகள் வந்தாள் இளமையோடு..! தாய் மண் காக்க வந்திட்டாள் துள்ளலோடு..! மனமது நிறையும் பொன்னாள்..புன்னகை விரியும் நன்னாள்..! போற்றுவோம்..போற்றுவோம்..விவசாயி வாழவே போற்றுவோம்..! அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..!
  • மஞ்சள் கிழங்கு, செங்கரும்பு, மாவிலை, தோரணம் உயர்த்தியே கட்டிய கோபுரம், விறகடுப்பில் வீற்றிருக்கும் மண்பானை..பச்சரிசி, வெல்லம் சேர்த்து மனம் மணக்க பொங்கல்வைத்து படையலிட்டு மகிழ்வோடு சுற்றங்களுக்கு பகிர்ந்து உண்போம்..இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்..!
  • பச்ச புள்ள பால் குடிக்க, தான் பெத்தபுள்ளைக்கு பால் கொடுக்காமல் மத்த புள்ளைங்க வளர பால் கொடுக்கும் கோமாதாவே.. உன்னை வணங்குகிறோம்..இந்த நாளிலே..! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..!
  • இறைவன் மனிதனுக்கு அளித்த பெருங்கொடை மாடுகள்..! பாலுக்கு பசுவும்..உழவுக்கு எருதும் என்று கொடைகொடுத்த இறைவா..உனக்கு முதலில் நன்றி கூறி..எங்கள் மனிதருக்கு உதவும் பசுவுக்கும்,எருதுக்கும் பொங்கல் படைத்து புண்ணியம் தேடுகிறோம்..அருள்வாய் இறைவா..எங்களுக்கு..! இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்..!
  • ஜல்லிக்கட்டு காளைகளை மல்லுக்கட்டும் காளையர்கள்..பொங்கல் முடிந்த நாட்களிலே ஜல்லிக்கட்டெனும் பாரம்பர்ய ஒருவிழா..திருவிழா காணுமே தமிழ் மண்ணில்..! உலகமே வியக்குமே அதில் மயங்குமே..! இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்..!
  • அறுவடைத் திருநாள் மண்ணிலே..மகிழ்ச்சியும் பொங்குமே உழவன் கண்ணிலே..பொங்கல் நன்னாளில், தமிழர்கள் வாழ்வில் அன்பு விரவட்டும்.. அமைதி நிலவட்டும், நலமும், வளமும் பெருகட்டும்..பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்..!
  • பொங்கல் திருநாள் அனைவருக்கும் உடல்நலத்தையும், மகிழ்ச்சியையும் தரட்டும். கழனியில் கடினமாக உழைக்கும் உழவர்கள் வாழ்வில் வளமும் நலனும் சேரட்டும்..வரப்பது உயர்வதுபோல் உழவர் மனதினில் மகிழ்ச்சியும் மலரட்டும்..! பொங்கல் நல்வாழ்த்துக்கள்..!
  • தைத்திருநாள் திருப்பம் தரும் பொன்னாள்..பொங்கல் திருநாள் மக்கள் வாழ்வில் மகிழ்ச்சியை நிரப்பி ஒளிமயமான எதிர்காலம் உருவாக்கட்டும்..இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்..!
  • இது தமிழர் திருநாள்..! இது தமிழர்களின் வாழ்வில் வளம் சேர்க்கும் திருநாள்! உழைக்கும் உழவர்களின் களைப்பை போக்கிக் களிப்பில் ஆழ்த்தும் உற்சாகத் திருநாள்…வளம் சேரட்டும்.. உழவர்கள் செழிக்கட்டும்..இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்..!
  • தித்திப்பது பொங்கல் மட்டுமல்ல..எங்கள் தமிழும்தான்..! பொங்கட்டும் பொங்கலது புதுப்பானையில்..! பொங்கல் போல‌ பிறக்கட்டும் மகிழ்வோடு புதுவாழ்வு..திகட்டாத கரும்பு போல‌ இனிக்கட்டும் அன்பு வாழ்க்கை..அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..!
  • நோயற்ற வாழ்வோடு நற்சுகம் பெற்று மாசற்ற குழந்தை மனம்போல அன்பு பெற்று, அளவோடு பெற்றிட்ட செல்வத்தை பிறருக்கும் பகிர்ந்து, சுற்றம் போற்றும் மனிதராய் வாழ இந்த தைத்திருநாளில் வாழ்த்துகிறோம் அனைவரையும்..!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
கார் ஆடியோவுடன் புளூடூத் இணைக்க முடியவில்லையா? இதோ தீர்வுகள்!