கேரளப்பெண்கள் போல சருமம் பளபளக்க வௌவ்வால் மீன் சாப்பிடுங்க..!
pomfret fish in tamil-வௌவ்வால் மீன்.(கோப்பு படம்)
White Pomfret Fish in Tamil-வௌவ்வால் மீன்களில் நல்ல கொழுப்பு மற்றும் அதிக புரோட்டீன் நிறைந்துள்ளது. வௌவ்வால் மீன்களை சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும். மேலும் இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி, மூளை வளர்ச்சி மற்றும் அனீமியா உள்ளிட்டவைகளுக்கும் சிறந்தது.
மூன்று பக்கமும் நீர் சூழ்ந்த பகுதியில் இந்தியா அமைந்துள்ளது. இதுதவிர இந்தியாவில் அதிக ஆறுகள், ஏரி மற்றும் குளங்கள் நிறைந்துள்ளன. இதன் காரணமாக ஆண்டு முழுவதும் எல்லா சமயங்களிலும் மீன் சாதாரணமாக கிடைக்கும் உணவாக இருக்கிறது.
வௌவ்வால் மீன் நாடு முழுக்க பிரபலமானதாகும். இதில் குறைந்த அளவு எண்ணெய் உள்ளது. அதிக சுவை மட்டுமின்றி ஏராளமான அளவில் ஒமேகா 2 அமிலம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் டி நிறைந்து இருக்கிறது.
இந்திய சால்மன் மீன் முதல் பெட்கி வரை, ஹில்சா முதல் கட்லா வரை, ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவைகள். ஆனால் எல்லோருக்கும் உகந்தவகையில் எல்லா சந்தர்ப்பங்களுக்கும் பொருத்தமான ஒரு கிரீமி, வெண்ணெய், சுவையான பாம்ஃப்ரெட் மீன் அல்லது வௌவ்வால் மீன் ஆகும். இது அதன் ருசிக்காக மட்டுமல்ல, அதன் அதிசயிக்கத்தக்க சத்தானதாகவும் அறியப்படுகிறது. இது உண்மையில் ஒரு கடல் உணவு விரும்பிகளுக்கு சிறந்த உணவு.
இந்த வௌவ்வால் மங்களூர் பாம்ஃப்ரெட் கறி, பெங்காலி பாணி பாம்ஃப்ரெட் வறுவல் அல்லது தென்னிந்திய பாணி காரமான பாம்ஃப்ரெட் கறி எதுவாக இருந்தாலும், பாம்ஃப்ரெட்டின் தனித்துவமான சுவையை ருசித்தவர்கள் மறக்க முடியாத சுவையாகிவிடும். வௌவ்வால் மீனின் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்று பார்ப்போம் வாங்க.
வௌவ்வால் மீனின் நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள்
வௌவ்வால் மீனில் குறிப்பாக ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நினைந்துள்ளன. அவை நம் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகின்றன. சுவை மற்றும் சத்து என்று வந்தால் வௌவ்வால் முதல் தேர்வாக இருக்கும்.
வௌவ்வால் மீனின் பிரபலத்திற்கு மற்றொரு முக்கிய காரணம், அதிக முள் இல்லாதது. இதில் ஒரே ஒரு மைய முள் மட்டுமே இருக்கும். எனவே, குழந்தைகள் கூட உண்ணுவது எளிது.
வௌவ்வால் மீனின் வகைகள்
வௌவ்வால் மீன் மூன்று வெவ்வேறு சுவையான வகைகளில் கிடைக்கின்றன. 1. சீன வெள்ளி பாம்ஃப்ரெட், 2. கருப்பு பாம்ஃப்ரெட் 3. வெள்ளை பாம்ஃப்ரெட். இதை பட்டர்ஃபிஷ் என்றும் செல்லமாக அழைக்கிறார்கள். காரணம் அதில் மென்மையான மற்றும் வெண்ணெய்க்காக அவ்வாறு அழைக்கப்படுகிறது.
இந்த வகை வௌவ்வால் மீன்கள் வெவ்வேறு வகையில் கிடைத்தாலும் கூட ஒவ்வொன்றும் தனித்துவமான முறையில் சுவை அளிக்கின்றன. அனைத்து வகையிலும் ஒரு பொதுவான காரணி அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பு.
வௌவ்வால் மீனின் நன்மைகள்
இதய ஆரோக்கியத்தை பேணும் DHA மற்றும் EPA ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் வௌவ்வால் மீன்களில் நிறைந்து காணப்படுகின்றன. இந்த கொழுப்புகள் நிறைவுறாதவை. அதனால் ஆரோக்யம் விரும்புவோர் இந்த மானை உண்ணலாம். DHA நினைவாற்றல் மற்றும் கண் பார்வையை மேம்படுத்த பயனாகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.கால்சிட்ரியால் என்பது பாம்ஃப்ரெட் மீனில் உள்ள சேர்மங்களில் ஒன்றாகும். இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
பாம்ஃப்ரெட் மீன் குறைந்த கலோரி உள்ளடக்கம் கொண்டது. வௌவ்வால் மீன் புரதத்தின் சிறந்த மூலமாகும். இது உடலின் ஒட்டுமொத்த வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. சருமம் இயற்கையாகவே பளபளக்கும். பாம்ஃப்ரெட்டில் வைட்டமின் டி அதிகமாக உள்ளது. இது உங்கள் சருமத்தை ஆரோக்யமாக வைத்திருக்க உதவுகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu