போலி உறவுகள்...நிஜத்தை போலவே..! வார்த்தைகளின் காயங்கள் ஆறாது..!
X
Poli Uravugal Quotes in Tamil
By - K.Madhavan, Chief Editor |11 Sept 2022 12:01 PM IST
Poli Uravugal Quotes in Tamil-போலி வார்த்தைகளால் உறவின் வர்ணம் பூசும் முகமூடி மனிதர்கள் பொல்லாங்கு கூறாமல் விஷம் தடவும் அரக்கர்கள். அவர்களை அடையாளம் காணுதல் அவசியம்.
Poli Uravugal Quotes in Tamil-பொய்யான வார்த்தைகளைக் கூறி வேடதாரிகள் போல பழகும் உறவுகள், நம் பகைவர்களைவிட மோசமானவர்கள். ஆமாம் பகைவனை நம்பிவிடலாம். கூடவே இருக்கும் துரோகிகளை எப்படி நம்புவது..? போலியான உறவுகள் நமக்கு தரும் வலிமிகுந்த வேதனையின் மேற்கோள்கள் உங்களுக்காக...
- காயப்படுத்திய உறவுகளை கடந்து போகும் சூழல் வந்தால் சிரித்துக்கொண்டே கடந்து செல்லுங்கள்.. கன்னத்தில் அறைவதை விட அதிகம் வலிக்கட்டும்.
- இந்த உலகிலேயே அதிகூடிய விஷம் பொய்யான உறவுகள்.
- சின்ன சின்ன மாற்றங்கள் நம் வாழ்க்கையை திசையறியாமல் திருப்பி போட்டு விடுகிறது.. அதிலும் பிடித்த உறவுகளின் மாற்றம் நம்மை மிகப்பெரிய ஏமாற்றத்தில் தள்ளுகிறது.!
- உறவுகளை தேடுவதை அடியோடு நிறுத்தி விட்டேன்.. உள்ளம் சொல்கிறது சோகங்கள் போதுமென்று.!
- மரணத்தை விட கொடூரமானது.. நாம் நேசிப்பவர் நம்மை வெறுப்பதும் மறப்பதும்..!
- உணர்வுகளற்ற உறவுகளிடம் உறவு கொண்டாடுவதை விட உதறி செல்வது சிறப்பு.
- தேவையில்லாத ஒன்றுக்கும் தேவையில்லாதவர்களுக்கும் முக்கியத்துவம் எப்போது கொடுகின்றமோ.. அப்போதே வலியும் வேதனைகளுக்கும் நாமே வழியை ஏற்படுத்திக் கொள்கிறோம்.!
- உண்மையை சொன்னால் கசப்பாக தான் இருக்கும் என்று சொல்லாமல் மறைப்பதால் நாம் பொய்யானவர்களாக மாறிவிடுகிறோம்.
- வாழ்வின் முன்னேறி உயரச் செல்லுங்கள்.. தேவையென்றால் மட்டுமே கீழிறங்குங்கள்.. சிலருக்கு தேவைப்படும்போது நாம் தேடப்படுவோம் அதுவரை உயரவே இருப்போம்.
- பொய்யான உறவுகளிடம் உண்மையான அன்பை கொடுத்து ஏமாந்தவர்கள் உண்மையான அன்பு கிடைத்தால் கூட அதை ஏற்றுக் கொள்வதற்கு தயங்குவார்கள்.. ஏனென்றால் அவர்கள் கடந்து வந்த பாதையில் அனுபவித்த வலிகள் ஏராளம்.!
- தேனைப் போன்று இனிமையாக பேசி..தேளைப் போன்று கொட்டிவிட்டு செல்பவர்கள் அதிகம்..!
- ஏங்கும் போது கிடைக்காத உறவு அதன் ஏக்கம் முடிந்த பின் கிடைத்து எந்த பயனுமில்லை..!
- கோபத்திலும் உங்களை சபிக்காத உறவு கிடைத்தால் அவர்களை விட்டு விடாதீர்கள் நீங்கள் சேர்த்து வைக்காத சொத்து அவர்கள்..!
- சண்டையிடும் போது அமைதியாய் இருப்பவர்கள் தவறு செய்தவர்கள் அல்ல..வார்த்தைகளை விட்டால்
- உறவு பிரியும் என்று உணந்தவர்கள்..!
- உலகில் உறவு என்பது புத்தகம். தவறு என்பது ஒரு பக்கம்.ஒரு பக்கத்திற்காக ஒரு புத்தகத்தை
- இழந்து விடாதீர்கள்..!
- சுய நலத்திற்காக உன்னோடு சிரித்து பழகும் உறவுகளை விட ஏதோ ஒரு மூலையில் உனக்காக
- கண்ணீர் சிந்தும் உறவை நேசி..!
- அவசியம் இருந்தால் மட்டும் பேசும் உறவுகளுக்கு மத்தியில் அன்புக்காக பேசும் "சிலர்" கிடைத்தது நான் பெற்ற வரம்..!
- உண்மையான உறவு என்பது ஓர் உயிரில் இரண்டு உடல்களை போன்றது..!
- ஒவ்வொரு உறவும் நம் வாழ்வின் உதவக்கூடிய உறவுதான். வாழ்வில் உறவு என்பது இருக்க வேண்டும்..!
- உணர்வுகளற்ற உறவுகளிடம் உறவு கொண்டாடுவதை விட உதறி செல்வது சிறப்பு..!
- உறவுகளை தேடுவதை அடியோடு நிறுத்தி விட்டேன். உள்ளம் சொல்கிறது சோகங்கள் போதுமென்று..!
- மிகவும் நம்பிக்கை வைத்த இடத்தில் தான் மிகவும் மோசமாக அவமானப்பட்டு நிராகரிக்கப்பட்டிருப்போம்..!
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu