நரைமுடியை பிடுங்கலாமா..? பிடுங்கினால் நிறைய நரை வருமா..? நிபுணர்கள் விளக்கம்..!

நரைமுடியை பிடுங்கலாமா..? பிடுங்கினால் நிறைய நரை வருமா..? நிபுணர்கள் விளக்கம்..!
X

plucking gray hairs-நரை முடி பார்க்கும் பெண். (கோப்பு படம்)

Gray Hair Treatment -நம்ம ஊரிலேயே நரைமுடியை பிடுங்கினால் நிறைய நரை முளைக்கும் என்பார்கள். அது உண்மையா..? நிபுணர்கள் என்ன சொல்றாங்கன்னு படீங்க.

Gray Hair Treatment -பொதுவாகவே எல்லோரும் இளமையாக தோற்றமளிக்கவே விரும்புவார்கள். குறிப்பாக பெண்கள் இளமையாக தோற்றமளிக்க ரொம்பவும் மெனக்கெடுவார்கள். முதலில் முடி தான் நரைக்கும். அதனால் சிலர் நரைமுடியை பிடுங்கிவிடுவார்கள். அவ்வாறு பிடுங்கினால் அதன் வேர் கிளைவிட்டு நிறைய நரை முளைக்கும் என்று பலர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அனால் அது உண்மை இல்லை என்று அறிவியல்பூர்வமாக நிபுணர்கள் கூறுகின்றனர்.


நரை என்பது வயதாவதற்கான சிக்னல். உடலியலில் ஏற்படும் மாற்றம். அந்த நரை முடியை பிடுங்குவதால் நிறைய நரை தோன்றுவதில்லை. இருப்பினும் முடியை பிடுங்கக் கூடாது. புதிய எதிரியை ஒழிக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் பலர் கண்ணாடி முன் சில நரை முடிகளை பிடுங்குகின்றனர். ஒரு நரை முடியை பிடுங்கினால் இன்னும் ஏழு முளைக்கும் என்று சிலர் நினைக்கிறார்கள்.

உண்மைதான் என்றாலும் அது நரைமுடியை பிடுங்கியதால் வருவது அல்ல. அறிவியல் ரீதியாக அது சரியான கருத்து அல்ல. அப்படியென்றால் என்ன நடக்கிறது என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. நடப்பது என்னதெரியுமா..? நரைத்த முடியை கவனித்தவுடன், நரைத்த முடியின்மீதே அதிக கவனம் செலுத்துகிறார்கள். அதையே அதிகமாக கவனிக்கிறார்கள்.


உளவியலில், மனிதர்கள் பாதிக்கப்படக்கூடிய பல அறிவாற்றல் சார்புகளில் நரை விழுவதும் (முதுமை) ஒன்றாகும். அதனால், நரைமுடி குறித்த தகவல்களை சேகரிக்கத் தொடங்குகின்றனர். தேடிப் படிக்கிறார்கள். பிறரிடம் நரை குறித்த கருத்துக்களை கேட்கிறார்கள்.நரை குறித்து உறுதிப்படுத்தும் தகவலை தேடுவதிலும், விளக்கங்களை பெறுவதிலும் மனம் ரொம்பவும் முனைகிறது.

plucking gray hairs-இதற்கிடையில் இதுகுறித்து, தோல் மருத்துவர் மிகுவல் மார்டி என்ற அறிவியல் நிபுணர் ஒரு அறிவியல் விளக்கத்தை அளித்தார், "நரை முடியை வெளியே இழுத்து பிடுங்குவதால் அது அதிகமாக முளைக்காது. ஏனெனில் ஒவ்வொரு முடியும் ஒரு தனி செல் நுண்ணறையிலிருந்து பிறக்கிறது. எனவே அவற்றை பிடுங்குவதன் மூலம் அது அந்த இடத்தில் புதிதாக உருவாகாது. ஒருவேளை நுண்ணறை சிதைவதால் அதில் இருந்து ஒழுங்கற்ற சிறிய கற்றைப்போல முடி தோன்றலாம். ஆனால் அது ஆரோக்கியமானதாக இருக்காது. நுண்ணறை சிதையாமல் நரை பிடுங்கப்பட்டால் அது இறந்த செல்லுக்கு சமமாகிவிடும்.எனவே அங்கு புதிய முடி தோன்றாது என்று அவர் உறுதியளித்தார்.


அதேபோல ஸ்பானிய தோல் மருத்துவர் கிறிஸ்டினா பாரடெலோ, "நரைத்த முடியை பிடுங்குவதன் மூலம், இன்னும் அதிகமாக நரை முடி வரும் என்பது உண்மையல்ல. முடியை பிடுங்கும்போது முடியின் செல் நுண்ணறை மெலனின் உற்பத்தியை நிறுத்திவிடுகிறது. அவ்வாறு மெலனின் உற்பத்தி நிறுத்தப்பட்டால் முடியின் தண்டுக்கு மெலனின் மாற்றும் திறன் இல்லாமல் போய்விடுகிறது. அதனால் புதிதாக அவ்விடத்தில் முடி வளரும் சாத்தியக்கூறுகள் இல்லை. நரை முடியை பிடுங்கியபின் வளர்சிதை மாற்றங்களால் நுண்ணறை சிதையாமல் இருந்தால் மீண்டும் அந்த இடத்தில் அப்படியே வெள்ளை முடிதான் தோன்றும்.

நரைத்த முடியைப் பறிப்பதால் அது அதிகமாகத் தோன்றாது என்றாலும், நுண்ணறையை ஓரளவு அல்லது முழுவதுமாகச் சேதப்படுத்தலாம். இதனால் அந்த நுண்ணறையில் இருந்து மெல்லிய முடி உருவாகும். அவ்வாறு தோன்றும் முடி, தரமற்று உடைந்து விழுந்து முளைக்கும் கெட்டியான நகம் போல மோசமான தரம் கொண்ட முடியாக இருக்கும். அல்லது அவ்விடத்தில் புதிய முடி தோன்றாமலும் போகலாம். மேலும் நரை முடியை பிடுங்குவதால் நல்ல அடர்த்தியான முடியின் நிலை மாறலாம். அதனால்தான் முடியை பிடுங்கக்கூடாது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அதனால் நரை முடியை பிடுங்காமல் விடுவதே நல்லது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!