Pattai in Tamil-ஆண்மை பெருக இலவங்கப்பட்டை..!
pattai in tamil-இலவங்கப்பட்டை பயன்பாடு (கோப்பு படம்)
Pattai in Tamil
இலவங்கப்பட்டையில் ஏராளமான மருத்துவக் குணங்கள் உள்ளது. பாட்டி வைத்தியமாக, பட்டையை இருமலுக்கு தற்காலிக மருந்தாகத் தருகின்றனர். இதனுடைய மணம் மற்றும் தசையை இறுக்கும் குணம், கபத்தை வெளியேற்றும் தன்மை கொண்டது. மேலும் தலைசுற்றல் மற்றும் வாந்தியைத் தடுக்கும் மருந்துப் பொருளாக ஆதிகாலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலவங்கம் உணவின் சுவைக்காக மட்டுமில்லாமல் மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.
Pattai in Tamil
இலவங்கப்பட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
இலவங்கப்பட்டையில் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, மெக்னீசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரதம், கால்சியம், மாங்கனீசு, தாமிரம், துத்தநாகம், வைட்டமின்கள், நியாசின், தியாமின், லைகோபீன் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இச்சத்துக்கள் யாவும் பல உடல் நல பிரச்னைகளுக்கு தீர்வாக அமைகின்றன.
வயிற்றுப் பொருமல் மற்றும் வயிற்று வலிக்கும் கூட இலவங்கப்பட்டையைத் தருகின்றனர். மூட்டுவலியின் மருந்தாகக் கூட பட்டை பயன்படுத்தப்படுகின்றது. இந்தப் பட்டையிலிருந்து எடுக்கப்படும் இலவங்க தைலமும் இனிப்புப் பொருள், மது பானம், மருந்து, சோப், பற்களுக்கான பொருள்களில் கலக்கப்படுகிறது. இலவங்கத்தைலம் அலலது எண்ணெய், கிரம்புத் தைலத்தின் நிறத்தை ஒத்திருக்கும். இலவங்க மரத்தின் விதையிலிருந்தும் எண்ணெய் எடுக்கின்றனர்.
Pattai in Tamil
இலவங்கத்தில் உள்ள பினால் என்ற வேதிப் பொருள் வாய்துர்நாற்றம் நீக்கும் பொருளாகவும் பயன்படுகிறது. இது வெப்பம் தரும் நறுமணப் பொருளாக உள்ளதால் பட்டையை சளி மற்றும் ப்ளூ காய்ச்சலின்போது மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.
இலவங்கப் பட்டை, வயிறு சம்பந்தமான வயிற்றுப் பொருமல், அஜீரணம், நெஞ்செரிச்சல், வயிற்று வலி என அனைத்துவித நோய்களுக்கும் நிவாரணியாக கருதப்படுகிறது. பூஞ்சைக் காளானால் வரும் நோய்களையும் குணப்படுத்துகிறது என்று ஆராய்ச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரத்த ஓட்டத்தை செம்மைப்படுத்தும். இலவங்கம் கீல்வாதம், மூட்டுவலி, தசைவலியை சரி செய்யும். அதுமட்டுமல்ல மூளையின் நினைவுப் பெட்டகத்தை நன்கு பணி புரிய வைக்குமாம். உடல் கொழுப்பைக் குறைக்குமாம்.
Pattai in Tamil
இலவங்கப் பட்டை, மனவழுத்தம், மன இறுக்கம், பதட்டம் போன்றவற்றை அமைதிப்படுத்தும். பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளை கட்டுப்படுத்தும்; மாதவிடாயை சீராக்கும். இரத்த அழுத்தத்தை குறைக்கும். இலவங்கத்தைச் சுவைத்தால் பல்வலி குணமாகும்; வாயை புத்துணர்வுடன் வைத்திருக்கும். இரத்தம் உறைதலைத் தடுக்கும் மருந்து பட்டைதான்.
இரண்டாம் வகை சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரையை சீராக வைத்திருக்க இலவங்கப் பட்டை உதவுகிறது. மேலும் இது இன்சுலினுக்கு துணையாகவும், தூண்டுதலாகவும் இருந்து செயல் புரிகிறது. இலவங்கத்தில் ஒரு நல்ல உடல் நலத்திற்கு தேவையான அளவு, மாங்கனீஸ், இரும்பு, கால்சியம் மற்றும் முக்கியமான தாது உப்புக்கள் உள்ளன.
ஒருவர் தினம் 1/2 தேக்கரண்டி பட்டை பொடி சாப்பிட்டால், அது கொழுப்பைக் கட்டுப் படுத்தும். அமெரிக்கா, மேரிலாந்தில் சமீபத்தில்(2005 ல்) நடத்திய ஆராய்ச்சியில், பட்டை, இரத்த புற்றுநோய், குடல் புற்று மற்றும் தசை புற்றுநோயைக் குறைக்கிறது எனவும், இரத்த கொலஸ்டிரால், சர்க்கரை நோயினைக் குறைப்பதாகவும் கண்டறிந்துள்ளனர். தினம் காலை அரை தேக்கரண்டி பட்டை பொடி , 1தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் , அது நாள்பட்ட மூட்டு வலியை நன்கு குணப்படுத்துமாம்.
Pattai in Tamil
உடல் எடை குறைய
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வெந்நீரில் இலவங்கப்பட்டை பொடி கலந்து குடிக்கலாம். இது வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் எடை இழப்பை எளிதாக்குகிறது. வெதுவெதுப்பாக இருக்கக்கூடிய தண்ணீரில் ஒரு டீஸ்பூன் பட்டை பொடி சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது உங்களை நிறைவாக வைத்திருக்கும். இதனால் அடிக்கடி ஏற்படும் பசி மற்றும் அடிக்கடி சாப்பிடும் பழக்கத்தை கட்டுப்படுத்தலாம்.
Pattai in Tamil
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்
இலவங்கப்பட்டையில் பாலிஃபீனால்களுடன் ஆன்டி-வைரல், ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. இவை அனைத்தும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகின்றன. வெந்நீரில் இலவங்கப்பட்டை பொடி கலந்து குடிப்பது சளி மற்றும் பல நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
சர்க்கரை நோய்க்கு நல்லது
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க இலவங்கப்பட்டை உதவும். இது இன்சுலின் அளவை சீராக வைத்துக்கொள்ள உதவும். ஆகையால் சர்க்கரை நோயாளிகள் இதை சரியான அளவுகளில் எடுத்துக்கொண்டு பயனடையலாம்.
Pattai in Tamil
PCOS உள்ள பெண்களுக்கு நன்மை தரும்
இன்றைய காலகட்டத்தில் பல பெண்களும் PCOS பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். உடம்பில் ஏற்படும் ஹார்மோன் மாறுதல்களால் கருமுட்டையின் வளர்ச்சி, மாதவிடாய் சுழற்சி, கருவுறுதல் போன்ற விஷயங்கள் பாதிக்கப்படுகின்றன. இது போன்ற நிலைகளை சமாளிக்க வெந்நீரில் இலவங்கப்பட்டை பொடி மற்றும் சிறிதளவு தேன் கலந்து குடிக்கலாம். இந்த நீர் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வயிற்று வலியையும் குறைக்கிறது.
பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) என்பது பெண்களின். ஹார்மோன்களில் ஏற்படும் சமநிலையின்மையாகும்.
வயிறு சார்ந்த பிரச்னைகள்
வயிறு சார்ந்த பிரச்னைகளை போக்குவதில் இலவங்கப்பட்டை நீர் பயன் தருவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது மலச்சிக்கல், அஜீரணம் போன்ற வயிறு சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும். மேலும் செரிமான மண்டலத்தின் செயல்முறையும் மேம்படும். இந்த நீரை குடிப்பதன் மூலம் அசிடிட்டி, வாய்வு போன்ற தொந்தரவுகளையும் நீக்கலாம்.
Pattai in Tamil
ஆண்மை பெருக
ஆண்களுக்கு இது மிகவும் நல்லதாகும். இல்லற வாழ்க்கையில் விரைப்புத் தண்மை இல்லாமல் சிரமப்படும் ஆண்களுக்கு இலவங்கப்பட்டை பெரிதும் உதவுகிறது. இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன்னதாக இலவங்கப்படைத் தூளை பாலில் கலந்து அல்லது தண்ணீரில் பொடியைக் கலந்து கொதிக்கவைத்து அருந்தலாம். இதனால் ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத் தன்மை நீங்கும்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu