onion usage in tamil-வெங்காயத்தை உரிச்சா கண்ணீர் வருதே..? ஏன் தெரியுமா? அது கெடக்கு வெங்காயம்..!

onion usage in tamil-வெங்காயத்தை உரிச்சா கண்ணீர் வருதே..? ஏன் தெரியுமா? அது கெடக்கு வெங்காயம்..!
X

onion usage in tamil-வெங்காயம் ( கோப்பு படம்)

onion usage in tamil-ரோஸ் கலரில் இருக்கும் ஒரிஜினல் நாட்டு வெங்காயத்தை காற்றோட்டமுள்ள இடத்தில் போட்டு வைத்தால் ஆறு மாதங்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

onion usage in tamil-வெங்காயம் இல்லாத சாம்பார் தமிழ்நாட்டில் கிடைக்குமா? பருப்பு இல்லாத கல்யாணமா..? என்று பழைய சொலவடை ஒன்றுள்ளது. அதேபோலவே வெங்காயம் இல்லாத சாம்பாரா என்றும் ஒரு சொலவடை உள்ளது. அந்த அளவுக்கு தமிழ்நாட்டு சமையலில் வெங்காயம் இடம் பிடிச்சிருக்கு.

வெங்காயம் என்பது உடலின் வெப்பத்தை(வெப்பம்+காயம்= வெங்காயம்) (காயம் என்பது உடல்) குறைக்கும் உணவுப்பொருள் என்பது பொருள். அதாவது உடலின் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியாக்குவது வெங்காயம்.

விலை மலிவாகக் கிடைக்கும் உணவுப் பொருள்களில் ஒன்று வெங்காயம்.( அடடே அடிக்க வந்துடாதீங்க. இப்போ கொஞ்சம் விலை அதிகம். கிலோ ரூ.80 வரை விறபனையாகிறது. ஆனால் வெங்காய சாகுபடி செய்த விவசாயிகளுக்கு நல்ல வருமானம்)


வெங்காயம் ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யலாம்.எல்லா வீடுகளிலும் கட்டாயம் இருக்கும் ஒரு உணவுப்பொருள். வெங்காயம் எப்படியெல்லாம் பயன்படுது? அதன் ஆரோக்ய நன்மைகள் என்ன எல்லாம் பார்க்கலாம் வாங்க.

  • வெங்காயம் இதயத்திற்குப்பலம் தரும்.
  • நரம்புகளுக்கு அதிக வலிமை ஊட்டும்.
  • எலும்புகளுக்கு அதிக சக்தி தரும் ஆற்றல் கொண்டது.
  • மூட்டுகளைத் திடப்படுத்துவதில் பங்கு கொண்டது.
  • இரத்தத்தைச் சுத்தம் செய்யும்.
  • இரத்த விருத்தியை உண்டு பண்ணும்.
  • வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் குணமாக்கும்.
  • சீரண சக்தியை அதிகப்படுத்தும்.
  • குடல் புண்ணை ஆற்றும்.

onion usage in tamil

  • வலிப்பு நோய்களைக் குணமாக்கும் வல்லமை கொண்டது.
  • இதய நோய்களை குணமாக்கும்.
  • தொண்டைக் கரகரப்பை நீக்கும்
  • தாது பலத்தை அதிகப்படுத்தும்.
  • உடலில் உயிரணுக்களை உற்பத்தி செய்யும்.
  • ஆண்மையை அதிகரிக்கச் செய்யும்.
  • மாதவிடாய் பிரச்னைகளை குணமாக்கும்.
  • தொற்று நோய்க் கிருமிகளை ஒழிக்கும்.
  • உடலிலுள்ள விஷங்களை முறிக்கும் சக்தி கொண்டது.
  • நீரடைப்பை நீக்கும்.
  • உணவுக்குச் சுவையும், உடலுக்கு ஆரோக்கியமும் தரும்.
  • உடல் குளிர்ச்சியை ஏற்படுத்தும்.

onion usage in tamil


வெங்காயத்தால் இவ்வளவு நன்மைகளையும் பெறுவதற்கு வெங்காயத்தைப் பச்சையாக உண்ண வேண்டும்.

  • வேகவைத்த வெங்காயத்தில் உயிர்ச்சத்து அழிந்துவிடும். அதனால் வேகவைத்த வெங்காயம் உடலுக்குப் பயன்தராது. தண்ணீரில் வேகவைத்தாலும் எண்ணெயில் வேகவைத்தாலும் வெங்காயத்திலுள்ள உயிர்ச்சத்துக்கள் அழிந்து விடுகிறது.
  • தமிழ்நாட்டில் பழைய சாதத்துக்கும், கஞ்சிக்கும் வெங்காயத்தைப் பச்சையாகக் கடித்து சாப்பிட்டார்கள்.
  • வெங்காயத்தின் மணம் நம் வாயில் அதிக நேரம் இருப்பதால் பல நோய்களைக் குணமாக்குகிறது.
  • வெங்காயத்தில் "அலைல் சல்பைடு" என்ற ஒரு இரசாயனப் பொருள் இருப்பதால் பல்லில் உள்ள கிருமிகளையும் உடலிலுள்ள அனைத்துக் கிருமிகளையும் அழிக்கிறது.
  • "குழந்தை இல்லாத தம்பதிகள் மூன்று வேளையும் உணவுடன் பச்சை வெங்காயத்தைச் சாப்பிட்டால் அவர்களுக்கு உயிர் அணுக்களை அதிகம் உற்பத்தி செய்யும். அதனால் குழந்தை பிறக்கும் வாய்ப்பு ஏற்படும்.

வெங்காயத்தில் காரமான வாசனை வருவதற்கு அதில் இருக்கும் "கந்தகச்சத்து. அது ஒரு அமிலத் தன்மை கொண்டது. நாம் வெங்காயம் வெட்டும்போது அதிலிருந்து கந்தக அமிலம் காற்றில் கலந்து வந்து நம் கண்களில் படுவதால் நாம் கண்ணீர் சிந்துகிறோம். இதனால் நம் கண்கள் சுத்தமாகின்றன.

onion usage in tamil

வெங்காயத்தின் பிற சிறப்புகள்

'தீராத என் வயிற்றுக் கோளாறுகளை பச்சை வெங்காயம் தான் குணமாக்கியது.' என்று மாவீரன் நெப்போலியன் கூறியுள்ளது வெங்காயத்துக்கான வரலாற்றுச் சிறப்பு.

உலக அற்புதங்களில் ஒன்றான பிரமிட் கோபுரங்களைக் கட்டிய தொழிலாளர்களுக்கு உணவிற்காக வெங்காயத்திற்கு மட்டும் ஆன செலவு 9டன் பொன் என்று வரலாற்று ஏடுகள் சொல்கின்றன.

எகிப்தியர்கள் வெங்காயத்தையும், வெள்ளைப் பூண்டையும் தெய்வமாக வணங்குகிறார்கள்.

Tags

Next Story
பூனைகாலி அப்படினா என்ன..? உடலுக்கு இவ்வளவு நல்லதா..?