நிறைவேறாத காதலே ஆயுள்முழுதும் வாழ்கிறது..இழந்த உள்ளங்களுக்குள்..!

One Side Love Quotes Tamil
X

One Side Love Quotes Tamil

One Side Love Quotes Tamil-காதலின் வலி என்பது குருதி காணாத புண்ணாக உள்ளுக்குள் நோகும். வெப்பமின்றி நெஞ்சுக்குள் வேகும்.

One Side Love Quotes Tamil

காதல், இரண்டு உள்ளங்களின் சங்கமம் என்றாலும், அது வெறும் உணர்வுகளின் பரிமாற்றம் அல்ல. அலைக்கற்றையாய் காதல் உணர்வுகளை விழிகளின் வழியே பரிமாறிக்கொள்ளும் இருவிழிக் கவிதைகள். ஊமையாக உள்ளுக்குள் ஓரிதயம் அழுகிறதென்றால் ஒன்று பிரிந்துவிட்டது என்பதுதானே பொருள். அது ஒருதலையாக அழும்குரல் எதிரொலிக்கும் ஓசை கேட்க வாருங்கள்..

  • நீ கிடைக்கவில்லை என்பதற்காக நான் தற்கொலை செய்துகொள்ள விரும்பவில்லை..ஏனெனில் நான் செத்தால் எனக்குள் இருக்கும் நீயும் இறந்துவிடுவாயே என்று அஞ்சுகிறேனடி..
  • உன்மீது நான் வைத்தது உண்மையான காதல். அந்த காதலை நன் கொலை செய்ய விரும்பவில்லை. அது என் மனதோடு வாழட்டும்..
  • நீ இல்லை என்பதறிந்து வேறொருவளை வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்..நீ இருக்கும் என் நெஜுக்குள் வேறொருவள் குடிபுகுவதா..?
  • காதலித்தேன் என்பதற்கு காலங்கள் ஒரு பொருட்டல்ல..ஒரு நொடியே போதும்..உன் நினைவுகளுடன் நான்..
  • நான்,நீ என்பது நாம் ஆகாவிட்டாலும் நான்-நீ என்ற உறவு எனக்குள் முளைத்துவிட்டது. அது துளிராகவே இருந்துவிட்டுப்போகட்டும்...அதை அழியவிடமாட்டேன்..
  • பிரிந்த காதலுக்குத்தான் ஆயுள் அதிகம்..வாழ்நாள் முழுதும் நினைவில் வாழும்.
  • கிடைக்குமா? கிடைக்காதா என்பதைத் தாண்டி, பிடித்ததைத் தேடி ஓடுவதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது, ஒரு தலைக் காதலில்..

  • கரையான் தின்ற புத்தகமாய் ஒருதலைக் காதலோடு நெடுங்காலமாய் காத்திருக்கும் இதயங்களோ பல..
  • அந்த காரிகையை நினைத்து வண்ணத் தூரிகையால் தீட்டிக் கொண்டிருக்கிறான், இவனின் ஆசைகளை... அது கானலே என தெரிந்தும், காதல் கொள்கிறேன் மீண்டும் மீண்டும் அவள் மீது...
  • இன்றுவரை உந்தன் முகவரி தெரியாமல் காற்றோடு முட்டி மோதி காலங்களை கடந்து வருகிறேன்..எங்கோ நீ இருக்கிறாய் என்ற நம்பிக்கையில்..
  • கனவில், உன்மேல் காதல் வருகிறது..நிஜத்தில், உன் மேல் நேசம் வருகிறது..உன்னை நெருங்க முயன்றால், தயக்கம் வருகிறது... உன்னை பிரிவேனோ என்று, பயம் வருகிறது...
  • உனக்காக கடிதங்கள், எழுதுகிறேன். உனக்காக கவிதைகளும் எழுதுகிறேன்... ஆனால், அனுப்ப வேண்டிய முகவரி தான் இன்னும் தெரியாமலே இருக்கிறேன்..
  • கொஞ்சிப் பேசிடவே, நெஞ்சமும் எண்ணுதே..வஞ்சியைக் கண்டதும் வார்த்தைகள் தயங்குவதேனோ..?
  • பாசத்தின் பசியறிந்தவன் நான்..அன்புக்கு பல நாள் ஏங்கியவன் நான்..அதனால் என் காதல் எப்போது
  • பொய்த்துப்போகாது.. என்ற என்னை ஏன் தூக்கி எறிந்தாய்..? உண்மை அன்பு கிடைக்காம நீ துன்புறுவாயே என்று நான் வாடுகிறேனடி..
  • சொல்லி வாழும் காதலை விட, வெளியே சொல்லாமல் மனதிற்குள்ளே சாகும் காதல் நிறைய கண்டுள்ளேன்..ஆனால் என் உண்மைக்காதலை நீயேகருவிலேயே கொன்றுவிட்டாயே..ஏனடி..?
  • தினமும் நினைவில் திருப்பமாக வரும் ஓர் முகம்.. திரும்பத் திரும்ப விரும்பினாலும் தித்திக்கும் ஓர் முகம்.. திக்குத் தெரியாமல் தொலைந்தாலும் திடீரென நினைவில் உதிக்கும் ஓர் முகம்..அது உன் ஒரே முகம்தானடி..
  • கனவிலும் உந்தன் முகம்தான்..உன்னை எண்ணாத நினைவுகள் பாவம்செய்தன..என்பதால் உன்னை எண்ணாத பொழுதில்லை..ஏனடி என்னை உயிரோடு கொன்றாய்..?

  • அன்பை ஆயுதமாக்கி, காதல் தோட்டாவால் என்னை கொலைசெய்த அன்பரக்கியே..எப்படி என்னை மறந்து பறந்தாய்..
  • தன் ஒளியில் விண்மீன் வாழ்வதை அறியாமல் நிலவு வாழ்கிறது..அதை சொல்ல நினைத்து முடியாமல் தவிக்கும் நிலவுக்கும் விண்மீனுக்கும் இடையில் உள்ள பயணம் தான் ஒரு தலைக் காதலோ?
  • எனது காதலை உன்னிடம் வெளிப்படுத்த முடியாமல் தவிக்கும் ஒவ்வொரு நொடியும் நரக வேதனை தான்...
  • என் தனிமையிலும் உன் நினைவுகளே எனக்குத் துணையாக இருக்கிறது..என் இதயமும் உன்னை நினைத்தபடியே வாழ்கிறது..
  • உன் அழகால் என் இதயமும் காதலில் விழுந்து மயங்கியதே உன் மௌனத்தால் என் மனமும் காதலை சொல்ல தயங்கியதே..
  • உன்னோடு சேர்ந்து வாழ முடியாதா என்ற ஏக்கத்திலே காலமெல்லாம் உனக்காகவே காத்திருப்பேன் உன்னையே காதலிப்பேன்..
  • உன்னை சந்திக்கும் போதெல்லாம் என் இதயம் உன்னுடன் சென்று விடுகிறது..
  • உன் அழகிய கண்களைக் கண்டவுடனே என் உதடுகளும் மௌனமாகி விட்டது. என் உள்ளமும் உறைந்து போனது..
  • உன்னை காணாமல் என் கண்ணீர் துளிகளும் வற்றாத அருவியாய் மாற ஆரம்பித்தது..
  • உன் அன்பால் என்னை கொஞ்சி செல்கிறாய். உன் அன்பிற்காக என்றும் என்னை கெஞ்ச விடுகிறாய்..
  • வார்த்தைகளால் பேசாமல் உன் மௌன விழியால் பேசி என்னை வீழ்த்துகிறாய். என் மனதில் கொஞ்ச கொஞ்சமாய் இடம் பிடிக்கிறாய்..
  • உன்னக்காக காத்திருப்பதில் தான் உணர்ந்தேன். உன்னால் தான் நான் இன்னும் உயிர் வாழ்கிறேன் என்று..
  • ஒரு முறை தான் உன்னை பார்த்தேன். நீ தான் என் உலகம் என்று என் இதயம் முடிவு செய்தது..
  • ஒரு முறை தான் உன்னை பார்த்தேன். நீ தான் என் உலகம் என்று என் இதயம் முடிவு செய்தது..
  • இரவில் வரும் நிலவு போல என் இதயத்தில் உன் முகமே உலா வருகிறது..

  • நீ இல்லாத இந்த வாழ்க்கை எனக்கு வேண்டாம். உன்னோடு சேராத என் உயிரும் இனி வாழ வேண்டாம்.
  • எத்தனை கவிதைகள் எழுதினாலும் கிடைக்காத மகிழ்ச்சி எனக்கு இப்போது உன்னை பற்றி ஒரு வரி எழுதினாலே என் மனமும் மகிழ்ச்சியில் நிரம்புகிறது..
  • கதிரவன் ஒளியால் பூக்கள் மலர்ந்தது..உன் சிரிப்பின் ஒலியால் என் இதயமும் மகிழ்ந்தது..
  • என் கற்பனைகளும் கனவுகளும் கூட சொர்க்கமானது. அங்கும் நீயே வந்து என் அருகில் இருந்தபோது..
  • எனக்காக நீயிருப்பாயா.. என்று தெரியவில்லை. உனக்காக என்றும் நான் இருப்பேன்..
  • உன் அன்பை எனக்கு கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. நான் தருகின்ற என் அளவற்ற அன்பை மட்டும் ஏற்று கொள்..
  • வாழ்க்கை அழகானது என்றாலும் என் வாழ்க்கை இருளில் தான் சூழ்ந்திருந்தது உன்னை காணும் வரை..
  • என்னுடைய இன்பத்திலும் துன்பத்திலும், என் கண்களுக்கும் என் இதயத்திற்கும் உன் முகத்தைத் தவிர வேறு யாரையும் தெரியவில்லை..


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story