Nimmathi quotes in tamil-நிம்மதி வேணுமா? அப்ப ஆசையை விடுங்க..!

Nimmathi quotes in tamil-நிம்மதி வேணுமா? அப்ப ஆசையை விடுங்க..!
X

Nimmathi quotes in tamil-நிம்மதிக்கான மேற்கோள்கள் (கோப்பு படம்)

எதிர்பார்ப்புகள் நிறைவேறாதபோது நிம்மதி இழக்கிறோம். நிம்மதி இழப்பு கவலைகளாக மாறி உடல் ஆரோக்யத்தை கெடுத்துவிடும்.

Nimmathi quotes in tamil

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் நிம்மதி தேவை. சில சமயங்களில் பணம் கூட வேண்டாம். என்னை விட்டு விடுங்கள். நிம்மதியாக இருந்து விட்டு போய் விடுகிறேன் என்று கூற நேரிடும். அப்படி என்றால் செல்வத்தை விட மேலானது நிம்மதி.

பணமும் பொருளும் என்று அதன் பின்னால் ஓடுவதை நிறுத்தி விட்டு நிம்மதியை உருவாக்கிக் கொள்ளுங்கள். நிம்மதி இல்லை என்றால் செல்வம் இருந்து என்ன பயன்? ஒரு புறம் பக்தி பெருகினாலும் மறுபுறம் குற்றங்கள் குறைந்தபாடில்லை.

இதற்கு முக்கிய காரணம் அவரவர் மனதைக் கட்டுபடுத்தத் தெரியாமல் இருப்பதே. இறையருள் சூழ வேண்டுமென்றால் மனதை அடக்கி ஒழுக்க நெறியில் நம்மை நாம் ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும். எவற்றையெல்லாம் உள்ளத்திலிருந்து தூக்கி எறிந்தால் நிம்மதி கிடைக்கும் என்பதை பற்றி இப்பதிவில் நாம் காணலாம்.


பிறரிடம் பிழை காணுதல், பிறருக்கு அறிவுரைக் கூறுவது, பிறரின் வாழ்வினை ஒப்பிட்டுப்பார்ப்பது, அதிக ஆசை கொள்வது, அதிக எதிர்பார்ப்பு இப்படி பெரும்பாலானோர் தன்னுடைய குறையை எண்ணிப் பார்ப்பதில்லை.

எது நிம்மதியாகும் என்பதை மறந்துவிட்டு தேடித்தேடி கவலைகளை வளர்த்துக்கொள்வதே மனித இயல்பு. நமது பிள்ளை அப்படி படிக்கவேண்டும், இப்படி படிக்கவேண்டும் என்ற பெரிய எதிர்பார்ப்புடன் பெரிய பள்ளிக்கூடத்தில் அதிக கட்டணம் செலுத்தி படிக்கவைப்பது சரியானதா? அந்த பள்ளியில் விண்ணப்பம் வாங்குவதற்கு இரவு பகலாக கால்கடுக்க நின்று விண்ணப்பம் வாங்குபவரின் மனநிலையை கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். அவர்கள் நிம்மதியற்றவர்கள்.

எங்கு படித்தாலும் படிக்கும் பிள்ளை தானே படிக்கும். படித்துக்கொடுப்பது பள்ளியும் அல்ல. படிப்பது கட்டிடங்களும் அல்ல. படிப்பது பிள்ளைகள். அவர்கள் எங்கு இருந்தாலும் படிப்பார்கள். எதிர்பார்ப்பு நிறைவேறாதபோது நிம்மதி தொலைந்துபோகும். அப்படி என்றால் ஆசைகளைத் துறந்தால் நிம்மதி தேடிவரும் என்பது சரிதானே?

Nimmathi quotes in tamil


இதோ உங்களுக்க்காக நிம்மதி இழந்த மேற்கோள்கள். நீங்களாவது நிம்மதியாக இருங்கள் .

நிரந்தரம் இல்லாத ஒன்றிற்காக நிம்மதி இல்லாமல் அலைவது தான் வாழ்க்கை.

வாழ்க்கையில் நிம்மதி தேவை என்றால்.. நிச்சயம் ஞாபகமறதி அவசியம்.

நிம்மதியை தேடுவதை நிறுத்திய பிறகு தான் தெரிந்தது எதையும் தேடி அலையாமல் சும்மா இருப்பதே நிம்மதி என்று.

அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்று வாழ ஆரம்பித்தால்.. நம் நிம்மதி அப்போதே நம்மை விட்டுச் சென்று விடும்

சந்தோசம்,நம்பிக்கை, நிம்மதி இவற்றைத் தொலைப்பது எளிது. மீண்டும் அவைகள் மீளக்கிடைப்பது மிகக் கடினம்.


Nimmathi quotes in tamil

இவர்கள் ஏன் இப்படி என்பதை விட. இவர்கள் இப்படித் தான் என்று நினைத்து விலகி விடுவது நிம்மதி.

எனக்கென யாருமில்லை என்று நிம்மதி இழக்கும் போது உனக்காக எப்போதும் உன்னோடு நான் இருப்பேன் என்று சொல்லும் ஒரு உறவு அமைதல் வரம்.

மகிழ்ச்சி கூட சிறு சிறு நிகழ்வுகளை அழகாய் உருவாக்கி விடுகிறது. ஆனால, “நிம்மதி” கிடைப்பதற்குத் தான் வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டியிருக்கிறது.

நன்றி மறந்தவர்களை எண்ணி நீ நிம்மதி இழக்காதே. உன் உதவியை மனிதர்கள் மறந்து போகலாம் தெய்வம் மறப்பதில்லை.

Nimmathi quotes in tamil

பணம் நிம்மதி தராது என்று எந்த ஏழையும் சொன்னதில்லை. நிம்மதி தராத அந்த பணத்தை இழக்க எந்த பணக்காரனும் தயாராக இல்லை.

கண்ணில் தூக்கம் இல்லை, வாழ்க்கையில் சந்தோஷம் இல்லை, மனதில் நிம்மதி இல்லை. காரணம் நீ என் பக்கத்தில் இல்லை.

தேவை என்றால் வரும் உறவுகளையும் தேவையில்லாமல் வரும் உணர்வுகளையும் ஒதுக்கி வைக்க கற்றுக் கொள்ளுங்கள் நிம்மதி நம்மை தேடி தானே வரும்.

மன நிம்மதிக்காகத்தான் உறவுகளை ஆண்டவன் படைத்தான். ஆனால், மனதில் நிம்மதி இல்லாமல் போவதற்கு காரணமே அந்த உறவுகள் தான்.


Nimmathi quotes in tamil

பிறர் மீதான வீண் எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டாலே போதும். எப்போதும் நிம்மதியாக இருக்கலாம்.

தேடினது கிடைக்காதானு ஆசை. ஆசை நிறைவேறாதனு எதிர்பார்ப்பு. எதிர்பார்ப்புத் தந்த ஏமாற்றம்,

ஏமாற்றம் தந்த வலி, வலியை சுமந்தபடி வாழுற மனசு. இதுல எங்க இருந்து நிம்மதி வரப் போகுது? ஆசையை ஒழி. நிம்மதி வரும்.

சிலவற்றை அதிகமாய் ஆராய்ந்தால் மன நிம்மதி நீங்கி விடும்.

Nimmathi quotes in tamil

மனதில் உள்ள கஷ்டத்தை வெளியே சொல்லி அழுதவர்களை விட, வெளியே சொல்லாமல் அழுத்தவர்கள் தான் அதிகம்.

நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும், மனைவி வந்த பின் நிம்மதியைத் தேடுவதுமே ஆண்களின் வாழ்க்கைத் தேடல்.

நிம்மதி என்ற நிழல் உன்னை தொடரும், நேர்மை என்ற வெளிச்சம் உன்னை வழிநாதத்தும்வரை.

வாழ்க்கையை வெறுப்பதால் ஒரு போதும் நிம்மதி உண்டாகாது. நிம்மதி தேடிச் செல்லும் நாம் எவ்வளவு செலவு செய்தாலும் கிடைக்காத ஒரு நிம்மதியான இடம் அம்மாவின் மடி மட்டும் தான்.


Nimmathi quotes in tamil

பசிக்கு உணவு, மானத்திற்கு உடை, மனதிற்கு நிம்மதி இதே நிலை நிலையானால் வாழ்வு சொர்க்கம்.

இவர்கள் ஏன் இப்படி என்பதைவிட, இவர்கள் இப்படிதான் என்று நினைத்து விலகி விடுவது நிம்மதி.

மன நிம்மதி வேண்டுமென்றால் சில நேரங்களில் குருடாகவும், சில நேரங்களில் செவிடாகவும் இருக்க வேண்டும்.

தனிமை வெறுமை என்று புலம்புவதை விட்டுத்தள்ளினாலே பாதி மன அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது.

Nimmathi quotes in tamil

அழுவதால் கண்கள் சுத்தமாகுமாம். கண் பார்வை தெளிவாகுமாம். மன அழுத்தம் குறையுமாம். நன்றி சொல்லுங்கள், உங்கள் மனதை காயப்படுத்தியவருக்கு.

உடல்சோர்வு ஒரு பலவீனமே அல்ல. மனச்சோர்வு தான் உண்மையில் பலவீனமாகும்.

பலரின் உறக்கமில்லா இரவுகளுக்கு சிலரின் இரக்கமில்லா துரோகமே காரணம்.


Nimmathi quotes in tamil

வழிகளைக் தேடித்தான் செல்கிறோம். போகும் இடமெல்லாம் காத்திருப்பது என்னவோ வலிகள் மட்டுமே.

நிம்மதி இருந்தால் நிமிடம் கூட வீணாகாது. நிம்மதி இல்லாவிட்டால் நிமிடம் என்ன வாழ்நாள் முழுவதும் வீணாகி விடும்

நிஜத்தின் வலியில் கற்பனை எல்லாம் இறந்து போனது

Nimmathi quotes in tamil

சொல்ல முடியாத சோகங்கள் தான் சில சமயம் கோபமாய் வெளிப்படுகிறது

கவலைக்கு நாம் இடம் கொடுத்தால், அது நம்மை கவலைக்கிடமாக்கி விடும்

மன நோய் என்பது மனதால் வருவதல்ல சில மனிதர்களால் வருகிறது

Tags

Next Story