New Life Quotes in Tamil -துன்பங்களை தூக்கி எறிந்துவிடுங்கள்..! வரங்கள் வழிகாட்டும்..!

New Life Quotes in Tamil -துன்பங்களை தூக்கி எறிந்துவிடுங்கள்..! வரங்கள் வழிகாட்டும்..!
X

new life quotes in tamil-வாழ்க்கைக்கான மேற்கோள்கள் (கோப்பு படம்)

வாழ்க்கை என்பது ஒரு இனிய அனுபவம். உலக உண்மைகளை அறிந்து கொள்ளும் அறிவு மனிதனுக்குமட்டுமே உள்ளது. அதையறிந்து மகத்தான வாழ்க்கை வாழ்வோம்.

New Life Quotes in Tamil

மனித வாழ்வில் ஏராளமான பிரச்னைகள் நம்மை தினந்தோறும் எதிர்கொள்கின்றன. நாம் வாழ்வில் நமக்கு நிகழும் சோதனைகளையும், நம் வாழ்வில் ஏற்படும் சம்பவங்களையும் யோசித்துப் பார்த்தோமானால், பல சமயம் நமக்குத் தோல்வியும், ஏமாற்றமும், துன்பங்களும் தான் வருகின்றன.

வாழ்வில் ஏற்படும் தோல்விகளுக்கும், கஷ்டங்களுக்கும் காரணம் நாம் எடுத்த முடிவுதான் என்பது புரியவரும். பொதுவாகவே வாழ்க்கையில் நாம் நமக்கான துன்பங்களை எண்ணாமல் நமக்கு கிடைத்த வரங்களை எண்ணிப்பார்த்த்தால் வாழ்க்கை தெளிவு பெரும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

New Life Quotes in Tamil

வாழ்க்கையைப்பற்றி தெரிந்துகொள்ள சில மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன.

வாழ்க்கையில் நீ தடுக்கி விழும்போது

தூக்கிவிட யாரும் வர மாட்டார்கள்.

ஆனால் நிமிர்ந்து நீ நடந்தால்,

தடுக்கிவிட பலரும் இருப்பார்கள்.

இரு பக்கமும் கூர்மையான கத்தியை

கவனமாக பிடிக்க வேண்டும்..

அதுபோல, எந்தப் பக்கமும் சாயக்கூடிய

மனிதர்களோடு கவனமாக பழக வேண்டும்.

உண்மையாக இருப்பவர்கள் தான்

வாழ்க்கையில் அதிகம்

ஏமாற்ற படுகிறார்கள்.

New Life Quotes in Tamil

இழந்த இடத்தை பிடித்து கொள்ளலாம்..

ஆனால் இழந்த நேரத்தை என்றுமே பெற முடியாது

சிந்தித்து செயல்படுங்கள்

வாழ்க்கையில்..

எவ்வளவுதான் கஷ்டங்கள் வந்தாலும்,

உங்களுக்கான நேரத்தை

ரசிக்க மறக்காதீர்கள்

நேற்றைய நினைவுகளை

நினைத்து வருந்தி..

நாளைய கனவுகளை

மூழ்கடிக்காதே..

மனதில் உறுதி இருந்தால்..

வாழ்க்கை வசமாகும்.

கடலில் கல் எறிந்தால், கடலுக்கு வலிப்பதில்லை

மாறாக, கல்தான் காணாமல் போகும்.

அதுபோல, வாழ்வில் விமர்சனங்கள் வந்தால்.

கடலாக இருங்கள், வலிகள் காணாமல் போகும்.

New Life Quotes in Tamil

தேவை இல்லாமல் பேசுவதை விட

மெளனமாக இருப்பதே சிறந்தது..

நம் மனதை புரிந்துகொள்ளடீ தெரியாத ஒருவருக்கு

நாம் பேசும் வார்த்தைகளும் புரியாது

விதியை நம்பிக்கொண்டு இருப்பவன்

என்றும் விழிக்க மாட்டான்

தன் நம்பிக்கையோடு இருப்பவன்

என்றும் தோற்க மாட்டான்.

வாழ்க்கையில்

வென்றவனுக்கும் தோற்றவனுக்கும்

வரலாறு உண்டு!

ஆனால் வேடிக்கை மட்டும் பார்த்தவனுக்கு..

ஒரு வரி கூட கிடையாது, எனவே..

பேசுவதை விட செயலில் காட்டுங்கள்.

New Life Quotes in Tamil

பல காயங்களுக்கு கண்ணீர் மருந்து

சில காயங்களுக்கு பிரிவு மருந்து

எல்லா காயங்களுக்கும் சிறந்த மருந்து

அமைதி.

அடுத்தவர்களை பாராட்டும்

போது அவர்களின் மனமும்

குளிரும் நம் மனதிலுள்ள

பொறாமை குணமும் அழியும்

சபதங்களும்

சவால்களும் காற்றில் பறக்கும்

வார்த்தைகளாக

இருக்க கூடாது

ஓலை குடிசையில்

பிறந்தான் மகன்

கோடீஸ்வரன்

என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார் தந்தை

New Life Quotes in Tamil

போராடி வாழ்வதற்கு வாழ்க்கை

ஒன்றும் போர்க்களமல்ல அது

பூ வனம் ....

ரசித்து வாழ்வோம்.

அரசியலை போல்

தான் வாழ்க்கையும்

பல எதிர்பார்ப்புகளை

கொடுத்து ஏமாற்றுவதில்.

மொத்த பிடிவாதத்தையும்

உடைக்கும் வலிமை

பிடித்தவரின் மௌனத்துக்கு உண்டு.

அழ நினைத்தால் ஆசைதீர

அழுதுவிடு கண்ணீரின் முடிவில்

சுமைகளும் கரையுமென்றால்.

சகித்துக்கொண்டு வாழ்வதல்ல

வாழ்க்கை சலிக்காமல் வாழ்வதே வாழ்க்கை.

New Life Quotes in Tamil

அடிக்கடி கண்ணீர் விட்டால்

உன் நியாயமான கண்ணீருக்கும் மதிப்பிருக்காது.

கடந்து போன நாட்களில்

உன் துன்பத்திற்கான காரணத்தை பட்டியலிடு

இனி கடக்கபோகும் நாட்களில்

அவை மீண்டும் நிகழாமல் தடுக்கலாம்.

காத்திருக்கும் பொறுமை

நமக்கிருந்தாலும்

காலத்துக்கு இல்லை.

மனமும் கண்ணாடியைபோல்தான்

உடையும்வரை யாரையும்

காயப்படுத்துவதில்லை.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!