Nallennai in tamil-எள்ளெண்ணெய், நல்லெண்ணெய் ஆனது எப்படி? தெரிஞ்சுக்கங்க..!
Nallennai in tamil-நல்லெண்ணெய் நன்மைகள் (கோப்பு படம்)
Nallennai in tamil
எள் உலகின் வெப்ப மண்டல நாடுகளில் அதிகம் விளைவிக்கப்படும் ஒரு தானிய வகையாகும். பல ஊட்டச்சத்துக்கள் கொண்ட எள்ளினை பயன்படுத்தி பல உணவு வகைகள் உண்ணப்படுகின்றன.
எள்ளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தான் நல்லெண்ணெய் எனப்படுகிறது. உலகெங்கிலும் இருக்கின்ற மக்கள் தங்களின் அன்றாட உணவில் நல்லெண்ணெய் பயன்படுத்துகின்றனர். இந்த நல்லெண்ணெய் பயன்படுத்தி செய்யப்படும் உணவுகளை சாப்பிடுவதாலும் அந்த நல்லெண்ணெய் மூலம் மனிதர்களுக்கு கிடைக்கும் பல்வேறு மருத்துவ நன்மைகள் குறித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
Nallennai in tamil
எள் தானியத்தில் இருந்து எடுக்கப்படும் இந்த எள்ளெண்ணெய் அதன் அபரித நன்மைகளால் அதாவது பல நல்ல உடல் ஆரோக்ய நன்மைகள் செறிந்து இருப்பதால் , நல்ல(எள்) + எண்ணெய் = நல்லெண்ணெய் என்று பெயர் பெற்றுள்ளது.
Nallennai in tamil
நல்லெண்ணெய் பயன்கள்
தோல் நோய் சிகிச்சைக்கு
நமது உடலை காக்கும் கவசமாக வெளிப்புறத் தோல் அமைந்திருக்கிறது. வெளிப்புற தோலுக்கு மிகுந்த நன்மை பயக்கும் ஒரு எண்ணெயாக நல்லெண்ணெய் இருக்கிறது. நல்லெண்ணெயில் ஜிங்க் சத்து அதிகம் உள்ளது. இந்த ஜிங்க் சத்து நமது தோலில் ஜவ்வு தன்மையை நீடிக்கச் செய்து, மிருதுவான தோல் ஏற்பட செய்கிறது.
முதுமை காரணமாக தோலில் ஏற்படும் சுருக்கங்கள், தழும்புகள் போன்றவற்றை நீக்குகிறது. கோடைக்காலங்களில் நல்லெண்ணெயை சிறிது எடுத்து கைகளில் மேற்புறமாக சிறிது தடவிக் கொள்வதால் கடுமையான சூரிய வெப்பத்தால் தோலுக்கு பாதிப்புகள் ஏற்படாமல் காக்கிறது. மேலும் வியர்வை மற்றும் பிற சருமத் தொற்றுக்கிருமிகளால் நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
Nallennai in tamil
இதய நலம் பேணும்
இதய னால பேணுவதில் நல்லெண்ணெய் பெரிதும் பங்கெடுக்கிறது. இதயம் ஆரோக்யமாக இருக்கவும், இதய பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கவும் ஒரு சிறந்த உணவுப் பொருளாக நல்லெண்ணெய் இருக்கிறது. செசமோல் மற்றும் செசமின உட்பட பல கரையாத கொழுப்பு அமிலங்கள் நல்லெண்ணெயில் நிறைந்திருக்கின்றன.
நல்லெண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதால் இதயம் மற்றும் இதயம் தொடர்பான தசைகள், நரம்புகள் போன்றவற்றில் அதிகளவில் கெட்ட கொழுப்புகள் படிவதைத் தடுத்து இதய பாதிப்பு உண்டாகாமல் காக்கிறது.
Nallennai in tamil
இரத்த ஓட்டம் சீராக
உடலில் இருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் இரத்த ஓட்டம் சீராகவும், சரியான விகிதத்திலும் சென்றால் மட்டுமே நமது உடலும், மனமும் சுறுசுறுப்பாக இயங்கும். நல்லெண்ணெயில் அதீத செம்புச் சத்து மற்றும் ஜிங்க் சத்துக்கள் இருக்கின்றன. இதில் செம்புச்சத்து நமது உடலில் இரத்த அணுக்களின் உற்பத்திக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது.
செம்புச் சத்தினால் இரத்த ஓட்டம் சீராக்கப்பட்டு, உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் இரத்தத்தின் மூலம் ஆக்சிஜன் முழுமையாக கொண்டு செல்லப்படுகிறது. இதன் காரணமாக உடல் மற்றும் மனம் சுறுசுறுப்பாக, உற்சாகமாக செயல்படத் தொடங்குகிறது.
Nallennai in tamil
புற்றுநோய் தடுக்க
எந்த வகை வகையான புற்றுநோய் ஏற்படுவதையும் தடுப்பதில் நல்லெண்ணெய் சிறப்பாக செயல்படுகிறது. நல்லெண்ணெயில் போலேட் எனப்படும் கூட்டு வேதிப்பொருள் அதிகளவில் உள்ளது. மேலும் மக்னீசியச் சத்தும் நல்லெண்ணெயில் தேவைக்கு அதிகமான அளவிலேயே இருக்கின்றன. இந்த இரண்டு சத்துக்களும் குடல் மற்றும் ஈரல் பகுதிகளில் உண்டாகக்கூடிய புற்றுநோய்களை தடுப்பதில் பேருதவி புரிகிறது.
அதனுடன் கால்சியம் சத்தும் நல்லெண்ணையில் அதிகமாக உள்ளது. இது வயிறு மற்றும் அவற்றுடன் தொடர்புடைய உறுப்புகளில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது.
Nallennai in tamil
எலும்பு தேய்மானம் குணமாக
உடலில் சில அத்தியாவசிய சத்துகள் குறையும் போது எலும்பு மூட்டுக்களில் வலி மற்றும் வீக்கம் அதிகம் ஏற்படுகின்றன. இத்தகைய பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க நமது உணவில் செம்புச்சத்து அதிகம் இருப்பது அவசியம்.
நல்லெண்ணெயில் செம்புச் சத்து செறிந்து உள்ளது. நல்லெண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுபவர்களின் இரத்தத்தில் அந்த சத்துகள் கலந்து எலும்புகள் மற்றும் எலும்பை சார்ந்திருக்கும் தசைகளுக்கு வலிமையை தருகின்றன. குறிப்பாக ஆர்தரைட்டிஸ் எனப்படும் மூட்டுவலி நோய்களால் அவதிப்படுபவர்கள், அடிக்கடி நல்லெண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் மூட்டு வலி மற்றும் வீக்கங்கள் குறைவதை அனுபவபூர்வமாக உணர முடியும்.
Nallennai in tamil
பற்கள் பலம்பெற
ஆயில் புல்லிங் எனும் மருத்துவ செயல்முறையை பலரும் கேள்விப்பட்டிருபீர்கள். ஆனால் இந்த மருத்துவ செயல்பாடு பல நூற்றாண்டுகளாக நமது நாட்டில் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த ஆயில் புல்லிங் செய்வதற்கு சிறந்த எண்ணெயாக நல்லெண்ணெய் இருக்கிறது.
தினமும் காலையில் எழுந்ததும் பல் துலக்குவதற்கு முன்பாக ஒரு மேசைக்கரண்டி அளவு நல்லெண்ணெய் வாயில் ஊற்றிக்கொண்டு, 20 நிமிடங்கள் வரை வாயை நன்கு கொப்பளித்து துப்பி, பிறகு பல் துலக்க வேண்டும். இந்த ஆயில் புல்லிங்கை தினமும் செய்து வருபவர்களுக்கு பற்சொத்தை ஏற்படாது. ஈறுகளில் வீக்கம் மற்றும் இரத்தம் வடிதல் போன்ற குறைபாடுகள் நீங்கும். பற்களும் வலிமை அடையும். மேலும் பற்களில் மஞ்சள் கரை ஏற்படுவதை தடுத்து பளபளப்புத் தன்மையை அதிகரிக்கிறது.
Nallennai in tamil
மன அழுத்தம் நீங்க
மனிதர்களின் மனம் ஆரோக்யமாக இருந்தாலே உடல் நலம் சிறப்பாக இருக்கும். ஒரு சிலருக்கு காரணமற்ற அதிக படபடப்புத்தன்மை மற்றும் அதீத மன அழுத்தம் உண்டாகிறது. நல்லெண்ணெயில் இருக்கும் டிரோசின் எனப்படும் அமினோ அமிலம் நிறைந்த வேதிப்பொருள் அடங்கியுள்ளது.
இந்த டிரோசின் எனப்படும் வேதிப்பொருள் செரட்டோனின் எனப்படும் ஒரு வேதிப்பொருளை நமது மூளையில் சுரக்கச் செய்து, உடலில் நன்மை செய்யும் என்சைம்கள் மற்றும் ஹார்மோன்களின் சுரப்பை அதிகரித்து, மனஅழுத்தம் மற்றும் பதட்டத்தை போக்கி மன அமைதி மற்றும் மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்துவதாக மருத்துவ ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன.
Nallennai in tamil
எலும்பு வளர்ச்சி பெற
மனிதர்களின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதித்தன்மைக்கு கால்சியம் சத்து அவசியமாக இருந்தாலும், செம்புச் சத்து மற்றும் ஜின்க் சத்தும் எலும்புகளுக்கு தேவையான சத்துக்களாக இருக்கிறது. நல்லெண்ணெயில் கால்சியம், செம்பு மற்றும் ஜிங்க் சத்து ஆகிய மூன்றும் சரியான அளவில் இருக்கின்றன. எலும்புகள் வலிமை பெறவும், வளர்ச்சி பெறவும் நல்லெண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
குறிப்பாக வளரும் பருவத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு நல்லெண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகளை கொடுப்பதால் அவர்களின் எலும்புகளின் வளர்ச்சி அதிகரிப்பதோடு வலிமையும் அதிகரிக்கிறது.
Nallennai in tamil
கல்லீரல் வலிமை பெற
மது மற்றும் இதர போதைப் பொருட்கள் உடலுக்கு தொடக்கத்தில் நன்மை செய்வது போல் தெரிந்தாலும், காலம் செல்லச் செல்ல பல விதமான உடல் ஆரோக்ய குறைபாடுகளை ஏற்படுத்தும். குறிப்பாக உடலின் மிக முக்கிய உறுப்புகளை பாதிப்படையச் செய்யும். நல்லெண்ணெய் கொண்டு செய்யப்படும் உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு நல்லெண்ணெயில் இருக்கும் சத்துக்கள் கல்லீரலில் படிந்து, மது அருந்தும் போது, அதிலிருக்கும் ஆல்கஹால் கல்லீரலை பாதிக்காமல் பாதுகாக்கும் கவசமாக செயல்படுகிறது. மேலும் கல்லீரலில் இருக்கின்ற நச்சுதன்மையையும், நுண்கிருமிகளையும் வெளியேற்றுகிறது.
Nallennai in tamil
குழந்தைகள் நலன் காக்கும்
குழந்தைகளுக்கு மிகவும் நன்மை தரும் ஒரு இயற்கை உணவாக நல்லெண்ணெய் இருக்கிறது. குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு நல்லெண்ணெயை உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்வதால் அக்குழந்தைகளுக்கு ஆழ்ந்த உறக்கம் மற்றும் சிறந்த உடல் வளர்ச்சியையும் கொடுக்கிறது.
மேலும் குழந்தைகளுக்கு அணிவிக்கும் ஆடைகளில் ஏற்படும் ஈரத்தன்மையால் அக்குழந்தைகளின் தோலில் சிறு அளவிலான புண்கள், கீறல்கள் உண்டாகின்றன. அப்படிப்பட்ட இடங்களில் நல்லெண்ணெய் துளிகளை விட்டு தடவுவதால் அக்குழந்தைகளின் தோல் அரிப்பு மற்றும் தழும்புகள் நீங்குகின்றன.
நல்லெண்ணெய் டிப்ஸ் ....
நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளதால் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது. வாரத்திற்கு ஒருமுறையாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் சூடு குறையும்.
தலைமுடி வறட்சி நீங்கும். பொடுகு முற்றிலும் நீங்கும். நல்லெண்ணெய் மிகவும் பிரபலமான பல்வேறு க்ரீம்கள், ஆயின்மென்ட், சோப்புகள், லோஷன் மற்றும் பாடி ஸ்கரப் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
1. நல்லெண்ணெய் சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய்ப் பசையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. முகப்பரு மற்றும் பருக்களால் வரும் தழும்புகளைத் தடுக்கிறது. அதற்கு தினமும் 1 டீஸ்பூன் நல்லெண்ணெயுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பஞ்சில் தொட்டு பருக்கள் உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து கழுவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், பருக்கள் குறைவதோடு, தழும்புகளும் குறையும்.
2. பெரும்பாலானவர்களுக்கு சரும வறட்சி பிரச்னை இருக்கும். சரும வறட்சியைத் தடுக்க பல்வேறு வழிகள் உள்ளன. அதில் ஒன்று நல்லெண்ணெய். நல்லெண்ணெயை டோனர் வடிவில் பயன்படுத்தி வந்தால், சருமத்தின் இளமைத்தன்மை தக்க வைக்கப்பட்டு, சருமம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.அதற்கு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு குலுக்கிக் கொள்ள வேண்டும். பின் அதை முகம், கை, கால்களில் ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள். இப்படி தினமும் பயன்படுத்தி வருவதால், சருமம் வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.
3. நல்லெண்ணெய் உதடுகளுக்கு ஒரு அழகான நிறத்தை வழங்கும். தினமும் நல்லெண்ணெயை உதடுகளுக்கு பூசி வந்தால், உதடுகள் மென்மையாகவும், பிங்க் நிறத்துக்கு மாறும். அதற்கு நல்லெண்ணெயை தினமும் இரவில் படுக்கும் முன் உதட்டில் தடவிக் கொள்ளுங்கள். ஆனால் நல்லெண்ணெயைப் பயன்படுத்திய உடனேயே பலன் கிடைக்காது. தினமும் பயன்படுத்தி வந்தால் தான் பலன் கிடைக்கும்.
4. கெமிக்கல் கலந்த மேக்கப் ரிமூவரைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, இயற்கை வழியில் மேக்கப்பை நீக்க நினைத்தால், நல்லெண்ணெயைப் பயன்படுத்துங்கள். அதுவும் பஞ்சுருண்டையில் நல்லெண்ணெயை நனைத்து, முகத்தை தினமும் துடைத்து எடுங்கள். இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், மேக்கப் முழுமையாக நீங்குவதோடு, சருமமும் வறட்சியடையாமல் இருக்கும்.
5. நல்லெண்ணெயை ரோஸ் வாட்டருடன் சேர்த்து குதிகால் வெடிப்பை சரிசெய்யலாம். அதற்கு நல்லெண்ணெய் மற்றும் ரோஸ் வாட்டரை சம அளவில் எடுத்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் குதிகாலில் தடவுங்கள். மறுநாள் காலையில் காலை வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இதனால் விரைவில் குதிகால் வெடிப்பு நீங்கும்.
6. கோடையில் ஒவ்வொரு இளம்பெண்களும் அதிகம் கவலைப்படுவது அவர்கள் சந்திக்கும் சருமம் கருமையாவது. இதைத் தடுப்பதற்கு நல்லெண்ணெய் பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, கருமையான பகுதிகளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.அப்புறம் பாருங்க.
7. உங்கள் தலைமுடி வறட்சியுடனும், உடைந்து காணப்படுகிறதா? அப்படியானால் உங்கள் தலைமுடியை நல்லெண்ணெய் பயன்படுத்தி பராமரியுங்கள். அதுவும் உங்கள் தலைமுடிக்கு தேவையான அளவு நல்லெண்ணெயை தலையில் தடவி, நன்கு மசாஜ் செய்து, 30 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு ஒருமுறை தலைமுடிக்கு நல்லெண்ணெய் மசாஜ் செய்து வந்தால், தலைமுடி வறட்சியின்றி மென்மையாக மாறும்.
8. உங்கள் கண்கள் சோர்வடைந்து, கருவளையங்களுடன் காணப்படுகிறதா? நல்லெண்ணெய் கொண்டு சரிசெய்யலாம். அதற்கு நல்லெண்ணெயை ப்ரிட்ஜில் வைத்து குளிர செய்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி, கண்களின் மீது தடவ வேண்டும். இப்படி செய்தால், வீங்கிய கண்களின் வீக்கம் குறைவதோடு, கருவளையங்களும் நீங்கிவிடும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu