விரால் மீன்,சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் ..! நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்..!

விரால் மீன்,சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் ..! நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்..!
X

murrel fish in tamil-விரால் மீன்.(கோப்பு படம்)

Viral Fish Benefits-முரல் மீன் எனப்படுவது யாதெனில் விரால் மீன்தாங்க. தமிழில் விரால் என்பதே முரல் என்று அழைக்கப்படுகிறது.

Viral Fish Benefits-ஆரோக்கியமான அசைவ உணவு என்றால் அதில் எப்பொழுதும் மீனிற்கு முதலிடம் கொடுக்கலாம். மீனின் சுவைக்கும், அதன் ஆரோக்கியத்திற்கு என்றுமே முதலிடம் கொடுப்பதற்கான காரணமாகும்.

சுவைக்கு மட்டுமில்லாமல் அந்த மீனை உணவாக உட்கொண்ட பிறகு குறைந்த நேரத்தில் எளிதில் ஜீரணமாகி உடலுக்கு தேவையான அனைத்து வகையான ஊட்டச்சத்துகளையும் வழங்குகிறது.

விரால் மீன் உள்ள ஊட்டச்சத்துக்கள் என்ன

இந்த மீனை உணவில் சேர்த்துக் கொண்டால் வைட்டமின் டி, புரதச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, ஜிங்க், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம், போன்ற உடலுக்கு அவசியமான ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் கிடைக்கும்.

குறிப்பாக கடல் மீன்களில் அதிக அளவில் ஒமேகா-3 அமிலம் நிறைந்துள்ளது.

இந்த ஊட்டச்சத்து உடல் தானாக உற்பத்தி செய்ய முடியாது. அதனால் நீங்கள் மீன்களை அதிக அளவில் சாப்பிடுவதன் மூலம் இந்த ஒமேகா-3 ஊட்டச் சத்துகள் உடலுக்கு அதிக அளவில் கிடைக்கும்.

இது உடலை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மிகவும் முக்கியமான தேவையான ஊட்டச்சத்து.

எலும்பு உறுதிக்கு

மீனில் வைட்டமின் டி ஊட்டச் சத்து நிறைந்துள்ளது, இதனால் டயட்டில் உள்ளவர்கள் இந்த உணவை அதிக அளவில் சேர்த்துக் கொள்ளலாம். நீங்கள் உண்ணும் உணவில் உள்ள கால்சியத்தை உறிஞ்சி உங்கள் எலும்பு வளர்ச்சி ஆரோக்கியமாக, இந்த வைட்டமின் டி ஊட்டச்சத்து உடலுக்கு மிகவும் அவசியம்.

இதயத் தமனிகளில் கொழுப்பை நீக்க

ஒமேகா-3 ஊட்டச்சத்து கொழுப்பு அமிலம் இந்த மீனில் அதிக அளவில் நிறைந்துள்ளதால், இதயத்தில் உள்ள ரத்த குழாய் அடைப்பு சம்பந்தமான நோய்களை முற்றிலும் குணப்படுத்துகிறது.


இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலம் இருதயத்தை நன்றாக பாதுகாக்கிறது, இந்த மீனை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருப்பதை நீங்கள் உணரலாம்.

நல்ல தூக்கம்

தினமும் இரவில் நல்ல ஆழ்ந்த தூக்கம் இருந்தால் தான் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும் வைட்டமின்-டி மீனில் அதிக அளவில் இருப்பதால் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆழ்ந்த தூக்கத்தை எளிதில் பெற முடியும்.

நீரிழிவு நோய்க்கு

நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த மீனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு படிப்படியாக குறையும்.

கர்ப்பிணி பெண்களுக்கு

தாய்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் இந்த மீனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு ஒமேகா-3 ஊட்டச்சத்து அதிகளவில் கிடைக்கும். குழந்தைகளின் கண் பார்வை மேம்படும். குழந்தைகளின் மூளை வளர்ச்சி அதிகரிக்கும். எலும்புகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ரூ.5 கோடி செலவில் கட்டிய சேமிப்புக் கிடங்குகள் பயன்பாடு இல்லாமல் வீண்!