Motivational Rowthiram Pazhagu Quotes-'ரௌத்திரம் பழகு' அநீதிக்கு எதிரான சினம்..!

Motivational Rowthiram Pazhagu Quotes-ரௌத்திரம் பழகு அநீதிக்கு எதிரான சினம்..!
X
ரௌத்திரம் என்பது சினம் என்று பொருள் கொண்டாலும் அந்த சினத்திற்கான காரணம் பொருள்பொதிந்து இருக்கும்.

Motivational Rowthiram Pazhagu Quotes

ரௌத்திரம் என்பது தீக்குச்சியின் முனையில் தோன்றும் நெருப்பை போன்றது.அதை காட்டுத் தீ போல் பரவவிட்டு அழிவையும் ஏற்படுத்தலாம். அதேநேரத்தில் அதை சரியாக அடைகாத்து சரியான வகையில் பயன்படுத்தினால் இரும்பையும் உருக்கலாம்.

ரௌத்திரம் பழகு என்பதன் பொருள் குறித்து சற்று கூர்ந்து பார்த்தோமானால் அது நியாயமான கோபம் என்பது புரியும். கோபத்தை கட்டுப்படுத்துங்கள் என்று பலர் கூறும்போது “ரௌத்திரம் பழகு” என்று முழங்கினான் பாரதி.

Motivational Rowthiram Pazhagu Quotes

ஒருவர் மீதுள்ள கோபத்தை அதற்கு சம்பந்தம் இல்லாத வேறு ஒருவரிடம் காட்டாதவரை கோபம் தவறில்லை.

பாரதி முழங்கிய “ரௌத்திரம் பழகு” என்பது நம் ஒவ்வொருவருடைய கடமை. நியாயத்தின் மீதான அக்கறையை வெளிப்படுத்தும் கோபம். அநீதியை கண்டு பொங்கும் கோபம்.

ரௌத்திரம் பழகு என்பதன் பொருள்

ரௌத்திரம் என்பது நியாயயாமான கோபம் அல்லது ஆத்திரம் என்று கூறலாம். தனக்கோ அல்லது பிறருக்கோ அநீதி நடக்கும் பொழுது அதை துணிவோடு எதிர்த்து தட்டிக் கேட்கும் கோபம்.

தேவையான இடத்தில் தேவையான நேரத்தில் நிச்சயம் கோபம் கொள்ள வேண்டும். அந்த கோபத்தில் நியாயம் மட்டுமே இருக்க வேண்டும். இதுவே “ரௌத்திரம் பழகு”. அர்த்தமற்ற ஆத்திரமாக இருக்கக்கூடாது.

Motivational Rowthiram Pazhagu Quotes

கண்ணுக்கு எதிரே அநீதி நடக்கும் போது அதை எதிர்த்து கேட்பதுதான் தர்மம். ஆனால் கண்ணுக்கு எதிரே ஒரு அநீதி நடக்கும்போது அதை கண்டும் காணாமல் போனால் அது கோழைத்தனம்.

கோபப்பட வேண்டிய நேரத்தில் கோபப்படுவதும் தேவையில்லாத விஷயத்தை விட்டு விடுவதும் மிகவும் அவசியம்.

இதைத் தான் “ரௌத்திரம் பழகு” என்று கூறினான் பாரதி. அனைவரும் இதை கோபம் என்று சொல்லும் போது பாரதி மட்டும் “ரௌத்திரம் பழகு" என்று கூறினான்.

ஏதோ ஒரு பெண்ணுக்கு நடக்கும் அநீதிக்கு எதிராக நீ வெளிப்படுத்தும் “ரௌத்திரம்” நாளை நம் வீட்டுப் பெண்ணையும் காப்பாற்றும்.

Motivational Rowthiram Pazhagu Quotes

திருடும் அரசியல்வாதிக்கு எதிராக நீ வெளிப்படுத்தும் “ரௌத்திரம்” நாளை நல்ல அரசியல்வாதியை உருவாக்கும்.

இன்று வெளியே நடக்கும் பல கொலைகள், களவுகள், கற்பழிப்புகள், பெண் வன்கொடுமைகள் அனைத்துக்கும் நாம் அனைவரும் “ரௌத்திரம் பழகாமையே” காரணம்.

இன்று வெளியே நடக்கும் அநீதிகள் நாளை நம் வீட்டிற்குள்ளும் நடக்கலாம். தவறை கண்டு தட்டி கேட்காமல் இருப்பது தான் நாம் செய்யும் மிகப்பெரிய தவறு. அச்சம் தவிர்த்து “ரௌத்திரம் பழகுவோம்”

தவறை கண்டால் கண்டுக்காதே என்பதை விடுத்து “ரௌத்திரம் பழகு”. தவறு நடந்தால் தட்டிக்கேட்க வேண்டும் என்பதை நம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்போம். குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு.

“ரௌத்திரம் பழகுதல்” என்பது நம் கடமை. ஆணுக்கு அது ஆண்மையாகும். பெண்ணுக்கு அது கவசமாகும்.

Motivational Rowthiram Pazhagu Quotes

தென் ஆப்ரிக்காவில் வழக்கறிஞராக பணி செய்து கொண்டிருந்த அந்த இளைஞன் ரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்தான் என்பதற்காக முதல் வகுப்பு பயணச்சீடு அவனிடம் இருந்த போதும் நிறவெறி பிடித்த வெள்ளை அதிகாரி ஒருவனால் வெளியில் தள்ளப்படுகிறான்.

தான் தள்ளப்பட்ட PIETERMARITZBURG என்னும் ரயில் நிலையத்திலே நிற்கும் போது அவன் மனதில் இரண்டு எண்ணங்கள் தோன்றுகிறது ஒன்று அவமானம் தாங்காமல் தாய் நாடு திரும்புவது மற்றொன்று தன்னைப் போல் அங்கு நிறவெறிக்கு ஆளாகி அடிமைகளாக வாழும் மக்களுக்காக நிறவெறியை எதிர்த்து போராடுவது.

அவனது மனதில் இரண்டு எண்ணங்கள் தோன்றினாலும் அவனது மனம் தேர்வு செய்தது இரண்டாம் வழியை தான்.

அவன் அன்று தனது ரௌத்திரத்தை அடைகாத்து, தேசம் தாண்டியும் மத ரீதியில் பிளவுண்டு கூலிகளாகவும்,கொத்தடிமைகளை போலவும் வாழ்ந்து வந்த, தனது தேசத்தாருக்கு ரௌத்திரம் பழக்கினான்.அவனது ரௌத்திரம் அவர்களுக்கு அங்கு ஒரு விடியலை தந்தது.

அதை விடுத்து அவன் அன்று தன்னை ரயிலிருந்து தள்ளிய அதிகாரியை ரௌத்திரம் தாளாமல் திருப்பி தாக்கியிருப்பானேயானால் அவன் கைது செய்யப்பட்டிருப்பானே ஒழிய ஒருபோதும் அங்கு நிறவெறிக்கு தீர்வு பிறந்திருக்காது.

Motivational Rowthiram Pazhagu Quotes

அன்று கோபம் கொண்டு நிறவெறியால் தள்ளிய அந்த வெள்ளை அதிகாரியின் பெயருக்கு சரித்திரத்தில் இடமில்லை.ஆனால் அன்று முதல் வகுப்பில் இடமில்லை என நிறவெறியோடு தூக்கியெரியப்பட்டபோதும் தனது ரௌத்திரத்தை அடைகாத்துக் கொண்டு மக்கள் எழுச்சிக்கு வித்திட்ட அன்றைய இளைஞரான மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியே சரித்திரமானார்.

Tags

Next Story