Mothers Day Quotes Tamil -அம்மா என்றால் அன்பு.! அம்மாவை வாழ்த்துவோமா?

mothers day quotes tamil-அன்னையர் தின வாழ்த்துகள் (கோப்பு படம்)
Mothers Day Quotes Tamil
அம்மாவை விடச் சிறந்த தெய்வம் பூவுலகில் வேறு ஏதும் இல்லை. மனிதர்களுள் மேன்மையானவளாய் தெய்வங்களே வணங்கிடும் நடமாடும் அழகு தேவதையாய் அன்பின் திருவுருவமாக விளங்குபவள் அம்மா.
பல காவற் தெய்வங்கள் இருப்பினும் அன்னை போல் நம்மை காக்கும் தெய்வம் பூமியில் ஏதும் இல்லை. தாயே தெய்வமாய் இருப்பதனால் தான் “தாயிற் சிறந்ததோர் கோவிலும் இல்லைˮ எனக் கூறுகின்றனர். உடலுக்கு உயிர் கொடுத்து தன் இரத்தத்தைப் பாலாக்கி உலகை அறிய வைத்த நடமாடும் தெய்வம் அன்னை.
அந்த உன்னத அன்னையின் தினத்தில் அன்னையை வாழ்த்துவோம்.
காலம் முழுவதும் உன்னை வயிற்றிலும் மடியிலும் தோளிலும் மார்பிலும் சுமப்பவள் தாய்மட்டுமே
அவளை என்றும் மனதில் சுமப்போம்
ஆயிரம் விடுமுறை வந்தாலும் அவள் அலுவலகத்திற்கு மட்டும் விடுமுறையில்லை அம்மா சமயலறை
இன்பம் துன்பம் எது வந்த போதிலும் தன் அருகில் வைத்து அனைத்து கொள்கிறது தாய்மை
வயது வித்தியாசம் பார்ப்பதில்லை அம்மாவின் கொஞ்சலில் மட்டும் இன்னும் குழந்தையாக
அம்மாவின் கைக்குள் இருந்த வரை உலகம் அழகாகத்தான் தெரிந்தது
Mothers Day Quotes Tamil
வலி நிறைந்தது என்பதற்காக யாரும் விட்டுவிடுவதில்லை தாய்மை அடைவதை
அன்புகலந்த அக்கறையோடு சமைப்பதால் தான் எப்போதும் அம்மாவின் சமையலில் சுவை அதிகம்
நான் முதல்முறை பார்த்த அழகிய பெண்ணின் முக தரிசனம் அம்மா
இன்று என்னை இவ்வுலகுக்கு அறிமுகம் செய்த என் அன்பு அம்மாவுக்கு ஆயிரம் ஆயிரம் முத்தங்கள்
நான் உன்னுடன் இருக்கும் பொழுது என் பிரச்சனை எப்போதும் மறந்து விடுகிறேன் செல்லமே
(அம்மா)
Mothers Day Quotes Tamil
எதுவும் அறியா புரியா வயதில் எந்த சுமைகளும் கவலைகளுமின்றி அன்னையின் கரங்களில்
தவழும் காலம் சொர்க்கமே
உயிருக்குள் அடைக்காத்து உதிரத்தை பாலாக்கி பாசத்தில் தாலாட்டி பல இரவுகள் தூக்கத்தை தொலைத்து
நமக்காகவே வாழும் அன்பு தெய்வம் அன்னை
கடல் நீரை கடன் வாங்கி கண்கொண்டு அழுதாலும் நான் சொல்லும் நன்றிக்கு போதாதம்மா
அன்னையர் தின வாழ்த்துக்கள்
ஒவ்வொரு நாளும் கவலைப் படுவாள் ஆனால் ஒரு நாளும் தன்னைப் பற்றி கவலைப்பட மாட்டாள்
(அம்மா)
ஆழ்ந்த உறக்கத்தின் அஸ்திவாரம்அம்மாவின் தாலாட்டு
ஆயிரம் உணவுகள் வித விதமாக சாப்பிட்டாலும்அன்னை சமைத்தஉணவுக்கு ஈடாகாது
Mothers Day Quotes Tamil
உலகின் நிகழ்வுகளையும் அழகினையும் எடுத்து கூறும் முதல் குருவாக இருப்பவர்
அம்மா மட்டுமே
ஆயிரம் உறவுகள் உன் மீது அன்பாக இருந்தாலும் அன்னையின் அன்புக்கும் அவள் அரவணைப்பிற்கும்
எதுவும் ஈடாகாது
தாய் மடியைக் காட்டிலும் ஒரு சிறந்த தலையணை இந்த உலகில் வேறெதுவும் இல்லை
அம்மா இந்த நேரத்திலும் தன்னை பற்றி கவலைகொள்ளாமல் நமது ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளும்
அந்த உணர்வு பாசம் தான் தாய்மை
உன்னை அணைத்து பிடிக்கும் போதெல்லாம் உணர்கிறேன் உலகம் என் கையில் என்று
Mothers Day Quotes Tamil
அம்மா ! மறுமுறை உந்தன் கருவறை வேண்டும் முழுவதும் துறந்து முழுமையாக உன்னில் சங்கமம் ஆக மறுபடி என்னை மடியினில் சுமப்பாயா? அன்னையர் தின வாழ்த்துக்கள்
வலி தந்தவர்களை உயிராய் நினைப்பது தாய்மையும் காதலுமே. அன்னையர் தின வாழ்த்துக்கள்
அன்னையர் தின வாழ்த்துக்கள்
தன் குழந்தையின் வாழ்க்கை வளர தன்னையே வருத்தி கொள்ளும் தயாரும் உண்டு
என்னை சுவாசிக்க வைத்த அவளுக்காக நான் வாசித்த முதல் கவிதை அம்மா. அன்னையர் தின வாழ்த்துக்கள்
Mothers Day Quotes Tamil
இவளருகில் தோள் சாயும் போது துன்பத்தின் சுவடுகளும் தொலைதூரம் இவள் மடியில் துயிலுறங்கும் போது இதயத்தில் இன்பத்தின் அருவியும் கரைபுரண்டோடும் ஒருமுறை உதிக்கும் நம்மை தினம்தினம் சுமக்கும் ஒரே ஜீவன் நம் அன்னை
அம்மாவுக்கொரு கடிதம் உனக்கு வலி கொடுத்து பிறந்த காரணத்தால் தானோ எனக்கு வலி ஏற்படும்போதெல்லாம் அழைக்கிறேன் உன்னையே “அம்மா ” என்று. அன்னையர் தின வாழ்த்துக்கள்
மின்னல் மின்னும்போது அம்மாவைக் கட்டி அணைக்கும் குழந்தைக்குத் தெரிந்திருக்கிறது, அம்மா அதைவிடப் பெரிய சக்தி என்று
இறந்தாலும், பிள்ளைகளை நினைக்கும் இதயம், அம்மாவின் இதயம் மட்டுமே... அன்னையர் தின வாழ்த்துக்கள்
உயிர் எழுத்தில் "அ" எடுத்து மெய் எழுத்தில் "ம்" எடுத்து உயிர்மெய் எழுத்தில் "மா" எடுத்து அழகு தமிழில் கோர்த்தெடுத்த முத்து "அம்மா". அன்னையர் தின வாழ்த்துக்கள்
Mothers Day Quotes Tamil
அன்பும் அக்கறை அரவணைப்பும் பாசம், நேசம், தியாகம் என எல்லா உணர்வுகளையும் ஒரே இடத்தில் பெற முடிந்தால் அதுதான் உண்மையானவாழும் கடவுள் அம்மா
உலகில் தேடி தேடி அலைந்தாலும், மீண்டும் அமர முடியாத சிம்மாசனம்... தாயின் கருவறை அன்னையர் தின வாழ்த்துக்கள்
மூச்சடக்கி ஈன்றாள் என்னை அம்மா மூச்சுள்ளவரை காப்பேன் உன்னை
ஆயிரம் சொந்தங்கள் அனைத்திட இருந்தாலும்.... அன்னையே உன்னை போன்று அன்பு செய்ய யாரும் இல்லை இவ் உலகில்...... அன்னையர் தின வாழ்த்துக்கள்
அம்மா அன்று நம் தொப்புள் கொடியை அறுத்தது நம் உறவை பிரிக்க அல்ல அது நம் பாசத்தின் தொடக்கத்திற்கு வெட்டப்பட்ட ரிப்பன்
Mothers Day Quotes Tamil
முடியாத பாசம் உனக்காக அழுகும் விழிகள் நீ மட்டும் சாய்ந்து கொள்ள ஒரு தோள் உன்னை பசிக்காமல் பார்த்து கொள்ளும் ஒரே ஒரு தேவதை "அம்மா ". அன்னையர் தின வாழ்த்துக்கள்
படைத்தவன் கடவுள் என்றள் என் தாயே எனக்கு முதல் கடவுள் அன்னையர் தின வாழ்த்துக்கள்
100 எலும்புகள் உடையும் அளவு மரண வலி "பிரசவ வலி" அதை தாங்கிய தாயால் தன் பிள்ளையின் ஒரு துளி கண்ணீரை தாங்க முடிவதில்லை
வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்.. கண்கள் இல்லாமல் ரசித்தேன்.. காற்றே இல்லாமல் சுவாசித்தேன்.. கவலைகள் இல்லாமல் வாழ்ந்தேன்.. என் தாயின் கருவறையில் இருக்கும் வரையில்..!! அன்னையர் தின வாழ்த்துக்கள்
Mothers Day Quotes Tamil
உடலில் சுமந்து உயிரைப் பகிர்ந்து உருவம் தந்த தெய்வம் அம்மா !
எந்த திசையிலும் உன் முகமே என்னை அரவணைத்திட பாரத்திடுதே அன்னை உந்தன்மடி சாய்ந்து கிடந்திட நூறு ஜென்மம் வந்து ஏங்குகின்றேன் நித்தம் நித்தம் உந்தன் அன்பை பெற்றுவிட ஏழு ஜென்மம் எனக்கு வேண்டும் என்பேன்
குளிரோடு கோடை வரும் மாரி மழையும் வரும் மாறி மாறி வரும் காலநிலை யாவும் மாற்றமின்றி தொடரும் தாயன்பு. அன்னையர் தின வாழ்த்துக்கள்
ஆயிரம் உறவுகள் அவனியிலே கிடந்தாலும் அன்னையின் உறவுக்கு ஈடாகுமா?
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu