'அம்மா' என்றழைக்காத உயிர் இல்லையே..! தாய்மையை போற்றுவோம்..!

Mothers Day Quotes in Tamil
X

Mothers Day Quotes in Tamil

Mothers Day Quotes in Tamil-சுயநலமில்லாமல் வாழும் பெற்றெடுத்த அன்னையைப் போற்றும் நாளாக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்னைக்கு வாழ்த்து கூறுவோம்.

Mothers Day Quotes in Tamil-தாய் என்பவள் நம்மை இவ்வுலகுக்கு அறிமுகப்படுத்திய முதல் கடவுள். குழந்தைகள் தாயின் வாசனை அறிவார்கள். அதுவும் இயற்கை அளித்த அற்புத உணர்வுகள். வாசத்திலேயே தன தாயை கண்டுபிடிக்கும் குழந்தைகள் தன தாயிடம் இருப்பதையே பாதுகாப்பாக உணர்வார்கள்.

கண்ணுக்குத் தெரியாத அலைக்கற்றை செல்போன்களையும், கணினிகளையும் இணைப்பதுபோல தொப்புள்கொடி பந்தம் குழந்தைக்கும் தாய்க்குமான உறவை உறுதிப்படுத்துகிறது.அன்பாக ஊற்றெடுக்கிறது.

பொதுவாகவே நமது நாட்டில் பெண்களை போற்றுவது இயல்பானது. பெண்கள் என்றால் மென்மையானவர்கள். அவர்களுக்கென்று ஒரு தனி குணம் உள்ளது. அதிலும் குறிப்பாக தமிழக அம்மாக்களுக்கு கூடுதல் அன்பு நிறைந்திருக்கும். பெற்ற குழந்தைகளை ஒரு நிலைக்கு வளர்த்து விடும்வரை தாயின் உள்ளம் படும்பாடு அவர்களுக்கே உரிய தனிக்குணம். அன்னையர் தினத்தில் அன்னையை போற்றும் மேற்கோள்கள் இதோ உங்களுக்காக..!

அவளது மார்பை நீ கடித்து இழுத்தாலும், நகத்தால் கீறினாலும், அவள் புன்னகை தான் சிந்துவாள். நீ அவளிடம் பால் குடிக்கும் அழகைப் பார்த்து, ரசிப்பாள்…அம்மா உனக்கு அன்னையர் தின வாழ்த்துகள்

இதயம் எழுதும் கவிதை நீ, எங்கும் நிறைந்த புதுமை நீ, பதியன் போட்ட பயிரும் நீ, பாய்ந்து வரும் நதியும் நீ, மதிய நேரத் தென்றல் நீ, மண்ணில் உலவும் தேவதை நீ, புதிய உலகின் பழமை நீ, பூத்து நிற்கும் தாய்மை நீ..!அம்மா உனக்கு அன்னையர் தினம் வாழ்த்துகள்

அம்மா இல்லாத உயிர்களில்லை. அம்மா இல்லாது உலக இயக்கமே இல்லை. அம்மாக்களினால் ஆனது இவ்வுலகம்..!

நீ நிர்கதியாக நிற்கும் பொழுது உன்னை சுற்றியுள்ள அனைத்து மனித உறவுகளும் உன்னை விட்டு விலகும்; எந்த சூழ்நிலை வந்தாலும் உன்னை விட்டு விலகாத ஒரே உறவு "அம்மா"..! அன்னையர் தின வாழ்த்துகள்.


தன் உயிரைக் கொடுத்து, மற்றொரு உயிரைக் காப்பாற்றும் ஒரே தெய்வம், அம்மா.. அனைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்..!

ஊனாகி, உடலாகி, உயிராகி.. உயிர் தந்த அம்மா..! உடல் தந்து… உதிரம் பெருக்கி… ஆணோ, பெண்ணோ உருவறியாமல்… உவகை பொங்க பெற்றெடுக்கும் அம்மாவை, நினைக்கும் போதே மனம் கசியும், விழியோரம் கண்ணீர் பெருகும்.. அன்னையர் தின வாழ்த்துகள்..!

ஒரு தாயின் பாசம், அந்த வானத்தைப் போல் அளவுக்கடந்து இருக்கும்..! தாய்மார்கள் அனைவருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துகள்..!

இது வரை நான் கண்ட வெற்றி தோல்விக்கான (அனுபவத்தின்) அடித்தளம் என் அம்மா..! என்னை பெற்றெடுத்த என் தாய்க்கும் என்னை மகனாக ஏற்றுக் கொண்ட அன்னையர்களுக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துகள்..!


அடிப்பதும் அன்னையே, அரவணைப்பதும் அன்னையே.! இதைத் தவிர காதலுக்கு வேறு எடுத்துக்காட்டு உண்டோ? அன்னையர் தின நல்வாழ்த்துகள்..!

இழந்தவன் தேடுவதும், இருப்பவன் தொலைப்பதும் தாயின் அன்பு. அன்னையர் தின வாழ்த்துகள்..!

போற்றுதலுக்கு உரியவளை என்றும் போற்றுவோம், அன்னையர் தின நல்வாழ்த்துகள்..!

உலகில் தேடித் தேடி அலைந்தாலும் மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் தாயின் கருவறை...! அன்னையர் தின நல்வாழ்த்துகள்..!


பூமி நம்மை தாங்கும் முன்னே கருவில் நம்மைத் தாங்கிய அன்னைக்கு இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள்..!

ஆசைக் கனவு, லட்சியம் ஆகியவற்றை தொலைத்து தன் குடும்பத்திற்காக வாழும் ஓர் உன்னாஹ்ட உயிர் த்தை..! அனைத்து தாய்மார்களுக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துகள்..!

பிடிவாதம் , வெறுப்பு, கோபம் என தன் பிள்ளைகள் எதைக் காட்டினாலும் அன்பு மட்டுமே செலுத்தும் அம்மாவிற்கு இனிய அன்னையர் தின வாழ்த்துகள்..!

மறுபிறவி ஒன்று உண்டென்றால் நான் செருப்பாக பிறக்க வேண்டும். என் அம்மாவின் கால்களில் மிதிபட அல்ல, என்னைச் சுமந்த அவளை ஒரு முறை நான் செருப்பாக இருந்து சுமப்பதற்காக..! இனிய அன்னையர் தின வாழ்த்துகள்..!


மூச்சடக்கி ஈன்ற என் அன்னையை என் மூச்சுள்ளவரைக் காப்பேன்..! இனிய அன்னையர் தின வாழ்த்துகள்..!

மழையில் நனைந்த என்னை எல்லோரும் திட்டிய போது, தலையை துவட்டி விட்டு மழையை திட்டியவள் என் அன்னை..! இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள்..!

கண்கள் இல்லாமல் ரசித்தேன். காற்றே இல்லாமல் சுவாசித்தேன். கவலைகள் இல்லாமல் வாழ்ந்தேன். என் தாயின் கருவறையில் மட்டும்..! இனிய அன்னையர் தின வாழ்த்துகள்..!

படைத்தவன் கடவுள் என்றால் என் தாயே எனக்கு முதல் கடவுள்..! இனிய அன்னையர் தின வாழ்த்துகள்..!


என் முகம் பார்க்கும் முன்னே.. என் குரல் கேட்கும் முன்னே..என்னை நேசித்த ஒரே இதயம் என் அன்னை..! என் தாய்க்கு இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள்..!

ஒவ்வொரு நாளும் கவலைப்படுவாள், பிள்ளைகளைப்பற்றி..! ஆனால் ஒரு நாளும் தன்னைப் பற்றி கவலைப் படமாட்டாள்..! என்னை ஈன்ற அன்னைக்கு இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள்..!

ஆயிரம் உறவுகள் அணைத்திட இருந்தாலும் அன்னையே..உன்னைப் போல அன்பு செய்ய யாரும் இல்லை..! இனிய அன்னையர் தின வாழ்த்துகள்..!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story