Mother in law quotes in tamil-மாமியார் என்பவர் மற்றுமொரு தாய்..!

Mother in law quotes in tamil-மாமியார் என்பவர் மற்றுமொரு தாய்..!
X

Mother in law quotes in tamil-மாமியார் மேற்கோள்கள்.(படம் விக்கி காமன்ஸ்.-நன்றி)- மருமகனை வரவேற்கும் மாமியார்.

மனைவி மூலமாக வரும் புதிய சொந்தம் தழைத்து நீடிக்கும் ஒரு உறவின் கயிறு. அந்த கயிற்றின் தொடக்கப்புள்ளி மாமியார்.

Mother in law quotes in tamil

மாமியார் என்பது ஒரு புது உறவு. ஆமாம், திருமணம் ஆனதும் மனைவி மூலமாக வந்த இரத்த சொந்தம். இனி காலம் முழுவதும் உறவின் தொடராக புதிய சொந்தங்களின் ஒரு நெடும்பாதை உருவாகிச் சென்றுகொண்டிருக்கும். இதுதான் வாழையடி வாழையாக தொடரும் பந்தம்.


இதோ மாமியார் குறித்த பெருமைக்குரிய மேற்கோள்கள்

ஒரு தாய் உன்னைப் பெற்றெடுக்கிறாள். உனக்கு ஒரு வாழ்க்கையைத் தருகிறாள். ஆனால் ஒரு மாமியார் தன் உயிரைக் கொடுக்கிறாள். - அமித் கலந்த்ரி

அற்புதமான தாயைப் பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள். நான் என் மாமியார் மூலமாக இரண்டு முறை ஆசீர்வதிக்கப்பட்டேன் - யாரோ

மாமியார் ஒரு குடும்பத்தின் மையம் என்று சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் . யாரோ

ஒவ்வொரு வெற்றிகரமான மனிதனுக்கும் பின்னால் ஒரு பெருமைமிக்க மனைவி மற்றும் ஆதரவான மாமியார் இருக்கிறார். - ஹூபர்ட் எச். ஹம்ப்ரி

Mother in law quotes in tamil

உங்களை ஆதரிக்கும் அற்புதமான மாமியார் இருந்தால், நீங்கள் அதிர்ஷ்டசாலி என்பதை புரிந்து கொள்ளுங்கள் .- யாரோ

ஒரு மாமியார் தனது மருமகனுக்காக தரும் பாராட்டு வெகுமதியை விட வேறொன்றும் பெரிதாக இருந்துவிடுவதில்லை-க.சு.பூங்குன்றன்

ஒரு சாதனையை விட மகிழ்ச்சியான ஒரே விஷயம், ஒரு அழகான மற்றும் புத்திசாலியான மாமியார் கிடைப்பது.

நான் என் மாமியாரை வெறுக்காமல் அவரை ஏற்றுக்கொண்டேன். இறுதியாக அவரைப் பாராட்டினேன். அவரது மகளை திருமணம் செய்துகொண்டபோது அவர்மீது ஏனோ வெறுப்பாகத் தோன்றியது. ஆனால் நான் இப்போது அமைதியாக மதிக்கிறேன். - அய்லெட் வால்ட்மேன்


Mother in law quotes in tamil

பணக்கார மனைவி மற்றும் தாராள மாமியாரை விட சிறந்தது வாழ்க்கையில் எதுவுமில்லை.

ஒரு மருமகன் தன்னால் பூரணமாக இருக்க முடியாது. ஒரு அழகான மாமியார் அவருக்கு கிடைப்பதால் மூலமாக அவர் மாமியாரின் மகள் மூலமாக முழுமை பெறுகிறார். -க.சு.பூங்குன்றன்

எனக்கு என் மாமியாருடன் நல்ல உறவு இருக்கிறது. நாங்கள் இருவரும் சிம்ம ராசிக்காரர்கள். அதனால் நாங்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்கிறோம் . - டோரி அமோஸ்

ஒவ்வொரு வெற்றிகரமான நபரின் பின்னால், மிகவும் வெற்றிகரமான மாமியார் நிற்கிறார் .- லூ ஹோல்ட்ஸ்


Mother in law quotes in tamil

உங்கள் மகளை அன்பான மற்றும் பொறுப்பான நபராக வளர்த்துள்ளீர்கள், என் இனிய மாமியாரே. எனக்கு மனைவியாகி எங்கள் குழந்தைகளையும் நன்றாகவே வளர்ப்போம். அதற்கு என் மாமியாரே உந்துசக்தி ..!

நீங்கள் என் மாமியாராக இருக்கலாம். ஆனால் நான் எப்போதும் உங்களை என் நட்புள்ள தோழியாகவே கருதுகிறேன்.

மதிப்பிற்குரிய மாமியார், என் திருமணத்திற்குப் பிறகு என் வாழ்க்கையில் என்னை வழிநடத்தியவர. அவருக்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை.

என் கணவர் என்னை ஒரு இளவரசி போல நடத்துகிறார். அவரது மாமியாரை எனது தந்தை ராணியாக நடத்தியதைப்போல. க.சு.பூங்குன்றன்


Mother in law quotes in tamil

என் மாமியார் என்பவர் எனக்கு மற்றுமொரு தாய். க.சு.பூங்குன்றன்

நீங்கள் என் தாயிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர். ஆனால் ஒரு வகையில்,நீங்களும் அதே குணமுடையவர். எனக்கு நல்ல மனைவியைத் தந்த நீங்கள் நல்லதொரு தாயாகத்தானே இருக்கவேண்டும். எனக்கு கிடைத்த பெரிய சொத்து என் மாமியார். - க.சு.பூங்குன்றன்

எனக்கு நீங்கள் அளித்த பரிசு, என் கனவுகளின் தேவதையை எனக்குப் பெற்றுக்கொடுத்தது. வேறு எந்த பரிசும் எனக்கு மேலானது இல்லை. -க.சு.பூங்குன்றன்

உன் அம்மாவைப் போலவே உன் மாமியாரும் அருமையான அம்மாதான். அவரை நன்றாக நடத்துங்கள். அதனால் உங்கள் குழந்தைகளும் உங்களை அதே வழியில் நடத்துவார்கள்.


Mother in law quotes in tamil

வாழ்க்கையில் எனது முதன்மை லட்சியம், என் மாமியாரின் சிறந்த நண்பராகி, வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அவருக்கு உதவ வேண்டும் என்பதே.

நான் இரண்டு தாய்மார்களால் ஆசீர்வதிக்கப்படுவேன் என்று எதிர்பார்க்கவில்லை.ஆமாம், ஒன்று என்னை பெற்றெடுத்த தாய். இன்னொன்று எனக்கு மாமியாராய் வந்தவர். இரட்டிப்பு மகிழ்ச்சி பெற்றேன்.க.சு.பூங்குன்றன்

என் தாயுடனான பந்தம் என் மாமியாருடனும் தொடர்கிறது. நாங்கள் பகிர்ந்து கொள்ளும் இந்த அன்பின் பந்தம் மென்மையானது. அது எங்கள் இதயத்தை ஈரமாக்குகிறது. க.சு.பூங்குன்றன்

ஒரு மனிதருக்கு தாய்,தந்தை, குரு போல மாமியாரும் அடுத்த நிலைக்கு வருகிறார். ஆமாம், அவரும் தாய்க்கு இணையாக வழிகாட்டியாக இருக்கிறார். -க.சு.பூங்குன்றன்

Mother in law quotes in tamil

ஒரு தாய் உனக்கு உயிரைக் கொடுக்கிறார். ஆனால் மாமியார் உனக்கு ஒரு உயிரைத் தருகிறாள், உனக்கான ஒரு உறவாக,மனைவியாக.

உங்கள் மாமியாருக்கு வயதாகும்வரை உங்கள் மனையோடு தாராளமாக சண்டைபோடுங்கள். ஏனெனில் உங்கள் மாமியார் உங்களுக்கு உதவ வருவார். -க.சு.பூங்குன்றன்

நீங்கள் எனக்கு அன்பான மனைவியைக்கொடுத்தீர்கள். அவளோடு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கிறேன். எனது குடும்பமும், உங்கள் குடும்பமும் வாழையடி வாழையாக தொடரும் உறவானது எனது மாமியார் என்கிற ஒற்றைச் சொல்லிலே. -க.சு.பூங்குன்றன்


Mother in law quotes in tamil

என் தாயைப் பிரிந்து இருந்த காலங்களில் உங்கள் வழிகாட்டுதல் எனக்கு என் தாயின் பிரிவை மறக்கச் செய்திருந்தது. ஏனெனில் என் மாமியார் இன்னொரு தாயாக இருந்தார்.-க.சு.பூங்குன்றன்.

என் மனைவி குடும்பம் நடத்தும் ஒவ்வொரு நொடியிலும் அவளுக்குள் என் மாமியாரைப் பார்க்கிறேன். அவரது உயிரில் வந்த புது உயிர் இவள்தானே.-க.சு.பூங்குன்றன்.

மறு-மகளாய் ஆனேன் உங்களுக்கு. எனக்கு ஒரு நல்ல கணவனை ஈன்றளித்தீர்கள். எனக்கு நல்ல மாமியாராய் இருந்தீர்கள். உங்களுக்கு நான் அளிக்கும் மரியாதை நாளை எனக்கும் கிடைக்கும். -க.சு.பூங்குன்றன்

Tags

Next Story