Mom Quotes In Tamil-அம்மா என்றால் அகிலமும் அதிரும்..! அன்பின் நீரூற்று..!

Mom Quotes In Tamil-அம்மா என்றால் அகிலமும் அதிரும்..! அன்பின் நீரூற்று..!
X

Mom Quotes In Tamil-அம்மா மேற்கோள்கள் (கோப்பு படம்)

இந்த உலகில் உயிரினங்கள் தாய் இல்லாமல் பிறக்க முடியாது. தாய்தான் உலகினை அறிமுகப்படுத்தும் ஆசான்.

Mom Quotes In Tamil

இந்த உலகில் உயர்ந்த, ஒப்பீடற்ற அன்பை பொழிபவள் தாய் மட்டுமே. அன்பு என்பது உள்ளத்தில் இருந்து எழுவது. ஆனால் தாய்க்கு மட்டும் கருவறையில் இருந்து அன்பு பொங்கும். பிள்ளையைக் காணாவிட்டால் அடிவயிறு பற்றிக்கொள்ளும். பெற்ற வயிறு பிசையும்.


வெளியில் சென்ற பிள்ளைகள் அலலது பள்ளிக்கூடம் சென்ற குழந்தைகள் வீடு வந்து சேரும்வரை தாய்படும்பாடு அளவிடமுடியாதது. அன்புக்கு ஒரு அளவுகோல் உருவாக்கினால் அதற்கு அம்மா என்று பெயர் வைக்கலாம். மகனோ அலலது மகளோ மோசமானவர்கள் என்றால் கூட மற்றவர்கள் குறைகூறினால் தாய்க்கு பிடிக்காது.

Mom Quotes In Tamil

தன பிள்ளைகளை குறை கூறுபவர்களிடம் மல்லுக்கு நின்று அதற்கு விளக்கம் அளிப்பாள். 'ஆமா, பெத்து கஷ்டப்பட்டு படிக்கவச்சா. பிள்ளைங்க கவனிக்காம அம்போன்னு விட்டுட்டு போய்ட்டாங்க. ஆனாலும் பிள்ளைங்களை ஒன்னும் சொல்லிடக்கூடாது. அதுல மட்டும் கிழவிக்கு குறைச்சல் இல்லை.' என்று ஊரார் பேசினாலும் தாய் விட்டுக்கொடுப்பதில்லை. அதுதான் தாய்க்கும் மற்றவர்களுக்கும் உள்ள வேறுபாடு.

தாய் கடவுளுக்கு இணையானவள். இல்லையில்லை தாய்தான் நாம் கண்கண்ட கடவுள். தாய் உயிருடன் இருக்கும்வரை தாயை விட்டுவிடாதீர்கள். தாய் நமது கண்கண்ட தெய்வம்.


இதோ நமது வாசகர்களுக்காக அம்மா வாசகங்கள் :-

தொப்புள் கொடியில் பிணைத்தவளே. கொஞ்சும் அன்பில் எனை இணைத்தவளே. என் மூச்சுக்கு உன் மூச்சைத் தந்தவளே. எனை ஈன்றெடுத்த என் தாயே? நீ இல்லாத உலகம் எனக்கு பாலையாகும்.

எத்தனை காலங்கள் ஆனால் என்ன? எத்தனை ஜென்மங்கள் கடந்தால் என்ன? உன் அன்பு மட்டும் என்றும் குறையுமா அம்மா?

ஒவ்வொரு உறவுக்கும் ஒரு எதிர்பார்ப்பு ஒன்று இருக்கும். ஆனால் உன் உறவுக்கு மட்டும் தான் எந்த எதிர்பார்ப்பும் இல்லை அம்மா.


Mom Quotes In Tamil

நான் அழுத பொழுது என்னை சிரிக்க வைத்த முகம். என்றுமே என்னை வெறுக்காத குணம். தவறுகளை மன்னிக்கும் மனம். அளவு இல்லாத பாசம் கொண்ட உள்ளம். மற்றவர்கள் காட்டிடாத நேசம் உடையவள் தான் அம்மா. ஒப்பீடற்றவள்.

அழுவதற்கு கண்கள், அணைப்பதற்கு கைகள், சாய்ந்து கொள்ள தாயின் மடி எப்பொழுதும் காத்திருக்கும். இது இருந்தால் வாழ்க்கை சொர்க்கம்.


Mom Quotes In Tamil

தோட்டத்திற்கு அழகு பூக்கள். என் வெற்றிக்கு அழகு அம்மா.

எனக்கு உயிர் தந்த உன்னை என் உயிர் உள்ளவரை என் உள்ளத்தில் வைத்து தாங்குவேன்.

மகன்களின் இதயக்கூட்டில் உண்மையான ராணி என்றால் அது, அம்மா நீ மட்டும் தான்.

அன்பு என்ற சொல்லுக்கு அர்த்தம் உன்னைத்தவிர வேறு யாருக்குச் சொல்ல முடியும்? பாசம் என்ற சொல்லுக்கு முழுப் பொருளும் நீயே.


Mom Quotes In Tamil

கருவறையில் வளர்ந்துக் கொண்டிருக்கிறது என சொல்லிச் சிரித்தாள். வளர்பிறையாய் உன் கருவில் வளரும்போதே முழுநிலவாய் நீ என்னை தொட்டு ரசித்தாய்.

பிறக்கும் முன்னே உன் வலி கொண்டு உலகை கண்டேன். இறந்த பின்னே உன் எதிர்நின்று என் உலகை காண்கிறேன் அம்மா.

உன் தோள் சாய்த்து நீ என்னைத் தாலாட்டுப் பாடும்போது சொர்க்கத்தில் இருப்பது போல ஆனந்தம் கொண்டேன் அம்மா.


Mom Quotes In Tamil

கருவறையில் இருந்த உணர்வை உன் மடியில் உணருகிறேன் அம்மா.

ஆயிரம் கவிதைகள் உனக்காக எழுதினேன். ஆனால், நீயோ அம்மா என்ற ஒரு வார்த்தை கவிதைக்குள் அனைத்தையும் அடக்கிக் கொண்டாய்.

நிலா காட்டி சோறு ஊட்டும்போது தெரியாது அம்மா என்னையே சுற்றி வந்த நிலா நீ தான் என்று.

இவ்வுலகில் அன்பை மட்டுமே எதிர்பார்க்கும் ஒரு உறவு நீ மட்டுமே.


Mom Quotes In Tamil

கருவில் சுமந்த உன்னை என் வாழ்நாள் வரை மனதில் சுமந்து கொண்டிருக்கிறேன் ஏனெனில் உன் கடமைக்கு அல்ல உன் பாசத்திற்கு அம்மா.

நான் கடவுளிடம் மனதார வேண்டுகிறேன் மீண்டும் நீயே என்னை கருவில் சுமக்க.

என்ன தவம் செய்தேன் உனக்கு நான் மகனாய் பிறக்க. என்ன வரம் பெற்றேன், நீ என் தாயாய் வந்திட. அடுத்த பிறவியிலும் இதே வரம் பெற்றிட இறைவனிடம் வேண்டுகிறேன்.

நீ மண்ணில் உருவாகி மறைந்தாலும் கூட உன் ஆத்மா என்னை கவனித்துக் கொண்டே தானே இருக்கும் அம்மா.


Mom Quotes In Tamil

நான் வாழ்க்கையில் தோற்றுக் கொண்டே இருந்தாலும் என்னை நீ ஜெயிக்க வைத்துக் கொண்டே தான் இருப்பாய் என் அம்மா.

நான் நோய் என்று படுத்து விட்டால் அந்த நோய்க்கே சாபம் விட்டவள், நீதானே அம்மா.

ஆயிரம் சாமிகள் என் கண்ணுக்குத் தெரிந்தாலும், என் முதல் சாமி நீதானே அம்மா.

நான் எத்தனை முறை கீழே விழுந்தாலும் என்னைத் தூக்கி விட ஓடோடி வருபவள் நீ மட்டும் தானே அம்மா.


Mom Quotes In Tamil

நீ உன் பிறவியை, எனக்காக தியாகம் செய்யத் துணிந்து விட்டாய். உனக்காக நான் என்ன செய்யப் போகிறேன் அம்மா.

கடவுள் தந்த உயிர் என்று சொல்லவா? இல்லை கடவுள்களிலும் உள்ள உயிர் என்று சொல்லவா?

நிகரில்லா என் சுவாசம் நீயே. என் மனம் தினம் ஏங்கும் அன்பும் நீயே அம்மா.

உருவம் அறியா கருவிலும் என்னை காதல் செய்தவளே, உன்னைப் பற்றி எழுதாமல் நான் எழுதும் எழுத்துக்கள் தான் கவிதை ஆகுமா?


Mom Quotes In Tamil

பிறக்கும் போது உன் வலியை உணர்ந்து தான் அழுது நான் பிறந்தேனோ தாயே.

பாலூட்டி சீராட்டி பசி மறந்து என்னை காத்தாயே, அம்மா என நான் அழைக்கும் ஒரு சொல்லுக்கு.

வேகமும் விவேகமும் கற்றுத் தந்தாயே, உன்னாலே நடந்தேனே உன்னாலே நான் இன்று பயின்றேனே தாய் தமிழை நன்று.

என் பிள்ளை அழகு என்று ஊரெல்லாம் நீ சொல், கரும்புள்ளி ஒன்று மழலையில் என் கன்னத்தில் நீ வைத்தாயே? கர்வத்தில் சிரித்தேனே அழகு என்று நான் என்னை எண்ணி.


Mom Quotes In Tamil

சிறுவயதிலே கடைவீதியில் உன் கரம் பிடித்து நான் நடந்த நாட்களே, உலகை சுற்றிய நொடிப் பொழுதாய் என் மனம் உணர்ந்ததே அம்மா.

ஆழ்கடலில் ஆழம் பெரிதா? நிமிர்ந்து நிற்கும் இமயம் பெரிதா? இல்லை, நீ காட்டும் பேரன்பே பெரியது என்பேன் நான் இவ்வுலகில் என்றும்.

நீ திட்டி நான் அழுததில்லை. நீ அடித்தும் எனக்கு வலித்ததில்லை. வலிக்காமல் அடிப்பதை தான் எங்கு நீ கற்றாயோ? என் மனதை உடைக்காத ஓர் உயிரும் நீயே.


Mom Quotes In Tamil

எத்தனை உறவுகள் தான் எத்திசையில் தேடி வந்தாலும், ஏன் ஆயிரமாயிரம் அன்பை பொழிந்தாலும், அது தாய் அன்பிற்கு ஈடாகுமா?

தோல்வி கனம் என்னைத் துரத்தும்போது என் மனம் தேடுதே, உன் மடியில் சாய்ந்து இளைப்பாறும் இடம் அதே அம்மா.

ஒத்த உசுருக்குள்ள எத்தனையோ ஆசைகள் நீ சுமந்தாய். அத்தனையும் உனக்காக அல்ல எனக்காகத் தானே அம்மா?

இரவு பகல் பாராமல் ஒளிவிளக்காய் நீ இருந்தாய், உன் நிழலிலும் என்னை மிதிக்காமல் கண் விழித்துப் பார்த்துக் கொண்டாய்.

Tags

Next Story