Mokka jokes in tamil-சிரிக்க தெரிஞ்ச மனசுக்குத்தான் ரசிக்கவும் தெரியும்..! சிரிங்க..!

Mokka jokes in tamil-சிரிக்க தெரிஞ்ச மனசுக்குத்தான் ரசிக்கவும் தெரியும்..! சிரிங்க..!
X

mokka jokes in tamil-ஜோக்ஸ் (கோப்பு படம்)

சிரிப்பு உடலில் தோன்றும் அத்தனை நோய்க்கும் தீர்வளிக்கும் மருத்துவக் கடவுள். நோய்தீர்க்கும் அட்சய பாத்திரம்..!

Mokka jokes in tamil

சிரிப்பு என்பது மனதையும் உடலையும் ஆரோக்யமாக வைத்திருக்கும் ஒரு மாய மந்திரம். வாய்விட்டு சிரிச்சா நோய்விட்டுப் போகும்னு அதனால் தான் சொல்லி வைத்திருக்காங்க. சிரிப்புக்காக சுரக்கும் அமிலம் தீங்கற்றது. அது சிரிப்பவரை மட்டுமல்ல எதிரில் உள்ளவரையும் மகிழ்விக்கும்.

சிரிப்பு, மனிதருக்கு மட்டுமே கிடைத்த வரப்பிரசாதம், அருள்பிரசாதம். சிரிப்பதற்கு காசு, பணம் தேவையில்லை. மனம் மட்டும் இருந்தால் போதும். கொந்தளிப்புமிகு கோபத்தைக்கூட ஒரு புன்னகை மாற்றிவிடும்.

உழைத்துக்களைத்து வீடு திரும்பும் தந்தையிடம் குழந்தைகளின் சிரிப்பு ஒன்றே அத்தனை களைப்பையும் மாயமாக மறையச்செய்துவிடும். சிரிங்க..சோகம் மனதுக்குள் இருந்தாலும் அதை மறந்து சிரிங்க.


நீங்க சிரிப்பதற்கென்றே இங்கே மூக்கை ஜோக்குகளை தந்துள்ளோம். படீங்க..சிரீங்க..ஹி..ஹி..ஹி..!!

Mokka jokes in tamil

லெட்டெர்க்கும் புத்தகத்துக்கும் என்ன வித்தியாசம்?

Letter ஐ கிழிச்சிட்டு படிப்போம். புத்தகத்தை படிச்சிட்டு கிழிப்போம்.

மிகவும் நீளமான இசைக்கருவி எது?

புல் 'லாங்' குழல்

ஒரு மாமி இட்லியை தலைல வெச்சிக்கிட்டாங்களாம் ஏன்?

ஏன்னா அந்த இட்லி 'மல்லிப் பூ' போல இருந்திச்சாம்.

The Hindu paper ரொம்ப Weightஆ இருக்கு ஏன்?

ஏன்னா அது மேல யானை இருக்குல்ல.

Costlyஆன கிழமை எது?

“வெள்ளி” கிழமை

எலிய என்ன பண்ணினால் யானை ஆகும்?

எலிக்கு ஒரு பேண்ட் (Pant) போட்ட எலிபெண்ட்(elephant) ஆகிடும்.

Mokka jokes in tamil

“தமிழ் நியூ இயர்”-க்கும், “இங்கிலிஷ் நியூ இயர்”-க்கும் என்ன வித்தியாசம்?

4 மாசம் தான் வித்தியாசம்

குடிக்க முடியாத டீ எது?

கரண்டி

கால்கள் இல்லாத ஆட்டின் பெயர் என்ன?

ஆட்டு இறைச்சி

டயபர்க்கும் அரசியல்வாதிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. என்னன்னு சொல்லுங்க..!

இருவரும் அடிக்கடி மாற வேண்டும்

வேலைக்கு போற விலங்கு எது?

பனிக்(பணி) கரடி.

நாம ஏன் படுத்துக்கிட்டே தூங்குறோம்?

நின்னுக்கிட்டே தூங்குனா கீழ விழுந்துடுவோம்.

கொசு நம்ம வீட்டுக்கு வராம இருக்க என்ன பண்ணனும்?

அதுகிட்ட நம்ம வீட்டு அட்ரஸ் கொடுக்காம இருக்கணும்.

”மழை மேகம்” என்று சொல்லுக்கு எதிர்ச்சொல் என்ன? (mazhai may come)

மழை வராமல் இருக்கலாம்

பாம்புக்கும் ஷாம்புக்கும் என்ன வித்தியாசம்?

பாம்பு போட்டா வாயிலே நுரை வரும், ஷாம்பூ போட்டா தலையிலே நுரை வரும்.


Mokka jokes in tamil

கண்டக்டர்: நான் விசில் அடிக்கிறேன் நீ பஸ்சை நிறுத்தாம போற?

டிரைவர்: நான் பிரேக் அடிக்கிறேன் பஸ் நிக்கல. நீ விசில் அடிச்சா நின்னுறுமா?

நண்பன் 1: சிகரெட் பிடிச்சா கேன்சர் வரும்

நண்பன் 2: இல்லையே,நான் பிடிக்கும் போது புகைதான் வந்துது

“எனது சுழற்சியை பிடி, ஐயா?” (encyclopedia)

என்பதற்கான ஒரு சொல் என்ன?

கலைக்களஞ்சியம்

நண்பர் 1: பென்(ண்)குயின் எதிர் என்ன

ஆண்கிங்

புறா, குயில், அணில் இந்த மூன்று பேர் மூலமாக அஞ்சல் அனுப்பினால், எது முதலில் சென்றடையும்? ஏன்?

அணில் மூலம் அனுப்புவது சீக்கிரம் போகும். ஏன்னா, அணிலுக்கு பின் கோடு (Pincode) இருக்கே..ஹி..ஹி..

பொங்கலுக்கு அரசு விடுமுறை விடுவாங்க.

ஆனா இட்லி தோசைக்கு விடுவார்களா..?

திருவள்ளுவர் 1330 குறள் எழுதியிருந்தாலும்,

அவரால் ஒரு குரலில் தான் பேசமுடியும்

Mokka jokes in tamil

பால்கோவா பாலில் இருந்து பண்ணலாம்,

அதுக்காக ரசகுல்லாவ ரசத்தில் இருந்து பண்ண முடியுமா?

ராமராஜன் ஹாலிவுட் படம் பண்ணா என்ன ரோல் பண்ணுவார்?

கவ்பாய் (Cow Boy) பாத்திரம் (அப்போ.. ஷென்பாக்மே ஷென்பாக்மே..லாங்வுட் சாண்டல் வுட்டே- என்று பாட்டு பாடியிருப்பாரோ)

சினிமா பாக்க போனா சி-ரோ ல உக்காரக் கூடாது ? ஏன்..?

முன்னால் பி-ரோ இருக்கு. அது படம் பார்ப்பதை மறைக்கும்

உஷா: எங்க மாமாவுக்கு ஒரு பெரிய ஆபரேஷன் நடந்திருக்கு,

சிவா: பெரிய ஆபரேஷன் அப்ப மேஜர் ஆபரேஷன் தான்.

உஷா: அய்யோ, ஆபரேஷன் நடந்திருக்கு

சிவா : ஓ, மேஜர் இல்லயா ?

ராமன், லட்சுமணன், சீதை ஆகியோர் ஒரே பேருந்தில் சென்றனர். ராமன் & லட்சுமணன் மட்டும் அயோத்திக்குப்பம் நிறுத்தத்தில் இறங்கினர். சீதை ஜன்னல் வழியே குதித்தாள், ஏன்?

ஏனென்றால் சீதை “படி தாண்டா பத்தினியாச்சே”. எப்பிடி..??

காட்டுல வரி காட்டும் ஒரே விலங்கு எது?

வரிக்குதிரை


Mokka jokes in tamil

எலுமிச்சம் பழம் ஆணா இல்ல பெண்ணா?

ஆண் தான், அதான் புழிஞ்சா சார் (சார்) வர்றதுல்ல

ஒருத்தர் கல்யாணம் பண்றதுக்கு விவசாய கடன் கே ட்டாராம் ஏன்?

ஏன்னா அது ஆயிரம் காலத்து பயிராம்.

அண்ணனுக்கும் தம்பிக்கும் என வித்தியாசம்?

வயசு வித்தியாசம்

கசப்பே இல்லாத மொழி எது?

தேன்மொழி

வெயிட்டு இல்லாத வீடு எது?

லைட் ஹவுஸ்

கீழே விழுந்தாலும் காயமடையாதது எது?

மழை

நண்பர் 1 : உங்கள் குழந்தை உங்களைப் போலவே இருக்கிறது.

நண்பர் 2 : உஷ்.. உஷ்.. சத்தமாக சொல்லாதீங்க, அது பக்கத்து வீட்டுப் பெண்ணின் குழந்தை.

எந்த வில்லை கட்ட முடியாது?

வானவில்லை

Mokka jokes in tamil

ஒரு பச்சைக் கல்லை கடலில் எறிந்தால் அது என்னவாகும்?

ம்ம்...ஈரமாகும்

ஆசிரியர்: “ABCD” இல் மொத்தம் எத்தனை எழுத்துக்கள் உள்ளன?

மாணவர்: 4

ஆசிரியர்: “ABCD” மட்டும் அல்ல, முழுமையான தொகுப்பைக் கூறினேன்.

மாணவர்: 52

ஆசிரியர்: என்னது? 52ஆ எப்படி?

மாணவர்: சிறிய எழுத்து 26 மற்றும் பெரிய எழுத்து 26.

மகள் : அம்மா, இன்று நான் செய்யாத காரியத்திற்காக டீச்சர் என்னை அடித்தார்.

அம்மா: அது உங்க டீச்சரை ரொம்ப கேவலப்படுத்துது. நீ என்ன செய்யவில்லை?

மகள் : வீட்டுப்பாடம்.

நண்பர் 1: உங்கள் மனைவி தனியாக இருக்கும்போது தனக்குத்தானே பேசுவது உண்மையா?

நண்பர் 2: எனக்குத் தெரியாது. அவள் தனியாக இருந்த போது நான் அவளுடன் இருந்ததில்லை.

ஒரு சுவரைக் கட்ட ஆறு பேர் எட்டு மணி நேரம் எடுத்துக் கொண்டால், அதைக் கட்ட மூன்று பேர் எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்வார்கள்?

நேரம் தேவையில்லை. ஏனென்றால் சுவரை ஏற்கனவே கட்டிமுடித்தாச்சு.


( Exam ஆரம்பிக்கும் முன்…)

மாணவன் : டீச்சர் ஒரு டவுட்

டீச்சர் : Exam ஆரம்பிக்க இன்னும் அரை மணி நேரம்தான் இருக்கு. இப்ப போயி என்னடா Doubt..?

மாணவன் : இன்னிக்கு என்ன Exam..?


Mokka jokes in tamil

முட்டையே போடாத பறவை என்ன பறவை?

ஆண் பறவை

நாலு “T” ஒரு “G” இருக்க ஆங்கில வார்த்தை என்ன?

Originality (ஒரிஜினாலிட்டி)

மரம், செடி இல்லாத காடு எது?

சிம்கா(ர்)டு

பக்கத்து வீட்டு பையன் ஊதுபத்தி ஸ்டாண்டை விழுங்கிட்டான், ஆனாலும் அவனுக்கு ஒன்னும் ஆகல. ஏன்?

ஏன்னா அவன் விழுங்கினது வாழை பழம்.

எல்லா கிளியும் பறக்கும், ஆனால் ஒரு கிளி மட்டும் பறக்காது அது என்ன கிளி?

சங்கிலி(ளி)

தண்ணீருக்கும், கண்ணீருக்கும் என்ன வித்தியாசம்?

“த” “க” தான் வித்தியாசம்

பல் வலிக்கு முக்கியமான காரணம் எது?

பல் தான்

. பசு ஏன் பால் தருது?

அதனால டீ, காபி தர முடியாது.

கல்யாண வீட்ல ஏன் வாழை மரம் கட்றாங்க?

கட்டலன்னா கீழ விழுந்திடும்ல அதனாலதான்

கோலம் போடுவதற்கு முன்னாடி எதுக்கு தண்ணி தெளிக்கணும்?

கோலம் போட்டதுக்கு அப்புறம் தெளிச்ச கோலம் அழிஞ்சுடும்ல..!

Mokka jokes in tamil

2050-ல உலகம் எப்படி இருக்கும்?

உருண்டையா தான் இருக்கும்

இந்தியா, பாகிஸ்தான் இரண்டுக்கும் நடுவுல என்ன இருக்கு?

கமா “,” தான் இருக்கு

ஒருத்தர் கைல கிடைச்ச பொருள் எல்லாத்தையும் தூக்கி வீசிகிட்டே இருப்பாராம், ஏன்?

ஏன்னா அவருக்கு “வீசிங்” பிரச்னை இருக்காம்

ஒரு கோழி காலைநேரத்துலே கத்துனா என்ன அர்த்தம்?

அந்த கோழி எழுந்துருச்சுனு அர்த்தம்.


எலி சாப்பிட்டு மிச்சம் வெச்ச சாதம் என்ன சாதம்?

எலிமிச்சசாதம்

ஒருத்தர் ஒரு “Crow” வச்சுருந்தார் அது ரொம்ப ஸ்மூத்தா “Soft”-ஆ இருந்துச்சு அந்த Crow-க்கு அவர் என்ன பெயர் வைப்பார்?

“MI CRO SOFT”

அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?

ஒரு ஆணைக் காதலிக்கும்போது நீங்க அடிமை

அதுவே அந்த ஆணையே கல்யாணம் பண்ணிட்டிங்கன்னா நீங்க கொத்தடிமை

ஜனவரி – 14 க்கும், பிப்ரவரி – 14 க்கும் என்ன வித்தியாசம்?

ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்தால் அது ஜனவரி – 14

அதே பொண்ணு அல்வா கொடுத்தா அது பிப்ரவரி – 14

ரெண்டு பேர் ஒரு ஹோட்டலுக்கு போய் நாலு நாலு இட்லி ஆர்டர் பண்றாங்க

அதை சாப்பிட்டதும் அவங்களுக்கு food poison ஆகிடிச்சி ஏன்?

ஏன்னா அது நாலு நாள் இட்லி

யோவ், ஏன்யா உன்னோட ஓட்டுநர் உரிமத்தை குழி தோண்டி பொதைச்சிட்ட ?

அது Expire ஆகிருச்சு! அதான் !

Mokka jokes in tamil

கணவன்: பொண்டாட்டியை விட பொண்டாட்டியோட சேலை தான் நமக்கு ரொம்ப மரியாதை தருது. எப்படி?

ஆமாங்க.. பீரோவ திறந்தா உடனே கால்ல விழுது.

Tags

Next Story