'சிரிப்பு' ஆயுளை கூட்டும்..! கடி..கடின்னு..கடிச்சு வச்சுருக்கோம்..! கடி ஜோக்ஸ்..!
![Mokka Jokes in Tamil Mokka Jokes in Tamil](https://www.nativenews.in/h-upload/2023/04/23/1703175-vadivel.webp)
Mokka Jokes in Tamil
Mokka Jokes in Tamil-இல்லாத ஒன்றை நினைத்து கவலைப்படுவதுதான் மனித இயல்பு. சிரிப்பு என்பது மனிதனுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். அதை அனுபவிக்கும் மனிதர்கள் குறைவு.
![](https://www.instanews.city/h-upload/2023/04/23/1703168-vadivel1.webp)
அதற்கு ஒரு கதையுடன் தொடங்கி உங்களுக்கான கடி ஜோக்ஸ்களை தருகிறோம்.
ஒரு குரங்கு குட்டி காட்டில் விளையாடும்போது குச்சி என்று நினைத்து, ஒரு பாம்பை பிடித்துவிட்டது. 'அடடா பாம்பை பிடித்துவிட்டாய். அதைவிட்டால் உன்னை கொத்திவிடுமே' என்று ஒரு பெரிய குரங்கு கூறியது. இதில் பயந்துபோன குட்டிக்குரங்கு பாம்பின் தலையை நன்றாக இறுக்கிப்பிடித்துக்கொண்டது. எங்கும் நகரவும் முடியாமல், பாம்பை விடவும் முடியாமல் மாலைவரை அந்தப்பாம்பை இறுகப் பிடித்தவாறு ஒரே இடத்தில் உட்கார்ந்து பேந்தப்பேந்த விழித்துக்கொண்டிருந்தது.
அப்போது அந்த வழியாக ஒரு ஞானி வந்தார். குரங்கின் நிலையை உணர்ந்து, 'ஏன் இப்படி பாம்பை கையில் பிடித்துக்கொண்டிருக்கிறாய்..?' என்று கேட்டார்.
பாம்பை நான் கீழேவிட்டால் என்னை கொத்திவிடுமே..' என்றது குட்டிக்குரங்கு பரிதாபமாக..
'இப்போ நான் சொல்றேன். பாம்பைக் கீழே போடு' என்றார் ஞானி. குட்டிக்குரங்கு ஞானி அருகில் இருக்கும் தைரியத்தில் பாம்பை கீழே வீசியது. பாம்பு செத்து பலமணிநேரம் ஆகி இருந்தது.
இப்படித்தான் மனிதர்களும் வலுக்கட்டாயமாக கவலைகளை தேடிப்பிடித்து கவலைப்படுகிறார்கள். கவலைகள் என்னும் பாம்பை விட்டெறிந்தால் மகிழ்ச்சி மட்டுமே இருக்கும். அதனால் சிரிங்க..சிரிங்க..சிரிச்சுக்கிட்டே இருங்க..! இதோ உங்களுக்கான கடி ஜோக்ஸ்.
![](https://www.instanews.city/h-upload/2023/04/23/1703169-vadivel2.webp)
1. ஒருத்தர் அவரோட டிரைவிங் லைசென்ஸ குழி தோண்டி புதைச்சிட்டாராம். ஏன் தெரியுமா..?
ஏன்னா அது Expiry ஆகிடுச்சாம்...ஹா..ஹா..
2. தண்ணில இருந்து கரண்டு எடுக்கறாங்க ஏன்?
ஏன்னா கரண்ட்ல இருந்து தண்ணிய எடுக்க முடியாது இல்ல அதனாலதான்.
3. லெட்டெருக்கும் புத்தகத்துக்கும் என்ன வித்தியாசம்?
Letterன்னா கிழிச்சிட்டு படிப்போம். புத்தகத்தை படிச்சிட்டு கிழிப்போம். ஹி..ஹி..
4. மிகவும் நீளமான இசைக்கருவி எது?
புல் 'லாங்' குழல் (லாங்=நீளம்)
5. ஒரு மாமி இட்லியை தலைல வெச்சி இருக்காங்க ஏன் தெரியுமா..?
ஏன்னா அந்த இட்லி மல்லி பூ போல இருந்திச்சாம். ஹி..ஹி..
6. The Hindu paper ரொம்ப Weight-ஆ இருக்கு ஏன் தெரியுமா..?
ஏன்னா அது மேல யானை இருக்குல்ல...
7. Costlyஆன கிழமை எது?
“வெள்ளி” கிழமை
8. எலிய என்ன பண்ணினால் யானை ஆக்கலாம்?
எலிக்கு ஒரு பேண்ட் (Pant) போட்டா எலிபெண்ட்(elephant) ஆகிடும்.
9. “தமிழ் நியூ இயர்”-க்கும், “இங்கிலிஷ் நியூ இயர்”-க்கும் என்ன வித்தியாசம்
ம்...ம்...4 மாசம் தான் வித்தியாசம்
10. குடிக்க முடியாத டீ எது?
கரண்டீ..தான்..
11. கால்கள் இல்லாத ஆட்டின் பெயர் என்ன?
ஆட்டு இறைச்சின்னு நினைச்சீங்களா...அதுதான் இல்லை..கால்கள் இல்லாத ஆட்டுக்கு பெயர் மாற்றுத்திறனாளி ஆடு..எப்டீ..
12. டயபருக்கும் அரசியல்வாதிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு
இருவரையுமே அடிக்கடி மாற்ற வேண்டும்
13. வேலைக்கு போற விலங்கு எது?
பனிக் (பணி) கரடி.
14. நாம ஏன் படுத்துக்கிட்டே தூங்குறோம்?
நின்னுக்கிட்டே தூங்குனா கீழ விழுந்துடுவோம். ஹி..ஹி..
15. கொசு நம்ம வீட்டுக்கு வராம இருக்க என்ன பண்ணனும்?
அதுகிட்ட நம்ம வீட்டு அட்ரஸ் கொடுக்காம இருக்கணும்.. அடி சக்கை..அட்றா சக்கை
தமிங்கலீஷில் கடி ஜோக்ஸ்
![](https://www.instanews.city/h-upload/2023/04/23/1703171-vadivel4.webp)
இதையும் படிச்சு ரசீங்கபா...இன்னொருதபா கீக்காது ..
1. ”மலைமேகம்” க்கு எதிர் பெயர் என்ன?( 'மழை' மே- கம்)
மழை வராமல் இருக்கலாம்
2. பாம்புக்கும் ஷாம்புக்கும் என்ன வித்தியாசம்?
பாம்பு கொத்தினா வாயிலே நுரை வரும், ஷாம்பு போட்டா தலையிலே நுரை வரும்.
3. கண்டக்டர்: ஏன் நான் விசில் அடிச்சு பஸ் நிக்கலே..
டிரைவர்: நான் பிரேக் அடிச்சே பஸ் நிக்கல.. நீ விசில் அடிச்சா நின்னுருமா..
கண்டக்டர் மற்றும் பயணிகள் : ஐயையோ...
4. நண்பன் 1: சிகரெட் புடிச்சா கேன்சர் வரும்
நண்பன் 2: இல்லையே,நான் புடிக்கும் போது புகைதானே வந்தது..
5. "எனது சுழற்சியை பிடி, ஐயா?" (en -cyclo -pedia ) என்பதற்கான ஒரு சொல் என்ன?
கலைக்களஞ்சியம்
6. நண்பர் 1: பென்(ண்)குயின் எதிர்ச் சொல் என்ன தெரியுமா..?
நண்பர் 2 : தெரியலையே..
நண்பர் 1 : ஆண்கிங்
7. புறா மற்றும் அணில் மூலம் நீங்கள் லெட்டர் அனுப்பினால், எது முதலில் சென்றடையும் தெரியுமா..?
அணில் லெட்டர்தான்.. ஏன்னா அணில்கிட்டாதான் பின்கோடு இருக்கு.
8. ரொம்ப நாள் உயிர் வாழ என்ன வழி?
ம்..சாகாம இருக்கணும்..
9. பொங்கலுக்கு அரசாங்கம் லீவு குடுக்கும்.
ஆனா, இட்லி தோசைக்கு லீவு குடுப்பாங்களா...
10. திருவள்ளுவர் 1330 குறள் எழுதி இருந்தாலும்
அவரால ஒரு குரலில் மட்டுமே தான் பேசமுடியும்
11. பால்கோவா பாலில் இருந்து பண்ணலாம்,
ஆனா ரசகுல்லாவ ரசத்தில் இருந்து பண்ண முடியுமா?
12. ராமராஜன் ஹாலிவுட் படம் பண்ணா என்ன ரோல் பண்ணுவார்?
கவ்பாய் - பாத்திரம் (Cowboy)
13. சினிமா பாக்க போனா சி-ரோவுல உக்கார கூடாது ? ஏன் தெரியுமா..?
ஏன்னா முன்னால பி-ரோ (பீரோ) இருக்கு அது மறைக்கும்.. மாட்டுனீங்களா..
14. உஷா: எங்க மாமாவுக்கு ஒரு பெரிய பெரிய ஆபரேஷன் நடந்திருக்கு. சிவா: பெரிய ஆபரேஷன் மேஜர் ஆபரேஷன் தான்.
உஷா: அய்யோ, ஆபரேஷன் நடந்திருக்கு சிவா: ஓ..மேஜர் இல்லயா ?
15. ராமன், லட்சுமணன், சீதை ஆகியோர் ஒரே பேருந்தில் சென்றனர். ராமன் & லட்சுமணன் மட்டும் அயோத்திக்குப்பம் நிறுத்தத்தில் இறங்கினர். சீதை ஜன்னல் வழியே குதித்தாள், ஏன்?
ஏனென்றால் சீதை “படி தாண்டா பத்தினியாச்சே”.
16. காட்டில் வரி காட்டும் ஒரே விலங்கு எது?
'வரி'குதிரை
17. எலுமிச்சம் பழம் ஆணா இல்ல பெண்ணா?
ஆண் தான். ஏன்னா நான் புழிஞ்சா சார் (சாறு) வர்றதுல்ல...
18. ஒருத்தர் கல்யாணம் பண்றதுக்கு விவசாயக் கடன் கேட்டாராம்..ஏன் தெரியுமா..?
ஏன்னா அது ஆயிரம் (1000) காலத்து பயிருல்ல
19. அண்ணனுக்கும் தம்பிக்கும் என்ன வித்தியாசம்?
வயசு வித்தியாசம்
20. கசப்பே இல்லாத மொழி எது?
தேன்மொழி
21. வெயிட்டே இல்லாத வீடு எது?
லைட் ஹவுஸ்
22. டென்சன் அதிகமா ஆனால் என்ன ஆகும்..?
பதினோரு சன் ஆகும்
23. எல்லா ஸ்டேஜ்லேயும் டான்ஸ் ஆடலாம். ஆனா ஒரு ஸ்டேஜ்ல மட்டும் ஆட முடியாது, அது எந்த ஸ்டேஜ்?
கோமா ஸ்டேஜ்
24. வீட்டு சாவி தொலைஞ்சி போச்சுனா யார் கிட்ட கேக்கணும்?
கீ(கீ)தா கிட்ட கேக்கணும்
25. பன் உள்ளே தண்ணீர் போன என்னாகும்?
பனீர் (பனீர்) ஆகும்
26. எல்லா லெட்டரும் வரமாதிரி ஒரு வார்த்தை சொல்லுங்க?
தபால் பெட்டி...ஹி..ஹி..
27. ஒருத்தர் 15 மணி நேரமா நாற்காலிலயே இருந்தாராம் ஏன்..?
ஏன்னா அவரு 'சேர்'மன்.
28.கடல் தண்ணி ஏன் உப்பா இருக்கு?
இனிப்பா (SwEEt)இருந்தா “ஈஈ” மொய்க்கும்ல
29. உயிர் இல்லாத விலங்கு எது?
கைவிலங்கு
30. சரி சொல்லும் லட்டு எது ?
'ஆம்'லட்டு
31. இரண்டு முதல் வகுப்பு மாணவர்கள் சாலையில் நடந்து செல்லும்போது ஒரு லாரி வருகிறது. அதைப்பார்த்த
ஒரு மாணவன் : டேய்..இது பொம்பளை லாரிடா..
அடுத்த மாணவன் : ஏண்டா அப்டி சொல்ற..
முதல் மாணவன் : அங்க பாருடா அது செயின் போட்டிருக்கு ( லாரியில் கீழே வரிசையாக அழகுக்கு தொங்கும் சங்கிலிகள்)
32. செங்கல்ல பட்டு எடுக்கலாம்..எப்படி
செங்கல்பட்டுல தான்..ஹி..ஹி..
![](https://www.instanews.city/h-upload/2023/04/23/1703172-vadivel5.webp)
ஆங்கிலத்தில் கடி ஜோக்ஸ்
இதையும் ரசித்துப்படிச்சி பாருங்க..
1. ஜார்ஜ் வாஷிங்டன் எப்போது இறந்தார்?
அவரது இறுதிச் சடங்குக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு
2. அகராதியில் மிக நீளமான சொல் எது?
S'mile க்குப் பிறகு ஒரு மைல் தூரம் இருப்பதால் smile தான் நீளமான சொல்...ஓகேவா..? புன்னகைக்கவும்.
3. கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன?
அவர்கள் இருவரும் ராக்கெட்டுடன் (ராக்கெட்டுகள்) மற்றும் கோர்ட்டுக்கு போவாங்க..!
4. ஆங்கிலத்தில் குளிர்ச்சியா வாழும் எழுத்து எது?
'பி' ஏனெனில் அது 'ஏ' 'சி'க்கு நடுவே உள்ளது
5. ஒரு குழந்தை ஒரு காகிதத்தில் பூஜ்ஜியத்தைப் பெறுகிறது. அப்பா கோபமாக, “என்ன இது?” என்று கேட்டார்.
அதற்கு குளந்தையின் சாமர்த்திய பதில் : 'டீச்சரிடம் எல்லா மாணவர்களுக்கும் கொடுப்பதற்கு அதிக நட்சத்திரங்கள் இல்லை. அதனால் அவர் சந்திரனை கொடுத்தார்.' சமாளித்ததற்காக அப்பா வாரி தழுவிக்கொண்டார்.
6. மூன்று கரப்பான் பூச்சிகள் சாலையில் நடந்து செல்கின்றன. திடீரென்று அவர்களில் ஒருவர் "உன்னை விரும்பு" என்று பாடத் தொடங்குகிறார். மற்ற இருவரும் ஏன் இறக்கிறார்கள்?
ஏனென்றால் அது ஒரு “ஹிட்” பாடல் ( கருப்பு ஹிட் போல)
7. ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி ஆரஞ்சு பழச்சாற்றை இரண்டு மணி நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். ஏன்னு தெரியுமா?
ஏனெனில் அதில் 'கவனம் செலுத்துங்கள்' என்று எழுதியிருந்தது..
8. ஹீரோயின் எதிர்ச் சொல் என்ன?
ஹீரோ அவுட்டா?
9. ஒரு கண்ணாடி கிளாஸை கீழே விடவேண்டும். ஆனால் அதில் தண்ணீர் கொட்டக்கூடாது..!
ம்..ம்.. ஒரு கிளாஸ் பால் விட்டால்.. தண்ணிதான் கொட்டக்கூடாது..
10. ஒரு நாள் Mr.X-ன் சிறிய மகன் ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொண்டிருந்தான். Mr.X இடம் "தாய் மொழியில் என்ன எழுத வேண்டும்:..." என்று கேட்டாராம். அதற்கு Mr.X வெறுமனே 'சுமார் 6cm என்று எழுதுன்னாராம்.(அவர் தாயின் உயர்ரத்தை கூறுகிறார்)
11. ஒரு நாள் மிஸ்டர் எக்ஸ் தீவிரமாக தனது வீட்டின் கொல்லைப்புறத்திற்குச் சென்று ஒரு டானிக் சாப்பிடுவதற்கு முன் கிணற்றை அசைக்கத் தொடங்கினார்.
ஏனெனில் டானிக் பாட்டிலில் "பயன்படுத்துவதற்கு முன் நன்றாக குலுக்கி" (shake well) என்று எழுதப்பட்டுள்ளது.
12. மகன்: அப்பா, நீங்கள் எப்போதாவது எகிப்துக்குச் சென்றிருக்கிறீர்களா? அப்பா: இல்லை ஏன் அப்படி கேட்கிறாய்?
மகன்: அப்போ உனக்கு எங்க மம்மி?
![](https://www.instanews.city/h-upload/2023/04/23/1703173-vadivel6.webp)
13. வரலாறு ஏன் மீண்டும் மீண்டும் வருகிறது
ஏனென்றால் நாங்கள் முதல் முறையாக கேட்கவில்லை!
14. நோயாளி: டாக்டர், நான் டீ குடிக்கும் போதெல்லாம் எனக்கு கண் வலி வருகிறது.
மருத்துவர்: நீங்கள் குடிக்கும் முன் டம்ளரில் இருந்து கரண்டியை வெளியே எடுத்துட்டு குடிங்க .
15. ஒரு ஜோடி மாடுகள் வயலில் பேசிக்கொண்டிருந்தன. ஒரு மாடு : பைத்தியம் என்கிற நோய் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?"
அடுத்த மாடு : "ஆம், நான் ஒரு பென்குயின் என்பதில் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது." என்றது.
சிரிப்பு உடல் முழுவதும் ஒரு நேர்மறை அதிர்வினை உருவாக்குகிறது. அதனால் உடலில் ஒரு தளர்வு நிலை உருவாகி டென்ஷன் காணாமல் போகிறது. வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டுப்போகும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu