'மொக்க ஜோக்' சொல்லும் நண்பர்களுக்கு இது சமர்ப்பணம்..!
![மொக்க ஜோக் சொல்லும் நண்பர்களுக்கு இது சமர்ப்பணம்..! மொக்க ஜோக் சொல்லும் நண்பர்களுக்கு இது சமர்ப்பணம்..!](https://www.nativenews.in/h-upload/2022/10/18/1606774-vadivelu-comedy7.avif)
mokka jokes in tamil-மொக்க ஜோக்குகள் (கோப்பு படம்)
Mokka Jokes in Tamil -சிரிப்பு என்பது மனிதனால் மட்டுமே செய்ய முடிந்த அற்புத உணர்வு. மகிழ்ச்சி மனதுக்குள் இருந்தால் மட்டுமே முகத்தில் சிரிப்பாக வெளியேவரும். இருப்பினும் சிலவேளைகளில் எத்தனை துன்பங்கள் மனதுக்குள் இருந்தாலும் சில நகைச்சுவை நம்மை அறியாமல் சிரிக்கவைத்துவிடும். அப்போது நமது மனமும் இலகுவாகிவிடும். அந்த துன்பங்களில் இருந்து விடுபட்டு புதிய சிந்தனைகள் தோன்றும். அந்த துன்பத்தில் இருந்து எப்படி மீண்டு வரலாம் என்ற உற்சாக மனநிலை வந்துவிடும். ஆகவே நகைச்சுவை என்பது மனதிற்கான மருந்து. துன்பங்களை போக்கும் பிரசாதம்.
ஆகவே, வாழ்க்கையில் சிரியுங்கள்.மகிழ்ச்சியாக இருங்கள். மற்றவர்களையும் மகிழ்ச்சிப்படுத்துங்கள். நாம் ஒருவர் முகம் வாடினால் நம் குடும்பமே முகம் வாடும். அந்த நிலையை மாற்றவேண்டாமா..? நீங்கள் சிரித்தாள் உங்கள் குடும்பமே சிரிக்கும். மகிழுங்கள்..மற்றவர்களை மகிழ்ச்சசிக்குள்ளாக்குங்கள்..!
தபால்காரர்: இந்த பார்சல குடுக்க அஞ்சு கிலோ மீட்டர் நடந்து வந்தேன் உங்க ஊருக்கு.
வீட்டுக்காரர்: ஏன், தபால்ல அனுப்பி இருக்கலாம்ல..?
.................................................................
திருடன் : தம்பி, உனக்கு மிட்டாய் தருகிறேன். உங்க வீட்ல நகைகளை எங்கே வைப்பாங்க சொல்லு..
சிறுவன் : அடகுக் கடையிலேங்க..
திருடன் : ????
...........................................................
காதலன் : உன் காதலுக்காக என் உயிரையே கொடுப்பேன் டியர்..
காதலி : அதற்கு அவசியமில்ல… நம்ம லவ், என் அப்பாவுக்கு தெரிஞ்சா, அவரே எடுத்துடுவாரு..
காதலன் : ???????
...................................................
ஒருவர் : பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளை ஷாக் ஆகிட்டாரே.. அப்படி என்னதான் சொன்னாங்க?
மற்றொருவர் : பொண்ணுக்கு சமைக்கத் தெரியும்னு சொன்னாங்களாம்…
ஒருவர் : ???
....................................................
mokka jokes in tamil
அமைச்சர் : மன்னா, எதிரி நாட்டு மன்னர் ஒலை அனுப்பியுள்ளார்.
மன்னர் : அரண்மனைக்கு நாம் ஏற்கனவே கான்கிரீட் போட்டாச்சு, ஓலை வேண்டாம். திருப்பி அனுப்பிவிடும்..
...............................................
கடை முதலாளி : ஏண்டா அரிசி மூட்டையில இவ்ளோ அரிசி குறைஞ்சிருக்கு?
வேலைக்காரன் : மூட்டைக்கு அடியில் ஓட்டை விழுந்திருக்கும் முதலாளி.
கடை முதலாளி : அடியில ஓட்டை விழுந்தா எப்படிடா மூட்டைக்கு மேல அரிசி குறையும்?
வேலைக்காரன்: ஹி..ஹி
..................................................
வேலைக்காரன் 1 : ஐயாவுக்கு மூளைல ஸ்கேன் எடுக்கணும்னு சொல்லிட்டாங்களாமே..?
வேலைக்காரன் 2 : அதுக்கு நீ ஏண்டா பதர்ற?
வேலைக்காரன் 1 : இல்லாத விஷயத்துக்கு எப்படி ஸ்கேன் செய்வாங்க..?
.............................................
mokka jokes in tamil
வந்தவர்: என்ன இன்டர்வியூ வந்தவங்க எல்லாருக்கும் தண்ணி கொடுத்து கண்ணுல ஊத்திக்க சொல்றாங்க ஏன்?
வேலைக்காரர்: வேல கிடைக்கல்லேன்னா எப்படியிருந்தாலும் இதெல்லாம் வெறும் கண் துடைப்புன்னு சொல்லப்போறீங்க. அதை நாங்க முதல்லயே பண்ணிட்டா பிரச்சனை இல்ல பாருங்க..
....................................................
கண்டக்டர்: யோவ் டிரைவர், நான் மூணுமுறை விசிலடிச்சும் வண்டி நிக்கலையே ஏன்?
டிரைவர்: அட போய்யா, நான் ஆறுமுறை பிரேக் அடிச்சே வண்டி நிக்கலை, நீ வேற.
கண்டக்டர்: ஆங்...???
.................................................................
முதலாளி: இங்க நிறையா திருட்டு போகும். அதனால நீ ராத்திரி கண் முழுச்சி கவனிச்சுக்கணும்.
வேலைக்காரன்: துங்கவே மாட்டேன். ஒரு சின்ன சத்தம் கேட்டா கூட நான் முழிச்சிக்குவேன் ஐயா, நீங்க கவலையேப் படாதீங்க.
முதலாளி: வெரி குட்..அப்படித்தான் இருக்கணும்..?
வேலைக்காரன் : (மனதுக்குள்) நமக்கு நல்ல முதலாளி கிடைச்சிருக்கார்.
..............................................................
mokka jokes in tamil
முதலாளி: என்னடா.. இது..? அம்மா நான் எது சொன்னாலும் கேக்க மாட்டேங்கறாங்க?
வேலைக்காரன்: நீங்க பேசாம அவங்க தூங்கும்போது சொல்லிடுங்க.
முதலாளி : அதுவும் நல்ல ஐடியா தான்..!
.....................................................
மன்னர் : தளபதியாரே, என்ன இது போர் நடக்கும் நேரத்தில் 7 நாள் விடுப்பு வேண்டுமா ?
மந்திரி : ஆம் மன்னா, போர் முடிந்த அடுத்தநாளே அரண்மனைக்கு வந்து விடுவேன்.
மன்னர் : ??????????????
....................................................
மன்னன் : அமைச்சரே நெல்லாடிய நிலமெங்கே.. சொல்லாடிய சபை எங்கே?
அமைச்சர் : நிலமெல்லாம் பிளாட் போட்டாச்சு, சபையெல்லாம் கல்யாண மண்டபமா மாத்தியாச்சு மன்னா..வேறென்ன வேண்டும்..?
மன்னன் : ????
...............................................
வீட்டுக்காரன் : என்னடா இது வெறும் ஆட்டுக்கால் மட்டும் வாங்கிட்டு வர்ற?
வேலைக்காரன் : நீங்க தந்த 10 ரூபாய்க்கு பின்ன என்ன ஆட்டுக்கால்ல தங்க கொலுசு மாட்டியா தருவாங்க..?
..............................................
mokka jokes in tamil
வீட்டுக்காரர் : டெய்லி காய்கறி வாங்கறதுல கமிஷன் அடிச்சு நீ வீடே கட்டியிருக்கலாமே?
வேலைக்காரன் : போங்கய்யா என்னை ரொம்ப புகழாதீங்க.
வீட்டுக்காரர் : ஆஆங்..
................................................
ஒருவர் : என்னுடைய மொபைல் பில் எவ்வளவு ?
கால் சென்டர் பெண் : சார் *123னு டைப் பண்ணி கால் பண்ணினால் உங்களுடைய கரன்ட் (current) பில் எவ்வளவு என்று தெரிந்து கொள்ளலாம்.
ஒருவர் : ஸ்டுபிட், என்னோட மொபைல் பில்லைக் கேட்டா, கரண்ட் பில்லைப் பத்தி சொல்றியே ..?
கால் சென்டர் பெண் : ஆங் ..
................................................................
mokka jokes in tamil
வாடிக்கையாளர்: வாழைப்பழம் எவ்வளவுப்பா?
கடைக்காரர்: ஒரு ரூபாய்.
வாடிக்கையாளர்: 60 பைசாவுக்கு வராதா?
கடைக்காரர்: 60 பைசாவுக்கு தோல் தான் வரும்.
வாடிக்கையாளர்: இந்தா 40 பைசா, தோல வச்சிக்கிட்டு பழத்த கொடு.
கடைக்காரர்: ஆங்..???
.........................................................
தொண்டர் : இளவரசே வீரமுடன் வேட்டைக்குப் புறப்பட்ட நீங்கள் ஏன் தலை தெறிக்க, ஓடி வருகிறீர்கள் ?
இளவரசர் : போய்யா, போற வழியில் ஒரு நாய் துரத்திட்டு வருது.
.................................................
தரகர்: மாப்பிள்ளை மெகாசீரியல்ல நடிக்கறாரு..
பெண்: அப்ப மாப்பிள்ளை நிரந்திர வேலைல இருக்கார்னு சொல்லுங்க ..
தரகர் : ஹி..ஹி..
...........................................
வந்தவர்: அரிசி கிலோ எவ்வளவு?
கடைக்காரர்: பதினைஞ்சு ரூபாய்ங்க
வந்தவர்: கொஞ்சம் குறைச்சுப் போடக்கூடாதா?
கடைக்காரர்: இப்பவே ஒரு கிலோ அரிசிக்கு தொள்ளாயிரம் கிராம் தான் போடுறம்னு எல்லாரும் சொல்றாங்க. இன்னும் எப்படி குறைச்சுப் போடுறது ?
...................................................
mokka jokes in tamil
தரகர்: கறுப்பா இருக்கிற பொண்ணுக்குப் பத்து பவுன் போடறாங்களாம். ஒரு கால் நொண்டிப் பொண்ணுக்குப் பதினைஞ்சி பவுன் போடறாங்களாம். எது வேணும் ?
மாப்பிள்ளை வீட்டுகாரர்:கறுப்புக் கலர்ல நொண்டிப் பொண்ணு பாருங்களேன்.
..........................................
தேவி : உங்க கடையில வாங்கிப்போன பூரிக்கட்டை சீக்கிரம் உடைஞ்சிடுச்சே?
கடைக்காரர் : அடேயப்பா ! உங்க கணவர் தலை அவ்வளவு ஸ்ட்ராங்கா!? அப்போ இரும்புலத்தான் செய்யச் சொல்லணும்.
தேவி : ஹா.ஹா..
.............................................
mokka jokes in tamil
கடைக்காரர் 1 : எங்க சலூன்ல கட்டிங் பண்ணிக்கிட்டா சேவிங் இலவசம்..
கடைக்காரர் 2 : இதென்ன பெருசு எங்க ஃபைனான்ஸ் கம்பெனில சேவிங் பண்ணினா மொட்டையே இலவசம்.
.........................................
கடைக்காரர்: சார் எங்க கடைல துணி வாங்கினா. அவ்வளவு சீக்கிரம் கிழியாது
வாடிக்கையாளர்: சும்மா பொய் சொல்லாதீங்க
கடைக்காரர்: பொய் இல்லீங்க உண்மைதான்.
வாடிக்கையாளர்: இப்பகூட அவரு 2 மீட்டர் கேட்டப்ப கிழிச்சுதான கொடுத்தீங்க.
...........................................
ரொம்ப நாள் உயிர் வாழ என்ன பண்ணனும் ..?
பதில் : அதற்கு சாகாம இருக்கனும்.
பல்லு வலிக்கு முக்கியமான காரணம் என்னனு தெரியுமா ?
பதில்: பல்லு தான்.
ஒரு பயன் ஸ்கூல் ஓபன் பண்ணியும் போகவே இல்லை ஏன் தெரியுமா..?
பதில்: ஏன்னா அவன் காலேஜ் படிக்கிறான்.
ஒருத்தன் ஊதுபத்தி ஸ்டான்ட்-ஐ முழுங்கிட்டான்.. ஆனா அவனுக்கு ஒன்னும் ஆகல ஏன்?
பதில்: ஏன்னா அவன் சாப்பிட்டது வாழை பழத்தை.
சார் ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும் ?
பதில்: நோயோடதான்.
ஏன்டா பார்முலா எல்லாம் கைல எழுதி வெச்சு இருக்க?
பதில்: எங்க டீச்சர் தான் எல்லா பார்முலாவும் பிங்கர் டிப்ஸ்ல வெச்சு இருக்கணும்னு சொன்னாங்க.
ஏம்மா அவர உலக்கையால அடிச்சு கொன்ன?
பதில்: உரல தூக்க முடியல சார்.
mokka jokes in tamil
காதலிக்கறவங்க ஏன் எப்ப பாத்தாலும் பொய்யே பேசுறாங்க ?
பதில்: ஏன்னா அவங்க தான் மெய் மறந்து காதலிக்கிறாங்களே.
ஒருத்தன் தினமும் இரவில் தலைக்கு அடில dictionary book வெச்சு தூங்குறானாம் ஏன் ?
பதில்: ஏன்னா அவனுக்கு தினமும் நைட் அர்த்தமில்லாத கனவு வருதாம்
ஒரு கிணத்துல கல்ல போட்ட முதுகுது ஏன் தெரியுமா?
பதில்: என்ன அதுக்கு நீச்சல் தெரிலையாம்
எங்க அம்மா சர்க்கரை டப்பால உப்பு னு எழுதி வெச்சாங்க ஏன்?
பதில்: எல்லா எறும்பையும் ஏமாத்துறதுக்கு
ஒரு போலீஸ் தேங்காயை ஒடச்சி ஸ்டேஷன் க்கு எடுத்துகுடு பொன்ராம் ஏன் ?
பதில்: என்ன அங்க பொய் கைதியை துருவி துருவி கேள்வி கேக்க
mokka jokes in tamil
ஒருத்தர் எப்ப பாரு ஊருக்குள்ள கட்டையோட சுத்திட்டு இருந்தாராம் ஏன் தெரியுமா ?
பதில்: அவரு ஒரு கட்ட ப்ரம்மசாரியாம்
நண்பா 100 ரூபாய் இருந்த குடு
என்கிட்டே சுத்தமா இல்லடா..
பரவலா குடு நான் சுத்தம் பண்ணிக்கிறேன்.
நம்ம டீச்சர்க்கு என்ன ஆச்சு?
ஏன் கேக்குற?
திருக்குறளை போர்டுல எழுதிட்டு.. அவங்களே இதை எழுதனது யாருனு கேக்கறாங்க..?
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu