Mokka Joke in Tamil-மன அழுத்தத்துக்கு மருந்து ஜோக்குகள்..! சிரிங்க..நன்றாக சிரிங்க..!
![Mokka Joke in Tamil-மன அழுத்தத்துக்கு மருந்து ஜோக்குகள்..! சிரிங்க..நன்றாக சிரிங்க..! Mokka Joke in Tamil-மன அழுத்தத்துக்கு மருந்து ஜோக்குகள்..! சிரிங்க..நன்றாக சிரிங்க..!](https://www.nativenews.in/h-upload/2023/11/20/1816582-vadivel.webp)
mokka joke in tamil-மொக்க ஜோக் (கோப்பு படம்)
Mokka Joke in Tamil
உலகத்திலேயே மனிதர்களுக்கு சிரிப்பு என்கிற ஒரு விஷயம் இல்லைன்னா மனிதர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை அக்கற்பனை செய்து கூட பார்க்கமுடியவில்லை. உதாரணத்துக்கு ஒரு விருந்தாளி நமது வீட்டுக்கு வருகிறார் என்று வைத்துக்கொள்வோம்.
அவர் வரும்போது முகத்தில் ஒரு புன்னகை அல்லது மகிழ்ச்சியாக சிரித்து வரவேற்பது நமது வழக்கம். ஒருவேளை சிரிப்பும் இந்த புன்னகையும் மனிதர்களிடம் இல்லாமல் இருந்தால் எப்படி வரவேற்பார்கள் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?
தற்போதைய காலத்தில் நிறைய பேருக்கு மன அழுத்தம் இருக்கிறது. அப்படியானவர்களுக்கு மனதை இலகுவாக்க சிரிப்பு மிக மிக அவசியம்.
Mokka Joke in Tamil
அதனால் நீங்கள் சிரிப்பதற்கு மொக்க ஜோக்குகள் தந்துள்ளோம் நன்றாக விழுந்து விழுந்து சிரிங்க. பார்த்துங்க விழுந்து விழுந்து சிரிக்க சொன்னேன் என்று விழுந்து காயத்தை உண்டாக்கிறாதீங்க.
இதோ ஜோக்குகள்:-
1. தபால்காரர்: இந்த பார்சல குடுக்க அஞ்சு கிலோ மீட்டர் நடந்து வந்தேன் உங்க ஊருக்கு.
வீட்டுக்காரர்: ஏன், தபால்ல அனுப்பி இருக்கலாம்ல.?
2. திருடன் : தம்பி ! உனக்கு மிட்டாய் தருகிறேன். உங்க வீட்ல நகைகளை எங்கே வைப்பாங்க சொல்லு..
சிறுவன் : அடகுக் கடையிலே !
திருடன் : ????
3. காதலன் : உன் காதலுக்காக என் உயிரையே கொடுப்பேன் டியர்!
காதலி : அதற்கு அவசியமில்ல!… நம்ம லவ், என் அப்பாக்கு தெரிஞ்சா, அவரே எடுத்துடுவாரு!
காதலன் : ???????
4. ஒருவர் : பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளை ஷாக் ஆகிட்டாரே.. அப்படி என்ன சொன்னாங்க?
மற்றொருவர் : பொண்ணுக்கு சமைக்கத் தெரியும்னு சொன்னாங்களாம்…
ஒருவர் : ???
5. அமைச்சர் : மன்னா, எதிரி நாட்டு மன்னர் ஒலை அனுப்பியுள்ளார்.
மன்னர் : அரண்மனைக்கு நாம் ஏற்கனவே கான்கீரிட் போட்டாச்சு ஓலை வேண்டாம். திருப்பி அனுப்பிவிடும்!
Mokka Joke in Tamil
6. கடை முதலாளி : ஏண்டா அரிசி மூட்டையில இவ்ளோ அரிசி குறைஞ்சிருக்கு?
வேலைக்காரன் : மூட்டைக்கு அடியில் ஓட்டை விழுந்திருக்கும் முதலாளி.
கடை முதலாளி : அடியில ஓட்டை விழுந்தா எப்படிடா மூட்டைக்கு மேல அரிசி குறையும்?
வேலைக்காரன்: 😂😂
7. வேலைக்காரன் 1 : ஐயாவுக்கு மூளைல ஸ்கேன் எடுக்கணும்னு சொல்லிட்டாங்களாமே.
வேலைக்காரன் 2 : அதுக்கு நீ ஏன் பதர்ற?
வேலைக்காரன் 1 : இல்லாத விஷயத்துல எப்படி ஸ்கேன் செய்வாங்க!
8. வந்தவர்: என்ன இன்டர்வியூ வந்தவங்க எல்லாருக்கும் தண்ணி கொடுத்து கண்ணுல ஊத்திக்க சொல்றாங்க ஏன்?
வேலைக்காரர்: வேல கிடைக்கல்லேன்னா எப்படியிருந்தாலும் இதெல்லாம் வெறும் கண் துடைப்புன்னு சொல்லப்போறீங்க. அதை நாங்க முதலயே பண்ணிட்டா பிரச்சனை இல்ல பாருங்க!
9. கண்டக்டர்: யோவ் டிரைவர், நான் மூணுமுறை விசிலடிச்சும் வண்டி நிக்கலையே ஏன்?
டிரைவர்: அட போய்யா, நான் ஆறுமுறை பிரேக் அடிச்சே வண்டி நிக்கலை, நீவேற.
10. முதலாளி: இங்க நிறையா திருட்டு போகும். அதனால நீ ராத்திரி கண் முழுச்சி கவனிச்சுக்கணும்.
Mokka Joke in Tamil
வேலைக்காரன்: துங்கவே மாட்டேன். ஒரு சின்ன சத்தம் கேட்டா கூட நான் முழிச்சிக்குவேன் ஐயா, நீங்க கவலையேப் படாதீங்க.
11. முதலாளி: என்னடா இது அம்மா நான் எது சொன்னாலும் கேக்க மாட்டேங்கறாங்க?
வேலைக்காரன்: நீங்க பேசாம அவங்க தூங்கும்போது சொல்லிடுங்க.
12. மன்னர் : தளபதியாரே, என்ன இது போர் நடக்கும் நேரத்தில் 7 நாள் விடுப்பு வேண்டுமா ?
மந்திரி : ஆம் மன்னா, போர் முடிந்த அடுத்தநாளே அரண்மனைக்கு வந்து விடுவேன்.
மன்னர் : ??????????????
13. மன்னன் : அமைச்சரே நெல்லாடிய நிலமெங்கே சொல்லாடிய சபை எங்கே?
அமைச்சர் : நிலமெல்லாம் பிளாட் போட்டாச்சு, சபையெல்லாம் கல்யாண மண்டபமா மாத்தியாச்சு மன்னா!
மன்னன் : ????
14. வீட்டுக்காரன் : என்னடா இது வெறும் ஆட்டுக்கால் மட்டும் வாங்கிட்டு வர்ற?
வேலைக்காரன் : நீங்க தந்த 10 ரூபாய்க்கு பின்ன என்ன ஆட்டுக்கால்ல தங்க கொலுசு மாட்டியா தருவாங்க.
15. வீட்டுக்காரர் : டெய்லி காய்கறி வாங்கறதுல கமிஷன் அடிச்சு நீ வீடே கட்டியிருக்கலாமே?
வேலைக்காரன் : போங்கய்யா என்னை ரொம்ப புகழாதீங்க.
Mokka Joke in Tamil
16. ஒருவர் : என்னுடைய மொபைல் பில் எவ்வளவு ?
கால் சென்டர் பெண் : சார் *123னு டைப் பண்ணி கால் பண்ணினால் உங்களுடைய கரன்ட் (current) பில் எவ்வளவு என்று தெரிந்து கொள்ளலாம்.
ஒருவர் : ஸ்டுபிட் ! என்னோட மொபைல் பில்லைக் கேட்டா, கரண்ட் பில்லைப் பத்தி சொல்றியே !
17. வாடிக்கையாளர்: வாழைப்பழம் எவ்வளவுப்பா?
கடைக்காரர்: ஒரு ரூபாய்.
வாடிக்கையாளர்: 60 பைசாவுக்கு வராதா???
கடைக்காரர்: 60 பைசாவுக்கு தோல் தான் வரும்.
வாடிக்கையாளர்: இந்தா 40 பைசா, தோல வச்சிக்கிட்டு பழத்த கொடு.
18. தொண்டர் : இளவரசே வீரமுடன் வேட்டைக்கு புறப்பட்ட நீங்கள் ஏன் தலை தெறிக்க, ஓடி வருகிறீர்கள் ?
மன்னர் : போய்யா, போற வழியில் ஒரு நாய் துரத்திட்டு வருது.
19. தரகர்: மாப்பிள்ளை மெகாசீரியல்ல நடிக்கறாரு..
பெண்: அப்ப மாப்பிள்ளை நிரந்திர வேலைல இருக்கார்னு சொல்லுங்க !
20. வந்தவர்: அரிசி கிலோ எவ்வளவு?
கடைக்காரர்: பதினைஞ்சு ரூபாய்!
வந்தவர்: கொஞ்சம் குறைச்சுப் போடக்கூடாதா?
கடைக்காரர்: இப்பவே ஒரு கிலோ அரிசிக்கு தொள்ளாயிரம் கிராம் தான் போடுறம்னு எல்லாரும் சொல்றாங்க. இன்னும் எப்படி குறைச்சுப் போடுறது ?
Mokka Joke in Tamil
21. தரகர்: கறுப்பா இருக்கிற பொண்ணுக்குப் பத்து பவுன் போடறாங்களாம். ஒரு கால் நொண்டிப் பொண்ணுக்குப் பதினைஞ்சி பவுன் போடறாங்களாம். எது வேணும் ?
மாப்பிள்ளை வீட்டுகாரர்:கறுப்புக் கலர்ல நொண்டிப் பொண்ணு பாருங்களேன்.
22. தேவி : உங்க கடையில வாங்கிப்போன பூரிக்கட்டை சீக்கிரம் உடைஞ்சிடுச்சே?
கடைக்காரர் : அடேயப்பா ! உங்க கணவர் தலை அவ்வளவு ஸ்ட்ராங்கா!? அப்போ இரும்புலத்தான் செய்யச் சொல்லணும்.
தேவி : 😀😀
23. கடைக்காரர் 1 : எங்க சலூன்ல கட்டிங் பண்ணிக்கிட்டா சேவிங் இலவசம்!
கடைக்காரர் 2 : இதென்ன பெருசு எங்க ஃபைனான்ல கம்பெனில சேவிங் பண்ணினா மொட்டையே இலவசம்.
24. கடைக்காரர்: சார் எங்க கடைல துணி வாங்கினா. அவ்வளவு சீக்கிரம் கிழியாது
வாடிக்கையாளர்: சும்மா பொய் சொல்லாதீங்க
கடைக்காரர்: பொய் இல்லீங்க உண்மைதான்.
வாடிக்கையாளர்: இப்பகூட அவரு 2 மீட்டர் கேட்டப்ப கிழிச்சுதான கொடுத்தீங்க.
25. ஒருவர் : பாட வந்தவங்க, எதுக்கு கையில கிளவுஸ் எடுத்து மாட்டிக்கறாங்க…?
மற்றவர் : குத்துப்பாட்டு பாடப் போறாங்களாம் அதான்?
ஒருவர் : ???
Mokka Joke in Tamil
26. காதலி : டியர் நான் எப்பவுமே உங்க நிழல்லதான் நிற்பேன்
காதலன் : அதுக்காக நான் வெயில்லயே நிக்க முடியாது.
27. வாடிக்கையாளர்: என்ன சார் ஸ்டூல் பாக்கவே வினோதமா இருக்கு
கடைக்காரர்: இது ஸ்டூல் இல்ல, மைசூர்பாகு சரியா வரல்ல. அதனால வீணா போக வேண்டாமேன்னு ஸ்டுலா பண்ணிட்டா யாராவது வந்தா உக்கார வச்சுக்கலாம் பாருங்க.
28. வாடிக்கையாளர்: இந்த கிராமர் புத்தகம் என்ன விலை?
கடைக்காரர்: 150 ரூபாய் சார்
வாடிக்கையாளர்: கொஞ்சம் சொல்லிக் குடுப்பா
கடைக்காரர்: சொல்லியெல்லாம் கொடுக்க முடியாது சார், நீங்கதான் படிச்சுக்கணும்.
29. வாடிக்கையாளர்: எங்கே கடைய மூடிடப்போறீங்களோன்னு மூச்சு வாங்க ஓடி வர்றேன்
கடைக்காரர் : அதெல்லாம் இங்க விக்கறதில்லீங்க!
30. மாப்பிள்ளை வீட்டார்: பெண் வீட்டுக்காரங்க ஏன் இன்னும் கல்யாணத்தைத் தள்ளி வச்சிக்கிட்டே இருக்காங்க?
பக்கத்தில் இருந்தவர்: ஆயிரம் பொய் சொல்ல இன்னும் முன்னூறு பொய் பாக்கியிருக்காம்.. அதனாலதான்!
Mokka Joke in Tamil
31. மன்னன்: வர வர சேவகர்களுக்கு என்மீது பயமே இல்லைபோல் தெரிகிறது அமைச்சரே..
அமைச்சர்: ஏன் மன்னா?
மன்னன்: யாரங்கே எனக் குரல் கொடுத்தால், யாருமில்லை என பதில் குரல் வருகிறது!
32. வந்தவர்: ஏன் சார் குறைந்த விலையில் செவிட்டு மெஷின் கிடைக்குமா?
கடைக்காரர்: 2 ரூபாய்ல இருக்கு வேணுமா?
வந்தவர்: அது எப்டி சார் ஒர்க் பண்ணும்?
கடைக்காரர்: இது எதுவும் பண்ணாது. ஆனா இது உங்க காதுல வச்சு இருக்கறதப் பார்த்த உடனே எல்லாரும் உங்ககிட்ட கத்திப் பேசுவாங்க.
33. முதியவர் : அவசர அழைப்புக்கு போன் செய்ய முடியாமல் குழம்பி இருந்தார்.
கடைக்காரர் : ஏன்?
முதியவர் : அவசர அழைப்புக்கு 911 என்பது தெரியும்! ஒன்பது டயலில் இருக்கு. பதினொன்று எங்கே?
34. வாடிக்கையாளர்: என்ன சார் உங்க பத்திரிகைக்கு இவ்வளவு ஜோக்ஸ் அனுப்பி வச்சுருக்கேன் எதுக்குமே பணம் தரமாட்டேன்றீங்களே?
அச்சகர்: இது கூட நல்ல ஜோக்தான்! ஆனா இதுக்கும் பணம் தரமுடியாது!
35. வானொலியில் தொலைபேசி வழி நேயர் விருப்பத்தில் ஒரு உரையாடல்,
வானொலி தொழிலாளி: ஹலோ வணக்கம்! வணக்கம்! சொல்லுங்க…
நேயர்: வணக்கம்தான் சொல்லிட்டேனே!!
Mokka Joke in Tamil
36. பெண்: ஹலோ இது கஸ்டமர் கேர் தானே?
கஸ்டமர் கேர்: ஆமாம் சொல்லுங்க மேடம்
பெண்: என் அஞ்சு வயசு பையன் சிம் கார்டு ஐ விழுங்கிட்டான்..
கஸ்டமர் கேர்: அப்படினா டாக்டர் கிட்ட கூட்டி கிட்டு போங்க மேடம்
பெண்: இல்லை சார் அதுல 95 பைசா பேலன்ஸ் இருந்துச்சி. அவன் பேசும்போது காசு போகுமா சார்
கஸ்டமர் கேர்: 😯 😯
37. மன்னர் : போர் முரசு ஒலிகேட்கிறதே…! எதிரி படையெடுத்து வந்துவிட்டானோ அமைச்சரே ?
அமைச்சர் : அஞ்சாதீர்கள் மன்னா…! மகராணியார் உள்ளே மிருதங்கம் பழகிக் கொண்டிருக்கிறார்கள் !
மன்னர் : ????????????
38. ஒருவன் : மாட்டை பிடிக்கிறவருக்கு என் மூத்த பெண்ணைக் கட்டிகொடுப்பேன்…
மற்றவன் : உங்க வீட்டு கன்றுகுட்டியை பிடிச்சா இளைய பெண்ணை கட்டி தருவீங்களா…?
ஒருவன் : ???
39. தளபதி : மன்னா, காளைப்படை ஒன்றை நமது படையில் சேர்ப்போமா?
மன்னர் : நான்தான் காலையே படையாக வைத்து இருக்கிறேனே, பின் எதற்கு காளைப்படை!!!
தளபதி : ???
40. அரசர் : சிங்கத்தை அடக்கும் தைரியசாலிக்கு தான் என் மகளை திருமணம் செய்து வைப்பதென்று முடிவு செய்திருக்கிறேன் மந்திரியாரே!
மந்திரி : இளவரசி அவ்வளவு பெரிய அடங்காபிடாரியா அரசே!
அரசர் : ?????????????
Mokka Joke in Tamil
41. ராஜா : மந்திரியாரே! இப்போதெல்லாம் நமக்குப் புறாவிடம் இருந்து மெயில் வருவதில்லையே, ஏன்?
மந்திரி : அதுதான் ஈ-மெயிலில் எல்லாம் வந்துவிடுகிறதே பிரபு!
42. மருமகன் : கமலா, நான் புதுசா கண்ணாடி போட்ட பிறகுதான் நீ எவ்வளவு அழகா இருக்கேன்னு தெரியுது.
மாமியார் : மாப்ளே, நான் கமலா இல்லே! அவளோட அம்மா.
மருமகன் : ?????????
43. அரசன்: புலவரே! என்ன துணிச்சல்? என் எதிரே அமைச்சரைப் புகழ்ந்து பாடுகிறீர்?
புலவர்: மன்னிக்க வேண்டும் அரசே! அண்மையில் வெளியான பணக்காரர்கள் பட்டியலில் அமைச்சரின் பெயர் முதலிடத்தில் இருக்கிறதே!
44. மாமனார் : நூறாவது நாள் முடிந்து வெற்றிகரமான 150வது நாளை நோக்கி
மாப்பிள்ளை : எந்த படத்தைப் பத்தி சொல்றீங்க மாமா
மாமனார் : படத்தைப் பத்தி இல்ல, நீங்க ஊர்ல இருந்து வந்த விஷயத்தைப் பத்தி சொல்றேன்.
45. ஒருவர் : அந்த ஆள் எப்பவும் மத்தவங்க கையைத் தான் எதிர்பார்ப்பாரு?
மற்றவர் : ஏன்?
ஒருவர் : அவருதான் கைரேகை ஜோசியம் பார்க்கறவராச்சே அதான்?
Mokka Joke in Tamil
46. காதலன் : எப்பவுமே உன்னோட நினைப்பாவே இருக்கு டார்லிங்.
காதலி : இப்போதானே நாம பேசி முடிச்சோம்?
காதலன் : அச்சச்சோ! மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? சாரி!
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu