Miss U Tamil Quotes-உடைந்த கண்ணாடிகளாகும் உறவுகள்..!

Miss U Tamil Quotes-உடைந்த கண்ணாடிகளாகும் உறவுகள்..!
X

miss u tamil quotes-பிரிவு மேற்கோள்கள் (கோப்பு படம்)

உறவிலும் கண்ணாடியிலும் கீறல் விட்டால் ஒட்டமுடியாது என்ற தத்துவம் பேசுவோம். காலம் எப்படியும் மாற்றிவிடும் என்று சொல்லியே காலம் கடப்போம்.

Miss U Tamil Quotes

வாழ்க்கையின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொருவரை பிரிந்திருக்கிறோம். ஒவ்வொரு பிரிவின் போதும் அந்தந்த உறவின் எல்லை தெரியும். ஒவ்வொரு பிரிவும் நம்மைச் சுக்கு நூறாய் உடைக்கும். சில பிரிவுகள் கற்றுக் கொடுக்கும் பாடங்கள் ஏராளம்.

Miss U Tamil Quotes

ஒவ்வொரு பிரிவின் போதும் இனி யாருடனும் நெருக்கம் ஆகாது, தனிமையே சாஸ்வதம் என நம்மை நாமே தனிமைப்படுத்திக்கொள்வோம். யாரை உலகமென நினைப்போமோ யாரைப்பிரிந்தால் உயிரைப் பிரிந்ததாய் உணர்வோமோ அவர்களைப் பிரிந்த பின்னும் உயிரோடே அலைவது ஒரு அதிசயம்.

என்ன ஒன்று உயிரோடு மட்டுமே அலைவோம் நடைபிணமாய். விலகிச்செல்பவர்கள் நம்மை வலிமைப்படுத்திச் செல்கிறார்கள் என நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொள்வோம்.

ஓய்வில்லா நெடுஞ்சாலையாய்

மன சாலையில் நீ நடமாடுகிறாய்!

வருவதும் போவதுமாய்!

நீ என்னருகில் இல்லை என்பது

எவ்வளவு உண்மையோ

அவ்வளவு உண்மை நீ

எனக்குள் இருக்கின்றாய் என்பது.

நான் பல எதிர்ப்பார்ப்புகளுடன்

ஏக்கமாக காத்திருக்கிறேன்

உன் அன்புக்காக. ஆனால் நீ

தருவதோ ஏமாற்றம் மட்டுமே.

Miss U Tamil Quotes

பிடித்த ஒன்றின் மீதான காத்திருப்பு

என்றாவது பிடித்து விடாதா என்பதே!

கனவு கண்ட காதல்

கையில் சேரும் வரை

காத்திருப்பதும் சுகம் தானே!

நீ என் அருகில் இல்லாதபோது

என் இதயம் தனியாக உணர்கிறது.

அன்பே விரைவில் திரும்பி வா.

பாலைவனங்கள்

மழையை இழப்பதைப் போல

நான் உன்னை இழக்கிறேன்.

தனியே பல தடவை நடந்ததுண்டு

ஆனால் உன் நினைவில்லாமல்

ஒரு நொடியை கூட கடந்ததில்லை.

Miss U Tamil Quotes

பேச நேரம் இல்லாத

இதயத்திற்கு பேச

துடிக்கும் ஓர் இதயம்

சொல்லும் ஒரு வார்த்தை.

I Miss You.

கண்கள் கூட கவிதை பேசும்

உன்னை பார்க்கும் போது ஆனால்

கவிதை கூட கண்ணீர் சிந்தும்

உன்னை பிரிகையில்.

I Miss You.

காலமும் மாறுதடி என் காலடி தடமும் மாறுமடி!

கற்பனையும் மாறுதடி என் கவிதையும் மாறுமடி!

காலங்கள் போன பின்பும் காலாவதி ஆவதில்லை!

கலியுக காதலடி ! கண்கலங்க வைக்குதடி!

நான் கல்லறை போன பின்பும் நான்

கொண்ட காதல் மட்டும் மாறாதது

ஏனடி!

துடித்துப் போகிறேன் யாருக்கும் உன்னை

விட்டுக்கொடுக்க முடியாமல்...

தவித்துப்போகிறேன் உன்னை என்னிடம்

தக்க வைத்துக் கொள்ள முடியாமல்...

விரல் நகத்தை மட்டுமல்ல

விரல்களையும் வெட்டி விடலாம்

என நினைக்கிறேன்...!

விட்டுப் போன உன் பெயரையே

விடாமல் எழுதுகிறது...!

Miss U Tamil Quotes

உன் பார்வைகள்...

உன் புன்னகைகள்...

உன் வார்த்தைகள்...

நீ வந்து போன நாட்கள்...

அத்தனையையும் ரசிக்கிறேன்...

நீ இல்லாத தனிமையைத் தவிர...

கலைந்து போகும் மேகங்கள்...

ஆனால், நீயோ கலையவில்லை...

உதிர்ந்து போகிறது மலர்கள்...

ஆனால், பிரிந்தும் உதிராமல் என் மனதில்

நிலைத்திருக்கின்றன உன் நினைவுகள்...

கற்பனையான வாழ்க்ககயிலே

நானும் என் காதலும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

கற்பனையில் தினமும் வாழ்ந்திடும் எனக்கு

நிஜத்தில் உன்னுடன் வாழ்ந்திட வழி இல்லையா..?

முட்களின் நடுவே வாழும் ஒற்றை ரோஜாவாய்.

தனித்தே வாழ்கிறேன் என் வாழ்க்கையை...!

உன்னையும் உன் நினைவுகளையும்

என்னுள் சுமந்த படி...!

Miss U Tamil Quotes

உன் கைபிடிக்கும் பாக்கியம்

கிடைக்க வில்லை எனக்கு

இருந்தும் தினம் உன் கைகோர்த்து

உலவுகிறேன் கனவில்

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது