marriage quotes in tamil-மொய் வேண்டாமய்யா..ஒருவரி வாழ்த்தே போதும்..! மணமக்களின் வேண்டுகோள்..! அப்டீயா..?

marriage quotes in tamil-மொய் வேண்டாமய்யா..ஒருவரி வாழ்த்தே போதும்..! மணமக்களின் வேண்டுகோள்..! அப்டீயா..?
X

marriage quotes in tamil-திருமண வாழ்த்து மேற்கோள்கள்.(கோப்பு படம்)

marriage quotes in tamil-இருமனம் கொண்ட திருமண வாழ்வில் ஒருமனம் கொண்டால் வாழ்க்கை முழுதும் இனிமைதான்.

marriage quotes in tamil-திருமணம் என்பது இரு மனங்கள் இணையும் ஒருவிழா அது திருமண விழா. உறவுகளும்,நட்புகளும் ஒன்று கூடும் நாள். இளம் வட்டங்கள் தங்களது வருங்கால கணவன்கள் அல்லது மனைவிகளை தேடிவரும் இடம் இந்த கல்யாண திருவிழாதான். அந்த திருமணத்துக்கு பொய் கவர் கொண்டுவரும் நட்பு வட்டங்கள் பொய் கவருக்கு பதிலாக இனிமேல், இந்த அழகான வாழ்த்து வரிகளை பரிசளிக்கலாம்..! வாங்க உங்களுக்காக சில திருமண வாழ்த்து மேற்கோள்கள் கொடுத்துள்ளோம்.


அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

திருக்குறள் விளக்கம்

கணவன்,மனைவிக்குள் அன்பும் பிணைப்பும் ஒருசேர அறநெறிப்படி வாழ்ந்து வருவதே, இல்லற வாழ்க்கையின் பண்பும், பயனுமாக விளங்கும்.

இரு மனம் இணைந்து ஒருமனதாக திருமணம் ஆகும் இனிய தருணம்.

நீ என்ற சொல்லில் அவள் என்பதை பொருளாக்கி வாழ்ந்திடு அவள் என்ற பொருளில் நீ என்பதை சொல்லாக்கி வாழ்ந்திடு. இதை விட ஆனந்தம் யுகத்திலில்லை.

எழில் பொங்கும் உன் முகம் அதை என் விழி காணும் போதிலே வழிமாறிப் போகுதே என் வாழ்ககையின் பாதை. அப்பாதையெங்கும் என் கைகோர்த்து நடக்குதே என் தேவதை, அது நீதானே..! நீ தானே..!

முத்துக்கள் எடுக்கும் கடலைவிட அன்பு நிறைந்த பேரானந்த வாழ்க்கையே மதிப்புமிக்கது.


marriage quotes in tamil

பத்துப் பொருத்தங்களைப் பார்த்து, ஒன்பது கோள் நிலைகளை அறிந்து, எட்டுத்திசையிலிருந்தும் உறவை அழைத்து, ஏழு அடி எடுத்து வைத்து, அறுசுவை உணவு படைத்து, பஞ்ச பூதங்கள் சாட்சியாக, நான்கு வேதங்கள் முழங்க, மூன்று முடிச்சுகளால், இரு மனங்கள் ஒன்று சேரும், ஓர் அற்புத பந்தத்தின் உறவே, திருமணம்..!

கருத்தொருமித்த தம்பதியராய்... சுற்றம் வியக்கும் வாழ்வை காண்பீர்.. உதாரணத் தம்பதியராய்... ஊர் போற்ற உறவும் போற்ற... இணைபிரியாத வாழ்வினிலே.. நூறாண்டு காலம் வாழ்ந்திடவே... உளம் கனிந்த நல்லாழ்த்துக்கள்.. திருமண நாள் நல்வாழ்த்துகள்..!

என் உடன்பிறவா தோழன், தோழி கொண்டாடும் இந்த மணநாள் நினைத்தது நடந்து, வாழ்க்கை எனும் பாதை சீராகி இரு மனங்கள் ஒன்றுபட்டு என்றுமே நீடூழி வாழ வாழ்த்துக்கள்..!

ஊரே வியக்கும் வண்ணம், சிறந்த அன்பு கொண்ட நேசங்களாகி, திருமண வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்து வாழும் தம்பதியராக, இல்லறத்தில் புரிதல் உணர்வுடன் இரு நெஞ்சங்களும் சுற்றத்தாரின் வாழ்த்துகளோடு நூறாண்டு காலம் வாழ்ந்திட இந்த இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..!


marriage quotes in tamil

கண் மூடி கண்ட கனவெல்லாம் கண் எதிரே காணும் விழாக்கோலம்.. கனவும் நனவாக வாழ்வில் நகரும் அன்பின் தோரணம் திருமணம்..! பூக்கள் கோர்த்து பரிசுகள் தருவதை விட வார்த்தைகள் சேர்த்து நேசம் புரிந்தால் உன் இலக்கும் அவன் பயணமும் ஒன்றாகும். ஒருவரை ஒருவர் ஆழமாக புரிவதில் தான் வாழ்க்கையின் ரகசியம் ஒளிந்துள்ளது. திருமண நாள் நல்வாழ்த்துக்கள்..!

அர்த்தமுள்ள நூலுக்கு எழுதப்படும் அழகான முன்னுரையே திருமணம். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..!

கோர்த்துக் கொள்வது இருவரின் கைகள் மட்டுமல்ல..இரண்டு இதயங்கள்..! இனிய திருமண நல்வாழ்த்துகள்..!

வாழ்க்கை என்பதன் பொருளுக்கு அர்த்தம் தெரியும் மிகச் சிறந்த நாளே,திருமணம்..! இன்று போல என்றும் உன் துணையுடன் சிறப்பாக கொண்டாடு. இனிய திருமண நல்வாழ்த்துக்கள்..!


marriage quotes in tamil

இரு வேறு செடிகளாய் வளர்ந்து உங்கள் வாழ்வில் திருமணம் என்னும் ஒரு வேரில், உறவு எனும் பூ பூத்து அன்பு என்னும் காய் காய்த்து சந்தோஷம் என்னும் கனி தந்து,எழில் கொஞ்சும் சோலையாய் வாழ வாழ்த்துகிறேன். இனிய திருமண நல்வாழ்த்துக்கள்..!

பால் நிலவும் பகல் சூரியனும் நல்ல சொந்தங்களும் இனிய நட்புகளும் சேர்ந்து மகிழ்ந்து வாழ்த்தும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..!

இணைபிரியா வாழ்வில் இன்பமே என்றும் கொள்வீர்..முடி போட்ட வாழ்க்கையில் முடிவிலா மகிழ்ச்சி காண்பீர்..! இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..!


marriage quotes in tamil

நாள் பாத்து பந்தலிட்டு இருவர் மனதினில் கனவென்னும் ஊஞ்சலிட்டு, முற்றத்தில் வாழை மரம் நட்டு ஊர் சாட்சியாய் நடக்கும் உயிர்களின் புது உலகம் திருமணம்..! இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..!

அதிகாலை பனிபோல அற்புதமான வாழ்க்கையின் தருணங்கள் இவை..ஆயிரம் உறவுகள் கூடி கோர்த்த மாலையை கழுத்தில் சூடி அட்ஷதை இடும் ஆனந்தம் காணும் இனிய நாள்..! இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..!

பொண்ணு,மாப்பிள்ளை என்று அழைக்கும் ஒருநாள், அது திருமண நாள்.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!