திருமணம் வேண்டாமா? அப்ப நீங்க தான் படிக்கனும்..!

திருமணம் வேண்டாமா?  அப்ப நீங்க தான் படிக்கனும்..!
X

கோப்பு படம் 

திருமணமே.. வேண்டாம் என்று சொல்பவர்கள் மட்டும் இந்த பதிவை படிங்க..

ஒரு ஆணோ பெண்ணோ திருமணம் செய்யாமல் கொஞ்ச நாளைக்கு நல்லா வாழலாம். ஆனால் கடைசி காலத்தில் பார்த்துக்கொள்ள யாருமே இருக்க மாட்டாங்க. உங்களிடம் பேசுவதற்கு கூட விரும்ப மாட்டார்கள். ரொம்ப கொடுமையா இருக்கும்.

உங்கள் கணவன் அல்லது மனைவி மட்டுமே இருப்பார். இதுக்காகவா திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்காதீர்கள். ஆனால் இதுக்காகவாது திருமணம் செய்து கொள்ளுங்கள். உடம்பில் ஆரோக்கியம் இருக்கிற வரைக்கும் தான் இந்த தனிமையில் வாழ்வதற்கு தைரியம் இருக்கும்.

முதுமை வந்து நடைகள் தளரும் போது தான் யோசிப்பிங்க நமக்கென்று ஒருவள் அல்லது ஒருவன் தாங்கிச் செல்ல இருந்திருக்கலாமோ என்று.... அப்போ தேடினாலும் யாரும் வர மாட்டாங்க. இப்படி புலம்புபவர்கள் நிறைய பேர் இந்த சமூகத்தில் உலவுகின்றனர். தவிச்ச வாய்க்கு தண்ணி தர யாரும் இருக்க மாட்டாங்க.... ஒருவேளை சோற்றுக்கு கூட உறவுக்காரர்களை நம்பித்தான் இருக்க வேண்டும்.... எவ்ளோ தான் நீங்க காசு வச்சிருந்தாலும் பார்க்க வருகிறவர்கள் உங்க காசுக்காக மட்டுமே வருவார்கள்.

உங்களிடம் காசு இல்லை என்றால் அவர்களும் வருவதை நிறுத்தி விடுவார்கள்... கடைசி காலத்தில் நீங்கள் இறக்கும் போது உங்களிடம் பணம் இருந்தால் உங்களை நல்லடக்கம் செய்வார்கள்.. உங்களிடம் பணம் இல்லை என்றால் நீங்கள் ஒரு அனாதை பிணம் தான். அதனால் நல்ல துணையை தேடி திருமணம் செய்து கொள்ளுங்கள். குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள். இந்திய கலாச்சாரம் அதிலும் தமிழ் கலாச்சாரம் உருவாக்கி வைத்திருக்கும் குடும்ப உறவுகள் இறைவனுக்கு கூட கிடைக்காத வரம். மனிதனாக பிறந்த உங்களுக்கு இந்த வரம் கிடைத்திருக்கிறது. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

உண்மைச் சம்பவம் (பெயர்கள் மட்டும் குறிப்பிடவில்லை)

இது உண்மை என்பதற்கு ஒரு உண்மை சம்பவத்தை நான் நேரில் கண்டேன். எனது நண்பருக்கு 3 அண்ணன் தம்பிகள். அதாவது இவரையும் சேர்த்து மொத்தம் 4 பேர். அவர்களில் மூத்தவர் மற்றும் இரண்டாவது அண்ணன் ஆகியோர் திருமணம் செய்துகொண்டனர். எனது நண்பர்தான் கடைசி. அதில் இவருக்கு நேர் மூத்தவர் மட்டும் திருமணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

அதனால் பெற்றோர் கடைசி வாரிசான எனது நண்பருக்கும் ஒரு ஆசிரியையை திருமணம் செய்துவைத்துவிட்டனர். இது நடந்து இப்போது 35 ஆண்டுகள் கடந்துவிட்டன. எனது நண்பரின் திருமணம் ஆகாத சகோதரருக்கு ஸ்ட்ரோக் வந்து கையும் காலும் விளங்கவில்லை.

சகோதரர்கள் அவரை மருத்துவமனையில் வைத்து பார்த்தனர். அப்போதுதான் அந்த சகோதரர் நானும் திருமணம் செய்து இருக்கலாம். இன்று என்னை கவனிக்க யாரும் இல்லை என்று கூறி அழுதபோது அவரது சகோதரர்கள் அனைவரும் கலங்கி நின்ற காட்சியை எனது நண்பர் என்னிடம் கூறி கண்ணீர்விட்டார்.

இப்போது 3 சகோதரர்களும் அவரை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு நன்றாக கவனித்துக்கொள்கின்றனர். பல ஆயிரங்களை செலவு செய்துப்பார்த்தாலும் கூட அவரை வீட்டில் வைத்து பராமரிக்க ஆள் இல்லை. அவருக்கென்று ஒரு குடும்பம் இருந்திருந்தால் இன்று அவர் முதியோர் இல்லத்தில் இருந்திருக்கமாட்டார்.!? யோசித்துப்பாருங்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!