மாம்பழக் கன்னங்கள் வேணுமா..? அப்ப மாம்பழம் சாப்பிடுங்க..!
Mango Benefits in Tamil
Mango Benefits in தமிழ்-முக்கனிகளில் ஒன்றாக கருதப்படும் மாம்பழம் பல்வேறு வகைகளில் பயன்படுகிறது. மா என்றாலே தமிழில் மாம்பழம் என்றாகும். மா மரத்தின் இலைகள் புனிதமான காரியங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மாவிலை தோரணம் என்று கூறப்படும் மாவிலை வீட்டு விசேஷங்களில் பயன்படுகிறது.
மாங்காய் ஊறுகாய் செய்வதற்கும், மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து பச்சையாக சாப்பிடுவதற்கும் பயன்படுகிறது. மாம்பிஞ்சு மாவடு என்று சொல்லக்கூடிய ஒரு வகை வத்தல் செய்வதற்கு பயன்படுகிறது. மாம்பழம் விரும்பாதவர் யாரும் இல்லை. அதன் வாசம் தனி சுவையை உருவாக்கும்.
முக்கனிகளில் முதன்மையானது,மா. மா,பலா, வாழை என்று முதலில் வருவது மாம்பழம். குறிப்பிட்ட பருவத்தில் மட்டுமே கிடைப்பதால் தற்போது மாம்பழம் சாறு பிழிந்து பதப்படுத்தப்பட்டு ஆண்டுதோறும் கிடைக்கும் வகையில் பாட்டில்களில் விற்பனை செய்யபப்டுகின்றன. மாம்பழம் என்றாலே சேலம். சேலத்து மாம்பழத்துக்கு தனி சுவையுண்டு.
தேசியக்கனி
நமது நாட்டின் தேசியக்கனி மாம்பழம். உலகிலேயே அதிக மக்கள் உண்ணும் ஒரே கனி மாம்பழம் மட்டுமே. இந்திய வரலாற்றில் மாம்பழம் பற்றிய குறிப்புகள் உள்ளன.வேதங்களில் கடவுளின் உணவாகக் கருதப்பட்டன. மேங்கோ (Mango) என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் அந்த சொல் மாங்காய் என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து திரிந்து உருவானது என்பது அந்த சொல்லின் வடிவமே நமக்கு உணர்த்திவிடும். .மு.4000 ஆண்டிலேயே மாம்பழம் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. கி.பி.1800 ம் ஆண்டுகளில் ஆங்கிலேயர்கள் மாமரத்தை ஐரோப்பாவிற்கு கொண்டுசென்று அறிமுகம் செய்தனர்.
மாம்பழத்தில் சுமார் 35 வகை சிற்றினங்கள் உள்ளன.மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரகங்கள் வெவ்வேறு குணம் மற்றும் சுவைகளில் கிடைக்கின்றன.உலகிலேயே அதிகமாக விளையக் கூடியதும்,அதிகப்படியாக உண்ணக்கூடியதும் மாம்பழமே.
மா பூமியின் மையப்பகுதியின் வெப்பமண்டல பிரதேசங்களில் அதிகம் வளர்கின்றன.இவற்றுள் இந்தியாவை தாயகமாக கொண்ட சிற்றினமான மாஞ்சிபெரா இண்டிகா(Manjifera indica) என்பதே உலகளவில் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது.
மாம்பழம் ஒரு வெப்பமண்டல பழமாகும். இதில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. மாம்பழத்தின் சில முக்கிய ஊட்டச்சத்துக் கூறுகள் கீழே தரப்பட்டுள்ளன :
கலோரிகள்: ஒரு நடுத்தர அளவிலான மாம்பழத்தில் சுமார் 100-120 கலோரிகள் உள்ளன.
கார்போஹைட்ரேட்டுகள்: மாம்பழங்கள் கார்போஹைட்ரேட்டின் நல்ல மூலமாகும், இது ஒரு பழத்திற்கு சுமார் 25 கிராம் வழங்குகிறது.
நார்ச்சத்து: மாம்பழம் நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும், ஒரு பழத்திற்கு சுமார் 3 கிராம் வழங்குகிறது.
வைட்டமின்கள்: மாம்பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே மற்றும் பல பி வைட்டமின்கள் நிறைந்துள்ளன.
தாதுக்கள்: மாம்பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்கள் உள்ளன.
மாம்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் பின்வருமாறு:
மேம்படுத்தப்பட்ட செரிமானம்: மாம்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவும்.
புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது: மாம்பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை புற்றுநோய் மற்றும் பிற நாள்பட்ட நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும்.
அதிக நோய் எதிர்ப்பு சக்தி: மாம்பழத்தில் உள்ள அதிக அளவு வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
மேம்படுத்தப்பட்ட தோல் ஆரோக்யம்: மாம்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ ஆரோக்யமான சருமத்தை மேம்படுத்தவும், வயதான அறிகுறிகளைத் தடுக்கவும் உதவும்.
குறைந்த கொழுப்பு அளவு: மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது, இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.
ஒட்டுமொத்தமாக, மாம்பழம் ஒரு சத்தான மற்றும் சுவையான பழமாகும், இது ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதியாக அனுபவிக்க முடியும்.
நம் நாட்டில் கிடைக்கும் மாம்பழ ரகங்கள் :
செந்தூரா மாம்பழம்
கறுத்த கொழும்பான்
வெள்ளைக் கொழும்பான்
பங்கனப்பள்ளி மாம்பழம்
மல்கோவா மாம்பழம்
ருமானி மாம்பழம்
திருகுணி
விலாட்டு
அம்பலவி [கிளி சொண்டன் மற்றும் சாதாரண அம்பலவி என இரண்டு]
செம்பாட்டான்
சேலம்
பாண்டி
பாதிரி
களைகட்டி
பச்சதின்னி
கொடி மா
மத்தள காய்ச்சி
நடுசாலை
சிந்து
தேமா (இனிப்பு மிக்கது) [2]
புளிமா – (BUCHANANIA AXILLARIS) (புளிப்பு மிக்கது)
கெத்தமார்
சீமெண்ணெய் புட்டிக்கா
காலபாடி ஆகிய ரகங்கள் கிடைக்கின்றன. ( ரகங்கள் : நன்றி-விக்கிப்பீடியா)
கோடையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாம்பழத்தைக் கொண்டாடும் விதமாக மாங்கனி திருவிழா தமிழக அரசு சார்பில் நடத்தப்படுவது வழக்கம்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu