Manaivi Kavithai-மனைவி என்பவள் மதி மந்திரி..!

manaivi kavithai-மனைவி குறித்த கவிதைகள் (கோப்பு படம்)
Manaivi Kavithai
கணவன் மனைவி உறவென்பது இறுதி நாட்கள் வரை தொடரும் ஒரு உன்னத பந்தம் ஆகும். அதற்கு ஒருவருக்கு அமையும் கணவனும் சரி அல்லது மனைவியும் சரி ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டவர்களாக இருக்கவேண்டும். வாழ்க்கையில் விட்டுக்கொடுத்தல் மட்டுமே நீடித்த அன்பினை கொண்டுவரும்.
குறிப்பாக மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். அந்த வரம்தான் வாழ்க்கையை இனிமையாக்கும். மனைவி என்பவள் தாயாக, மனைவியாக, தோழியாக, தோல்வியுறும் போது தோள்கொடுக்கும் தூணாக, இறுதி நாட்களின் முன்றாம் காலாக இருப்பவள் மனைவி.
Manaivi Kavithai
மனைவி குறித்த மேற்கோள்களை பார்ப்போம் வாருங்கள்.
கணவனிடம் எதையும் மறைக்காத மனைவிக்கும்
மனைவியை யாரிடமும் விட்டு கொடுக்காத
கணவனுக்கும் பிரிவு என்பது இல்லை
நமக்காக யோசிக்க
ஒரு வாழ்க்கை துணை இருக்கிறது
என்பதை உணரும் போது தான்
நம் வாழ்க்கை தொடங்கும்
மனைவிக்கு தன் கணவனும்
கணவனுக்கு தன் மனைவியும்
தான் முதல் குழந்தை
நம் கவலைகளை மறைய வைத்து
நம்மை சிரிக்க வைக்க
உண்மையாக நேசிப்பவர்களால்
தான் முடியும்
நம் அன்பை புரிந்து கொண்ட இதயம்
நம்முடைய கஷ்டங்களை சொல்லாமலே
புரிந்து கொள்ளும்!
Manaivi Kavithai
நமக்கு மனைவியாக வர்றவங்க..
நம்மளோட குடும்பத்தையும் அவங்க
குடும்பமாக பார்த்துக் கொள்வது தான்
கடவுள் நமக்கு கொடுக்கும்
மிகச் சிறந்த பரிசு…!
சொந்தங்கள் எல்லாம் சரியாக
அமையாவிட்டாலும் வாழ்க்கை
துணை எனும் சொந்தம் சரியாக
அமைந்து விட்டால் போதும்
அத்தனை உறவுகளையும்
உலகையும் வென்று விடலாம்.
ஒரு பெண்ணின் மனக் காயத்திற்கு
காரணம் அவள் கணவனாக இருந்தால்..
அந்த காயத்திற்கு சிறந்த மருந்தாக
திகழ அந்த கணவனால்
மட்டுமே முடியும்.
ஒவ்வொரு ஆணின் குறும்பை
ரசிக்க ஒரு பெண்ணும்.. ஒவ்வொரு
பெண்ணின் குழந்தை தனத்தை ரசிக்க
ஒரு ஆணும் வாழ்க்கையில்
கிடைத்தால் வாழ்க்கை வரம் தான்..!
Manaivi Kavithai
மனைவியை காதலியை போல
பார்த்து நேசியுங்கள்.. தங்கை போல
பாதுகாத்துக் கொள்ளுங்கள்..
தாயைப் போல மரியாதை
செலுத்துங்கள் உங்களைத்
தாண்டி அவள் அன்பு
எங்கும் செல்லாது.
வரையப்படாத ஓவியத்தின்
வண்ணங்களாய் சிதறிக் கிடந்தேன்
நான்..! அழகிய ஓவியமாக இன்று,
என் அன்பு மனைவியின்
வருகைக்கு பின்பு.
துக்கம், சோகம், கவலை, அழுகை
போன்ற வாக்கியங்களை அகராதியில்
இருந்து நீக்க வேண்டும்.. என்னை
மனதார தாங்கியவள் என் மனைவி..!
எனது முதல் குழந்தை அவள்..! அவளை
நான் என் மூச்சு உள்ள வரை
சுமக்க வேண்டும் என் மார்பில்.
நீயும் நானும் கணவன் மனைவியாக
வாழ இந்த காதல் குடுத்து
வைத்திருக்க வேண்டும்.
Manaivi Kavithai
உன் மனம் முழுவதும் நான்
மட்டும் தான் இருக்க வேண்டும்
அது தான் என் ஆசை.
என் வாழ்க்கை முழுவதும்
நீ மட்டும் என் கூடவே இருக்கணும்
அது தான் என் தவம்..!
தன் மனைவியை அடிக்கடி
குறை கூறிக் கொண்டிருக்கும்
கணவனுக்கு தெரியாது தன்
முதுமையில் அவள் தான்
தாயாவாள் என்று..!
உடலுக்கு உயிர் எவ்வளவு
முக்கியமோ அது போல
தான் நீ எனக்கு.
ஒரு மனைவிக்கு தன் தாயைப்
போல தன்னை பார்த்துக் கொள்ளும்
ஒரு கணவன் கிடைத்து விட்டால்..
அவள் தான் உலகத்தின்
மிகப்பெரிய அதிஷ்டசாலி..!
Manaivi Kavithai
என் கணவர் ரொம்ப
கோபக்காரர் தான் ஆனால்
அதை விட அதிகமா என் மீது
அன்பு வைத்திருக்கிறார்.
தோளுக்கு மேல் வளர்ந்த
பின்னும் என்னை தோளில்
போட்டு தாலாட்டி.. குழந்தை போல
பார்த்துக் கொள்ளும் உறவு
நீ மட்டும் தான் அன்பே..!
Manaivi Kavithai
உரிமையை தந்து விட்டு
அன்பை வெளிப்படுத்த மாட்டான் கணவன்
ஆனால் சின்ன சின்ன விஷயங்களிலும்
அன்பை எதிர்பார்ப்பவள் மனைவி..!
ஒரு பெண்ணிற்கு இந்த உலகில்
எவ்வளவு சந்தோஷங்கள் கிடைத்தாலும்
அவள் தேடும் ஒரே சந்தோஷம் அவள்
கணவனின் அன்பு மட்டுமே..!
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu