Lychee in tamil-கோடைக்கு கிடைத்த கொடை, லிச்சி பழம்..! நன்மைகள் என்னென்ன..?

Lychee in tamil-கோடைக்கு கிடைத்த கொடை, லிச்சி பழம்..!  நன்மைகள்  என்னென்ன..?
X

lychee in tamil-லிச்சி பழம் (கோப்பு படம்)

கோடைகாலத்தில் லிச்சி பழம் சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சியை அளிப்பதுடன் ஏராளமான ஆரோக்ய நன்மைகளையும் வழங்குகிறது.

Lychee in tamil

லிச்சி பழத்தின் வெளிப்புறத்தில் மென்மையான முட்கள் இருக்கும். இளஞ்சிவப்பு நிறத்தில் முட்டை வடிவமாக இருக்கும். இந்த லிச்சி பழம் நல்ல இனிப்பான சுவை கொண்டது. கோடைகாலத்தில் லிச்சி பழம் சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது. இதில் நீர்ச்சத்து இருப்பதால் உடல் ஆரோக்யம் பெறுவதுடன் பல நன்மைகளும் கிடைக்கும்.

லிச்சி பழம் உடலின் எடையை குறைப்பதுடன் உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தருகிறது. அதனால்தான் பாருங்கள் இந்த பழத்தை இயற்கை கோடையில் கிடைக்கச் செய்திருக்கிறது. அப்படின்னா கோடைக்கு கிடைத்த கொடை தானே..? ( எப்பிடி.. தலைப்பை உறுதிப்படுத்திட்டோம்ல..?)

Lychee in tamil


லிச்சியின் ஊட்டச்சத்துக்கள்

லிச்சி பழத்தில் வைட்டமின் சி, டி, கே, ஈ ஆகியவை உள்ளன. அதுமட்டுமின்றி, வைட்டமின் பி 1, பி 2, பி 3, பி 6 வரை ஏராளமான வைட்டமின்கள், வைர்ரிபோஃப்ளேவின், உடலுக்கு தேவையான அத்தியாவசியமான கனிம தாதுக்களான பொட்டாசியம், துத்தநாகம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன.

லிச்சி பழத்தின் நன்மைகள்

கோடைகாலத்தில் உடலுக்கு நீர்ச்சத்து அதிகம் தேவையாக இருக்கும். லிச்சியில் அதன்சாறு நிறைந்து இருக்கிறது. அதன் இனிப்பு சுவை அதை உண்ணும்போது நீர்ச்சத்தை உடலில் சேர்ப்பதுதான் இனிப்பு களைப்பை நீக்குகிறது. இந்த பழத்தில் 80 சதவீதம் வரை நீர்ச்சத்து உள்ளது. இது கோடையில் உங்கள் ஆரோக்யத்தை பாதுகாக்கும்.


லிச்சி பழம் சாப்பிடுவதால் உடல் எடையை குறைக்க முடியும். இந்த பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. அதனால் செரிமான கோளாறு ஏற்படாது. உடலுக்கு செரிமான சக்தி கிடைக்கும்.

Lychee in tamil

லிச்சி பழம் இதயத்திற்கு மிகவும் நல்லது. இதில் செறிவான பொட்டாசியம் உள்ளதால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். அதன் காரணமாக இதயமும் ஆரோக்யமாக இருக்கும்.

லிச்சியை உண்பதால் வைட்டமின் சி அதிகம் கிடைக்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்ற பழம் லிச்சி. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்கிறது.

கோடைகாலத்தில் லிச்சி பழம் சாப்பிடுவது வெப்ப பக்கவாதத்தின் அபாயத்தைக் குறைக்கும். ஏனென்றால் இதில் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.

Lychee in tamil


லிச்சி பழத்தில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பொருள் உள்ளதால், இந்த லிச்சி பழத்தை பெண்கள் அதிகளவு உட்கொண்டால் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயில் இருந்து நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.

லிச்சி பழத்தில் நிறைந்திருக்கும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதயத்தை ஆரோக்யமாக வைத்துக்கொள்ள மிகவும் பயன்படுகிறது. எனவே, லிச்சி பழத்தை அதிகளவு உட்கொண்டு வந்தால் இதயத்தை ஆரோக்யமாக பாதுகாக்கலாம்.

மொத்தத்தில் லிச்சி பழம் சிறந்த ஆரோக்யத்தை வழங்குகிறது.

Tags

Next Story