லவ்..பண்ணுங்க..சார்..வாழ்க்கையில நல்லதே நடக்கும்..!

Love Quotes in Tamil Text
X

Love Quotes in Tamil Text

Love Quotes in Tamil Text-லவ் இல்லீன்னா வாழ்க்கையே இல்லீங்க. எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பதைக்கூட காதல் தீர்மானிக்கும். ஆமாங்க.. காதலித்து வாழ்ந்தால் நம் ஆயுளை நீட்டிக்கும் அருமருந்தும் அதுவே.

Love Quotes in Tamil Text

லவ் என்று சொல்லும்போதே உயிரில் ஜிவ்வுன்னு ஒருவித புத்துணர்ச்சி ஏறும். அதுதான் லவ். உடலின் அத்தனை நரம்புகளும் சில்லிட்டு எழும், அதுதான் லவ். உலகத்தில் எத்தனை பிரச்னை வந்தாலும் எதிர்கொள்ளும் திறன்வரும் இந்த காதல் மட்டும் இருந்துவிட்டால். அந்த காதலின் மகிமை கூற இதோ..லவ் வாசகங்கள்.

உறங்கும் போது

கனவிலும்

விடிந்தவுடன்

நினைவிலும்

வாழும் வரை

உயிரிலும் நீயே..

(இப்படிக்கு உன்னவள்)


நீ

வானவில்லாய்

இரு நான்

அதில் இருக்கும்

ஏழு நிறமாய்

இருப்பேன்..!

என்றும்

இணை பிரியாமல்...

காற்றைக் கண்டதும்

நடனமிடும்

மரங்களைப் போல

அவனைக் கண்டதும்

என் மனமும்

துள்ளித் துள்ளி

நடனமிடுகிறதே..

love quotes in tamil text

எனக்குள்ளான

தனிமையை

தவிடு பொடியாக்கி

விடுகிறது,

உன் நினைவுகள்...

யாருமில்லா தனியரங்கில்

ஒரு குரல் போல

நீ எனக்குள்ளே

எங்கோ இருந்து

நீ என்னை இசைக்கிறாய்-

இப்படிக்கு உன் இதயம்

உன்னைத் தேடி அலையும்

தேடலின் சுவாரஸ்யம்

குறையும் போது

உன் நினைவுகள்

என்னைத் தீண்டி

தேடலைத் தீவிரமாக்குகிறது..!

உன்னை

மட்டும் அல்ல

உன் நினைவை

சுமப்பதும்

வரமே எனக்கு..


ஒளியிழந்த

விழிகளுக்கும்

கனவைத் தந்தாய்

கலைந்துவிடாதே

இருண்டுவிடும்

என்னுலகம்..

அன்பெனும் குழலை

வாசித்துப் பார்க்க

ஆசை அவன்

விழிகளில்

தெரிகிறது..

மௌனமாயிருந்தே -என்

மனதைக்

கொள்ளையடித்தாய்

தொலைவில்

நீ சென்றால்

தொலைந்தே

போகின்றேன்

நானும்

உன் நினைவில்..

பல சொந்தங்கள்

உனக்கிருந்தாலும்

உன்னிதயத்தின்

சொந்தம்

நானாக மட்டுமே இருக்க

வேண்டும்..

விலகியபோதும்

உன் நேசம்

இணைத்தது

நம் இதயத்தை..

துளியாய்

கலந்துவிட்டாய்

மனக் கடலில்

கடலே காணாமல் போனது..


உன் அன்பின்

பிரகாசத்தை

உணர்ந்தேன்

நீ எனக்காக

சேகரித்துத் தந்த

மின் மினியில்..

கலங்கித்தான்

போகிறது கண்களும்

உன்னை

காணமலிருந்து

காணும்போது..

கொண்டு

சென்றுவிடு

உன் நினைவுகளை

என்னை

கொன்று தின்கிறது..

நானிருக்கின்றேனென்று

சொல்லாமல் சொல்லும்

உன் அரவணைப்பில்

உடைந்த மனமும்

நிறைந்தது..


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா