இருவிழிக் கவிதைகள் எழுதும் காதல்..! சர்வதேச மொழி,காதல்..!

Love Quotes in Tamil
X

Love Quotes in Tamil

Love Quotes in Tamil-காதல் என்பது உயிரினங்களின் முதல் அடையாளம். காதல் உணர்வை ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு விதமாய் வெளிப்படுத்துகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மொழியில்..அது,காதல் மட்டுமே அறிந்த மொழி.

Love Quotes in Tamil-இந்த உலகின் சர்வதேச மொழி, காதல். ஒப்பீடில்லாத ஒரு உணர்வு காதல். காதல் இருந்தால் மகிழும். காதல் விழுந்தால் அழுகும். காதலுக்கு மட்டுமே கண்ணில்லை என்பார்கள். அதற்கு காரணம், முகம் பார்த்து வருவதல்ல உண்மைக்காதல். அகம் பார்த்து வருவதே உண்மைக்காதல். கண்ணும் கண்ணும் பேசிக்கொள்ளும் அதிசய மொழிக்காதல்.

காதல் பருவ வயதில் வந்தாலும் தவறு. வராவிட்டாலும் தவறு. தவறான பாதைக்குச் செல்லாதவரை காதல் புனிதமானதே. பாதை மாறினால் காதல் நாறித்தான் போகும். அதனால் உண்மைக்காதல் கூட தவறாக பேசப்படுகின்றன.அதற்காக காதல் சாகாது. உயிரினங்கள் உள்ளவரை காதல் சாகாது.

  • நீ இல்லாமல் நான் இல்லை என்பது கூட நான் பொய் என்பேன்..ஏனெனில் நீயும் நானும் ஒன்று என்றே நான் நினைக்கிறேன்..ஆம்..எனக்குள் நீ..!
  • வாழ வேண்டும் என்பது மட்டுமே என் ஆசை இல்லை. உன்னைப்பிரிந்தாலும்..நீ எனக்கு கிடைக்காவிட்டாலும்..என்னை நீ விரும்பாவிட்டாலும் கூட நான் கொண்ட உன் மீதான காதலுடன் நான் வாழ்வேன்..!
  • உலகில் யாருக்கும் புரியாத அற்புத மொழி காதல் மொழி..! இருவருக்கு மட்டுமே புரிந்துபோகும் ஊமை மொழி..! உள்ளத்து வார்த்தைகள் விழி வழியே உன் கண்களுக்கு பரிமாற்றம் செய்யப்படும் விந்தை மொழி, இந்த காதல் மொழி..!


  • உன் மீதான எனது சந்தேகங்கள் கூட உன் மீது வேறு யாரும் காதல் கொண்டுவிடக்கூடாது என்பதின் வெளிப்பாடே..! அது சந்தேகம் அல்ல..! உன் மீதான அதீத காதல்..!
  • உன் கைவிரல் உரசிய நாட்கள் இன்னும் இதய அறைக்குள் பொக்கிஷமாய் புதைந்து கிடக்கிறது, உன்னை மறுபடியும் சந்திக்கும் தருணங்களை எதிர்பார்த்து..!
  • நாம் நடந்து திரிந்த பாதைகள் கூட நம் கால்தடம் தேடி ஏங்கிக்கிடக்கும்..தினமும் சந்தித்த உண்மை உள்ளங்களை காணாமல் தேடி ஊமையாய் உள்ளுக்குள் அழும் குரலால்தான், அந்த சாலைகள் வெடித்துக்கிடக்கின்றன, குண்டும் குழியுமாக..!
  • உன்னை நேரில் பார்க்காத நாட்களில்தான் எனக்குள் உன்மீதான அன்பூ பிரவாகமாக ஊற்றெடுக்கிறது..! அதற்காக என்னை சந்திக்காமல் எனக்கு தண்டனை வழங்கிவிடாதே..நான் வாழ்வதே உன் மூச்சுக்காற்றில் மட்டுமே..!


  • நேசம் என்பது அகத்தின் அழகு..அது முகம் பார்த்து வருவதில்லை..! அழகு என்பது தோல் போர்த்திய போர்வை..! வயது முதிரும் போது முகவழகு மாறும்..! ஆனால்..அகவழகு மாறாது..! அது என்றும் இளமையாகவே அழகோடு இருக்கும்..!
  • உண்மை நேசிப்புக்கு உருவம் ஒரு பொருட்டல்ல..காதல் மனங்களுக்கு கருப்பும் ஒரு பொருட்டல்ல..எழுந்த காதலுக்கு ஏழை என்பதும் ஒரு பொருட்டல்ல..ஜாலம் புரியும் மனங்களுக்கு ஜாதி ஒரு பொருட்டல்ல..மாயம் புரியும் மனங்களுக்கு மதங்கள் ஒரு பொருட்டல்ல..அங்கு மனிதம் என்னும் பொதுமொழி ஒன்றே போதும்..!
  • காரணம் தேடாமல் வருவதே உண்மைக்காதல்..! காரணம் தேடினால் அது சுயநலக்காதல்..! பணம் தேடும் மனமெல்லாம் உண்மை மனம் தேடுவதில்லை..! மனம் தேடும் மனமெல்லாம் பணம் தேடி அலைவதில்லை..!
  • தீர்ந்து போய்விடும் என்று உன்மீது அளவோடு அன்பை அள்ளித்தெளித்தேன்..என்ன ஒரு ஆச்சர்யம்..அன்பின் இதயப்பாத்திரம் நிரம்பி வழியத் தொடங்கிவிட்டது..! இனி அந்த அன்பு தீராது..உன்னை என் அன்பிலே குளிப்பாட்டுவேன்..!


  • நம் உடல்களால் எழும் மகிழ்ச்சியைக்காட்டிலும் உன் ஊடலால் எழும் உன் முக வாட்டத்தை சீண்டி விளையாடும் எனக்குள் நீ இன்னும் ஒரு குழந்தையடி..!
  • நீரில் இருந்தாலும் நெருப்பில் இருந்தாலும் தங்கத்தின் மதிப்பு மாறாது. அது போலத்தான் நீ அருகில் இருந்தாலும் தொலைவில் இருந்தாலும் என் மனம் என்றும் மாறாது..!
  • உன் மடியில் தலை சாய்ந்திருக்கும் இந்த நொடி போதும் பெண்ணே..! இந்நொடி என் உயிர் போனாலும் சந்தோஷம். நாளை என்ற கனவு களைந்து போகட்டும்..!
  • உயிர்மெய் எழுத்துக்களால் எழுதி இருக்கும் என் கவிதைகள் உனக்கானது மட்டும் இல்லை. அதில் கலந்து இருக்கும் என் உயிரும் உனக்கானது தான்...!


  • நீ விரும்பினால் உன் வாழ்வின் இறுதிவரை உனக்குத் துணையாக வர எனக்குச் சம்மதம். தேவைப்பட்டால் என் உயிரையும் உனக்கு கொடுப்பேன்..!
  • உலகமே நினைத்தாலும் உண்மையான அன்பை தர இயலாது. ஆனால், ஒரு உண்மையான அன்பு நினைத்தால் ஒரு உலகத்தையே தரலாம்...!
  • துடிப்பது என் இதயம்தானடி ஆனால் துடிக்க வைப்பதோ உன் நினைவுகள் மட்டும்தான்..! என்னுள் கலந்த உன்னை என் உயிர் பிரிந்தாலும் பிரிக்க முடியாது அன்பே...!
  • நான் உயிரோடு இருப்பதை நான் விடும் மூச்சுக்காற்று உறுதி செய்கிறது..அது எல்லோருக்குமே தெரியும். ஆனால், என் உயிர் உன்னோடு இருப்பது யாருக்குமே தெரியாது, என்னையும் உன்னையும் தவிர..!


  • என்னைப் பார்க்கும் போதெல்லாம் பொய் கோபம் கொள்கிறாய்..எனக்குத் தெரியும்..அது கோபம் இல்லை வெட்கம் என்று..!
  • காதலைத் தேடி நீ ஓடாதே..தோற்றுப் போவாய் உன் வாழ்க்கையில்..! வாழ்க்கையைத் தேடி ஓடு..உன் முயற்சி என்னும் வியர்வை சிந்து..! வாழ்க்கையில் வென்று நின்றால் உன் காதலே உன்னைத் தேடி வரும்..!
  • எப்போதாவது என்னை நினைத்துப் பார்ப்பாயா..என்று கூடஎனக்குத் தெரியவில்லை..! எப்போதுமே உன்னை நினைத்தபடியே இருக்கிறேன், நான் உன்னை..! நான் வைத்திருப்பதுஉன் மீது உண்மைக்காதல்..!
  • காலமெல்லாம் உன்னை பார்த்துக்கொண்டே வாழ வேண்டும் என்பதே என் காதல்..! உயிர்ப் போகும் நேரம் கூட உந்தன் மடி சாய்ந்து சாக வேண்டும்..!
  • உன் மூச்சுக் காற்றே என் சுவாசமாக நான் மூச்சுவிட வேண்டும்.. என் காற்றில் நீ மூச்சுவாங்க வேண்டும்..!நீ வேறு நான் வேறு அல்ல என் கண்மணியே..!
  • கண்ணே.கனியமுதே..மண்ணே மாமணியே..மல்லிகையின் வாசனையே..! உன்னைக் காணும் வரை எனக்கு இந்த வாழ்க்கை பிடித்திருந்தது. ஆனால், உன்னைக் கண்ட பின்னே நான் வாழ்வதில் அர்த்தம் புரிந்தது..!
  • அழகானவர்களை பிடிக்கிறது என்பது உண்மைக் காதலாகிவிடாது..! மனதுக்குப் பிடித்தவர்களை பார்க்கும்போது அழகாய் தெரிந்தால் அதுவே உண்மைக்காதலாகும்..!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story