love quotes in tamil-காதல் இல்லா வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா..? காதல் மொழிகளை காணுங்கள்..!

love quotes in tamil-காதல் இல்லா வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா..? காதல் மொழிகளை காணுங்கள்..!
X

love quotes in tamil-காதல் மேற்கோள்கள்.(கோப்பு படம்)

Love Quotes in Tamil-காதல், ஒருமுறை வந்துவிட்டால் அது சாகும்வரை மறவாது. அந்த காதலின் வலியை உணர வாருங்கள்.

Love Quotes in Tamil--காதல் இல்லாத வாழ்க்கை உயிரினத்தில் இல்லை. பறவைகள், விலங்குகள் இப்படி எல்லா உயிரினத்திலும் காதல் உண்டு. காதலின் அடிநாதம் அன்பு. அந்த அன்பு தாய்,தந்தை, காதலி,சகோதரர்கள், குழந்தைகள், குருவிகள், விலங்குகள், செடி, கொடிகள் என எல்லா உயிரினங்களின் மீதும் வரும்.

அந்த காதலின் வார்த்தைகளால் வர்ணித்துவிட முடியாது. அதற்கான மேற்கோள்களைபப் பாருங்கள்.

  1. நீ இல்லாமல் நான் இல்லை என்பது கூட பொய்யாக இருக்கலாம்; ஆனால், உன்னை நினைக்காமல் நான் இல்லை என்பதே மெய்..!
  2. வாழ வேண்டும் என்பதில் ஆசை இல்லை! உன்னுடன் வாழ வேண்டும் என்பதில் தான் பேராசை..!
  3. அவளின் உள்ளத்துமொழி புரியாமல், புதிராகி போனது என் காதல்..!
  4. சில நேரங்களில் எனக்கே ஒரு சந்தேகம், என் இதயம் எனக்காகத்தான் துடிக்கிறதா... என்று..!
  5. பெட்ரோல் விலையை போல்தான் என் காதல் உன் மேல் தினமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது..!
  6. உன் கைவிரல் உரசிய நாட்களை நினைத்தே என் இமைகள் மோதுகின்றன தினமும்..!
  7. என் வலக்கையை, உன் இடக்கையுடன் ஜோடி சேர்த்து, சாலையின் நீளத்தை, நம் காலடிகளால் அளக்கலாம் வா..! நடை பயிலும் காலமிது..!

  1. மெய் அன்பில் பேரரசனும் சிறுபிள்ளையாவான், காதலெனும் உயிரோவியத்தின் முன்..!
  2. கைகள் இணைந்திருந்தால் மட்டுமா காதல்? இதயம் இணைந்திருந்தால் தான் காதல்..! தொலைவில் இருந்தாலும் தொலையக்கூடாது..நம் உண்மைக் காதல்..!
  3. நீ ஒருவரை நேசித்தது உண்மையானால், அவர்களின் நினைவுகள் தினம் தினம் ஞாபகத்திற்கு வரும்,உனக்குப்பிடித்த சங்கீதம் போல..!
  4. வீழ்ந்தால் தாங்கிப் பிடிக்கும் வாழ்க்கைத் துணை கிடைத்துவிட்டால், தொலைத்துவிடாதே..நீ அதில் தொலைந்துபோ..!
  5. அன்பாய் பேச ஆயிரம் உறவுகள் இருக்கலாம்; ஆனால் நம்முடைய அன்புக்காக மட்டும் சில உறவுகள் இருக்கின்றன..! அவர்களை யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக் கொடுக்காதீர்கள்..!
  6. காரணம் வைத்து பிடிப்பதில்லை காதல்..! காரணமே இல்லாமல் பிடிப்பது தான் காதல்..!

  1. உன் மீதான காதல் என்பது நீ இருக்கும் வரையல்ல, நான் இறக்கும் வரை தொடரும்..!
  2. உனக்கும், எனக்குமான தூரம் ஒன்றே நிர்ணயிக்கும், என் புன்னகையின் நீளத்தை..!
  3. நிலவின் அழகை சொல்ல வார்த்தைகள் கோடி, நீ எங்கு சென்றாலும் நான் வருவேன் உன்னைத் தேடி..நீயே என் நிலவு..!
  4. காதல் கசப்பாகத் தான் இருந்தது , உன்னை காணாத வரை..!
  5. ஆண்களுக்கும் வெட்கப்படக்கூடத் தெரியும் என்று உன்னை கண்ட பின் தானடி புரிந்தது..!
  6. வாழ்க்கை என்ற கடலில், காதல் என்ற படகில் பயணிப்போம், இருவரும் கரைசேரும் வரை..!
  7. காலம் முழுதும் உன்னுடனேயே கடந்து விட ஆசைதான்..! என் காதல் சம்மதித்தால்..!
  8. கடல் நீர் வற்றும் வரை, காகித மலர்கள் வாடும் வரை, ஆகாயம் அழியும் வரை, என் ஆயுள் முடியும் வரை, உன்னை காதலிப்பேன்..!

  1. தொலை தூரத்தில் இருந்தாலும், தொலைந்து போகாத காதல் தான் உண்மையான காதல்..!
  2. என்னோடு இரு அது போதும்..! பிறகு யோசிப்போம், வாழ்க்கை முடிவிலியா, முடிவா என்பதை..!
  3. ஆசைகளே இல்லாத அற்ப பிறவி நான்..! என்னையும் பேராசைக்காரனாய் மாற்றினாள்..!
  4. நீயும் நானும் ஒன்றாய்ப் போகும் போது பாதைகூட நீள்கிறது..! உன்னோடு நான் இருக்கும் தருணங்களை ரசித்து..!
  5. கண்ணைக்காக்கும் இரண்டிமைபோலவே காதலின்பத்தைக் காத்திடுவோம்..அங்கு இதயங்கள் இரண்டல்ல..ஒன்றுதான்..!
  6. உன்னை நேசிக்கத்தொடங்கியதால் உன் கோபம் கூட எனக்கு அழகாய் தெரிகிறது..!
  7. உன் விழிகள் கண்டு அஞ்சிய நான், நம் விரல்கள் கோர்த்ததும் மாயமானதே..!
  8. ஆறடியில் ஓர் நிலவு, பத்தடி தூரத்தில் நடந்து செல்கின்றது..! உலகம் அறியா எந்தன் அதிசயம் அவள்..!

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
future of ai act