Love Pain Quotes in Tamil-காதல் தோல்வி என்பது காதலுக்கான தோல்வியா?

love pain quotes in tamil-காதல் வலி மேற்கோள்கள் (கோப்பு படம்)
Love Pain Quotes in Tamil
உலகத்தில் பெரிய வலி என்பது பெரிய விபத்தில் சிக்கி ஒரு காலை இழந்தபோது கூட வராத வலி, காதல் தோற்றுப்போனால் வரும். அது மிகப்பெரிய வலியாக காதலர்கள் உணர்கிறார்கள். காதல் இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை என்கிற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
இன்னும் சிலர் உயிரையே மாய்த்துக் கொள்கிறார்கள். அது தவறான செயல் என்பதைக் கூட அறிவதற்கு அவர்களின் மனம் இடம் தருவதில்லை. காதல் தோல்வி என்பது காதல் கைகூடவில்லை என்பதே. ஆனால், மனதுக்குள் உதித்த காதல் சாகவில்லையே. அப்படியே தான் இருக்கும். அதனால் சாகாமல் வாழ்ந்து காட்டவேண்டும். யார் உங்களை ஏமாற்றினார்களோ, அவர்கள் நீங்கள் கிடைக்கவில்லை என்று மனதால் வருந்தவேண்டும். அதுதான் வாழ்க்கையில் அவர்களுக்கு கொடுக்கின்ற உண்மை வலி.
Love Pain Quotes in Tamil
காதல் வலிகளை உணர்த்தும் காதல் வலி வரிகள், உங்களுக்காகத் தரப்பட்டுள்ளன. படித்து வலியை உணர்ந்து காதலை நேசியுங்கள்.
அவள் கரம் சேர காதலுடன்
காத்திருந்தேன்.
கரம் கோர்த்து
அழைத்து வந்தாள்
அவள் காதலனை..!
Love Pain Quotes in Tamil
மரணத்தை காட்டிலும் கொடுமையானது மனக்கவலை.
மரணம் ஒருமுறை தான் கொல்லும்.
மனக்கவலை நொடிக்கு நொடி கொல்லும்
தனிமையும் ஒரு சுகமாக
போய்விட்டது. உன்
நினைவுகளை நினைத்துப்
பார்க்கையில்..!
பழகிய மிருகங்களிடம் இருக்கும்
பாசம் கூட,
பழகிய மனிதர்களிடம்
இருப்பதில்லை..!
உன்னோடு சேர முடியாத
இந்த வாழ்க்கையை வாழ
முடியாமல் தவிக்கும்
மனதிற்கு எப்படி ஆறுதல்
சொல்வது என்று
எனக்குப் புரியவில்லை..!
Love Pain Quotes in Tamil
சுவாசித்த காற்றையும்
நேசித்த காதலையும்
எப்போதும் மறக்க முடியாது.
அப்படி மறந்தால் அது
மரணமாகத் தான் இருக்கும்…!
ஒருதுளி அன்பை கொடுத்து
நூறுதுளி கண்ணீரை விலை
கேட்பதுதான் இந்த வாழ்க்கை..!
உன்னை தொலைத்த என்
இதயம் உன்னை
தொலைத்த இடத்தில்
நின்று உன்னை எதிர்பார்த்து
காத்துக் கொண்டிருக்கின்றது.
Love Pain Quotes in Tamil
உயிரோடு இருக்கிறேன்
ஆனால் உடைந்து
இருக்கிறேன்
என்னவென்றே தெரியாத
பல காரணங்களால்..!
நீ தூரத்தில் பிரிந்து இருந்தாலும்
உன் நினைவுகள் என்னுடன்
நெருக்கமாக இருந்து
கொண்டிருக்கின்றது..!
உன் நினைவுகளை யாராலும்
என்னிடம் இருந்து
பிரிக்க முடியாது..!
விதியே,
ஒருநாளாவது
என்னை நீ
நிம்மதியாக உறங்க வை
அது என் மரணமாக
இருந்தாலும் பரவாயில்லை..!
Love Pain Quotes in Tamil
நீ தந்த வலிகளை இனிமையாக்க
உன் நினைவுகள் மட்டும்
போதுமாக இருக்கின்றது.
நான் நேசிக்கும்
ஒரு உறவும்
எனக்கு நிரந்தரமில்லை என்பது
கடவுளால் அளிக்கப்பட்ட
சாபம் போல..!
மிகப் பெரிய வலி நான்
உன்னுடன் பேச நினைத்தும்
உன்னோடு பேச முடியாமல்
தவிப்பது தான்.
காதலை போல் மிகச் சிறந்த
பரிசும் இல்லை..!
காதலைப்போல மிக மோசமான
வலியும் இல்லை..!
எவ்வளவு தான் அழுதாலும்
காதல் ஏற்படுத்திய வலிகள்
குறைவதில்லை..!
நீ தந்த காதல் வலிகளால்
உன் அழகிய நினைவுகள்
கூட கனவில் வராமல்
போய்விட்டது.
Love Pain Quotes in Tamil
என் முழு வாழ்க்கையையும்
உனக்காக வாழ்ந்த எனக்கு..!
நீ தந்த வலிகள் என்னை
வலிகளின் அர்த்தத்தை
உணர்த்திக் கொண்டிருக்கின்றது..!
என் காதலே எனது மறக்க
முடியாத புன்னகையையும்
நீ தான் தந்தாய்..! எனது
மறக்க முடியாத அழுகையும்
நீ தான் கொடுத்தாய்..!
நான் இல்லை என்றால்
உனக்காக பலர்
காத்திருப்பார்கள்..! ஆனால்
எனக்கோ நீ இல்லை என்றால்
எனக்காக காத்திருப்பது என்
மரணம் மட்டும் தான்..!
என்னை மறந்து விடு என்று
சொல்லும் போது வார்த்தையோ
சிறியது தான்
ஆனால் அதன்
வலியோ கொடுமையாக
இருக்கும்.
Love Pain Quotes in Tamil
இரக்கமே இல்லாத உன்னை
ஒவ்வொரு நொடியும்
உண்மையாக நேசித்த
பாவத்திற்கு ஒவ்வொரு
நொடியும் வலியுடனே
நகருகின்றது.
இந்த உலகில் யாரும்
யாருக்காகவும் இல்லை
என்ற உண்மை புரிந்து
விட்டால் வாழ்வின் பல
வலிகள் இல்லாமல்
போய் விடும்..!
அன்பு எவ்வளவு அழகானது
என்பதை உன்னிடம் தான்
அறிந்தேன். அதே அன்பு
எவ்வளவு வலிகளை தரும்
என்பதையும் உன்னிடம்
தான் உணர்ந்தேன்.
Love Pain Quotes in Tamil
உயிரிலும் மேலாக ஒருவரை
நேசித்து அந்த உறவால்
புறக்கணிக்கப்பட்டும் போது
இதயத்திற்கு ஏற்படும்
வலியை தீர்க்க முடியாது.
நாம் உயிரிலும் மேலாக
நேசிக்கும் இதயத்திடம்
நம் எதிர்பார்ப்பு ஏமாற்றம்
அடையும் போது கோபம்
இருக்காது வலிகள்
தான் இருக்கும்.
நம் உடலுக்கு நம் உயிர் கூட
வலியாகத் தான் இருக்கும்.
நாம் உயிராக நேசிக்கும்
ஒரு உயிர் நம்மை
மறந்து விட்டால்.
சில நேரம் வலிகளின்
உச்சத்தால் சிலரை
வெறுக்க தோணும்.
ஆனால் எந்த நேரத்திலும்
அவர்களை மறக்க தோணாது..!
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu