Love Kavithai Tamil-காலச்சக்கரத்தில் காதலுக்கு தோல்வியில்லை..!

love kavithai tamil-காதல் கவிதைகள் (கோப்பு படம்)
Love Kavithai Tamil
காதல் ஒரு கிளியைப் போன்றது. இளமையின் கதவுகளில் தனது அலகுகளால் கொத்திக் கொத்தி அழைப்பு விடுக்கிறது. சில கதவுகள் சிவப்புக் கம்பளத்தோடு கதவை அகலமாய்த் திறக்கின்றன. சில கதவுகள் அரைகுறையாய் திறக்கின்றன. சில கதவுகள் புரிந்தும் புரியாமலும் தாழ்ப்பாள் விலக்குகின்றன. இன்னும் சில கதவுகள் அடைக்கப்படுவதற்காகவே திறக்கின்றன. காதலோ கொத்துவதை நிறுத்துவதில்லை. பாதங்களில் சிவப்புக் கம்பளம் கிடைத்தாலும் சரி, அலகுகளில் குருதிக் கோடுகள் குதித்தாலும் சரி. அவை நிறுத்துவதில்லை. ஏனெனில் காதல் தோற்பதில்லை.
Love Kavithai Tamil
அந்தக் காதலுக்காக எழுதப்பட்ட கவிதைகளை படித்து மகிழுங்கள்.
உன்னைத் தவிர எதையும் ரசிக்க மனம்
வரவில்லை ஏழு அதிசயமாக இருந்தாலும் கூட
நீ எதிர்பார்க்கும் அழகு இல்லாமல் இருக்கலாம்
ஆனால் நீ எதிர்பார்ப்பதை விட
அதிகமான அன்பு உன் மேல் உள்ளது
காதல் ஒரு கதைப்புத்தகமாக இருந்தால்,
முதல் பக்கத்தில் சந்திப்போம்
வாழ்வின் மிக பெரிய சந்தோசம்
உங்களின் காதலை கண்டுபிடிப்பதுதான்
Love Kavithai Tamil
உன்னை வர்ணிக்கும் போது
கவிதை கூட வெட்கப்படுகிறது
உள்ளத்தின் வண்ணமது தெறிவதில்லை
உடைத்து சொல்லும் வரை புரிவதில்லை
காலம் சென்றாலும்,
கனவுகள் மறைந்தாலும்,
கவிதைகள் அழிந்தாலும்,
என் உயிர் பிரிந்தாலும்,
காற்றோடு தொடர்ந்து வருவேன்,
உன் காதல் என்னும் அன்புக்காக.
உதட்டு சாயத்தை கலைத்த அவனே அதை
மீண்டும் முத்தத்தால் மீட்டு தா.
Love Kavithai Tamil
என் கூட்டில் உன் சூட்டின் கதகதப்பும்
என்னாளும் வாழ்ந்திடவே நினைக்கிறேன்
பூ போன்ற மனம் என்றாய் ரசித்தேன்
இப்படி வாட விடுவாய் என்று தெரியாமல்
உலக அதிசயங்கள் எல்லாம் கல்லால் ஆனவையடி
இல்லையேல் உன்னையும் சேர்த்திருப்பார்கள்
காதல் பிடிக்குள் சிக்கி காற்றும் திணறுகிறது
கொஞ்சம் இடைவெளிவிடு பிழைத்துப்போகட்டும்
காரணம் வைத்து பிடிப்பதில்லை காதல்
காரணமே இல்லாமல் பிடிப்பது தான் காதல்
Love Kavithai Tamil
உன் நினைவுகளோடு பேசிப்பேசி
ஊமை மொழியும் கற்றுக்கொண்டேன்
என் சொர்கத்தை எங்கும் தேட தேவை
இல்லை உன்னை சற்று நினைத்தாலே போதும்
பயப்படும் என் விழிகள்
நம் விரல்கள் கோர்த்ததும்
பயமறியாமற் போனதே
மெய் அன்பில் பேரரசனும் சிறுபிள்ளையாவான்
காதலெனும் உயிரோவியத்தின் முன்
வெறுப்பது நீயாக இருந்தால்
உன்னை அளவிற்கு மீறி
நேசிப்பது நானாக இருப்பேன்
Love Kavithai Tamil
உன்னால் செய்தேன் என்பதை விட
உனக்காக செய்தேன் என்பது தான்
உச்சக்கட்ட மகிழ்ச்சி
காதல் ஒரு கூடை
அது அன்பு மலர்களையும்
பாசக் கனிகளையும் சுமக்கும்
பல காலங்கள் கடந்தும் கூட
இன்று வரை காலாவதி ஆகாமல்
இருந்து கொண்டு இருப்பது காதல்
என்ற ஒன்று மட்டுமே
எனக்கு, பிடித்து செய்ததை விட
உனக்கு பிடிக்கும் என்று செய்ததே அதிகம்
Love Kavithai Tamil
சொல்லத் துடிக்கும் உதடுகளுக்கும்
சொல்லாமல் தவிக்கும் இதயத்திற்கும்
இடைப்பட்ட உணர்வே காதல்
நீ நினைப்பது போல் என் கவிதை
எல்லாம் கற்பனை அல்ல நிஜம்
உன் விருப்பம் என் விருப்பம்
அறியாமல் நம் கண்கள் காதல்
கொண்டது முதல் சந்திப்பில்
தயவு செய்து மொழிகளால் பேசு
விழிகளால் பேசாதே
எத்தனை முறை வீழ்வது
உன்னுள் நான்
நீ என்னவோ
இயல்பாகத்தான் பார்க்கிறாய்
நான் தான் மயங்கி விடுகிறேன்.
பேசியே மயக்குவது உன் பழக்கம்
உன் பேச்சில் மயங்குவது என் வழக்கம்
Love Kavithai Tamil
தொலைதூரம் நீ போனால்
உன்னை தேடி வெகுதூரம்
பயணிக்கிறது உள்ளம்
உன்னருகில் உன் நினைவில
மட்டுமே என் மகிழ்ச்சியெல்லாம்
பேச நினைத்த வார்த்தைகளும்
தூரமானது உன்னருகில்
நான் இருக்கும்போது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu