காதலித்து பார்..! உறவுகளின் உன்னதம் புரியும்..! காதல் கவிதைகள்..!

Love Kavithai Tamil
X

Love Kavithai Tamil

Love Kavithai Tamil-காதல் ஒருவழிப்பயணம் அல்ல. இருமணங்களின் ஒருமித்த பயணமே காதல். விட்டுக்கொடுத்தல் அங்கு புரிதலாக பரிணமிக்கும்.

Love Kavithai Tamil

காதல் என்பது இரு மனங்களின் கவிதை. ஒன்றுபட்ட இதயத்தின் ரெண்டு வாசல் எனினும் உயிர் ஒன்றே என்று தோன்றும். அதுதான் காதல். ரசிக்க முடியாத கவிதைகள் கூட ரசனைமிக்கதாக மாறும். உள்ளம் தடுமாறும். இருள் வந்தால் எப்போது விடியும் என்று மனம் தவிக்கும். காதல் என்பது சொல்லத் தெரியாத வார்த்தைகள். அதுவே கவிதைகளாகின்றன..!

  • தொலைதூரம் நீ போனால் உன்னை தேடிவெகுதூரம் பயணிக்குறது என் உள்ளம்..!
  • காதல் பிடிக்குள் சிக்கி காற்றுக் கூட திணறுகிறது..! கொஞ்சம் இடைவெளிவிடு பிழைத்துப்போகட்டும்...
  • உன்னருகில் உன் நினைவில் மட்டுமே என் மகிழ்ச்சியெல்லாம்..! வேறு எங்கும் எனக்கு கிளைகள் இல்லை..!
  • கற்பனையிலிருந்தவன் கண்ணெதிரே தோன்றினான்.. சொப்பனமோ என்றெண்ணி கிள்ளிப்பார்த்தது மனசு..உண்மையா என்று..!
  • கவிதையெழுத சிந்தித்தால் சிந்தைக்குள் நீ வந்துவிடுகிறாய் கவிதையாக...! வேறு கவிதைகள் எப்படி எழுதுவது..?
  • பேச நினைத்த வார்த்தைகளும் தூரமாகிப்போனது..! உன்னருகில் இன்னிசையாக இதயத்துடிப்பும் உனை காணும் போதெல்லாம்...இனிய இசையாக செவிகளில் வீழ்கிறது..!
  • இளைப்பாற இடம் கேட்டேன, இதயத்தில்.! .இணைந்து வாழும் வரம் கொடுத்தான் உயிர் மூச்சு .உள்ளவரை.!
  • உன் நினைவில் என் நொடிகளும் கரைந்துக் கொண்டிருக்கு...நொடிகள் கூட நீண்ட நேரமாக தெரிகிறது..உன் வருகையை எதிர்பார்ப்பதால்..!
  • ஊடலும் தேவை என்னில் உன்னைத் தேட..! திடீரென வீட்டுக்குள் புகுந்து உன்னை அச்சம் கொள்ளச் செய்ய ஆசை..!
  • குடைக்குள் இரு இதயங்கள் நனைகின்றன..! ஆமாம்..காதல் மழையில்...! இது இதயத்து மழை..!
  • பார்த்தநொடியே கண்களுக்குள் ஓவியமானாய்..! காத்திருக்கு விழிகளும் உன்னுடன் சேர்ந்து காவியம் பாட..!
  • நீ மூச்சுக் காற்றுப்படும் தூரத்திலிருந்தால், நான் காற்றில்லா தேசத்திலும் உயிர் வாழ துணிவேன்..!
  • துன்பக்கடலில் தத்தளித்த போது துடுப்பாயிருந்து கரை சேர்த்தாய்..! இப்போது இன்பக்கடலில் மிதக்கிறேன், நீ என்னருகே இருப்பதால்..!
  • மறந்துப்போன மகிழ்ச்சியை மறுபடியும் மலர வைத்தாய் நீ..! புதிய வரலாறு எழுதிவிட்டாய்..!
  • விடுவித்து விடாதே என்னை உன் விழிகளிலிருந்து..! ஒளியிழப்பது நம் இருவிழிகளும்தான்..!
  • மொத்த கவலைகளும் கலைந்துப்போகிறது உன் நினைவு தென்றலாய் என்னைத் தழுவும்போது..!
  • மௌனமாக பேசுகின்ற உன்னிதழ் பார்த்தே நீ என்ன பேசுகிறாய் என்பதை என் மனம் மொழிபெயர்ப்பு செய்கிறது..!
  • விடுதலையில்லா சட்டம் வேண்டும்..! உன் காதல் பிடிக்குள் அகப் பட்டுக்கிடக்க...!
  • என் உறக்கத்தை இரையாக்கி கொள்கிறது உன் நினைவு...! இன்னும் என்னை என்ன செய்யப்போகிறாய்..!
  • இருவரும் சேர்ந்தே கவிதையொன்று இணைந்து எழுதுவோம்..இரு இதழ்களின் இணைப்பிலே..!
  • விழி திறக்கும்வரை காத்துக்கிடக்கிறேன், வண்ணக்கனவுகளோடு வண்ணத்துப்பூச்சியாக வானில் பறந்து ரசித்து மகிழ்ந்திட..என் காதலை உறுதிப்படுத்திக்கொள்ள..!
  • உன்னால் என் நொடிகள் ஒவ்வொன்றும் அழகானதே..!
  • எனக்கு பிடித்ததையெல்லாம் நீ ரசிப்பதால் உனக்கு பிடிக்காததையெல்லாம் நான் தவிர்க்கிறேன்..!
  • காற்றோடு கலந்து வரும் உன் நினைவுச்சாரலில் நனைகின்றேன் நானும்...! அந்த நினைவுகளே எனக்கு போதுமானதடி..!
  • மணலில் கிறுக்கியதை அலைவந்து அழித்தாலும், நாம் மனதில் கிறுக்கியது மரணம் வரை அழியாது..அது இதயத்தில் எழுதிய எழுத்து..! ஆமாம் அதுதான் காதல்..!
  • ஒப்பனைகள் இங்கு தேவையில்லை, உன் அன்பே போதும் என்னை அழகாக்க..!
  • ஓசையின்றி பேசிடுவோம் விழிமொழியில்.. ஒரு முறை நோக்கிடுயென் பார்வையை..!
  • யார் பாதையையும் தொடராத விழிகள் உன் வழியை மட்டும் தொடருது..!
  • உன்னிதய துடிப்போடு என்பெயரும் கலந்திட நம் காதலும் அழகாக மலர்ந்தது..!
  • விடைபெறும் போதெல்லாம் பரிசாக்கி செல்கின்றாய்.. அழகிய தருணங்களை..!
  • மனதோடு நீ..! மழையோடு நான்..! நனைகின்றது நம் காதல்...!
  • அடைமழையில் தப்பித்து உன் அனல் பார்வையில் சிக்கிக்கொண்டேன்..! அதுகூட இன்பமாகத்தான் இருக்கிறது..!
  • நீ கவனிக்காமலே கடந்து செல்வதால் உன்மீது காதலும் அளவுக்கு அதிகமாக வளர்கிறது...!
  • பயணிப்போம் ஒரு பயணம்..! கரம்பற்றி களைப்பாகும் வரை காதல் தேசத்தில்...!
  • உன்னை நினைத்து என்னை மறப்பதுதான் காதலென்றால் ஆயுள் முழுதும் வாழ்வேன் எனை மறந்து..!
  • நீ கட்டளையிடாமலேயே கட்டுப்பட்டுக்கிடக்கின்றேன் உன் அன்பில்..!
  • மனதில் காரிருள் சூழ்ந்தபோது உன் அன்பெனும் ஜோதியில் வாழ்வை ஒளிமயமாக்கினாய்..!
  • உன்னளவுக்கு அன்புகாட்ட தெரியாவிட்டாலும் நீ மகிழ்ச்சியாக இருக்குமளவுக்கு என் பாசமிருக்கும்..! மிச்சம் வைக்கத்தெரியாத பாசம்..!
  • தழுவிச்செல்லும் தென்றலாய் உன் நினைவும் மனதை வருடிச்செல்கிறது..!
  • இடைவெளிவிட்டு நாமிருந்தாலும் இதயங்கள் இணைந்தேதான் பயணிக்கின்றது..! நீ வேறு நான் வேறு அல்ல..!
  • நீயில்லா பொழுதுகளில் உன் நினைவும் என் ரசனையாகிப்போனது..! நான் கிறுக்கியதெல்லாம் கவிதையாகவே தெரிகிறது..!
  • என் கவலைகளுக்கு நீ மருந்தாகின்றாய், உன் கவலைகளை மறைத்து..!
  • மௌன கவிதை நீ..ரசிக்கும் ரசிகை நான்..!
  • சுழற்றும் சூறாவளியிலும் நிலையாக நிற்கும் நான், உன் நினைவுத் தீண்டலில் தடுமாறிப்போகின்றேன்..சுனாமியா நீ..!?
  • என்னை துளைத்தெடுக்கும் உன் நினைவுகளைவிடவா இவ்வுலகிலோர் கூர்மையான ஆயுதமிருக்கபோகிறது..?
  • ஏதேதோயெழுத நினைத்து உன் பெயரை எழுதிமுடித்தேன் கவிதையாக..எனக்கு வேறு கவிதை வேண்டுமா..?
  • நீ நலமா எனும்போதெல்லாம் நீயின்றி எனக்கேது நலம் என்கிறது மனம்..!
  • வருவேன்.. என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றுகின்றாய் மழையைபோல்...வந்தால் வெள்ளமாக அன்பை கொட்டுகிறாய்..!
  • காயங்கள் எல்லாம் தூசியானது..எல்லாமே மாயமானது.. என்னருகில் நீயிருப்பதால்..!
  • உன் நினைவுகளை மீட்டியே வீணை வாசிக்கவும் கற்றுக்கொண்டேன்..!
  • நெற்றியில் திலகமிட்டுக்கொள்ள வரம் தந்தவனுக்கு அன்பு பரிசாய் அவன் நெற்றிக்கொரு இதழால் இட்ட திலகம், முத்தம்..!
  • நாம் இமைக்காமல் பார்த்துக்கொண்ட நொடிகளில் நம் இதயங்களும் இடம்மாறிக்கொண்டது..தடம்புரண்ட ரயிலைப்போல..!
  • சாலையோர நடைப்பயிற்சியில் காலைநேர தென்றலாய் நீ...என் மூச்சுக்கு இதமான ஆக்சிஜன் நீதான்..!
  • விட்டுச்சென்ற இடத்திலேயே நிலைத்துவிட்டேன், உன் நினைவுகளிலிருந்து விடுபடமுடியாமல்..!
  • நாணலும் நாணம் கொண்டு தலைசாய்ந்தது, உன் காதல் மொழியில்..! நீ எழுதாதபோதும் பல கவிதைகளை ரசிக்கின்றேன், அது உன் விழிகள்..!
  • சலிக்காத ரசனைகள் என்றால் தூரத்து நிலவும், அருகில் இருக்கும் நீயும்...! கை தொடும் நிலவு நீ..!
  • உன் அருகாமை போதும் தாய்மடியாய் நினைத்து நானுறங்க..! தனிமையும் பிடித்துப்போனது என்னுடன் உன் நினைவுகளும்..!
  • தொலைவில் உன் குரல் கேட்டாலும் மனமேனோ பறக்கின்றது பட்டாம்பூச்சியாக..! சொல்ல முடியா இன்பமாக..!
  • ஆறுதல் கூற ஆயிரம்பேரிருந்தாலும் உன் அருகாமையை போலாகுமா..?
  • நீ பேசாத போது பேசி மகிழ்கிறேன், நீ பேசிய வார்த்தைகளோடு மனதுக்குள்..!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story