Love Forever Meaning in Tamil-காலம் மாறினாலும் காதல் மாறாது..!

Love Forever Meaning in Tamil-காலம் மாறினாலும் காதல் மாறாது..!
X

love forever meaning in tamil-காலங்கள் கடந்தும் கனிந்துருகும் காதல் (கோப்பு படம்)

காதல் காலத்தால் அழிக்க முடியாதது. ஒருவர் மீது வைத்த உண்மையான அன்பு என்றும் நிலைத்து இருக்கும்.அதுதான் உண்மைக் காதல்.

Love Forever Meaning in Tamil

அன்பு என்பது அளவிடமுடியாதது. அன்பு காதலின் மறு வடிவம். காலம் செல்லச் செல்ல உண்மை அன்புக்கு வலிமை அதிகரித்துக்கொண்டே செல்லும். அந்த உண்மை காதல் எப்படியானதாக இருக்கும் என்பதை வாசகர்களாகிய உங்களுக்கு கவிதையாக தந்துள்ளோம்.

கவிஞர் வைரமுத்து காலத்தின் மாற்றங்களால் உடலில் ஏற்படும் மாற்றங்களை இப்படிக் கூறுகிறார். ஆனால் காதல் மட்டும் மாறாது என்கிறார்.

தோற்றங்கள் மாறிப்போகும்

தோல்நிறம் மாறிப்போகும்

ஆற்றிலே வெள்ளம் வந்தால்

அடையாளம் மாறிப்போகும்

மாற்றங்கள் வந்து மீண்டும்

மறுபடி மாறிப்போகும்

போற்றிய காதல் மட்டும்

புயலிலும் மாறாதம்மா!

-கவிஞர் வைரமுத்து

ரசித்து படிங்க. காதல் என்றும் மாறாதது. (கீழே வரும் கவிதை கவிஞர் வைரமுத்து கவிதைகள் அல்ல)


தேவதை உன் தேகத்தில்

காலம் போட்டுவிட்ட

கன்னத்தின் வரிக்கோடுகள்

மரங்களில் பட்டுதெறிக்கும்

கதிரவனின் கதிர்களாய் தான்

கண்மணியே எனக்குத் தெரிகிறது

அது முதுமை தந்த பரிசுகள்

காலத்தின் அரவணைப்பு..!

Love Forever Meaning in Tamil

சுருங்கிய உன் கண்கள்

சிதறாத காதல் பார்வையை

என் மேல் வீசிக்கொண்டே

நான் அதில் சிலிர்த்துக்கொண்டே

சிறைப்பட்டுதான் கிடக்கிறேன் உன்

சின்ன கண்களுக்குள் இன்னமும்

சிறைக்கைதியாக..!


நரை எட்டிப் பார்க்கும்

நாட்களிலும் எனக்கு உன்

மீதான ஆசைக்கு மட்டும்

திரைபோட முடியவில்லை

இன்னும் உன் மீதான ஆசை

அவ்வப்போது

எட்டிப் பார்க்கத்தான் செய்கிறது

Love Forever Meaning in Tamil

என்னை சிலிர்க்க வைக்கும்

உன் சிணுங்கல்களை ரசிக்கிறேன்

என்றும் முடிவே இல்லாத

உன் முனகல்களையும் ரசிக்கிறேன்

பழைய நினைவுகள்

என்னுள் என்னவோ செய்கிறது..!

சலிப்பில்லாமல் என்றும் தீராத

உன் சண்டைகளையும் ரசிக்கிறேன்

வண்டுப்போல

எப்போதும் நிற்காத

உன் குடைச்சல்களை ரசிக்கிறேன்

அந்த நாட்கள் மீண்டும்

வராதா என்று நினைவுகளை

அசைபோடுகிறேன்.

Love Forever Meaning in Tamil

உன்னால் நிறுத்தவே முடியாத

உன்பேச்சையும்

தொடர் வண்டியாய் வரும்

உன் சச்சரவுகளையும் ரசிக்கிறேன்

கண்ணால் மிரட்டும் நீ

தாயாகத் தெரிவாய்

நான் குழந்தையாகிப்போவேன்,

உன்

மிரட்டலுக்கு பொய்

பயம்கொண்டு..!

வேண்டுமென்றே நீ

செய்யும் வம்புகளை ரசிக்கிறேன்

வம்பு கொண்டு சேர்க்கும்

உன் வாதத்தையும் ரசிக்கிறேன்

நினைத்தை எல்லாம்

பேசி முடித்துவிட்டு

Love Forever Meaning in Tamil

நீ சொல்லும்

'போங்க போங்க..போதும்'

என்ற உன்னில் கிடக்கும்

அடங்காத அன்பையும்

உன்

அதட்டலையும் ரசிக்கிறேன்

எப்போதும் என்னை வென்று

போகிறாய் நீ

எப்போதே என்னை இழந்தவன்

தானே நான்

போனா போகுது சின்னப்புள்ள

என்று நகர்கிறேன் நான்

போனா போகுது போங்க

என்று சிலுப்புகிறாய் நீ

வயதானாலும்

வம்புக்கு ஒன்றும்

குறைச்சல் இல்லை என்ற

உன் கோப கொப்பளிப்பில்

கூட

வீராப்புத் தெரியவில்லை

வெற்றி பெற்றது

நீயா நானா

உன் அன்பா

என் அன்பா

Love Forever Meaning in Tamil

என் வீட்டு

நீயா நானாவில்

நீ தான் எப்போதும்

வெற்றிக்கு சொந்தக்காரி

வெற்றி பெற்றது யாரென

உனக்குத் தெரியாமல்

எப்போதும் சிரிக்குது

எனக்குள் என் அன்பு

இங்கு வெற்றிக்கு

இரண்டாம் இடம் மட்டுமே

அன்புக்கு என்றென்றும்

முதலிடம்..!


அதிகம் பேசும்

வாயாடியான நீ

ஊமையாகிப் போனாய்...!

ஊமையான நான்

உளறிக் கொட்டும்

பைத்தியமாகிப் போனேன்!

நம்மை மாற்றிய

காதல் மட்டும்

இன்னும் அப்படியே

துளியும் மாறாமல்..!

Tags

Next Story