'காதல்' கடலில் வீழ்ந்தேன்..! மீளமுடியாத சிறைக்குள் சிக்குண்டேன்..!

Love Feeling Quotes in Tamil
X

Love Feeling Quotes in Tamil

Love Feeling Quotes in Tamil-பாடல்கள் பிடிக்காத எனக்கு காதல் வந்ததும் பாடல்களின் பொருள்களோடு என் காதலை பொருத்திப்பார்த்து சிரித்தது, என் இதயம்.

Love Feeling Quotes in Tamil

காதல் என்பது ஒரு மாய வலை. பருவ வயதில் தோன்றும் ஒரு ரகசிய மாற்றம். புலன்கள் அறியாமலேயே உயிருக்குள் நுழைந்துவிடும் அதிசயம். இன்னதென்று பகுத்தறியமுடியாத உணர்வு. அந்த அழகிய உணர்வை உணர்பவர் மட்டுமே காதலை உணரமுடியும்.

  • நீ இல்லாமல் நான் இல்லை என்பது கூட பொய்யாக இருக்கலாம்; ஆனால், உன்னை நினைக்காமல் நான் இல்லை என்பதே மெய்
  • வாழ வேண்டும் என்பதில் ஆசை இல்லை! உன்னுடன் வாழ வேண்டும் என்பதில் தான் பேராசை..
  • அவளின் உள்ளத்துமொழி புரியாமல், புதிராகி போனது என் காதல்..
  • சில நேரங்களில் எனக்கே ஒரு சந்தேகம், என் இதயம் எனக்காகத்தான் துடிக்கிறதா? என்று.

Love Feeling Quotes in Tamil

  • என் வலக்கையை, உன் இடக்கையுடன் ஜோடி சேர்த்து, சாலையின் நீளத்தை, நம் காலடிகளால் அளக்கலாம் வா..
  • மெய் அன்பில் பேரரசனும் சிறுபிள்ளையாவான், காதலெனும் உயிரோவியத்தின் முன்..
  • கைகள் இணைந்திருந்தால் மட்டுமா காதல்? இதயம் இணைந்திருந்தால் தான் காதல்! தொலைவில் இருந்தாலும் தொலையக்கூடாது..
  • நீ ஒருவரை நேசித்தது உண்மையானால், அவர்களின் நினைவுகள் தினம் தினம் ஞாபகத்திற்கு வரும்..
  • வீழ்ந்தால் தாங்கிப் பிடிக்கும் வாழ்க்கைத் துணை கிடைத்தால், தொலைத்துவிடாதே..

Love Feeling Quotes in Tamil

  • அன்பாய் பேச ஆயிரம் உறவுகள் இரு க்கலாம்; ஆனால் நம்முடைய அன்புக்காக மட்டும் சில உறவுகள் இருக்கின்றன.. அவர்களை யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக் கொடுக்காதீர்கள்..
  • காரணம் வைத்து பிடிப்பதில்லை காதல்..காரணமே இல்லாமல் பிடிப்பது தான் காதல்..
  • உன் மீதான காதல் என்பது நீ இருக்கும் வரையல்ல, நான் இறக்கும் வரை தொடரும்..
  • உனக்கும், எனக்குமான தூரம் ஒன்றே நிர்ணயிக்கும், என் புன்னகையின் நீளத்தை..
  • நிலவின் அழகை சொல்ல வார்த்தைகள் கோடி, நீ எங்கு சென்றாலும் நான் வருவேன் உன்னைத் தேடி..

Love Feeling Quotes in Tamil

  • ஆண்களுக்கும் வெட்கப்படக் கூடத் தெரியும் என்று உன்னை கண்ட பின் தானடி புரிந்தது..
  • வாழ்க்கை என்ற கடலில் காதல் என்ற படகில் பயணிப்போம், இருவரும் கரைசேரும் வரையில்..
  • கடல் நீர் வற்றும் வரை, காகித மலர்கள் வாடும் வரை, ஆகாயம் அழியும் வரை, என் ஆயுள் முடியும் வரை, உன்னை காதலிப்பேன்..
  • தொலை தூரத்தில் இருந்தாலும், தொலைந்து போகாத காதல் தான் உண்மையான காதல்..
  • கண்ணீர் எனக்கு பிடிக்கும். அது என் கவலை தீரும் வரை. உறவுகள் எனக்கு பிடிக்கும் அது உரிமையாக இருக்கும் வரை. உன்னை எனக்கு பிடிக்கும் என் உயிர் உள்ள வரை...

Love Feeling Quotes in Tamil

  • உன் மார்போடு சாய்ந்து முத்தம் பதித்து,என் நெஞ்சோடு உன் முகம் பதித்து, கொள்ள தவம் கிடக்கிறேன்.
  • உன் முகம் காணாத எனது ஏக்கம் நீ அறிவாயோ?உன் விழிகளை காணும் வரை என் கண்ணில் ஏது உறக்கம்..?
  • நேசம் தாண்டியும் உன்னிடம் எதோ ஒன்று இருக்கிறது.தீண்டல்கள் இன்றி,பார்வைகள் இன்றி மௌனத்தை மொழியாக்கி உன் அன்பை எனதாக்கி இறுதிவரை உன் அருகில் நான் வாழ வேண்டுமடா...
  • இணையில்லா இணையதள வசதி இருந்தும் இடைவிடாமல் பேச கட்டணமில்லா அழைப்பு இருந்தும்
  • நாள் முழுவதும் செலவிட முகநூல் இருந்தும் நீ மட்டும் இல்லை என்னுடன்..

Love Feeling Quotes in Tamil

  • என் மறு பாதியே, வெண்ணிலவை அருகில் பார்க்க வேண்டும் என்று நீண்டநாள் ஆசை. இன்று என் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது. உன் முகம் என் கையில் இருக்கும் போது.
  • நான்கு திசைகள் இருப்பது தெரியும் நான்கு திசைகளிலும் நீ இருப்பது போல் தெரிகிறதே.. அது ஏன் என்று தான் தெரியவில்லை இது காதலா ? இல்லை இதுவும் காதலா?
  • மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும் கோபத்தில் உள்ள அன்பையும் யார் ஒருவரால் உணர முடிகிறதோ அவர்களே நமக்கு கிடைத்த உன்னதமான உறவு.

Love Feeling Quotes in Tamil

  • சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போனதேன்? சொல்லவந்த நேரத்தில் பொல்லாத உன் நாணம் ஏன்? மங்கையே இன்று உன் கண்கள் மயக்கம் கொண்டதேன்?
  • பாசமா பேசுற எல்லோர் மனசலையும் பாசம் இருக்காது. ஆனால் உரிமையோடு சண்டை போட்டு கோபப்படறவங்ககிட்ட உண்மையான பாசம் இருக்கும்.
  • உன் இதயத்தை கேட்டுப்பார். ஒவ்வொரு துடிப்பிற்கும் அர்த்தம் சொல்லும் என் இதயத்தை கேட்டுப்பார் துடிப்பின் அர்த்தமே நீ மட்டும்தான் என்று சொல்லும்.

Love Feeling Quotes in Tamil

  • என் இதய புத்தகத்தில் உன் நினைவுகளை மட்டுமே பதிக்க விரும்புகிறேன். அதனை நான் மட்டுமே படிக்கவும் நெனைக்கிறேன். உனக்கு தெரியாமலே..
  • உன்னை அணைக்க வேண்டும் என்பதற்காக உன்னை நெருங்கவில்லை.உன் அருகில் இருக்க வேண்டும் என்பதற்காக உன்னை நெருங்கிகிறேன்.
  • நமக்கு பிடித்த உறவை சேரவும் முடியாமல் யாருக்கும் விட்டு கொடுக்கவும் முடியாமல் தவிக்கிற நொடி தான் இந்த உலகத்துலயே கொடுமையானது.
  • பலமுறை விக்கல் எடுத்தும் ஒருமுறை கூட தண்ணீர் குடிக்கவில்லை. ஏனென்றால் நினைப்பது நீயாக இருந்தால் நீடிக்கட்டும் சில நிமிடம் என்று.

Love Feeling Quotes in Tamil

  • இனி பார்க்க முடியாதுபேச முடியாது என்று சொல்லும் தருணத்தில்தான் ஆண்களின் காதல் ஆரம்பிக்கிறது.. பெண்களின் காதல் முடிவடைகிறது..
  • யாருக்காகவோ காத்திருக்கிறது வாழ்க்கை இல்லை. யாரு நம்மளால சந்தோசமா இருக்காங்களோ அவங்களுக்காக வாழறதுதான் வாழ்க்கை.
  • தன்னை ரசிக்க வைத்த நிமிடங்களை விட, தன்னைப் பற்றிய நினைவுகளை தர முடிந்தால் அவளே உன் அன்புக்கு உரித்தானவள்.
  • கூட்டமாய் இருக்கும் போதும் தனிமையை விரும்புகிறேன். ஏனெனில் தனிமையில் மட்டுமே உன் நினைவுகள் என்னுடன் முழுமையாக இருக்கிறது.
  • தென்றலுக்குத் தெரியவில்லை அது தீண்டுவது ஒரு தேவதையை என்று. அதனால் தான் அது கவிதை எழுதவில்லை என்னைப் போல..


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
மக்களின் உயர்தர மருத்துவ சேவைக்கான முன்முயற்சி - நாமக்கல் ஆட்சியரின் முக்கிய அறிவுறுத்தல்